காதலின் முடிவு ஒரு வேட்டை யின் இறுதிக் கட்டத்தை நினைவு படுத்துகிறது. இரை கிடைத்ததும் இதயத் துடிப்பின் வேகம் குறைந்து விட்டது. இரை கிடைத்துவிட்டது. இனி அதன் ரத்தம் சிந்தப்படுவதில் குறிப்பிட்டுக் கூறும் வகையில் ஆர்வம் எதுவுமில்லை. ரத்தத்திற்கு... எதிர்பார்த்தி ருந்த உப்பு ரசம்... சுவை...
பெண்ணின் காதலைப் பிடித்து முடித்தாகி விட்டது என்பதைப் புரிந்துகொண்ட நிமிடத்தில் காதலன் விடுதலை பெற்றவனாக மாறுகிறான்.
அவனுடைய இதயவெளி அமைதியான ஒரு கடலாக மாறும். இனி அவன் வேறொரு வேட்டைக்குப் புறப்படலாம். களைப்பைப் போக்கிக் கொண்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டிற்குள் நுழைந்து செல்லலாம். வேறொரு மானைத் தேடலாம். வேறுபட்ட தோற்றங் களையும் வாசனைகளையும் கொண்ட எத்தனை பணக்காரப் பெண்களின் சரீரங்கள் அவனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றன. பௌர்ணமி இரவில் உறக் கம் வராதவர்கள், கொஞ்சப்படாத வளர்ப்பு மிருகங்கள், பயன்படுத்தப்படாத விளையாட்டு பொம்மைகள்... அவனுக்கு திடீரென்று சிரிப்பு வந்ததில் ஆச்சரியப்பட வேண்டியதில்லையே! உயர்ந்த அறிவு படைத்த பெண்களையும் அவன் காதலித்தான்... ஏமாற்றினான்... ஒதுக்கி னான். ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைவான அறிவைக்கொண்டவளாகவும், மெலிந்து போன சரீரத்தைக் கொண்டவளாகவும் இருக்கக
காதலின் முடிவு ஒரு வேட்டை யின் இறுதிக் கட்டத்தை நினைவு படுத்துகிறது. இரை கிடைத்ததும் இதயத் துடிப்பின் வேகம் குறைந்து விட்டது. இரை கிடைத்துவிட்டது. இனி அதன் ரத்தம் சிந்தப்படுவதில் குறிப்பிட்டுக் கூறும் வகையில் ஆர்வம் எதுவுமில்லை. ரத்தத்திற்கு... எதிர்பார்த்தி ருந்த உப்பு ரசம்... சுவை...
பெண்ணின் காதலைப் பிடித்து முடித்தாகி விட்டது என்பதைப் புரிந்துகொண்ட நிமிடத்தில் காதலன் விடுதலை பெற்றவனாக மாறுகிறான்.
அவனுடைய இதயவெளி அமைதியான ஒரு கடலாக மாறும். இனி அவன் வேறொரு வேட்டைக்குப் புறப்படலாம். களைப்பைப் போக்கிக் கொண்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டிற்குள் நுழைந்து செல்லலாம். வேறொரு மானைத் தேடலாம். வேறுபட்ட தோற்றங் களையும் வாசனைகளையும் கொண்ட எத்தனை பணக்காரப் பெண்களின் சரீரங்கள் அவனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றன. பௌர்ணமி இரவில் உறக் கம் வராதவர்கள், கொஞ்சப்படாத வளர்ப்பு மிருகங்கள், பயன்படுத்தப்படாத விளையாட்டு பொம்மைகள்... அவனுக்கு திடீரென்று சிரிப்பு வந்ததில் ஆச்சரியப்பட வேண்டியதில்லையே! உயர்ந்த அறிவு படைத்த பெண்களையும் அவன் காதலித்தான்... ஏமாற்றினான்... ஒதுக்கி னான். ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைவான அறிவைக்கொண்டவளாகவும், மெலிந்து போன சரீரத்தைக் கொண்டவளாகவும் இருக்கக்கூடிய ஒரு பணிப்பெண்ணை வீழ்த்துவதற்கு அவன் மிகவும் முயற்சி செய்யவேண்டுமா? "வா' என்று ஒருமுறை கூறினால், அவள் ஓடிவந்து சேரமாட்டாளா? வேட்டையாடியதன் சுவையை அவன் அனுபவிப் பானா? செயல்படும் தளத்தில் தன்னுடைய சரீரத்தை உரசியவாறு அவள் அவ்வப்போது நடப்பதுண்டு. வியர்வையில் நனைந்த அவளுடைய ரவிக்கைக்கு பழைய பாலின் வாசனை இருப்பதாக அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. "அத்தர், பன்னீர் ஆகியவற்றின் காலத்தை முடித்துவிட்டு, கெட்ட பால், எருமை நெய் ஆகியவற்றின் காலத்திற்குள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் நுழைந்திருக்கிறேன்.' அவன் தனக்குள் கூறிக்கொண்டான். பழமையான வார்த்தைகளிலிருந்து விடுதலையடைந்த காதுகள், இனிமேல் கிராமத்து கெட்ட வார்த்தைகளைக் கேட்டு ஒரு குளிர்ச்சியை அனுபவிக்கும் என்பதென் னவோ உண்மை.
மெலிந்த சரீரத்தைக் கொண்டவளுக்கு வெளுத்த நிறம்... இரக்கத்தின் முகச் சாயலை அவள் கொண்டிருந்தாள். மனதில் வெறுப்பின் ஒரு சிறிய துளிகூட இல்லாதபோது, இன்பம் சரீரத்திற்கு கிடைக்காது என்பதை அவன் சமீபகாலத்தில் புரிந்துகொண்டிருந்தான். உடலுறவு என்பது ஒரு யுத்தம்தான்... பூவிதழ்களைக் கொண்டு மூடி வழிபடுவதற்காகவா பெண்ணின் சரீரம் படைக்கப்பட்டது? இல்லை.... எந்தக் காலத்திலும் இல்லை. நகத்தையும் பல்லையும் பயன்படுத்தி போரிட்டால் மட்டுமே, போரின் திருப்தியை வீரனால் உணரமுடியும். மகாராணியுடன் உடலுறவு கொள்ளும்போதுகூட ஒரு சராசரி ஆண் பணிப்பெண்ணின் மார்பகங்களைப் பற்றி ஆர்வத்துடன் சிந்தித்துக் கொண்டிருப்பான்.
அவனுடைய ஆசை அணைந்து போய்விட்டது என்பதைப் புரிந்துகொண்டபோது, காதலி குற்றம் சுமத்தவில்லை. தொலைபேசியில் எந்தச் சமயத்திலும் அழைத்ததுமில்லை. ஆனால், இறுதியான உரையாடலின்போது அவளுடைய குரல் சற்று தடுமாறியதை அவன் ஆர்வத்துடன் கவனித்தான். அவளுடைய கவலை ஆழமாக இருக்குமென்று அவன் நினைத்தான். இழப்புகளைப் பற்றி குறைப் பட்டுக் கொள்ளாதவர்களுக்கு எங்கிருந்து ஆறுதல் கிடைக்கும்? பிரார்த்தனையின் மூலமா? "தெய்வம் உன்னை எனக்கு ஒரு பரிசாக அளித்தது.' அவள் ஒரு நாள் கூறினாள். அவனுடைய தலை முடியை மெல்லிய விரல் நுனிகளால் தடவியவாறு அவள் அழைத்தாள்: "பேபீ... என் பேபீ....!'
"காதலனின் உருவத்தில் மட்டுமல்ல- மகனுடைய உருவத்திலும் அவனைப் பார்த்தது காரணமாக இருக்கலாம்- எதிர்பாராத வகையில் அந்த உறவு அறுபட்டபோது, அவள் எதிர்ப்பை வெளிப்படுத் தாமல் இருந்தாள்.' அவன் நினைத்துப் பார்த்தான். வளர்ந்துவிட்ட பிள்ளைகள் விடைபெற்றுக்கொண்டு, தங்களுடைய வழிகளில் செல்வார்கள் என்ற விஷயத்தை எந்த தாய் அறியாமல் இருப்பாள்? பிள்ளைகள் தாய்ப்பால் அருந்துபோதே, அவர்களின் விலகிச் செல்லும் காலடிச் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடையவர்கள்தான் தாய்மார்கள். பொறுமையின் சின்னங்கள், அன்பே வடிவமானவர்கள்... ஒருமுறையாவது அவள் தேம்பி அழலாம். அந்த முக அழகை அலங்கோலமாக ஆக்கிக்கொண்டு, கண்களைச் சிவப்பாக ஆக்கிக் கொண்டு, உதடுகளை நடுங்கச் செய்து, நாசித் துவாரங்களின் வழியாக நீரை வெளியேறச் செய்து அவள் அழலாம். அப்படியென் றால், வெறுப்பதற்கு அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். பெண்கள், நத்தையைப் போன்றவர்கள் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்திருக்கலாம். நத்தைகள்! அட்டைகள்!
அவனுடைய புன்சிரிப்பைப் பற்றி அவள் அழகான காவியங் களை எழுதினாள்: வார்த்தை களைக்கொண்டு ஆகாயத்தைத் தொடக்கூடிய ஒரு கந்தர்வ நூலை அவனுக்கு பெற்றுத் தந்தாள். அந்த குறுகிய காலம் இந்திரஜாலத்தின் பருவகாலமாக இருந்தது. தான் நிலவு, நட்சத்திரங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் பயணிப்பதாக பல வேளைகளில் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அவனுடைய கூச்சங்களை விரட்டிவிட்டதும் அவள் தானே? எனினும், அந்த சினேகம் ஒரு சிறைச்சாலையாக அவனுக்கு... பிறகு... தோன்றியது பண்பாடு என்பது மூச்சை அடைக்கச் செய்யும் சிறைச்சாலை.... கெட்ட வார்த்தை களைக் கேட்கும்போது, அவை காதில் விழவில்லை என்று நடிப்பதற்கு அவனிடம் ஒரு விசேஷ குணம் இருந்தது. அந்த நிமிடமே தனக்கு தாகம் எடுப்பதாகக் கூறிவிட்டு, அவள் சமையலறையை நோக்கி ஓடுவாள். தன்னுடைய கர்வத்தை மறைத்து வைப்பதற்கு அவளால் முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் தன்னுடைய நடவடிக்கைகளை அவள் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.
மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய காரணத்தால் ஒரு மனிதன் கெட்டவனாகி விடுவானா? வெளிப்படையாக அந்த வார்த்தை களைப் பயன்படுத்துவதில்லை. தன்னை உயிருக்குயிராக காதலிக்கக்கூடிய பெண்ணின் முன்பிலாவது அனைத்தையும் திறந்து காட்டுவதற்கு ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?
புதிய காதலிக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் நன்கு தெரிந்தவையாக இருந்தன. உருண்டை பாத்திரத்திற்கு உப்புக் கண்டம் என்று முன்பு ஒரு மனிதர் கூறியதைப்போல, அவள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்தான் மிகவும் கைதேர்ந்தவள் என்பதைப் படிப்படியாக நிரூபித்தாள்.
இறுதியில் அவளும் ஒரு சுமையாக ஆகிவிட்டாள் என்ற எண்ணம் அவனை அமைதியற்றவனாக ஆக்கியது. எண்ணத்தை வெளிப்படையாகக் கூறியபோது, அவள் மிகவும் உரத்த குரலில் கூச்சலிட்டாள். தனக்கு வாழும் காலம் முழுவதும் சந்தோஷமாக வாழ்வதற்கான ஒரு தொகையைத் தரவேண்டுமென்று அவள் பிடிவாதம் பிடித்தாள். "இரண்டு லட்சம்?' அவன் அவளிடம் கேட்டான்.
"இல்லை... பத்து லட்சம்... பத்து இலட்சமும், ஒரு வீடும்... மாடியைக் கொண்ட வீடு.' அவள் கூறினாள். அவளுடைய நாசித் துவாரங்கள் ஆவேசத்துடன் மலர்ந்தன. வேட்டைக்காரன் தளர்ந்துபோய் விட்டான். அடி வாங்கிய குழந்தையைப்போல அவன் அழுதான்.