சமுதாய மாற்றத்திற்கு அறிஞர் அண்ணாவின் திரையுலகப் பங்களிப்பு! - செந்தலை கவுதமன்

/idhalgal/eniya-utayam/arinar-annas-film-industry-contribution-social-change-sentala-gowthaman

தைக்காகவும் உரையாடலுக்காகவும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கும் விருப்பத்துடன் மக்கள் வந்தது, அறிஞர் அண்ணாவின் திரையுலக வருகைக்குப் பிறகுதான்.

நல்லதம்பி, வேலைக்காரி இரண்டு படங்களும் அண்ணாவின் கை வண்ணத்தில் உருவானவை. ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் 23 நாள் இடைவெளியில் வெளிவந்த இந்த இரண்டு படங்களும் பெருவெற்றி பெற்றன; தமிழ்த் திரையுலகில் புதிய திருப்பத்தை உருவாக்கின.

நல்லதம்பி திரைப்படத்தை "நாத்திகப் படம்' என் அன்றைய ஏடுகள் ஒரே குரலில் பேசி ஒதுக்கப்பார்த்தன. படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.

கலைவாணர் செல்வாக்கிற்கு அஞ்சி எதிர்ப்புக்குரல் முனக லாய் அடங்கியது.

நல்லதம்பி திரைப்படம் 2.2.1949இல் வெளியானது. வேலைக்காரி திரைப்படம் 25.2.1949 இல் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பின்போது வெளிவந்த செய்திகள் எதிர்பார்ப்பு, எதிர்ப்பு இரண்டிற்கும் இடம் தந்தன.

வேலைக்காரி படத்தில் "மணி' என்பவர் வேடத்தில் நடிகர் டி.எஸ் பாலையா நடித்து வந்தார். படத்தில் அவர் பகுத்தறிவாளர்! அவர் பேசும் உரையாடல் அனைத்தும் முற்போக்கு வெடிகுண்டாய் வெளிப்பட்டுப் பழமைக்கோட்டையைத் தகர்ப்பவை.

பாலையா காளி பக்தர். பகுத்தறிவுக் கருத்து களைப் பேசி நடிப்பதால் ஏதும் பாதிப்பு வந்து விடுமோ என உண்மையாகவே அஞ்சினார்.

"வேலைக்காரி' படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சி எடுத்து முடித்ததும், காளி படத்தின்முன் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்பாராம்:

"காளி! ஏதோ வயித்துப் பொழைப்புக்காக எழுதிக் கொடுத்ததைப்பேசி நடிக்கிறேன். சாமி குத்தம் வராமல் பார்த்துக்கொள் தாயே!''

"வேலைக்காரி' வெளிவந்ததும், இதற்காகவே காத்திருந்ததுபோல் அண்ணாவை நாத்திகர் என வசைமாரி பொழிந்தன ஏடுகள். "நாத்திகப் படம் நாட்டைக் கெடுத்துவிடும். "வேலைக்காரி'

தைக்காகவும் உரையாடலுக்காகவும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கும் விருப்பத்துடன் மக்கள் வந்தது, அறிஞர் அண்ணாவின் திரையுலக வருகைக்குப் பிறகுதான்.

நல்லதம்பி, வேலைக்காரி இரண்டு படங்களும் அண்ணாவின் கை வண்ணத்தில் உருவானவை. ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் 23 நாள் இடைவெளியில் வெளிவந்த இந்த இரண்டு படங்களும் பெருவெற்றி பெற்றன; தமிழ்த் திரையுலகில் புதிய திருப்பத்தை உருவாக்கின.

நல்லதம்பி திரைப்படத்தை "நாத்திகப் படம்' என் அன்றைய ஏடுகள் ஒரே குரலில் பேசி ஒதுக்கப்பார்த்தன. படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.

கலைவாணர் செல்வாக்கிற்கு அஞ்சி எதிர்ப்புக்குரல் முனக லாய் அடங்கியது.

நல்லதம்பி திரைப்படம் 2.2.1949இல் வெளியானது. வேலைக்காரி திரைப்படம் 25.2.1949 இல் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பின்போது வெளிவந்த செய்திகள் எதிர்பார்ப்பு, எதிர்ப்பு இரண்டிற்கும் இடம் தந்தன.

வேலைக்காரி படத்தில் "மணி' என்பவர் வேடத்தில் நடிகர் டி.எஸ் பாலையா நடித்து வந்தார். படத்தில் அவர் பகுத்தறிவாளர்! அவர் பேசும் உரையாடல் அனைத்தும் முற்போக்கு வெடிகுண்டாய் வெளிப்பட்டுப் பழமைக்கோட்டையைத் தகர்ப்பவை.

பாலையா காளி பக்தர். பகுத்தறிவுக் கருத்து களைப் பேசி நடிப்பதால் ஏதும் பாதிப்பு வந்து விடுமோ என உண்மையாகவே அஞ்சினார்.

"வேலைக்காரி' படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சி எடுத்து முடித்ததும், காளி படத்தின்முன் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்பாராம்:

"காளி! ஏதோ வயித்துப் பொழைப்புக்காக எழுதிக் கொடுத்ததைப்பேசி நடிக்கிறேன். சாமி குத்தம் வராமல் பார்த்துக்கொள் தாயே!''

"வேலைக்காரி' வெளிவந்ததும், இதற்காகவே காத்திருந்ததுபோல் அண்ணாவை நாத்திகர் என வசைமாரி பொழிந்தன ஏடுகள். "நாத்திகப் படம் நாட்டைக் கெடுத்துவிடும். "வேலைக்காரி' படத்தைத் தடைசெய்' என வலுவாக எதிர்ப்பைக் காட்டினர் மதத்தின் பெயரில் வயிறு வளர்ப்பவர்கள்.

anna

"தடைசெய்யவேண்டிய படமா வேலைக்காரி' என ஆய்வு செய்து அறிக்கை தருமாறு ஒரு குழுவை அமைத்தது "சென்னை மாகாண' அரசு. குழுவின் தலைவர் எழுத்தாளர் கல்கி. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தைப் பார்த்து "இதோ ஒரு பெர்னாட்சா தமிழ் நாட்டில் இருக்கிறார்; இப்சன் இருக்கிறார்;

கார்ல்ஸ்வொர்தி இருக்கிறார்.'' என அண்ணா விண் நாடகத்திறனை வியந்து எழுதியவர் கல்கி.

அவர் இப்போது, அதே அண்ணாவின் 'வேலைக்காரி' படத்தைப் பார்த்து அறிக்கை தரவேண்டும்.

"தடைசெய்யும் அளவிற்குக் கேடான கருத்துகள் எதுவும் "வேலைக்காரி' படத்தில் இல்லை'' கல்கி குழு படத்திற்கு ஆதரவாக அறிக்கை தந்துவிட்டது. அதுவே பெரிய விளம்பரமாகி விட்டது. படம் பெருவெற்றி பெற்று வசூலை அள்ளிக் குவித்தது.

அறிஞர் அண்ணா, எந்தக் கதையாசிரியரும் பெறாத தொகையாகப் பன்னிரண்டாயிரம் உரூபாவை அந்தப் படத்திற்கான ஊதியமாகப் பெற்றார். தாம் 1942ஆம் ஆண்டிலிருந்து காஞ்சிபுரத்தில் வாடகைக் கட்டடத்தில் நடத்திவந்த "திராவிடநாடு' இதழுக்கு ஆறாயிரம் உரூபாவில் சொந்தக் கட்டடம் கட்டினார்.

கோவையில் குடியேறி அங்கயே தங்கியிருந்து, நாடகமாக முன்பு தாம் எழுதியிருந்த "வேலைக்காரி'யைத் திரைவடிவம் ஆக்கிச் சூபிடர் நிறுவனத்திற்குத் தந்தார் அண்ணா. ஏ.எஸ்.ஏ. சாமி படத்தின் இயக்குநர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர் இராமசாமி கதைநாயகன்.

தமிழில் பெருவெற்றி பெற்ற வேலைக்காரி தெலுங்கில் என்.டி. ராமாராவைக் கதைநாயகன் ஆக்கி எடுக்கப்பட்டது. "வேலைக்காரி' இந்தியிலும் எடுக்கப் பட்டது. மதவெறியர்கள் எதிர்ப்பார்கள்' எனப் படத்தை வாங்கி வெளியிடப் பலரும் அஞ்சினர். தாராசந்து பர்சாத்தியா என்பவர் "வேலைக்காரி' இந்தி படத்தைத் துணிச்சலுடன் வாங்கி வெளியிட்டார். யாரும் எதிர்பார்க்காதவகையில், இந்தியிலும் படம் வெற்றிபெற்றது.

வேலைக்காரி' தெலுங்குப் படத்திற்கான உரையாடலை எழுதியவர் சமுத்ராலா ராகவாச்சார்யா; இந்தி உரையாடலை எழுதியவர் ராஜேந்தர் கிருஷ்ணா.

anna

படத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றித் திரைத்துறைக்கு வந்தவர். காதல் படங்களையே எடுத்துவந்தவர், அறிஞர் அண்ணா தொடர்புக்குப் பின் நாட்டுக்குத் தேவையான முற்போக்குக் கருத்துகளையே திரைப்படமாக்குவது என முடிவெடுத்தார். அறிஞர் அண்ணா வின் திரையுலக வருகை பல்வேறு அலைகளை எழுப்பியது.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் பகுத்தறிவுப் பேரலையை எழுப்பிய புரட்சிப்படமாகப் பார்க்கப்பட்டது "வேலைக்காரி'. நீதிமன்றக் காட்சி முதன் முறையாக இடம் பெற்றதும் இந்தப் படத்தில்தான்!

"வேலைக்காரி போட்ட பாதையில் சென்று, நீதிமன்றக் காட்சியின் உச்சத்தைத் தொட்ட படம் கலைஞர் அவர்களின் "பராசக்தி!

தமிழ்த் திரையுலகின் திருப்புமுனைப் படமாக அறிவுலகால் போற்றப்படுவது அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி' திரைப்படம்.

அண்ணாவின் நாடக வாழ்வு தொடர்ந்தி ருந்தால், தமிழ் நாட்டிற்குப் பெர்னாட்சாவை விடப் பேராற்றல் மிக்க நாடக ஆசிரியர் கிடைத்திருப்பார் என எழுத்தாளர் பிரமிள் வியந்தெழுதியிருப்பார்.

அரசியலிலும் சமூக மாற்றத்திலும் அதிக நேரம் செலவழிக்கவே அறிஞர் அண்ணா ஆர்வம் காட்டினார். நாடகம், திரைப்படம் இரு துறையிலும் அவர் கவனம் செலுத்தினாலும், அவற்றை முழுப்பணியாக ஏற்க மறுத்து விட்டார்.

தந்தை பெரியார் வாழ்ந்த ஈ.ரோட்டில் 11.2.1944 இல் "தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு' நடந்தது. மாநாட்டில் பேசும்போது அண்ணா குறிப்பிட்டது அவரின் கலையுலக நோக்கத்தைக் காட்டும்:

"கலை ஓர் இனம் மற்றோர் இனத்தை அடக்கியாள உபயோகிக்கும் வலையாக இருக்கிறது. அந்த வலையின் பின்னால் எத்தனை பெரிய சக்தி இருந்தாலும் அந்த வலையைச் சின்னா பின்னப்படுத்துவது என்னும் அந்த முயற்சியில் நாங்களே சின்னாபின்னமானாலும் கவலையில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்.''

தாம் வகுத்த வரையறைக்குள் நின்று, அண்ணா நாடகங் களை உருவாக்கினார். அவை மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதால், அவ்வப்போது எழுத ஆர்வம் காட்டினார்.

anna

1943 சந்திரோதயம்

1945 சிவாஜி கண்ட இந்துராஜ்யம் அல்லது சந்திரமோகன்

1946 வேலைக்காரி

1946 ஓர் இரவு

1947 நீதிதேவன் மயக்கம்

1949 நல்ல தம்பி

1953 காதல்ஜோதி

1954 சொர்க்கவாசல்

1956 பாவையின் பயணம்

1966 கண்ணாயிரத்தின் உலகம்

1967 ரொட்டித்துண்டு

1968 இன்ப ஒளி

அறிஞர் அண்ணா எழுதிய நாடகங்கள் இவை! மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களை திரைப்படமாக்கப் பலரும் முன்வந்தனர்.

நாடகம், திரைப்படம் எனும் இரு சக்கர வண்டியைக் கலையுலகில் ஓட்டிக்காட்டினார் அறிஞர் அண்ணா.

ஆரிய எதிர்ப்பு, மத மறுப்பு, சாதி ஒழிப்பு, வடவர்

வல்லாண்மை அகற்றல், சமீன் நிலக்கிழார் மடாதிபதி

களின் சுரண்டலை ஒழித்தல், இந்தி வடமொழித்திணிப்பை எதிர்த்தல், பெண்ணுரிமை வலியுறுத்தல், கைம்பெண் துயர்களைதல், சமதரும ஆட்சி அமைத்தல் முதலான முற்போக்குச் சரக்குகளை வண்டியில் ஏற்றி அனுப்பிய படி இருந்தார்.

திரை வாழ்வில் அறிஞர் அண்ணா கைவண்ணத்தில் பிறந்த படங்கள் பத்து:

anna

(1) நல்ல தம்பி (2.2.1949)

(2) வேலைக்காரி (25.2.1949)

(3) ஓர் இரவு (1951)

(4) சொர்க்க வாசல் (1954)

(5) ரங்கோன் ராதா (1955)

(6) தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959)

(7) நல்லவன் வாழ்வான் (1961)

(8) எதையும் தாங்கும் இதயம் (1962)

(9) காதல் ஜோதி (1969)

(10) வண்டிக்காரன் மகன் (1979)

இறுதி இரண்டு படங்களும் அண்ணா மறைவிற்குப் பின் வெளிவந்தவை.

"ரங்கோன் ராதா' திரைப்படத்தின் கதையை அறிஞர் அண்ணாவும் உரை யாடலைக் கலைஞர் மு.கருணாநிதியும் இணைந்து எழுதினர்.

தி.மு.கழகத் தேர்தல் சின்னமான உதயசூரியன் குறித்து உரையாடலில் இடம்பெற்க கூடாது எனத் தனிக்கைத் துறை அச்சுறுத்தியது.

அறிஞர் அண்ணாவும் மக்கள் திலகம் எம்.ஜி. இராமச் சந்திரனும் இது குறித்து இணைந்து சிந்தித்து மாற்றுவழி கண்டுபிடித்தனர். எம்ஜியார் நடித்து அறிஞர் அண்ணா கதை உரையாடல் எழுதிய "நல்லவன் வாழ்வான்' திரைப் படத்தின் கதைநாயகனுக்கு "உதய சூரியன்' என்று பெயர் வைத்துவிட்டனர். தணிக்கத்துறையில் இருந்த சாதி ஆதிக்கவாதிகள் வாயடைத்து நின்றனர் தி.மு.கழகக் கொடியைத் திரைப்படத்தின் எந்தக் காட்சியிலும் இடம்பெற வைக்கக் கூடாது என மற்றொரு பூட்டோடுவந்தது இந்தியத் தணிக்கைத்துறை.

anna

அறிஞர் அண்ணாவின் கண்ணசைவிற்குக் காத்திருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர், தமது திரைப்பட நிறுவன இலச்சினையில் தி.மு.கழகக் கொடியை இடம்பெற வைத்துவிட்டார்.

"சட்டம் ஓர் இருட்டறை. அதில்

வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.

அந்த விளக்கு ஏழைகளுக்குக்

கிடைப்பதில்லை''

"கத்தியைத் தீட்டாதே!

புத்தியைத் தீட்டு.''

அண்ணாவின் திரைப்பட உரையாடல்கள் இதுபோல் எண்ணற்றவை. இன்றும் அவை மக்கள் நாவில் இடம்பெற்றுள்ளன- எழுதியவர் அறிஞர் அண்ணா என்று தெரியாமலேயே!

மக்களைச் சிந்தனை முடமாக்கிச் சமூகத்தைச் செயலூக்கம் அற்றதாக்கும் கலை வடிவங் களே, திராவிடர் இயக்க வருகைக்கு முன் செல்வாக்கு பெற்றிருந்தன.

முள்ளை முள்ளால் எடுக்க முடிவெடுத்துக் கலை வடிவங்களைக் கைப்பற்றிய திராவிடர் இயக்கம் மக்கள் மனங்களில் பகுத்தறிவுச் சுடரை ஏற்றியது. அந்த வரலாற்றில் முன்னணி இடம் வகிப்போர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் அறிஞர் அண்ணாவும்!

uday010523
இதையும் படியுங்கள்
Subscribe