செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
-பட்டுக்கோட்டையார்
என் பெயர் ஜான். நானும் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த மேடை மீது அனைவரின் பார்வையும் குவிந்திருந்தது. அப்போது அந்த ஒருவரும் மேடை ஏறத் தயாரானார்கள்.
அவர்கள் இருவரின் அகவையும் இருபதின் சுற்று வட்டாரத்தில்தான் இருக்கும். ஒருவர் ஜாப்ஸ், அடுத்தவர் நியாக். ஹோம்ப்ரூ கம்ப்யூட்டர் கிளப்பில் செயல் விளக்கத்திற்காக இருவரும் இணைந்து மேடையேறினார்கள்.
இவைங்க ரெண்டு பேரையும் பார்த்தா லூசுப் பயலுக மாதிரி தெரியுது...தலைமுடியும்-முகரக்கட்டையும் பார்த்தாலே கடுப்பாகுது. இவைங்க கொடுக்கப் போகிற விளக்கத்தைக் கேட்கணும்னு நமக்குத் தலையெழுத்து...'' -கூட்டத்தில் இருந்த ஒருவர் சத்தமாகவே சலித்துக் கொண்டார்.
உடனே பக்கத்தில் அமர்ந்திருந்த டெர்ரெல், தோற்றத்தை வச்சி இந்தக்கால இளைஞர்ளைக் கணிக்கவே முடியாது சார்... இந்த மாதிரி இளைஞர்கள்கிட்டதான் வித்தியாசமான திறமை கள் ஒளிஞ்சு கிடக்கும். இவங்கள்ளாம் பொஹீமியன் பாணியில் குளிக்காமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும் இவங்களோட சிந்தனை தெளிவாயிருக்கு!'' -டெர்ரெல் மறுத்துப் பேசியதும், குற்றம் சொன்னவர் மௌனியானார்.
நான் அவர்கள் இருவரையும் நன்றாக அறிவேன். மட்டுமன்றிப் பெரும்பாலும் அவர்களுடன் இணைந்து பயணிப்பவன். காற்று' மாதிரி. ஜான். இருவரும் என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள்.
நியாக் ஓர் அற்புதமான பொறியியல் வல்லுநன். ஜாப்ஸ் ஒர் அற்புதமான வியாபாரி. இருவரும் இணைந்ததால் வெற்றி நிச்சயம். அது உடனே நிகழாவிட்டாலும் எதிர்காலத்தில் உலகம் இவர்களைக் கொண்டாடும் என்பது எனது தெளிவு.
இருவருமாய் இணைந்து ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்க முடிவு செய்திருந்தார்கள். ஆயிரத்துமுந்நூறு டாலர் முதலீட்டில் தொடங்க முடிவாகிவிட்டது. அதற்கே, நியாக் அறுபத்தைந்து கால்குலேட்டர்களை ஐநூறு டாலருக்கு விற்றார். ஜாப்ஸ் தனது பிரியமான ஃபோக்ஸ்வாகன் வாகனத்தை விற்கவேண்டி வந்தது.
வாகனத்தை வாங்கியவர், இரண்டுவாரங்கள் கழித்து இயந்திரம் பழுதாகிவிட்டதென்று திருப்பிக் கொண்டுவந்து வாசலில் நிறுத்திவிட்டார். காரை பழுது பார்க்கும் செலவில் பாதியை ஜாப்ஸ் ஏற்கவேண்டிய நிர்ப்பந்தமும் வந்தது. இவர்களது சிறுசேமிப்பும் கரைந்து போயிற்று. ஆனால் இருவரும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. குறிப்பாக ஜாப்ஸ். ஜாப்ஸ் அன்று ஆல்-ஒன்' பண்ணைக்குச் சென்றிருந்தார். ஆப்பிள் மரக்கிளைகளை நேர்த்தியாய்க் கத்தரிக்கும் பணி. வேலை முடித்துவிட்டு வந்த அவரை நாங்கள் அழைத்துவந்தோம். லாஸ்-ஆல்டோஸூக்குத் திரும்பும் வழிநெடுகிலும் பல்வேறு பெயர்களை யோசித்
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
-பட்டுக்கோட்டையார்
என் பெயர் ஜான். நானும் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த மேடை மீது அனைவரின் பார்வையும் குவிந்திருந்தது. அப்போது அந்த ஒருவரும் மேடை ஏறத் தயாரானார்கள்.
அவர்கள் இருவரின் அகவையும் இருபதின் சுற்று வட்டாரத்தில்தான் இருக்கும். ஒருவர் ஜாப்ஸ், அடுத்தவர் நியாக். ஹோம்ப்ரூ கம்ப்யூட்டர் கிளப்பில் செயல் விளக்கத்திற்காக இருவரும் இணைந்து மேடையேறினார்கள்.
இவைங்க ரெண்டு பேரையும் பார்த்தா லூசுப் பயலுக மாதிரி தெரியுது...தலைமுடியும்-முகரக்கட்டையும் பார்த்தாலே கடுப்பாகுது. இவைங்க கொடுக்கப் போகிற விளக்கத்தைக் கேட்கணும்னு நமக்குத் தலையெழுத்து...'' -கூட்டத்தில் இருந்த ஒருவர் சத்தமாகவே சலித்துக் கொண்டார்.
உடனே பக்கத்தில் அமர்ந்திருந்த டெர்ரெல், தோற்றத்தை வச்சி இந்தக்கால இளைஞர்ளைக் கணிக்கவே முடியாது சார்... இந்த மாதிரி இளைஞர்கள்கிட்டதான் வித்தியாசமான திறமை கள் ஒளிஞ்சு கிடக்கும். இவங்கள்ளாம் பொஹீமியன் பாணியில் குளிக்காமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும் இவங்களோட சிந்தனை தெளிவாயிருக்கு!'' -டெர்ரெல் மறுத்துப் பேசியதும், குற்றம் சொன்னவர் மௌனியானார்.
நான் அவர்கள் இருவரையும் நன்றாக அறிவேன். மட்டுமன்றிப் பெரும்பாலும் அவர்களுடன் இணைந்து பயணிப்பவன். காற்று' மாதிரி. ஜான். இருவரும் என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள்.
நியாக் ஓர் அற்புதமான பொறியியல் வல்லுநன். ஜாப்ஸ் ஒர் அற்புதமான வியாபாரி. இருவரும் இணைந்ததால் வெற்றி நிச்சயம். அது உடனே நிகழாவிட்டாலும் எதிர்காலத்தில் உலகம் இவர்களைக் கொண்டாடும் என்பது எனது தெளிவு.
இருவருமாய் இணைந்து ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்க முடிவு செய்திருந்தார்கள். ஆயிரத்துமுந்நூறு டாலர் முதலீட்டில் தொடங்க முடிவாகிவிட்டது. அதற்கே, நியாக் அறுபத்தைந்து கால்குலேட்டர்களை ஐநூறு டாலருக்கு விற்றார். ஜாப்ஸ் தனது பிரியமான ஃபோக்ஸ்வாகன் வாகனத்தை விற்கவேண்டி வந்தது.
வாகனத்தை வாங்கியவர், இரண்டுவாரங்கள் கழித்து இயந்திரம் பழுதாகிவிட்டதென்று திருப்பிக் கொண்டுவந்து வாசலில் நிறுத்திவிட்டார். காரை பழுது பார்க்கும் செலவில் பாதியை ஜாப்ஸ் ஏற்கவேண்டிய நிர்ப்பந்தமும் வந்தது. இவர்களது சிறுசேமிப்பும் கரைந்து போயிற்று. ஆனால் இருவரும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. குறிப்பாக ஜாப்ஸ். ஜாப்ஸ் அன்று ஆல்-ஒன்' பண்ணைக்குச் சென்றிருந்தார். ஆப்பிள் மரக்கிளைகளை நேர்த்தியாய்க் கத்தரிக்கும் பணி. வேலை முடித்துவிட்டு வந்த அவரை நாங்கள் அழைத்துவந்தோம். லாஸ்-ஆல்டோஸூக்குத் திரும்பும் வழிநெடுகிலும் பல்வேறு பெயர்களை யோசித்தவாறு வந்தனர்.
ஜாப்ஸ் சுத்தமான சைவர். பழங்களும், பச்சைக் காய்கறிகளும் மட்டுமே அவர் உணவாக இருந்த காரணத்தால் சட்டென்று ஷஆப்பிள் கம்ப்யூட்டர்' என்ற பெயரை முன் மொழிந்தார். அது நியாக்குக்கும் பிடித்துப் போயிற்று. தவிர, ஜாப்ஸைப் பணியிலிருந்து வெளியேற்றிய ஷஅட்டாரி' நிறுவனத்தின் பெயருக்கு முன்னால் தொலைபேசிப் புத்தகத்தில் ஆப்பிள்' வந்துவிடும் என்கிற கணக்கு இன்னொரு காரணம்.
ஆப்பிள் என்ற வார்த்தை, தோழமையை- ஓர் எளிமையைச் சட்டென மனத்தில் தோற்றுவிக்கிறது. சற்று வித்தியாசமாகவும், அன்றாடம் கண்ணில் படுகிற விஷயமாகவும் இருக்கிறது. மாற்றுக் கலாச்சாரத்தின் சாயல், இயற்கையான மண் வாசனையோடு சுவாரசியமான முரண்பாடாகவும் தோன்றுகிறது. ஆப்பிளும்-கணினியும் ஒன்றோ டோன்று தொடர்பில்லாதவை என்பது கூடுதல் சிறப்பு.'-என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள்.
நியாக் இன்னும் முழுநேரப் பணிக்குத் தயாராகவில்லை.அவர் இன்னும் தன்னை ஹெச்.பி நிறுவனத்தின் ஊழியராகவே கருதிக் கொண்டிருந்தது ஜாப்ஸூக்குப் பிடிக்கவில்லை. ஆகவே மற்றொரு நடுநிலையாளராய் அட்டாரியில் தன்னோடு பணிபுரிந்த ரான்வெய்ன் என்ற நடுத்தர வயதுப் பொறியாளரை ஜாப்ஸ் கொண்டுவந்தார்.
இருவரையும் பற்றிய தெளிவான புரிதல் வெய்னுக்கு இருந்தது. அதை என்னிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது வார்த்தைகளை அப்படியே சொல்லிவிடுகிறேன்.-ஜாப்ஸ் சில சமயங்களில் பேய்களால் ஆட்டுவிக்கப்படுவது போல நடந்து கொள்வார். அது போன்ற தருணங்களில் எல்லாம் நியாக்கை தேவதைகள் பூக்களால் அர்ச்சிக்கும்.
ஜாப்ஸ் பிறரைத் தன் பேச்சால் வசீகரித்துக் காரியங்களைச் சாதித்துவிடுவார். ஆனால் நியாக் கூச்ச சுபாவம் கொண்டவர். நியாக்கின் பொறியியல் சாகசங்கள் ஜாப்ஸையும், ஜாப்ஸின் வியாபாரத் தந்திரங்கள் நியாக்கையும் வெகுவாய்க் கவர்ந்தவை. அந்த மாயக் கயிறுதான் இருவரையும் பிணைத்து வைத்திருக்கிறது!'
புதிய மூவர் கூட்டணி உருவாயிற்று. கிடைக்கும் லாபத்தில் பத்து சதவிகிதப் பங்குகள் வெய்னுக்கு என்பதும் அன்றே உறுதி செய்யப்பட்டது. ஒப்பந்தமும் தயாரானது. மூவரும் கையெழுத்திட்டார்கள்.
மேடையில் நின்ற நியாக் தாங்கள் புதிதாய் உருவாக்கிய மின்சுற்றுப் பலகைகளில் ஒன்றை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு- நுண்செயலி, எட்டு கிலோபைட் மெமரி, தான் எழுதிய பேஸிக்கின் மறுவடிவம் என்று அனைத் தையும் விளக்கினார். முக்கியமாக மனிதனால் எளிதாகத் தட்டக்கூடிய பொத்தான்கள் கொண்ட விசைப் பலகை என்பதையும் குறிப்பிட் டார். சபை அமைதியாய் இருந்தது. யாரும் நியாக்கின் கூற்றுக்களை மனதில் மெச்சுவதாய்த் தெரியவில்லை. ஆனால் டெர்ரெல் மட்டும் உன்னிப்பாய்க் கவனித்திருந்தார்.
நியாக்கைத் தொடர்ந்து ஜாப்ஸ் பேசினார்.
ஆல்டெயரைப் போல் அல்லாது இந்த ஆப்பிளில் தேவையான அனைத்து பாகங்களும் உள்ளடக்கம்....இதற்கு நீங்கள் என்ன விலை கொடுக்க முன் வருவீர்கள்?''-என்ற ஒரு கேள்வியையும் ஒரு பார்வையாளர் முன்வைத்தார்.
மற்றவர்கள் அத்தனைபேரும் ஆர்வம் காட்டாமல் அமைதியாய் இருந்தார்கள். மேடையை விட்டு இறங்கிவந்த இருவரையும் டெர்ரெல் பிடித்துக் கொண்டார். தனக்குச் சொந்தமாய் மூன்று கணினி அங்காடிகள் இருப்பதாய் அறிமுகப் படுத்திக் கொண்டவர் ஆப்பிளின் செயல் விளக்கங்களை ஒன்றுவிடாமல் கேட்டறிந்தார். அதில் அவருக்குப் பரமதிருப்தி என்பதை அவரின் முகமே உணர்த்திவிட்டது.
நியாக், ஜாப்ஸ் இருவரிடமும் தனது முகவரி அட்டையைக் கொடுத்து,ஷஷதொடர்பில் இருங்கள்'' என்றார்.
உங்களை நாங்கள்
விடுவதாக இல்லை!''
-என்று ஜாப்ஸ் முணு முணுத்தது எனக்குக் கேட்டது.
அடுத்தநாளே நானும், ஜாப்ஸூம் மென்லோபார்க்கின் காமினோரியலில் டெர்ரெல் புதிதாய்த் தொடங்கியிருந்த ஷஃபைட்ஷாப்' என்ற கணினி அங்காடிக்குள் நுழைந்தோம்.
ஜாப்ஸ் நளினமான வார்த்தைகளில் வாசித்த மகுடிக்கு டெர்ரெல் என்ற பாம்பு தலையசைத்தாடியது. இப்பவே ஐம்பது கணினிக்கு ஆர்டர் தர்றேன். ஆனால் ஒரு நிபந்தனை' 'என்றார்.
என்ன நிபந்தனை?''- ஜாப்ஸ் ஏக்கத்தோடு கேட்டார்.
வெறும் ஐம்பது டாலர் மதிப்புள்ள அச்சிட்ட மின்சுற்றுப் பலகைகளை மட்டும் தந்தால், வாடிக்கையாளர்கள் மற்ற சிப்ஸ்களை அவர்களே வாங்கி ஒருங்கிணைக்கவேண்டி வரும்...இது வியாபாரத்தைப் பாதித்துவிடும்...எனவே பலகைகளை முழுமையாக ஒருங்கிணைத்துத் தர முடியுமா?''
உடனே ஜாப்ஸ், ஹெச்.பி.யிலிருந்த நியாக்கை அலைபேசியில் அழைத்து விபரத்தைச் சொல்ல, அவருக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி. ’’முயன்றால் எதையும் செய்து முடிக்கலாம்!'' என்றார். அவரால் முடியும் என்பது ஜாப்ஸூக்கும் தெரியும்.
டெர்ரெல் ஐம்பது கணினிகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டார்.
அதற்குத் தேவையான பாகங்கள் வாங்க வேண்டுமே? மொத்தமாகப் பதினைந்தாயிரம் டாலர்கள் தேவைப்பட்டது.
டாலரைத் தேடிக் கிளம்பினார்கள்.
உதவியாய் இருக்கவேண்டிய அந்தத் தருணத்தில் வெய்ன் ஏனோ விலகினார். தனக்கு வேலையிருப்பதாய்ப் பொய் சொல்லிவிட்டு வெட்டியாய் அவர் ஊர் சுற்றுவதை நானே பார்த்தேன். அவர் மனசுக்குள் சைத்தான் புகுந்துவிட்டதை உணர்ந்தேன்.
வெய்ன் கலக்கமாகவே காணப்பட்டார். ஜாப்ஸ் கடன்வாங்கிச் செலவு செய்யத் திட்டமிட்ட போதே நிறுவனத்தின் தோல்வி வெய்னின் மனதில் நிழலாடியது தெரிந்தது.
ஜாப்ஸ், நியாக் இருவருக்குமே சொத்துக்கள் எதுவுமில்லை. எதிர்காலத்தில் நிறுவனம் தோல்வி அடைந்து கடன்காரர்கள் கடைத் தெருவில் மக்கள் மத்தியில் கழுத்தில் துண்டைப்போட்டு முறுக்குவதான கற்பனை அவருக்கு வந்துவிட்டது. ஒப்பந்தத்திலிருந்து விலகுவதான கடிதத்தையும், திருத்திய ஒப்பந்தப் படிவத்தையும் ஜாப்ஸிடம் கொண்டுவந்து கொடுத்தார்.
ஏற்கெனவே டாலருக்காக அலைந்து கொண்டிருந்த ஜாப்ஸூக்கு கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை. ஒப்பந்தப்படி வெய்னின் பங்கான பத்து சதவிகிதத்துக்காக முதலில் எண்ணூறு டாலரும், பிறகு ஆயிரத்தைநூறு டாலரும் பொருளாதாரச் சிக்கலுக்கிடையே அவரிடம் கொடுத்தனுப்பி விட்டார்...!
ஜாப்ஸ் போலவே இன்னொரு குறும்புக்காரர் அலென்பௌமும் அவரது தந்தையும், ஐயாயிரம் டாலர் கடன் தர முன் வந்தார்கள்.
ஜாப்ஸ், லாஸ் ஆல்டோஸில் இருந்த ஒரு வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்தார். அழுக்கு ஜீன்ஸ், வாராத தலை, குளிக்காத காரணத்தால் ஷகப்'படித்த உடம்போடு இவரைப் பார்த்ததுமே வங்கி மேலாளர் அடிக்காத குறையாக விரட்டிவிட்டார்.
வெளியே வந்த ஜாப்ஸ், அவன் சும்மா லூசுப்பயல். .நான் பழ உணவுகளை மட்டுமே சாப்பிடறேன். என் குரு சொன்னபடி இரவுகளில் நிலவொளியில் கன்னிப் பெண்கள் பறித்துத் தருகிற பச்சிலைகளை மட்டுமே உண்கிறேன். என் மேல் எப்படி நாற்றம் வரும்?'' என்று வியாக்கியானம் பேசினார்.
நண்பர்கள் சிரித்தார்கள்.
ஹால்டெக்ஸ் கம்பெனிக்குச் சென்று,’’ எங்களுக்கு நீங்கள் பாகங்களைக் கொடுங்கள். பதிலுக்கு நாங்க ஆப்பிள் கம்பெனியோட ஷேர்ஸ் தருகிறோம்!''- என்று பேரம் பேசினார்கள்.
அலங்கோலமாகத் தோற்றமளிக்கும் இரண்டு இளைஞர்கள்!'-என்று அந்த கம்பெனியிலும் இவர்களை விரட்டிவிட்டார்கள்.
அட்டாரியிலிருந்த அல்கார்ன், கைமேல காசை வச்சாத்தான் சில்லுகளைத் தருவேன்!'' என்றார்.
ஆனாலும் ஜாப்ஸ் மனம் தளரவில்லை.
முடிவாக க்ராமர்-எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனர், கடனில் உங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தருகிறேன்...ஆனால் உங்களை நான் எப்படி நம்புவது?'' என்று கேட்டார்.
அங்கிருந்த டியே டெர்ரெலைத் தொலைபேசியில் அழைத்த ஜாப்ஸ், இருபத்தாந்தாயிரம் டாலர் பெறுமானமுள்ள கொள்முதல் ஆணை கொடுத்திருப்பதை க்ராமர் கம்பெனிக் காரரிடம் உறுதிப் படுத்தச் சொன்னார். டெர்ரெல் உறுதிப் படுத்தியதும் முப்பதுநாள் கடன் வசதியுடன் க்ராமர் கம்பெனி பாகங்கள் தரச் சம்மதித்தது.
ஜாப்ஸின் வீடு, ஐம்பது கணினிகள் தயாரிக்கும் பணியறையாக மாறியது. படுக்கையறை, சமையலறை, மற்றும் கராஜ் ஆகியவை பணியிடங்களாயின.
ஜாப்ஸ், நியாக், டானியல் கோட்கே, ஜாப்ஸின் முன்னாள் தோழி எலிசபெத் ஹோம்ஸ், கருவுற்றிருந்த ஜாப்ஸின் தங்கை, பாட்டி என்று எல்லோரும் வேலை பார்த்தார்கள்.
அவரவர்களுக்கான பணிகளும் ஒதுக்கப் பட்டன. ஜாப்ஸின் தந்தை பால், தனது பழைய கார்களைப் பழுது பார்க்கும் பணியைச் சற்றே ஒத்திவைத்துவிட்டு இவர்களுக்கு ஒத்தாசையாய்க் களத்தில் இறங்கினார். தாயார் கிளாரா குழுவினருக்கு உணவு சமைத்துப் பரிமாறுவது, இரவு-பகல் கண்விழிக்கத் தேநீர் தருவது என்று உதவிகரமாய் இருந்தார்.
பன்னிரண்டு பலகைகளை நியாக் அங்கீகரித்த நிலையில், ஜாப்ஸ் அவற்றை வண்டியில் எடுத்துக் கொண்டு டெர்ரெலின் ஃபைட்-ஷாப்புக்கு வந்தார் டெர்ரெல் அசந்து போனார், அவர் எதிர் பாத்ததைவிடவும் சிறப்பான கீ-போர்டை நியாக்கின் அபாரமான மூளை சாதித்துக் காட்டியிருந்தது. எடுத்துக்கொண்டு பணம் தரச் சம்மதித்தார்.
முப்பது நாட்களின் முடிவில் ஆப்பிள் லாபம் ஈட்டும் தருவாய் வந்தது.
டெர்ரெல் வாங்கிக்கொண்ட ஐம்பது கணினிகள் தவிர்த்து, ஜாப்ஸ்-நியாக் இருவரும் காமினோரியல் முழுதும் அலைந்து அனைத்து அங்காடிகளிலும் கணினிகள் தயாரிக்க ஆணைகள் வாங்கினர்.
ஆப்பிள் பெரிய நிறுவனமாக உருவானது.
ஜாப்ஸ்-நியாக் இருவரும் பல பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள்.
அன்று எனக்குத் தேவையில்லாமல் ரான்-வெய்னின் நினைவு வந்தது. அவரைத் தேடிப்போனேன்.
இப்போது வெய்ன், காசு போடும் சூதாட்ட இயந்திரங்களில் பொழுது போக்கிக் கொண்டு, சமூகப் பாதுகாப்பு உதவிப் பணத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டு மிகச் சாதாரண மனிதராக இருந்தார்.
என்னைப் பார்த்ததுமே வெய்ன் ஷஹலோ ஜான் வாங்க!' என்றார். அவர் ஒரு சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்திருந்தார்.
எனக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. அவசரப்படாது ஆப்பிள் நிறுவனத் தில் அவர் தனது பங்குகளைத் தக்கவைத்துக் கொண்டிருந்தால், இன்று பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரராக இருந்திருக்க வேண்டிய மனிதர்.
ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியைக் கவனிச் சிட்டிருக்கீங்களா?''- சாதாரணமாய்க் கேட்டேன்.
அவரது முகச்சதை கோணியது.
ம்ம்ம்ம்...கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்!''
அன்னிக்கு நீங்க அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவை எடுக்காமல் இருந்நிருத்தால் இன்னிக்கு உங்க நிலைமையே வேறாக இருந்திருக்கும். அது பற்றி நீங்க நெனச்சதுண்டா?''
அதைப் பற்றி எனக்குக் கொஞ்சம்கூட வருத்தமே கிடையாது, ஜான்... எனக்கு எது விதிக்கப் பட்டதோ அதுதான் கிடைக்கும்... அன்றைய தேதியில் எனக் குப் பொருத்தமான முடிவைத்தான் நான் தேர்வு செய்தேன். ஜாப்ஸ்-நியாக் இருவருமே அசகாய சூரர்கள்... அவர்களோட சூறைக்காற்று வேகத்துக்கு என்னால ஈடுகொடுக்க முடியாதுங்கிறதாலதான் நான் வெளியே வந்தேன். அவர்கள் முன்னேறத் தகுதியானவர்கள். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.! ''- என்று வருத்தத்துடன் சொன்னார்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் -குறள்