அறையில் முழுமை யான பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. ராமநாதன் சாளரத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். அவர் ஒரு வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். அவருடைய மெலி−ந்த சரீரத்தில், உட−ன் ஒரு நிரந்தரப்பகுதி என்பதைப்போல பூணூல் ஒட்டிக்கிடந்தது. அவர் எதையோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார். இடையில் மிகவும் மெதுவாக என்னவோ முணுமுணுத்தவாறு மெல்லி−ய தன் விரல்களால் அவர் முழங்கா−ல் தாளம் போட்டுக்கொண்டிருந் தார்.
ராமநாதனுக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞனும் மௌனமாக இருந்தான். ஆனால், அவனுடைய மௌனம் பொறுமையற்றதாக இருந்தது. ராமநாதன் பதில் கூறுவதை எதிர்பார்த்து அவன் ஆர்வத்துடன் காத்திருந்தான். ஒரு வார்த்தை- அவனுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற் கான ஒரு வார்த்தை- அதற்காக அவன் காத்திருந்தான்- ஒரு துளி நீருக்காக இருப்பதைப் போல...
ஆனால், ராமநாதன் எதுவுமே கூறவில்லை.
இளைஞன் ஆர்வத்துடன் ராமநாதனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் குனிந்திருந்த ராமநாதனின் முகத்தைத் தெளிவாகப் பார்க்க அவனால் முடியவில்லை.
இளைஞனின் கையில் அப்போதும் அவனுடைய நிறுவனத்தின் பெயரும் முத்திரையும் உள்ள கவர் இருந்தது. அந்த கவரை மரியாதையுடன் ராமநாதனுக்கு நேராக இரண்டு கைகளாலும் ஒரு தட்சணை என்பதைப்போல நீட்டியவாறு, மதிப்பும் நன்றியும் அன்பும் வெளிப்படும் குர−ல் அவன் கூறிய வார்த்தைகள் அப்போதும் காற்றில் தங்கி நின்றிருந்தன. ஆனால், அவற்றைக் கேட்டபிறகும், எதுவுமே கூறாமல் ராமநாதன் தனக்குள் தானே கரைந்து விட்ட தைப்போல அமர்ந்திருந் தார்.
மேலும் ஒருமுறை கெஞ்சிக்கேட்கும் தைரியம் இளைஞனுக்கு இல்லாம−ருந்தது.
அவனுக்கு ராமநாதனை நன்கு தெரியும்.
அதனால்தான் இரண்டு மாதங்களுக்குமுன்பே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தொழில் நுட்ப இயக்குநரும் ராம நாதனைப் பார்க்கும் படி அவனிடம் கூறியபோது, அவன் சொன்னான்:
""முயற்சி செஞ்சு பார்க் கிறேன். ஆனா, உறுதியா சொல்ல முடியாது.''
அதைக்கேட்டு நிர்வாக இயக்குநர் எதுவுமே சொல்லாமல் அமர்ந்திருக்க, அவன் மீண்டும் இதையும் சேர்த்துக் கூறினான்:
""அவர் இங்கிருந்து போன சூழ்நிலைய நினைச்சிப் பார்ப்பீங்க இல்லி−யா?''
தொழில்நுட்ப இயக்குநர் புதிதாக வந்திருக்கும் மனிதர். அதைக் கேட்டதும் அவர் நிர்வாக இயக்குநரைப் பார்த்தார்.
முதலி−ல் நிர்வாக இயக்குநர் எதுவும் கூறவில்லை. பிறகு, அவர் திடீரென்று தொழில்நுட்ப இயக்குநரிடம் கேட்டார்: ""உங்களுக்கு ராமநாதனைத் தெரியுமா?''
அவர் கூறினார்:
""இல்ல... ஒருமுறை அவரை நான் பார்த் திருக்கேன்ங்கறதை கழிச்சிட்டுப் பார்த்தா... அது இந்தியாவில நடக்கல. ப்ரஷர் வெஸல்களைப் பத்திய கருத்தரங்கில் பங்குகொள்றதுக்காக நான் ஹானோவருக்குப் போயிருந்தேன். இருபது வருஷங்களுக்குமுன்பு... அமெரிக்காவி−ருந்தும் இங்கிலாந்தி−ருந்தும் ஜப்பானி−ருந்தும் பொறியியல் நிபுணருங்க வந்திருந்தாங்க. பலரும் கட்டுரைகளை வாசிச்சாங்க. ஆனா, எல்லாரோட கவனத்தையும் ஒரு கட்டுரை மட்டுமே ஆழமா பிடிச்சு இழுத்தது. எல்லாரோட மதிப்புக்கும் ஒரு மனிதர் மட்டுமே உரியவரா இருந்தாரு. அது... ராமநாதன். அப்போ எனக்கு உண்டான மதிப்பும் சந்தோஷமும்... இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொறியியல் நிபுணர்ங்கற நிலையில்.... ஆனா, பிறகு அவரோட பழகக்கூடிய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கல.''
""அந்த அதிர்ஷ்டம் எங்க எல்லாருக்கும் கிடைச்சது''
கடந்த காலங்களை நினைத்துப் பார்த்தவாறு தலைவர் கூறினார்: ""ராமநாதனுக்கு சம்பளம்ங்கற விஷயம் எந்த சமயத்திலும் ஒரு பிரச்சினையா இருந்ததே இல்ல. பணிதான் முக்கியம். இங்க இருந்தப்போ, குறைஞ்சபட்சம் இருமுறையாவது உலக வங்கியி−ருந்து அவருக்கு "ஆஃபர்' வந்தது. வட்டி இல்லாத- நல்ல சம்பளம்... வேறு ஏராளமான சுகமான வசதிகள்... ஆனா, இருமுறையும் ராமநாதன் அதை நிராகரிச்சிட்டார். ஒரு மறு சிந்தனைக்குக்கூட இடம்தராம அவர் சொன்னார்: "நான் ஒண்ணுக்கும் மேற்பட்ட முறை வெளியே போயிருக்கிறேன். படிக்கறதுக்காகவும் போனேன். வேலை செய்யறதுக்கும் போனேன். இனிமே இங்கேயே இருந்தா போதும். பிறகு சம்பளம்... ஆனா, வாழறதுக்கு ஒரு ஆளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுது?''
நிர்வாக இயக்குநர் திடீரென்று நிறுத்தினார்.
அப்போது அந்த அறையில் ராமநாதன் இருப்பதைப்போல அவருக்குத் தோன்றியது.
அவர் உணர்ச்சிவசப்பட்டு, எதுவுமே கூறாமல் நின்றிருந்தார்.
சிறிது நேரம் கடந்ததும், தொழில்நுட்ப இயக்குநர் கூறினார்: ""ராமநாதன் வெளியேறியதற்கான சூழலை நீங்க சொல்லல.''
ஒரு கனவி−ருந்து அதிர்ச்சியடைந்து எழுவதைப்போல நிர்வாக இயக்குநர் அவர்களைப் பார்த்தார். தொடர்ந்து அவருடைய முகத்தில் குற்றவுணர்வால் உண்டான ஒரு சிறிய புன்சிரிப்பு பரவியது. அவர் கூறினார்:
""ராமநாதன் இங்கவந்த சூழலையும் நான் சொல்லலையே.''
தொழில் நுட்ப இயக்குநர் கூறினார்:
""எனக்கு எதுவுமே தெரியாது.''
நிர்வாக இயக்குநர் கூறினார்:
""எனக்குத் தெரியும். அப்போ நான்தான் தொழில்நுட்ப இயக்குநரா இருந்தேன்... அப் போதைய நிர்வாக இயக்குநர்... நீங்க அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்களே! ஆனா... இல்லை... இப்போ நமக்கு மத்தியில இல்லாத ஒரு மனிதரைப் பத்தி நான் ஏதாவது சொல்றது சரியா இருக்காது. இந்த நிறுவனம் இப்போதைய நிலையில இருக்கறதுக்கு அவரும் தனக்கான பங்கை செய்திருக்காரு. பிறகு... யாருக்குதான் தவறு உண்டாகாது? அதனால... இருக்கட்டும்.. அது இருக்கட்டும்... ராமநாதனைப் பத்தியில்லி−யா சொல்லணும்? இங்க நடந்த ரெண்டாவது விரிவாக்க சமயத்திலதான் ராமநாதன் இங்க வந்தார். வந்தார்னு சொல்றது முழுமையா சரியா இருக்காது. அழைச்சிக்கிட்டு வரப்பட்டார்னுதான் சொல்லணும். உண்மையிலேயே சொல்றதா இருந்தா- ராமநாதனுடையது ஒப்பந்தப் பணி. எனினும், இங்க இருந்த பலரையும்விட அதிக சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனா, நிர்வாகத்திற்கு அதனால ஆதாயம்தான். ரெண்டாவது கட்டத்தின் திட்ட கால அளவு வெறும் இரண்டு வருஷங்கள்தானே! ரெண்டு வருஷம் முடியறதுக்கு முன்பே ராமநாதன் தன்னோட பணியை ரொம்ப வெற்றிகரமா முடிச்சிருந்தார். வேலை முடிவடைஞ்சவுடன், ராமநாதன் இங்கிருந்து போவதா இருந்தார். ஆனா அதற்கிடையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த மூணாவது விரிவாக்கத்தோட பொறுப்பும் அவர்கிட்டயே ஒப்படைக்கப்பட்டது. இதுக்குப் பின்னா−ருந்தது நிர்வாகத்தின் விருப்பம் மட்டுமில்ல. வெளிநாட்டு பங்குதாரரின் வற்புறுத்தலும் இருந்தது. பொதுவா ராமநாதன் எங்கும் நீண்டகாலம் நிற்கறதில்லையே! ஆனா, இங்க என்ன காரணத்தாலோ... அப்படி நடந்தது. வேணும்னா...
தன்னோட சம்பளத்தையும் மற்ற வசதிகளையும் அதிகரிக்கும்படி அவர் கேட்டிருக்கலாம். ஆனா, அவர் அது எதையும் கேட்கல. நான் முதல்லயே சொன்னேனே... அவருக்கு எந்த சமயத்திலும் பணம் ஒரு பிரச்சினையாவே இருக்கலைன்னு...''
நிர்வாக இயக்குநர் நிறுத்தினார். சிறிது நேரம் பழைய நினைவுகளில் தனிமனிதனாகப் பயணித்துவிட்டு, மனதிலி−ருந்து ஏதோ ஒரு பெரிய சுமையை அகற்றுவதைப்போல அவர் கூறினார்:
""ராமநாதன் ஒரு பெரிய பொறியியல் நிபுணரா இருந்தார். ஒரு பெரிய மனிதராவும் இருந்தார். ஒருவேளை- அதையெல்லாம் என்னைவிட சிறப்பா சொல்றதுக்கு இங்க உட்கார்ந்திருக்கிற குமாரால முடியும். காரணம்- ஆரம்பத்தி−ருந்து அவரோட சேர்ந்து வேலை செஞ்சதும், அவரோட பழகியதும் குமாரும் குழுவினரும்தான்...''
தான் கூறியது சரிதானே என்பதைப்போல அவர் முன்னால் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்தார்.
இளைஞன் எதுவுமே கூறாமல் தலையை ஆட்ட மட்டும் செய்தான்.
மீண்டும் நிர்வாக இயக்குநர் கூறினார்:
""இங்க ராமநாதனோட பங்களிப்பைப் பத்தி பலரும் சொல்றதுண்டு நம்முடைய ரெண்டாவது, மூணாவது விரிவாக்க கட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில முடிவடைஞ்சதும், அதுவரை இறக்குமதி மட்டுமே செய்துக்கிட்டிருந்த உதிரி பாகங்கள் இங்கயே உற்பத்தி செய்யப்பட்டதும்... ஆனா எங்கிட்ட கேட்டா நான் சொல்லுவேன். ராமநாதனின் உண்மையான பங்களிப்பு இது எதுவுமே இல்லைன்னு. ராமநாதனோட பங்களிப்பு- இங்க இளைஞர்களான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்பம் கற்றவர்களைக் கொண்ட தகுதி படைச்ச ஒரு குழுவை உண்டாக்கியதுதான். எந்த இக்கட்டான சூழலையும் சந்திக்கக்கூடிய இளைஞர்களோட ஒரு...''
நிர்வாக இயக்குநர் மீண்டும் நிறுத்தினார். பிறகு... தான் கூறுவது சரிதானே என்பதைப்போல இளைஞனைப் பார்த்தார்.
முதலி−ல் எதுவும் பேசாமலி−ருந்த இளைஞன் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டான். அவன் கூறினான்:
""உண்மைதான்... சார். உண்மைதான்... என் அனுபவத்தையே சொல்றதா இருந்தா... கல்லூரியை விட்டு அப்போதான் வெளியேவந்த ஆரம்ப நிலையி−ருந்த ஒரு சாதாரணமானவன் நான்...''
அவனிடமிருந்து வார்த்தைகள் திரண்டு வந்தன. முன்னா−ருப்பவர்கள் தன்னைவிட பெரியவர்கள் என்ற விஷயத்தை நினைக்காமல், உணர்ச்சிவசப்பட்ட ஒரு மனதுடன் அவன் அந்த பழைய கதைகளைக் கூறியபோது, தொழில்நுட்ப இயக்குநர் ஆச்சரியத்துடன் அதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார். அவனை இடையில் தடுக்கவோ ஏதாவது கேட்கவோ செய்யாமல் நிர்வாக இயக்குநரும் முழுவதையும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார்.
அவன் கூறிமுடித்தபோது ஒரு மழைபெய்து நின்றதைப்போல இருந்தது.
சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை.
பிறகு... தொழில்நுட்ப இயக்குநர் கூறினார்:
""ராமநாதன் வெளியேறிய சூழலைப் பத்தி நீங்க எதுவும் சொல்லல.''
ஒரு நீண்ட பெருமூச்சுடன் நிர்வாக இயக்குநர் கூறினார்:
""சரிதான்... ஆனா, அதைப் பத்தி என்ன சொல்லணும்னு எனக்கே தெரியல. குறிப்பிட்ட கால அளவு முடியறதுக்கு முன்பே ராமநாதன் இங்கிருந்து ஏன் போனார்னு பலரும் இதற்குமுன்பும் கேட்டிருக்காங்க. அவங்ககிட்ட தெளிவா ஒரு பதிலை நான் எந்த சமயத்திலும் சொன்னதில்ல. காரணம்- நான் சொல்ற பதில்... அல்லது... என்னால சொல்லமுடிகிற பதில், மத்தவங்களுக்கு முன்னால நம்முடைய மதிப்பினை எந்தச் சமயத்திலும் உயர்த்துவதா இருக்காது. அதனால நான் எப்போதும் விலகி நின்னேன். ஆனா, இப்போ...''
அவர் உடனடியாக நிறுத்தினார். பிறகு... சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, மீண்டும் கூறினார்:
""ராமநாதனைப் பத்தி எனக்கிருந்த மதிப்பை நான் முதல்லயே விளக்கிச் சொன்னேனே. தீர்ப்பளிக்கக்கூடிய மனிதனாகறதுக்கு நான் விரும்பல. ராமநாதனைப் போன்ற ஒரு மனிதரைப் பத்தி மோசமான அபிப்ராயத்தைச் சொல்லக்கூடிய விவேகமில்லாத குணமும் இந்த வயசுல எனக்கு இல்லைங்கறதை சேர்த்துக்கங்க. இருந்தாலும் எனக்கு சில வேளைகள்ல தோணியிருக்கு-
அவருடைய நடத்தையில ஒரு பொருத்தமில்லாத தன்மை எப்போதும் இருந்ததில்லி−யா? அவர் எந்தச் சமயத்திலும் யாருக்கும் பயந்ததில்ல.
அவங்களுக்கு முன்னால தலைகுனிஞ்சு நின்றதுமில்ல. குறிப்பா... மேலே இருப்பவங்களுக்கு முன்னால... இது ஒரு குணமா இருக்கலாம். ஆனா, நம்மைப் போன்ற ஒரு சமூகத்தில... கொஞ்சம் பார்க்கல, கேட்கலைன்னு பொய்யா காட்டிக்கக் கூடிய சூழல் வராதா? கொஞ்சமாவது பிடிக்காத செயல்களைச் செய்ய வேண்டாமா? ஆனா, ராமநாதனைப் பொருத்தவரையில பிடிக்காத செயல்களைச் செய்றதுங்கறது இல்லவே இல்லை. தும்பாவைத் தூம்பான்னு அழைத்தே தீர்றதுங்கற பிடிவாதம் அவருக்கு கிடையாதான்னு எனக்கு பல நேரங்கள்ல தோணியிருக்கு. ஒரு சாதாரண வெல்டரோட சேர்ந்து உட்கார்ந்து அவருக்கு வேலை செய்யக் கத்துக்கொடுக்கறதுல சந்தோஷம் அடையக்கூடிய அவர், உயர்ந்த நிலையில உள்ளவங்களோட இருக்குறப்போ- சேர்மன், செக்ரட்டரி, அமைச்சர்... இவங்களுக்கு முன்னால- முரட்டுத்தனம் கொண்ட மனிதரா நடந்துக்கறதை நான் பார்த்திருக்கேன்.
சில நேரங்கள்ல அவங்க சொல்றது சரியா இல்லாம−ருக்கலாம். இருந்தாலும் அவங்களோட முகத்தைப் பார்த்து அதை சொல்லி−யே ஆகணும்னு எதுவுமில்லையே! ஆனா, ராமநாதன் அப்படி சொன்னார். எந்த காரணத்தாலும் அப்படி சொல்ல முடியலைன்னா அவர் அமைதியில்லா மனிதராகி டுவார். ஒருவேளை... இது என்னோட மிகவும் சரியில்லாத ஒரு கருத்தாவே இருக்கலாம். இருந்தாலும், எனக்கு எப்போதும் அப்படித்தான் தோணியிருக்கு...
ராமநாதன் மத்தவங்கிட்டயிருந்து விலகி வாழ்ந்துகிட்டிருந்தார். அவர் தனிமனிதரா இருந்தார். குடும்பம் இல்ல. மத்தவங்க கிளப்களுக்கும், விருந்தினர் மாளிகைக்கும் போய் சீட்டு விளையாடிக்கிட்டு, குடிச்சிக்கிட்டு, டவுன்ஷிப்பில் கிசுகிசுக்களைச் சொல்லி− நேரத்தைச் செலவிட்டுக்கிட்டு இருக்கும்போது, ராமநாதன் வீட்ல உட்கார்ந்து புத்தகங்களை வாசித்துக்கிட்டு, கர்நாடக இசைத்தட்டுக்களையும் நாடாக்களையும் கேட்டுக்கிட்டு மாலை வேளைகளை நகர்த்திக்கிட்டிருந்தார். இப்படிப்பட்ட எதுவுமே இல்லாதவங்களை அவர் சாதாரணமா நினைச் சார்னு சிலர் சொல்லக் கேட்டிருக்றேன். ஆனா அது உண்மைன்னு தோணல. எனக்கு எந்த சமயத்திலும் அப்படிப்பட்ட ஒரு அனுபவம் உண்டானதில்ல.
அவர் தனக்கு விருப்பப்பட்டதை மட்டும் செய்தார்னு நான் சொல்லுவேன்.''
அவர் நிறுத்திவிட்டு, இளைஞனைப் பார்த்துக் கூறினார்:
""குமார், உங்களுக்கு என்ன தோணுது?''
குமார் தலையை ஆட்ட மட்டும் செய்தான்.
அவர் தொடர்ந்து கூறினார்.
""குமார்... ராமநாதனோட ரொம்ப நெருக்கமா பழகிய ஒரு ஆள் நீங்கதானே. அதனாலதான் நான் கேட்டேன். அது இருக்கட்டும்... நிர்வாக இயக்குநரோட உண்டான சாதாரண ஒரு கருத்து வேறுபாடுதானே ராஜினாமாவில் போய் முடிஞ்சது? ஒருவேளை... அதுக்கு முன்பே ஏதாவது உரசல் இருந்ததோன்னு எனக்கு உறுதியா தெரியல... சம்பவம் நடைபெற்றப்போ, நிர்வாக இயக்குநரோட அறையில ராமநாதன் மட்டுமில்லாமல் நானும் பெர்சனல் மேனேஜரும் இருந்தோம். ராமநாதனுக்குக் கீழே வேலை செய்துக்கிட்டிருந்த ஒரு எஞ்ஜினியரின் பதவி உயர்வுதான் விஷயம்... ராமநாதன் எந்தவொரு கோபத்தையும் வெளிப்படுத்தல... ஆனா அவருடைய வார்த்தைங்க கூர்மையான ஈட்டிகளா இருந்தன. ராமநாதன் சொன்னார். "எனக்கு இந்த ஆள் வேண்டாம். இந்த ஆளை இந்த இடத்தில வேலை செய்ய வைக்கவும் நான் தயாரா இல்ல. இந்த ஆள் யாருடைய உறவினராகவும் இருக்கலாம். ஆனா அந்த காரணத்துக்காக இவர் ஒரு நல்ல எஞ்ஜினியர்னு அர்த்த மில்ல. பதவி உயர்வு தரணும்னு நான் சொல்றது ஒரு ஆளுக்கு... நீங்க தர்றது எந்தவொரு தகுதியும் இல்லாத இன்னொரு ஆளுக்கு... என்னால இதை அனுமதிக்கவே முடியாது.'
அப்போ நிர்வாக இயக்குநர் ராமநாதனிடம் கூறினார்:
"ராமநாதன், நீங்க அனுமதிக்குற விஷயம் வரப் போறதே இல்லி−யே! நீங்க சிபாரிசு செய்யலாம். ஆனா யாரை உயர்த்தணும்னு முடிவு செய்யவேண்டியது நிர்வாகம்தான். இப்படிப்பட்ட விஷயங்கள்ல ஒரு தீர்மானம் எடுக்கறதுக்கு முன்ன நிர்வாகம் பலவற்றையும் யோசிக்க வேண்டியதிருக்கும்...'
ராமநாதனின் வார்த்தைகள் அப்போது அறையில் பெரிதாக ஒலி−த்தன. வார்தைகளை உரத்துக்கூறியதால் அல்ல... அவற்றின் பலத்தால்...
"உங்களுடைய ஒரு யோசனை! நான் கேட்க வேண்டாம்...'
இப்படி சொல்−ட்டு அவர் மேஜைமேல இருந்த பேடி−ருந்து ஒரு தாளைக் கிழிச்செடுத்து அதில் நான்கு வார்த்தைங்க எழுதினார். நிர்வாக இயக்குநருக்கு முன்னால வச்சார். அவருடைய முகத்தில் வெறுப்பு நிறைஞ்ச ஒரு சிரிப்பு இருந்தது. தொடர்ந்து குறிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு எதுவுமே நடக்காததைப்போல அவர் அறையைவிட்டு வெளியேறிப் போனார். நாங்க எல்லாரும் திகைப்படைஞ்சு உட்கார்ந்திருந்தோம்.
ராமநாதனின் பணிக்காலம் முடிவடைறதுக்கு இன்னும் ஒரு வருஷம் இருந்தது. அப்போதான்... நான் முதல்லயே சொன்னேனே. இது எதுவுமே நடந்திருக்கக் கூடாது. ஆனா நடந்துட்டது.''
கவலை தரக்கூடிய அந்த நினைவுகளி−ருந்து அவர் விடுபடுவதற்கு முயற்சிப்பதைப்போல தோன்றியது.
அப்போது தொழில்நுட்ப இயக்குநர் கூறினார்:
""ராமநாதன் செய்தது சரிதான்னு என்னால சொல்லமுடியல. அவர் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி; ஒரு நிறுவனத்தில வேலை செய்யறப்போ...''
இளைஞன் என்னவோ கூறுவதற்கு முயற்சி செய்ய, அதற்கு இடம்கொடுக்காமல் நிர்வாக இயக்குநர் கூறினார்:
""தவறும் சரியும் அங்கேயே நிற்கட்டும். நாம இனிமே அதைப்பத்தி பேசறதால பயனில்லையே! இப்போ வேண்டியது... இந்த கம்பரஸ்ஸரை உடனடியா சரிசெய்து ப்ளான்ட்டை மீண்டும் ஓடச்செய்ய முடியுமான்னு பார்க்கறதுதான். புதிய கம்ப்ரஸ்ஸர் வந்துசேர்றதுக்கு எட்டு மாசங்களாவது ஆகும். அதுவரைக்கும் தொழிற்சாலையை மூடுறதுங்கறது நினைச்சுப் பார்க்க முடியாத விஷயம். அதனாலதான் நான் சொன்னேன்- பழுதடைஞ்ச சிலி−ண்டரை வெல்ட் செஞ்சு கம்ப்ரஸ்ஸரை ஓடச் செய்யணும்னு. இதி−ருக்கும் சிரமங்களைத் தெரிஞ்சிக்காம நான் சொல்லல. இப்படிப்பட்ட ஒரு கம்ப்ரஸ்ஸரை இதுக்குமுன்ன யாரும் வெல்ட் செஞ்சு சரிப்படுத்தாம இருக்கலாம். ஆனா அதுக்காக நம்மால முடியாதுன்னு இல்−யே!''
இளைஞன் என்னவோ கூற முயற்சிக்க, நிர்வாக இயக்குநர் மீண்டும் கூறினார்:
""குமார்... நான் உங்களுடைய சிரமத்தைப் புரிஞ்சுக்கறேன். நீங்க சமீப நாட்கள் முழுசும் இரவும் பகலும் முயற்சிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். இடுக்கியி−ருந்து வந்த கனடா நாட்டைச் சேர்ந்த நிபுணராவோல, லெய் லேண்டி−ருந்து வந்த பிரிட்டிஷ் நிபுணராலோ இந்த விஷயத்தில நமக்கு உதவ முடியலைங்கறதை நான் நினைச்சுப் பார்க்கிறேன். ஆனா அதனால...? நாம இனிமேல முயற்சிக்க வேண்டாம்னு அர்த்தமா? தொழிற்சாலையை மூடிடலாம்னு அர்த்தமா? தொழிலாளிகளை வெளியேற்றலாம்னு அர்த்தமா? இல்ல குமார்... இது எந்த சமயத்திலும் நடக்காத விஷயம். எங்காவது ஒரு வழி உண்டாகும். நான் உங்களைப்போல ஒரு தொழில்நுட்பம் தெரிஞ்ச மனுஷனில்ல. இருந்தாலும் எனக்குத் தோன்றது... நம்மால இதைச் செய்ய முடியும்ங்கறதுதான். அதனாலதான் நான் சொல்றேன்- ராமநாதனை எப்படியாவது கண்டுபிடிக்கணும். இந்த நிமிஷத்தி−ருந்து உங்களுடைய பணி அதுதான். இதுக்காக நீங்க எங்க வேணுமானாலும் போகலாம். எதை வேணும்னா லும் செலவழிக்கலாம். என் அனைத்து உதவியும் உங்களுக்கு இருக்கு.''
அவர் நிறுத்தினார்.
தொடர்ந்து அறையில் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. இறுதியில் தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல அவர் மெதுவான குரலி−ல் கூறினார்:
""ஒரு மனிதர்... இப்போ எங்க இருக்காருங்கறதுகூட யாருக்கும் தெரியாது. பம்பாயிலா... கல்கத்தாவிலா... டில்−யிலான்னு யாருக்கும் தெரியாது. நைஜீரியன் அரசாங்கத்தோட அழைப்பின்பேர்ல அங்க ஒரு ஆலோசகரா போனது சிலருக்குத் தெரியும். அது... இங்கிருந்து பம்பாய்க்குப் போய் ரெண்டு மாசம் கடந்தபிறகு நடந்தது. பிறகு... நைஜீரியாவிலி−ருந்து −பியாவுக்குப் போயிருக்கார். லி−பியாவி−ருந்து வந்தபிறகு என்ன நடந்ததுன்னு யாருக்கும் தெரியாது. நான் பலரிடமும் விசாரிச்சுப் பார்த்தேன். பம்பாயி−ருந்த வீட்டை −பியாவுக்குச் போறதுக்கு முன்பே வித்துட்டிருக்கார். இப்போ எங்க இருக்கார்னு யாருக்கும் தெரியாது. அவரைப்போன்ற ஒரு மனிதர் ஒரு நாள் திடீர்னு மறைஞ்சுபோறதுங்கறது... என்னால புரிஞ்சிக்க முடியல.''
அப்போதுதான் குமார் கூறினான்:
""சார்... நான் முயற்சி செஞ்சு பார்க்கிறேன். ஆனா என்னால உறுதியா சொல்லமுடியாது.''
இப்படி கூறியபோதும், அவனுடைய மனம் அமைதி யற்றே இருந்தது. அப்போது அவனுடைய மனதில் சி−ண்டர் சேதமடைந்த மூவாயிரம் குதிரைசக்தி படைத்த கம்ப்ரஸ்ஸரோ, அதன் பிரச்சினைக்குரிய வெல்டிங்கோ... எதுவுமே இல்லை.
அவன் சில வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்தான்.
காலையில் பம்பாய்க்குச் செல்லும் முதல் விமானம் புறப்படும் நேரம்... ராமநாதனை வழியனுப்புவதற்காக அவர்கள் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார்கள். அவர்கள்... இளைஞர்கள் சிலர் மட்டும்... ராமநாதனு டன் சேர்ந்து பணிசெய்வதற்கு அதிர்ஷ்டம் வாய்த்த வர்கள்... அவர்கள் கவலையில் இருந்தார்கள்.
அவர்களுக்குள் கோபம் இருந்தது. ஆனால் தாங்கள் கையற்றவர்கள் என்ற புரிதலும் அவர்களுக்கு இருந்தது.
பிரிவதற்கான நேரம் வந்தபோது அவர்களில் யாரோ அழுதுவிட்டார்கள். அப்போது அவர் கூறினார்:
"ச்சே... ச்சே... நீங்க என்ன குழந்தைகளா? அழுற அளவுக்கு இங்க என்ன நடந்துட்டது?'
விடைபெறக்கூடிய இறுதி நிமிடம்...
அவர் கூறினார்: "நான் உங்களுக்கு கடிதம் எழுதமாட்டேன். ஒரு விஷயத்தை உங்களுக்கு உறுதியா சொல்றேன். நீங்க எல்லாரும் எப்போதும் என் மனசுல இருப்பீங்க... எப்போதும்...'
அதை நினைத்தவாறு குமார் நிர்வாக இயக்குநரிடம் மீண்டும் கூறினான்: ""நான் முயற்சிக்கிறேன்.''
அந்த முயற்சிதான் அவனைச் சில நாட்களிலேயே மதராஸில் கொண்டுவந்துவிட்டது. மதராஸின் பாரீஸ் கார்னரில்... பாரீஸ் கார்னரை அடைந்தது பெங்களூரின் எம்.ஜி. ரோடு வழியாக... எம்.ஜி. ரோடில் ஒரு காலத்தில் விருந்தினர் மாளிகையில் பணியாளாக இருந்த சிங்காரத்தைப் பார்த்தான். விருந்தினர் மாளிகைக்கும் கிளப்புக்கும் மிகவும் குறைவாகவே சென்றிருக்கும் ராமநாதனைப் பற்றி சிங்காரத்திடமிருந்து ஏதாவது தெரிந்துகொள்ள முடியுமென்ற எதிர்பார்ப்பே இல்லாம−ருந்தது.
ஆனால் சிங்காரம் கூறினார்:
""அந்த வெல்டிங் செய்ற சாமியா? இப்போ மதராஸ்ல தம்புச்செட்டித் தெருவிலோ பாரீஸ் கார்னரிலோ எங்கேயோ ஒரு கடை போட்டிருக்க றதா கேள்விப்பட்டேன். எனக்கு உறுதியா தெரியாது.''
அதை அவனால நம்பமுடியவில்லை.
ராமநாதன்- எஞ்ஜினியர் ராமநாதன்- மதராஸின் பாரீஸ் கார்னரில... இல்லாவிட்டால்... தம்புச்செட்டித் தெருவில் "கடை' திறந்திருக்கிறாரா?
கடை...?
ஆனால், சிங்காரத்திடமிருந்து அதற்குமேல் எதுவும் கிடைக்கவில்லை.
எனினும், சந்தேகத்துடன் நிற்கவில்லை.
ஒருமுறை சென்று விசாரித்தான்.
மீண்டும் சென்றான்.
மணிக்கணக்காக அலைந்து திரிந்தும் ராமநாதனைப் பற்றிய எந்தவொரு தகவலும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. அவன் விசாரித்த சில எஞ்ஜினியரிங் நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கு ராம நாதனைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அறிவு இருந்தாலும், அவர் மதராஸில் இருக்கிறார் என்ற தகவல் அவர்களிடம் இல்லை.
இறுதியில் திரும்பிச்செல்ல ஆரம்பித்தபோது, ராமநாதனே அவனுக்கு முன்னால் தோன்றுகிறார்!
கடவுள் அனுப்பி வைத்ததைப்போல!
பாரீஸ் கார்னரிலி−ருந்து கத்தோ−க் மையத்திற்குச் செல்லும் குறுக்குப் பாதையின் ஆரம்பத்தில், இனி என்ன செய்வதென்ற சிந்தனையில் மூழ்கி நின்றுகொண்டிருந்தபோது, அந்த கேள்வியை அவன் கேட்டான்.
""குமார்... நீங்க இங்க என்ன செய்றீங்க?''
ஒரு நிமிடம் அவன் திகைப்படைந்து நின்று விட்டான்.
பிறகு... அனைத்தையும் தெளிவாகப் பார்த்தான். ரெண்டு பெரிய கட்டடங்களுக்கு மத்தியில், அவற்றின் இடைவெளி என்ற தோற்றத்தைத் தரக்கூடிய ஒரு சிறிய அறை... அதற்கு முன்னால் "பிரதிகள் எடுத்துத் தரப்படும்' என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை. அறையில் ஒரு ஸெராக்ஸ் மெஷின்... சில நாற்காலி−கள்... ஒரு மேஜை...
அங்கு ராமநாதன் புன்னகைத்தவாறு அவனைப் பார்த்து நின்றுகொண்டிருக்கிறார்.
தான் கனவு காணுகிறோமோ என்று சந்தேகப் பட்டபோது, ராமநாதன் கூறினார்:
""நீங்க என்ன...?''
அவன் திகைப்புடன் கூறினான்:
""சார்... நீங்க இங்க...''
""நான் இப்போ ஓய்வுல இருக்கேன். வேலை எல்லாத்தையும் நிறுத்திட்டேன். எங்காவது போய் முற்றிலும் தனியா... அப்படி நினைச்சுதான் இங்க வந்தேன். ஆனா, இங்குவந்து சேர்ந்தபிறகு, இதுதான் அமைஞ்சது... இது என்னுடையது இல்ல. என்னோட ரொம்ப பழைய நண்பருடையது. அவர் உடல் நலமில்லாம ஒரு மருத்துவமனையில் கிடக்கிறார்.
அவருக்கு உதவறதுக்காக நான் இங்கு வரேன். இதிலும் ஒரு சுகமும் சந்தோஷமும் இருக்கு. இன்னும் சொல்லப்போனா- நல்ல எந்தவொரு வேலை அப்படி இல்லாம இருக்கிறது இல்லி−யா?''
ராமநாதன் அதற்குமேல் எதுவும் கூறவில்லை.
அவர் எதையோ சிந்தித்துக்கொண்டு நின்றிருந்தார்.
ராமநாதனுக்கு முன்னால் கேள்வி கேட்பதற்கான சக்தியை இழந்த ஒரு பள்ளிக்கூட மாணவனைப் போல அவன் நின்றிருந்தான்.
பிறகு... சிறிது நேரம் கடந்ததும், அவன் தான் வந்த விஷயத்தைப்பற்றி கூற ஆரம்பித்தான். கவனத்துடன் அதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்த ராமநாதன் ஒரு கட்டத்தில் கூறினார்: ""வேணாம்... இங்கே இருந்துக்கிட்டு இதைச் சொன்னா சரியா இருக்காது. வீட்டிற்குப் போகலாம் வாங்க...''
வீடு நகரத்தின் ஒரு எல்லையில் இருந்தது.
அவர்கள் செய்த பணியின் தன்மையைப் பற்றி ஏதோ சில கேள்விகளைக் கேட்டதைத் தவிர, வழியில் பெரும்பாலான நேரமும் ராமநாதன் சிந்தனையிலேயே இருந்தார்.
வீட்டை அடைந்தவுடன் ராமநாதன் கூறினார்:
""குளியலும் காபி குடிக்கறதும்... பிறகு இனி நீங்க சொல்லுங்க.''
அவன் ப்ரீஃப்கேஸைத் திறந்து வரைபடங்களையும் புகைப்படங்களையும் ராமநாதனுக்கு முன்னால் வைத்தான். பிறகு தாங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்பதை விளக்கிக் கூறினான்.
இடையில் ராமநாதன் அவனிடம் கேள்விகள் கேட்டார். இடையில் சிந்தனையில் மூழ்கி அறையில் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார். சில நேரங்களில் கையி−ருந்த பென்சிலால் வரை படங்களில் குத்திக்கொண்டும், குறித்துக்கொண்டும் இருந்தார். மனதிற்குள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
இறுதியில் அவன் அனைத்தையும் கூறிமுடித்த போது, ஒரு பரிகாரத்தைக் கண்டடைந்ததைப்போல ராமநாதன் கூறினார்:
""குமார்... நீங்கள் செஞ்சது சரிதான்.''
அதைக்கேட்டதும் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது.
"நீங்க செஞ்சது சரிதான்' என்று கூறுகிறாரா?
அவர் என்ன கூறுகிறார்?
ராமநாதன் கூறினார்: ""முழுசா சரியில்ல. அப்படி இருந்திருந்தா இந்த பிரச்சினைங்க எதுவும் உண்டாகியிருக்காதே! இருந்தாலும் கிட்டத்தட்ட சரிதான்... உங்க இடத்தில நான் இருந்திருந்தா, ஒரு வேளை... நானும் இதைத்தான் முதல்ல செய்திருப்பேன். பரவாயில்ல... நாம இதை சரி செய்யலாம்.''
ராமநாதன் புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவன் ஆச்சரியதுடன் தன் மேலதிகாரியைப் பார்த்தான்.
அவன் நினைத்தான். சரீரம் தளர்ந்துபோய்க் காணப்பட்டாலும், அவருடைய மனம் இப்போதும் பழைய மாதிரிதான் இருக்கிறது...
ராமநாதன் ஒரு தாளை எடுத்து அதில் வரைந்துகொண்டே கூறினார்:
""ரொம்ப கீழே இருக்கக்கூடிய வெல்பீடை மிகவும் சிறிய எலெக்ட்ராட் வச்சு செய்யுங்க. அதுக்கு மேலே அதைவிட பெரியது. இப்படி... "ப்ரீன்' செய்யுறப்போ கவனிக்க வேண்டியது... ட்ரஸ் ரிலீவ் செய்யறப்போ ஒரு விஷயத்தைக் குறிப்பாக கவனிக்கணும்...
அதாவது...''
ராமநாதன் கூறி நிறுத்தியபோது, ஒரு புதிய வெளிச்சம் கிடைத்ததைப்போல அவனுக்குத் தோன்றியது.
ராமநாதன் மீண்டும் கூறினார்:
""எனக்கு உறுதியா தெரியும். இந்த முறை நீங்க இதைச்செய்வீங்க. பதைபதைப்பு அடையவேண்டிய அவசியமே இல்ல:''
அதேபோலத்தான் நடந்தது.
இன்று... இரண்டு மாதங்களுக்குப்பிறகு அவன் மீண்டும் ராமநாதனுடைய வீட்டிற்கு வந்திருக்கிறான். இரண்டாயிரம் தொழிலாளிகள், அதிகாரிகள் ஆகியோரின் நன்றியையும் அன்பையும் அறிவிப்பதற்காக... அவனுடைய கையில் சேர்மன் கொடுத்தனுப்பிய கடிதம் இருக்கிறது. ராமநாதனின்மீது நிறுவனத்திற்கு இருக்கும் நன்றிகளைக் கூறியிருக்கும் கடிதம்... அதுதவிர, நிறுவனத்தின் ஆலோசனை என்றவகையில் ராமநாதனுக்குத் தரும் ஒரு பெரிய தொகைக்கான ட்ராஃப்ட்டும் இருக்கிறது.
அது அந்த அளவுக்கு பெரிய ஒரு அறையல்ல. அறையில் நிறைய நாற்காலிலிகள் இல்லை.
அங்கு அதிகமாக இருந்தவை புத்தகங்களும் மாத இதழ்களும்தான். புத்தகங்கள் பெரும்பாலும் பொறியியல் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.
அதேபோலத்தான் மாத இதழ்களும்...
இவை தவிர, அவன் முன்பே பார்த்திருந்த வேறு இரண்டு பொருட்களும் அறையில் இருந்தன. "க்ரண்டிக்'கின் ஒரு ஸ்பூல் டைப் டேப் ரெக்கார்டரும், "கராடி'ன் ஒரு ரிக்கார்ட் ப்ளேயரும்... இரண்டும் மிகவும் பழையவை.
ராமநாதன் என்னவோ சிந்தித்தவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் ஏதாவது கூறுவார் என்று ஆர்வத்துடன் அவன் எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவன் கூற வேண்டியவை அனைத்தையும் கூறிமுடித்துவிட்டான். அதற்குமேல் கூறுவதற்கான தைரியம் அவனுக்கு இல்லை.
சேர்மனின் கடிதமும் ட்ராஃப்டும் இருந்த கவர் அவனுடைய கையில்தான் இருந்தது.
மூச்சை அடைக்கக்கூடிய மௌனத்தி−ருந்து அவனுக்கு விடுதலை அளித்தவாறு ராமநாதன் மெதுவான குரலி−ல் கூறினார்:
""குமார்... என்னை கொஞ்சமாவது நீங்க புரிஞ்சிக் கிட்டிருப்பீங்க இல்−யா? நான் எந்தச் சமயத்திலும் பணத்துக்காக வேலை செய்ததில்லை. செய்த வேலைக்கு பணம் வாங்கியிருக்கேன். ஆனா அதுவும்... பணத்துக்காக வேலை செய்றதும் வெவ்வேறு... பிறகு... நான் இதிலி−ருந்து ஓய்வுபெற்று, சிலநாள் ஆகிட்டதுன்னு நான் உங்ககிட்ட சொன்னேன் இல்−யா? எல்லாத்துக்கும் ஒரு காலம் இருக்கு. என்னைப் பொருத்தவரையில் இப்படிப்பட்ட வேலையைச் செய்யக்கூடிய காலம் முடிஞ்சிட்டது. வாழ்க்கையில வெல்டிங்கும் ப்ரஷர் வெஸல்களும் மட்டும் இல்லையே! இது எனக்கு முன்பே தெரிஞ்ச விஷயம்தான். ஆனா, அப்போ காலம் ஆகல. வாழ்க்கையில விரும்பியதையெல்லாம் நான் செய்திருக்கேன். ஒன்றைத் தவிர. இளம்வயசுல இசை கத்துக்கணும்னு நினைச்சேன். ஆனா, அப்பா வோட வற்புறுத்தல் காரணமா அது நடக்கல. நான் தஞ்சாவூருக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்ங்கற விஷயம் உங்களுக்குத் தெரியுமான்னு எனக்கு உறுதியா தெரியாது... இசையைக் கேட்டுக்கிட்டுதான் நான் பால்ய காலத்தில்...''
அவன் ஆச்சரியத்துடன் அந்த கதைகளைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தான்.
மீண்டும் ராமநாதன் கூறினார்:
""பழைய வேலையை போதும்னு நிறுத்திட்டேன்னு நான் சொன்னேனில்−யா? ஆனா, ஒரு பிரச்சினை உண்டானா நீங்க எப்போதும் என்னைத் தேடி கட்டாயம் வரலாம். ஆனா அதுக்கு அர்த்தம்- நான் காசு வாங்கிக்கிட்டு எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்குக் கத்துத் தரணும்ங்கறதுக்காக அல்ல. பிறகு... குமார், யார் யாருக்காக காசு வாங்கணும்? என் மனைவிக்காகவா? பிள்ளைகளுக்காகவா?''
எதையோ நினைத்ததைப்போல அவர் நிறுத்தினார்.
அப்போது ஏதாவது கூறுவதற்கு அவருக்கு வார்த்தைகள் இல்லாமற்போய்விட்டது.
இந்த ஒரு விஷயத்தில் அவருடைய வாழ்க்கை வெறுமையும், பயனற்றதாகவும் இருந்தது என்பதை அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.
தொடர்ந்து தனக்குத்தானே கூறிக் கொள்வதைப்போல ராமநாதன் கூறினார்:
""எல்லாத்துக்கும் ஒரு சந்தர்ப்பம் இருக்குறது இல்லி−யா?''
அவருடைய குர−ல் சோகத்தின் அடையாளம்கூட அப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
அவனுக்கு போகவேண்டிய நேரம் ஆகியிருந்தது.
ராமநாதன் கூறினார்:
""இனிமேலும் வாங்க... நான் இங்கதான் இருப்பேன்.''
அவன் சாலையை நோக்கி நடந்தான். அவனுடைய மனதில் ஏராளமான நினைவுகள் இருந்தன. சிறிது தூரம் நடந்தபிறகு, அவன் திரும்பிப் பார்த்தான். ராமநாதன் வாச−ல் இல்லை.
அவனுக்கு என்னவென்று தெரியாத ஏதோ ஒரு கர்னாடக இசையின் இனிமையான அலைகள், ராமநாதனின் அறையி−ருந்து வெளியே வந்து கொண்டிருந்தன.