மக்கள் நாடகக் கலைஞர் பாதல் சர்க்கார் நூற்றாண்டு விழா, மத்திய சென்னை மாவட்டத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க காப்பீட்டு ஊழியர் அரங்க கிளையினரின், முன்முயற்சியில் நடந்தது. சென்னை கலைக் குழுவின் புரட்சிகர சிந்தனையாளர் தோழர் பிரளயன் எழுதிய முத்தான மூன்று நாடகங்கள் அம்மா, இடம், மெய்- நீதியரசர் கி.சந்துரு (ஓய்வு) தலைமையில் பெரும் மக்கள் கூட்டத்தின் நடுவில் நடத்தப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் கே.பி.ஜானகி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரமாக உருவாக்கப்பட்ட “அம்மா”, வெறுப்பு அரசியலை அம்பலப்படுத்தும் “இடம்”, வள்ளலாரின் அன்பை வெளிப்படுத்தும் “மெய்” ஆகிய மூன்று நாடகங்கள் மக்கள் மத்தியில் வீதி நாடகங்களாக அரங்கேற்றப்பட்டன.
வெறுப்பு அரசியலை தோலுரிக்கும் குறு நாடகம் ‘இடம்’ பாசிஸ குருவும் அவரின் இரண்டு சிஷ்யர்களும் சேர்ந்து மக்களின் மத உணர்வை லேகிய வியாபாரமாக ஆக்கி மனித குல ஒற்றுமைக்கு எதிராக வெறுப்பு அரசியலை வளர்த்து இனப் படுகொலை செய்ய முயற்சிக்கும் பாசிஸ வேர்களை மோடி, அமித் ஷா போன்ற இரு கதாபாத்திரங்களாக உருவகப்படுத்தியுள்ளார் நாடக ஆசிரியர் பிரளயன்.
குஜராத் இனப்படுகொலை, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ், இளவரசன், அனிதா என பலியிடப்பட்டவர்களின் சடலங்களுக்கு முன்பாக பாடப்படும் வலிமிக்க, வலிமைமிகு பாடல் “தினந்த
மக்கள் நாடகக் கலைஞர் பாதல் சர்க்கார் நூற்றாண்டு விழா, மத்திய சென்னை மாவட்டத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க காப்பீட்டு ஊழியர் அரங்க கிளையினரின், முன்முயற்சியில் நடந்தது. சென்னை கலைக் குழுவின் புரட்சிகர சிந்தனையாளர் தோழர் பிரளயன் எழுதிய முத்தான மூன்று நாடகங்கள் அம்மா, இடம், மெய்- நீதியரசர் கி.சந்துரு (ஓய்வு) தலைமையில் பெரும் மக்கள் கூட்டத்தின் நடுவில் நடத்தப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் கே.பி.ஜானகி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரமாக உருவாக்கப்பட்ட “அம்மா”, வெறுப்பு அரசியலை அம்பலப்படுத்தும் “இடம்”, வள்ளலாரின் அன்பை வெளிப்படுத்தும் “மெய்” ஆகிய மூன்று நாடகங்கள் மக்கள் மத்தியில் வீதி நாடகங்களாக அரங்கேற்றப்பட்டன.
வெறுப்பு அரசியலை தோலுரிக்கும் குறு நாடகம் ‘இடம்’ பாசிஸ குருவும் அவரின் இரண்டு சிஷ்யர்களும் சேர்ந்து மக்களின் மத உணர்வை லேகிய வியாபாரமாக ஆக்கி மனித குல ஒற்றுமைக்கு எதிராக வெறுப்பு அரசியலை வளர்த்து இனப் படுகொலை செய்ய முயற்சிக்கும் பாசிஸ வேர்களை மோடி, அமித் ஷா போன்ற இரு கதாபாத்திரங்களாக உருவகப்படுத்தியுள்ளார் நாடக ஆசிரியர் பிரளயன்.
குஜராத் இனப்படுகொலை, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ், இளவரசன், அனிதா என பலியிடப்பட்டவர்களின் சடலங்களுக்கு முன்பாக பாடப்படும் வலிமிக்க, வலிமைமிகு பாடல் “தினந்தோறும் இழவு விழுவதாக உள்ளது இந்திய வீடு”.
“எனக்கு இடம் உண்டா?”
என்ற சாமானிய மக்களின் கேள்விக்கு,
“இந்த நாட்டில் உணவுப் பழக்கங்கள், இன, மொழி பிரிவினைவாதமற்ற பன்முகத் தன்மை” கலந்த உரையாடல் மூலமாக பதில் வந்து விழுகின்றது.
“நம் மதமே சிறந்தது. மதப் பெருமை பேசுவோம்.
இல்லாததையும், பொல்லாததையும் மூட்டை மூட்டையாகப் புளுகுவோம். கொம்பு சீவி விடுவோம்.
காவி குஜராத் இந்தியாவின் பரிசோதனைச் சாலை.
அதிகார கோட்டைக்கான பாதையைப் பிணங்களால் அடுக்கி வீதி சமைப்போம்.
மற்றவர் வழிபாட்டுத் தலங்களை இடித்து வேள்வி நடத்தியே
மீண்டும் மீண்டும் அரியாசனம் ஏறுவோம்.”
என்ற மத, இனவாத ஓநாய்களின் ஊளைகளுக்கு நடுவில் ஒரு இந்தியப் பெண்ணின் எதிர்க் குரல்,
“நர மாமிச வேட்டைக்காரனே..
இன்னும் ஏனிந்த கபட வேலை..
உனக்கு இது போதாதா?
இன்னும் எவ்வளவு உயிர்கள் வேண்டும்?” என்க, பாசிஸ குரு சிரித்துக்கொண்டே,
“என்னை நிறுத்த நீ எம்மாத்திரம்.
பொய்களின் தொழிற்சாலை நான்.
புனைவுகளின் கோட்டையில் பிறந்து வளர்ந்தவன் நான்.
என்னை ஒன்றும் செய்யமுடியாது” என்கிறான்.
சன்மார்க்க ராமலிங்க அடிகளாரின் ‘மெய்’.
காயமே இது பொய்யடா.. வெறும் காற்றடைத்த பையடா..! எனும் காலங்காலமாகப் பரப்பப்பட்ட கருத்தியலை மறுத்து “காயம் எனும் உடல் பொய் அல்ல. அது மெய்” -என்கிறார் வள்ளலார்.
மதத்தை நிறுவனமாக மாற்றி அதிகாரவர்க்கத்திற்கான கேடயம் ஆக்கியிருக்கும் இன்றைய சூழலில் இந்தியாவின் பெருமதங்களுக்கு மத்தியில் சன்மார்க்கம் போதித்த ராமலிங்க அடிகளாரை வைத்து உருவாக்கப்பட்ட ‘மெய்’. எண்சாண் உடம்புக்கு மெய் என்ற பெயர் என துவங்கி, சமயம் என்பது அன்பு செய்தலே, சமயம் என்பது ஒருவரை வெறுக்கக் கற்றுத் தரக்கூடாது. அப்படி வெறுக்க கற்றுத்தரும் எது ஒன்றும் சமயமே அல்ல. வள்ளலார் போதிக்கும் அறமாக “நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ..
குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ...
வேலையிட்டு கூலி குறைத்தேனோ...
பொது மண்டபத்தை இடித்தேனோ...”
என்ற வார்த்தைகள் இன்றைய அரசியல் நிலைமைகளை முழுக்க முழுக்கவே அக்குவேறாக ஆணிவேறாகப் பிய்த்துவைக்கிறார் பிரளயன் இந்நாடகத்தின் மூலம்.
தமிழ் மொழி மற்றும் வடமொழி மரபுக்கான விவாதமாக, மெய் என்பது உடல்.. இது தமிழ் மரபு.
‘காயமே இது பொய்யடா’ என்கிறது வடமொழி மரபு.
மெய்யை பொய் என்று சொல்லி வன்முறை, கொலைச் செயல்களுக்கு நியாயப்படுத்துகிறது வடமொழி. எனவேதான் வள்ளலாரின் வார்த்தைகளில் அன்பு செய்தலை அறம் என்று ‘அன்பு செய்ய வாருங்கள்’ என ஒவ்வொரு மனிதருக்கும் விண்ணப்பம் செய்கிறார்.
கே.பி. ஜானகி ‘அம்மா’ ஆண்டவனே சர்வே பண்ணி அளந்து வெச்சிருக்கானா. அவங்களுக்கு? சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் கே.பி.ஜானகி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் அம்மா’. கதாநாயகி ஜானகியிடம் தேதி கேட்டுவரும் ஏஜெண்டுகளிடம் நடைபெறும் உரையாடல் சாதிய சமூகத்தின் கேவலமான மனநிலையை எடுத்துக் காட்டுகிறது. விஸ்வநாததாஸுடன் சேர்ந்து நடிக்க மறுக்கும் கதாநாயகிகளை விமர்சிப்பதோடு நின்றுவிடவில்லை. ஜானகி தானே, கதாநாயகியாக நடிக்கிறேன் என்று உறுதி கூறி, சாதிய ஆணவங்களுக்கு சவுக்கடி கொடுக்கி றார்.
தேசபக்தி பாடகராக, எழுச்சிமிக்க பேச்சாளராக, விடுதலைப் போராட்டத்தில் இளம்வயதில் சிறைசெல்லும் வீராங்கனையாக திகழ்ந்த தியாக வாழ்வும், சிறையில் ஆஸ்துமா தாக்கி வாழ்நாள் முழுவதும் கொடும் உடல் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே நோயுடனே பல்வேறு கிராமங்களில் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துகின்றார். அரசியல் விடுதலையை பெற்றுத்தந்த சுதந்திரம்.. பொருளாதார, சமூக விடுதலையை அளிக்கவில்லை. கிராமப்புற மக்களுக்கான அடிப்படை வாழ்வுக்கு தேவையான நிலம், கூலி, சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்தார். இப்போராட்ட களத்தை வெளிப்படுத்தும்விதமாக அவனியாபுரத்தில் கழிவுநீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் சூவேஜ் பண்ணையில் ஏழை விவசாயிகள் கத்திரி, கீரை விதைத்து விவசாயம் செய்து வந்தனர். அதை சில பெரும்புள்ளிகள் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வந்தனர்.
விவசாயிகள், விவசாயப் பெண்களும், ஆண்களும் களையெடுக்கும் காட்சியில் வரும், மதுரை வட்டாரத்தில் பாடப்படும் நாட்டுப்புற பாடல்... உழைப்பின் மேன்மையும், மனதின் நிறைவையும் உற்சாகப் பெருக்கையும் ஒருசேர விதைக்கிறது. உழைத்து வாழ்ந்த மக்களை விரட்டி அடிக்க காண்ட்ராக்ட்காரர்கள் அடியாட்களை ஏவி விட்டு குடிசைகளுக்கும் படப்புகளுக்கும் தீவைத்து அழிக்கின்றனர். இச்செய்தி கேள்விப்பட்டு அங்கு வரும் ஜானகியின் வீரம் விளைந்த உரைகள் விவசாயி களின் போராட்டத்தை வெற்றியடையச் செய்கிறது. “நீங்க எதுக்காகப் போகணும், நீங்க யார் முன்னாடியும் மண்டியிடக்கூடாது. ஆண்டவனே சர்வே பண்ணி அளந்து வெச்சிருக்கானா. அவங்களுக்கு? உங்க உழைப்பை சிந்தியிருக்கீங்க. உங்க உழைப்பாலதான் இந்த மண்ணுல கத்திரி, கீரை விளையுது. உங்களுக்கு இந்த நிலத்துல விவசாயம் செய்ய உரிமை இருக்கு. நீங்க எதுக்கும் பயப்படாதீங்க.”
மனித மனங்களின் ஆழமான உணர்வுகளைத் தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது மக்கள் கலை என்பதை காலத்துக்கேற்ற கோலமாக தேசபக்தி விழிப்புணர்வு வெடித்துச் சிதறும் கலைப் படைப்பு களை படைத்த தோழர் பிரளயன் முன்னெடுப்பில் இந்த நாடகங்கள் அரங்கேறின. சென்னை கலைக் குழுவின் அம்ஷன்குமார், வெளி ரங்கராஜன், ஜி.செல்வா, எஸ்.கே.முருகேஷ், ரவிக்குமார், பால கிருஷ்ணன், அ.மங்கை, கவின்மலர், அசோக் சிங், அமலா மோகன், ஆலம் ஷா, மணி சுந்தரம், சமண ராஜா, ரியாழினி, சரண் சந்தோஷ், பாண்டிகுமார், பிரேம், திலிப் குமார், ராஜேஷ், அறிவழகன் காளையப்பு போன்ற கலை விற்பன்னர்கள்.. கூட்டுச் செயல்பாட்டாளர்கள். பாசிஸ முறியடிப்புக்கான கலைப்போரில் மக்களை வீறு கொண்டு எழ வைத்தார்கள்.
படங்கள் கவாஸ்கர், அ.மோகன்தாஸ், சுசி