அந்தக் கருப்பு நாளை எவர் மறக்கமுடியும்? 2001-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த அருவருப்பான நடவடிக்கையைக் கண்டு நாடே அதிர்ந்தது. மக்களாட்சியின் மாண்பை இப்படியும் சீரழிக்க முடியுமா என்று கண்ணீரோடு கலங்கியது. முக்கால் நூற்றாண்டு அரசியல், இலக்கியம் என்ற தளங்களில் அசைக்கமுடியாமல் இருந்த மாபெரும் ஆளுமையைச் சிறுமைப்படுத்திப் பார்க்க எண்ணி, நடுஇரவில் கைதுசெய்து இழுத்துவந்த கொடுமையைக் காலம் மறந்துவிடாது. வந்தவர்களின் உள்ளத்திற்குள் என்ன வஞ்சகம் இருந்தது என்பதை எவர் அறிவாரோ? சமூகநீதிக்காகவும், அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரத்த குரலாகவும் இருந்த அந்தத் தலைவனின் குரலை முடக்கிவிட முடியும் என்று எண்ணியதன் விளைவுதான் அந்த நடவடிக்கை. ஆனால் கொந்தளித்த மக்களின் உணர்வுகள் நீதி தேவனைத் தட்டி எழுப்பின. சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன. “"என் உயிரினும் மேலான உடன்பிறப்பே!'’என்று அழைக்கும் அந்தக் குரலைக் கேட்கக் காத்துக்கிடந்தது கூட்டம்.
அந்தச் சிறிய அறையில் நிரம்பி வழிந்தது நிருபர்கள் கூட்டம். வினாக்கள் ஒவ்வொன்றாகத் தொடுக்கப்படுகின்றன. துள்ளி வருகின்றன பதில்கள். “இந்த வெற்றி உடன்பிறப்புகளால் வந்த வெற்றி’’ என்கிறார் அவர். கூட்டத்தில் இருந்து வினா வீசப்படுகிறது.
"உங்கள் மேல் அப்படி என்ன கோபம்
அம்மையாருக்கு?'
பளிச்சென்று உதிர்கிறது பதில்.
"நான் என்ன வளர்ப்பு மகனா…? இப்படிக் கைதுசெய்ய'
சிரிப்பொலி அதிரவைக்கிறது அந்த அறையை. ஆம். இறுக்கமான அந்தச் சூழ்நிலையை ஒரு நொடிக்குள் இயல்பு நிலைக்குக் கொண்டுவருகிறார் அந்தத் தலைவர். எதிரிகளின் ஆயுதத்தைக் கொண்டே எதிரிகளை வீழ்த்துவது என்பது ஒரு கலை. அதில் தேர்ந்து வெற்றித் தேரோட்டியவர் கலைஞர்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகழ்வெல்லல் யார்க்கும் அரிது’’
என்ற வள்ளுவப் பேராசானின் வரிகளுக்கு வாழும் சாட்சியமாக வாழ்ந்த கலைஞரின் நகைச்சுவை உணர்வு, அவர் மீது விசம்கக்கிக் கொண்டிருந்தவர்களின் விழிகளையும் விரிய வைத்தன. எந்தச் சூழ்நிலையிலும் தன்நிலை தாழாமல் தன்னைத் தக்கவைத்துக் கொள்கிற பேராற்றல் இந்த மனிதருக்கு எங்கிருந்து கிட்டியது என்று புழுங்கிக் கிடந்தவர்கள் தங்களுக்குள் அழுகிப் போனார்கள்.
"இன்பம் என்று நீங்கள் கருதுவது எது?'’’ என்று கார்ல் மார்க்ஸிடம் கேட்ட போது போராட்டம் என்றார் அப்பெருமகன். அதே கேள்வியைக் கலைஞரிம் கேட்ட போது "எதிர்ப்பிலேதான்'’’ என்றார் இவர். பள்ளிப் பருவத்திலிருந்து தன் இறுதிவரை ஏன் கண்மூடியபின்னும் ஒரு போராளியாக, எதிர்ப்புகளில் இன்பம் காண்பவராகவே கலைஞர் வாழ்ந்திருக்கிறார். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தன் நகைச்சுவை உணர்வை நழுவவிட்டதில்லை.
சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன் என்று உரக்கச் சொல்லிய கலைஞர், கழகக் கொடியைத் தன் குருதியால் அலங்கரித்தார். ஆண்டைகளுக்கும் ஆதிக்கச் சக்தி களுக்கும் எதிராகத் தொடுத்த கணைகளில் பதறியவர்கள், இட்டுக் கட்டிய வசைமொழிகள் ஏராளம். வதந்திகள், பொய்மைகள், புரட்டுகள், வழக்குகள் என்று இவர்மீது வாரி இறைத்தவற்றைச் சந்தனமாகப் பூசிக்கொண்டு சாமான்யன் நான்’’ என்று சரித்திரத்தை வியக்க வைத்தார். "விவேகம் என்ற வெள்ளி முளைத்து சாதிப்பித்து என்ற சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும் ஞாயிறு தோன்றும்' என்ற கலைஞர் நொடிப்பொழுதில் எதிர்ப்பாளர்களின் வினாக்களுக்கு நகைச்சுவை மிளிரப் பதில்சொல்லிப் பொடிப்பொடியாக்கி விடுவார் என்பதற்கு எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்.
கோயிற் பூசை செய்வோர்- சிலையைக்
கொண்டு விற்றல் போலும்’’
என்றார் மகாகவி பாரதி. அதைத்தான் தன் வழியில் சற்றே மாற்றி, "கோயில் கூடாது என்பதற்காக அல்ல..
அது கொடியவர் கூடாரமாக மாறிவிடக் கூடாது'
என்றும் "எந்தக் காலத்திலடா பேசினாள் அம்பாள்?'
என்றும

என்றும் கேட்டார். அதைக் கேட்டுப் பதறியவர்கள் நினைத்தபோதெல்லாம் அவரைக் குதறத் துடித்தார்கள். எல்லாவற்றையும் தன் நகைச்சுவையும், தர்க்க ஆழமும் கொண்ட எழுத்தாலும், பேச்சாலும் உதறி எறிந்துவிட்டு முன்னோக்கி நடந்தார்.
நிறவெறியை முறித்தெறிந்து, அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்த ஆப்ரஹாம் லிங்கன் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த காரணத்தை வைத்துக்கொண்டு அவரை ஏளனப்படுத்தியவர்கள் ஏராளம். ஆனால் அந்த உலகப் பெருந்தலைவன் தன் கடும் உழைப்பாலும் ஓயாத படிப்பாலும் வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அப்படித்தான் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தை வைத்துக்கொண்டு கலைஞரையும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தியே தீரவேண்டும் என்று திட்டங்கள் தீட்டியதையும் செயல்படுத்தியதையும் கண்டு கதிகலங்கியவர்கள் இட்டுக் கட்டிய கதைகளை வேறு எந்தத் தலைவனாலும் தாங்கிக்கொண்டு தடைகளைக் கடந்திருக்க முடியாது. இதுதான் உண்மை.
உலகை வியக்க வைத்த வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர். தன்னிகரற்ற பேச்சாளர், எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர். நகைச்சுவை உணர்வோடு உடனுக்குடன் பதிலளித்து எதிர்க்கட்சியினரை வாய்மூட வைத்தவர்.
அவர் மீது ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு ஈர்ப்புண்டு. ஒருமுறை இலண்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் உரைநிகழ்த்தும்போது இந்த அவையில் பாதி உறுப்பினர்கள் "முட்டாள்கள்' என்றார். உடனே அவையில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சர்ச்சில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள்.
அலட்டிக் கொள்ளாத சர்ச்சில் உடனடியாக, "மன்னிக்க வேண்டும். இந்த அவையில் ஐம்பது விழுக்காடு உறுப்பினர்கள் "புத்திசாலிகள்' என்றார். இப்படிப்பட்ட அவரின் அறிவுக்கூர்மை வியக்கவைப்பது. அப்படித்தான் ஒருமுறை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், "கழகத் தொண்டர்கள் கும்பகர்ணர்கள்'’என்று ஏளனமாகப் பேசினார். அடுத்தநொடி கலைஞர் சிரித்துக்கொண்டே சொன்னார். “"என் தம்பிகள் தூங்கினால் கும்பகர்ணன். எழுந்தால் இந்திரஜித்.' அதற்கு மேல் அவரால் பேச முடியுமா?
கலைஞரின் நகைச்சுவை இயல்பானது. உடனுக்குடன் உதிர்வது. கேட்போரை வியக்க வைப்பது. சிந்திக்க வைப்பது. இலக்கிய மேடையென்றாலும், அரசியல் மேடையென்றாலும் அவர் பேச்சில் வந்து விழுகிற நகைச்சுவைக்கு வசப்பட்டு எதிர்க்கட்சியென்றாலும் வாய்விட்டுச் சிரிப்பார்கள்.
பெருந்தலைவர் காமராசர் முதல்வர். கலைஞர் எதிர்க்கட்சித் துணைத்தலைவர். சட்டமன்ற உறுப்பினர்ஒருவர், "திருச்சியில் ஊர்வலம் வந்த காமராசர் மனுக்கொடுக்க வந்த பொற்கொல்லர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார்'’என்று குற்றம்சாட்டினார்.
உடனே கோபத்தோடு எழுந்த பெருந்தலைவர், "நான் கன்னத்தில் அடிக்கவில்லை'’என்று மறுத்தார்.
சட்டென்று எழுந்த கலைஞர் கேட்டார், "அப்படி யென்றால் எங்குதான் அடித்தீர்கள்?' என்றார் சிரித்துக்கொண்டே. குபீர்ச் சிரிப்பு சட்டமன்றத்தைக் கலகலப்பாக்கியது. பெருந்தலைவரும் சிரித்தார். உடனுக்குடன் பதிலளிப்பதில் வல்லவர் கலைஞர் என்பதை வரலாறு நெடுகக் காணமுடியும். திராவிட இயக்கம் திடீரென்று முளைத்த காளான் கட்சிகளைப் போல எழுந்த இயக்கமா என்ன? எத்தனையோ இழிமொழிகள், போராட்டங்கள், எதிர்ப்புகள், ஏளனங்கள், வஞ்சகச் செயல்கள், துரோகங்கள் என்று எல்லாவற்றையும் உடைத்தெறிந்து எழுந்துவந்த இயக்கம். பண்ணைகளும் பணக்காரர்களும், ஆண்டைகளும், ஆதிக்கச் சக்திகளும் ஆட்டிப் படைத்த அரசியல் உலகைச் சாமான்யனும் வந்து சரித்திரம் படைக்கமுடியும் என்பதைச் சாதித்துக் காட்டுவதற்காக எழுந்த இயக்கம்.
கலைஞர் முதல்வரானதும் திருவாரூரில் பல காலமாக ஓடாமல் கிடந்த தேரைப் புதுப்பித்து ஓட வைத்தார். அப்போது எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா? என்று கேட்டீர்கள். இப்போது நீங்களே தேர் ஓட்டுகிறீர்களே?' இது முரண்பாடாகத் தெரியவில்லையா? என்றார். உடனே கலைஞர்,"
என்ன பாடினேன்? ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித்தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா என்று கேட்டேன். அப்போது மக்கள் ஏங்கித் தவித்தார்கள். இப்போது எங்கள் ஆட்சியில் அப்படி யாரும் ஏங்கித் தவிக்கவில்லை. அதனால்தான் தேரோட்டத்தை அனுமதித்திருக்கிறேன்'என்றார். விளக்கத்தைக் கேட்டுக் கலகலப்பானது அவை. அரிசிப் பஞ்சத்தில் மக்கள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரை எப்படிச் சொல்லாமல் சொல்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தவர்கள் மவுனமாகிவிட்டார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் களவாடப்பட்ட செய்தியும் தணிக்கை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியப் பிள்ளை தூக்கில் தொங்கியதும் நாடறிந்த செய்தி. அப்போது முதல்வராக மக்கள் திலகம் இருந்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். கலைஞர் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதிகேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். பின் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. அப்போது ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்த ஹண்டே எழுந்து, "கருணாநிதி திருச்செந்தூர் போனார். முருகனே அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். இப்போது முருகன் சிலை அங்கே இல்லை'என்றார். உடனடியாக எழுந்த கலைஞர்,"திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் திருடுபோய்விட்டது என்று எண்ணினேன். சிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது' என்றார். மக்கள்திலகமும் சேர்ந்து சிரித்துவிட்டார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். எண்ணிலடங்காத சுவையான உரையாடல்கள், கருத்து மோதல்கள். கலைஞரிடம் பேசி வெல்ல முடியாது என்பதை அறிந்து ஏசி வெல்லலாம் என்றெண்ணிக் கரடி விட்டவர்கள் பின்னாளில் கூசி நின்ற நிகழ்வுகளும் ஏராளம்.
எந்தக் கருத்தை எப்படிச் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நாடித்துடிப்பை நன்கறிந்தவர் கலைஞர். 1973-ஆம் ஆண்டு அன்றைய மத்திய அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாராயணன் கலைஞரை அலகாபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குத் தலைமை தாங்க அழைத்தார். அடித்தட்டு மக்கள் முடிசூட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கலைஞர் அழைப்பை ஏற்றுச் சென்றார். அங்கு நடைபெற்ற மாநாட்டில்தான் 73-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்பதற்கு முதல் குரல் கொடுக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை மேலேற்ற மண்டல் கமிசன்’ அமைக்க விதைபோடப்பட்டதும் அங்குதான். மாலையில் பொதுக்கூட்டம். அதிலே கலைஞர் பேசவேண்டும். போகிற வழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்தியில் எழுதப்பட்டவை. "என்ன எழுதியிருக்கிறார்கள்?'’என்று ராஜ் நாராயணனிடம் கேட்டார் கலைஞர். அது ஒன்றுமில்லை. இராமனுக்கு விரோதி கருணாநிதி என்று எழுதியிருக்கிறார்கள் என்றார் அவர். கலைஞர் சிரித்தார். மேடையேறினார் கலைஞர். "இந்த ஊரில் எங்கே பார்த்தாலும் ராமனுக்கு விரோதி கருணாநிதி என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் இராமாயணம் படித்தவர்களே கிடையாதா? இராமனுக்கு எதிரி இராவணன்தான் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுகூடத் தெரியாமல் கருணாநிதி என்று எழுதியிருக்கிறீர்களே?' என்றார்.
அவ்வளவுதான். கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.
இப்படித்தான் ஒருமுறை வேறொரு இராமயணத்திலிருந்த ஒரு செய்தியைச் சொன்னார். அதைத் திரித்துவிட்டு மதவாதச் சக்திகள் எம்பிக் குதித்தன. வட மாநிலத்தைச் சார்ந்த வெட்டி வேதாந்தி சாது ஒருவர் கருணாநிதியின் தலையைச் சீவுவேன் என்றார். நிருபர்கள் விடுவார்களா? கலைஞரிடம் கிண்டிப்பார்த்தார்கள். கலைஞர் சிரித்துக்கொண்டே சொன்னார், "நானே தலைசீவி வெகுகாலமாயிற்று. பரவாயில்லை.
அவரை வரச்சொல்லுங்கள். ஏதாவது சிக்கு இருந்தால் சீவிவிட்டுப் போகட்டும்' என்றார் வெகு இயல்பாக.
எப்போது எவர் எப்படிப் பேசினாலும் அப்போதைக்கு அப்போதே அதற்கான எதிர்வினையை ஆற்றிவிடுவார் கலைஞர். பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி.. அதைக் கேட்போரும் படிப்போரும் வியக்காமல் இருக்க முடியாது. ஒருமுறை எழுத்தாளர் தமிழ்வாணன் கலைஞரைச் சந்தித்தார். அப்போதுதான் தலையின் பின்புறம் வழுக்கை விழ ஆரம்பித்திருந்தது கலைஞருக்கு. அதைப் பார்த்த தமிழ்வாணன், "உங்களுக்கு வழுக்கை விழுந்து விட்டது. கிழப்பருவம் வந்துவிட்டது'’என்றார்.
விடுவாரா கலைஞர்? "இல்லை..இல்லை.. வழுக்கை இளமைக்கு அடையாளம்'’என்றார். தமிழ்வாணனுக்குப் புரியவில்லை.“ "அப்படியா.. அது எப்படி.. எப்படி?’’ என்று திருப்பிக் கேட்டுக்கொண்டே இருந்தார். உடனே கலைஞர்' "இளநீர் என்பதை எடுத்துக்காட்டுவது உள்ளிருக்கும் வழுக்கைதானய்யா'’என்றாரே பார்க்கலாம். தமிழ்வாணனுக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
அதேபோல் ஒருமுறை இலங்கையிலிருந்து தலைவர் அமிர்தலிங்கமும் அவருடைய மனைவியும் சென்னைக்கு வந்திருந்தார்கள். விமானநிலையத்துக்கு வரவேற்கச் சென்றார் கலைஞர். அமிர்தலிங்கனாரின் மனைவி கலைஞரைப் பார்த்ததும் “"என்ன இது? உங்கள் தலையில் முடியே இல்லையே?'’ என்றார். கலைஞரோ “"எனக்கு முடிபோய் (ஆட்சித் தலைமை) இரண்டு மூன்று ஆண்டுகள் ஆனது உங்களுக்குத் தெரியாதா?'’என்றார் சிரித்துக்கொண்டே அம்மையார் நெகிழ்ந்து போனார்.
நடிகர்திலகம் நடித்த “"திரும்பிப்பார்' திரைப்படத் தணிக்கைக்காக அண்ணா சாலையில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் தணிக்கை அதிகாரியின் அலுவலகத்துக்குப் பலமுறை நூறு படிகளுக்கும் மேல் ஏறி இறங்க வேண்டியிருந்தது. சாஸ்திரி என்பவர் தணிக்கை அதிகாரியாக இருந்தார்.
அவருக்குப்பின் “அய்யர் என்பவர் இருந்தார். நான்காயிரம் அடிகள் வெட்ட வேண்டும் என்றார்கள். எந்த எந்தப் பகுதிகள் என்று கேட்பதற்காக இயக்குநர் காசிலிங்கம் மற்றும் நண்பர்களோடு சென்ற கலைஞர், தணிக்கை அதிகாரியைப் பார்த்து, "அய்யா.. இத்தனை படிகளை ஏறி வருகிறோமே. அதைப் பார்த்துக்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா?'’என்று கேட்டார். "திருப்பதி மலையில் எவ்வளவு புண்ணியமோ, அதுபோல இங்கே நீங்கள் ஏறிவந்ததும் புண்ணியம்தான்' என்றார் அந்த அதிகாரி கிண்டல் செய்வதுபோல. விடுவாரா கலைஞர்? "திருப்பதியிலும் இங்கேயும் ஒரே "ரிசல்ட் தான்'’’ என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டார். மொட்டைதான் என்பதைச் சொல்லிக்காட்டவா வேண்டும்? இப்படித்தான் ஒருமுறை உளிவீச்சு தொடர்பான வழக்கு நெல்லையில் நடைபெற்றது. கலைஞர் சாட்சியம் அளிக்கவேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேட்டார். "நீங்கள் எத்தனை ஆண்டுகளாகக் கருப்புக் கண்ணாடி அணிகிறீர்கள்?'’கலைஞர் பத்தாண்டுகளாக என்றார். பின் வழக்கறிஞர் ஒரு புத்தகத்தைச் சற்றுத் தொலைவிலிருந்து காட்டி இந்தப் புத்தகத்தின் பெயர் தெரிகிறதா? என்று கேட்டார். "சாவி'’என்று பதிலளித்தார் கலைஞர். மறுபடியும் வழக்கறிஞர் அதே புத்தகத்தைக் காட்டி சாவி என்ற எழுத்துக்குக் கீழே என்ன எழுதியிருக்கிறது என்று படிக்க முடிகிறதா? என்றார். கலைஞரோ, "இந்த இடத்திலிருந்து பார்த்தால் உங்களுக்குக்கூட அந்த எழுத்து தெரியாது' என்றார்.
மீண்டும் வழக்கறிஞர் அதே புத்தகத்தைக் காட்டி "அட்டையில் என்ன படம் இருக்கிறது' என்று கேட்டார். கலைஞர் "நேரு சட்டையில் அணியும் ரோஜா மலர்' என்றார். வழக்கறிஞர் மீண்டும் இன்னும் வேறு ஏதாவது படம் தெரிகிறதா? என்று தொடர்ந்தார். உடனே கலைஞர், "நான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறேனா இல்லை கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேனா?'
என்று கேட்டார். கலைஞரின் கேள்வியில் நீதிமன்றமே கலகலத்து விட்டது.
கழக ஆட்சியில்தான் அரசு அலுவலகங்களில் கடிதத்தொடர்புகள், விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர பிற யாவும் தமிழில்தான் அமையவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறையின் கண்காணிப்பும் ஏற்பட்டது. தமிழில் அலுவலகக் குறிப்புகளும் வரைவுகளும் எழுதப்படும்போது சிலர் சுருக்கமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு எழுதுவதுண்டு. அப்படித்தான் அவருக்கு ஒருமுறை அனுப்பிய முக்கியக் கோப்பில் மா.மி. முதல்வர் என்று குறிக்கப்பட்டிருந்தது. மாண்புமிகு முதல்வர் என்பதைச் சுருக்கி மா.மி. முதல்வர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்ட கலைஞர் அதே கோப்பில், "நான் சாதாரண முதல்வராகவே இருக்க விரும்புகிறேன். மாமி முதல்வர் வேண்டாம்' என்று குறிப்பெழுதித் திருப்பி அனுப்பினார்.
1976-க்கு முன் மதுரையில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த பாவலர் மா.முத்துசாமி தலைமை தாங்கினார். முதல்வராக இருந்த கலைஞர் உரையாற்ற வேண்டும். அதில் வாதிட்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் புரட்சிக்கவிஞரின் கவிதை ஒன்றினை எடுத்துக்காட்டி வாதிட்டார். அதாவது காதலனுடன் நீண்ட நேரம் களித்திருக்க விரும்பிய காதலியொருத்தி, விடியலைச் சொல்லக் கோழி கூவிவிட்டதே என்று சினம்கொண்டு இனி எவரும் நாட்டில் கோழி வளர்க்கக்கூடாது என்று அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறாள்.
அதைப்போல் இந்த அரசு சட்டம் கொண்டுவருமா?
என்று கேட்டார். தலைமை தாங்கிய பாவலர் அங்கே அமர்ந்திருந்த கலைஞரைச் சுட்டிக்காட்டி, "உச்சநீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும்' என்று சொன்னார்.
இறுதியில் உரையாற்ற வந்த கலைஞர்,“"கோழி வளர்க்கக் கூடாது என்று சட்டம் இயற்றமாட்டோம். கோழிகள் இருந்து கூவினால்தான் அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு ஓரளவாவது உதவியாக இருக்கும்'’’ என்றதும் அரங்கின் சிரிப்பொலியும் கைதட்டல் ஒலியும் அடங்க வெகுநேரமானது.
கலைஞரின் "தாய்' காவியம் "கவிதைமழை' நூல்களின் வெளியீட்டு விழா 2004-ஆம் ஆண்டு நடந்தது. அதில் பேசிய கவிக்கோ அப்துல்ரகுமான் "தேர்தலிலே 40 தொகுதிகள், இன்றைக்குக் கலைஞரின் நூல்கள் இரண்டு தொகுதிகள். இவற்றில் இந்த இரண்டு தொகுதிகள் இருந்தால் போதும். நாற்பது தொகுதிகளும் போனால் கூடப் பரவாயில்லை'’என்றார். அதன்பின் கலைஞர் பேசினார், "அவருக்கு என்ன? கவலையெல்லாம் எனக்கும் பேராசிரியருக்கும், நல்லக்கண்ணுவுக்கும், சங்கரய்யாவுக்கும் அல்லவா? நாற்பத்திரண்டில் இரண்டு இருந்தால் போதும். நாற்பது போனால் பரவாயில்லை என்று அப்துல்ரகுமான் சொன்னார். ஏனென்றால் அவர் தேர்தலில் நிற்பதில்லை'’என்றார்.
ஒருமுறை, கலைஞருக்குப் பொன்னாடை போர்த்தினார் கவிஞர் வைரமுத்து. பட்டுநூல் கலைஞரின் சட்டைப் பொத்தானில் மாட்டிக்கொண்டது. சிரித்துக் கொண்டே கலைஞர், "நம்மிடையே உள்ள நூற்றொடர்புக்கு அடையாளம் இதுதானோ?'
என்றாராம். இப்படி எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
வாழ்நாள் முழுவதும் எத்தனையோ வசைமொழி களைத் தாங்கித் தமிழினத்தை மேலேற்றத் தன்னைக் கொடுத்தவர் கலைஞர் என்பதுதான் வரலாறு. "இடுக்கண் வருங்கால் நகுக'’என்ற வள்ளுவப் பாட்டனின் வரிகளுக்குத் தன் வாழ்க்கையால் உரையெழுதி போராளியாகவே வாழ்ந்த அப்பெருமகன் நாவில் எப்போதும் நடனமாடிக் கொண்டிருந்த நகைச்சுவை எதிரிகளையும் சிரிக்கவைத்துச் சிந்திக்க வைத்தது. எதை எழுத.. எதை விட? என்றாலும், "தங்களுடைய அரசியல் வாழ்வில் தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்ய முடியாதது என்று ஏதாவது உண்டா?'’என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "உண்டு'’ எனச்சொல்லிச் சற்றே பேச்சை நிறுத்திய கலைஞர், "உண்டு. இன்றும் சில தமிழர்களைத் திருத்த முடியாததுதான், நான் செய்ய முடியாததாகும்'’என்று சொன்ன விடைதான் இன்னும் சிலரை அடையாளப் படுத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது.