ஆனந்த நர்த்தகன் ! - உன்னிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/ananda-narthakaan-unnikrishnan-puthur-tamil-sura

னந்த நர்த்தகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை சுவரொட்டிகளின் மூலம்தான் அவர் முதலில் தெரிந்துகொண்டார்.

ஆனந்த நர்த்தகனின் மரணம் முற்றிலும் இயல்பாக நடந்ததா? கொன்று விட்டார்களா? கொலை செய்துவிட்டார்களா? இயற்கை மரணமா? துர் மரணமா? எவ்வளவோ கேள்விகள் அந்த சுவரொட்டியில் மறைந்திருந்தன.

ஆனந்தநர்த்தகனின் இறந்த உடலை வெளியே எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும்.

ஆனந்தநர்த்தகனின் மரணத்துடன் சம்பந்தம் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மனிதர்களை உதாரணம் என்று கூறும் வகையில் தண்டிக்க வேண்டும்.

அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றையும் அவர் வாசிக்க ஆரம்பித்தார். ஆனந்தநர்த்தகனை அவருக்கு நேரடியாகவே தெரியும்.

கோவிலுக்குள் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்.

என்ன ஒரு அழகான பிறவி! என்ன ஒரு அருமை யான நடனம்! நான் எவ்வளவு முறைகள் ஆனந்த நர்த்தகன் என்ற பெயரில் அறியப்படும் அந்த ஆண் மயிலைப் பார்த்து சிலிர்த்து நின்றிருக்கிறேன்!

நான் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு வரும் பெரும்பாலான நாட்களிலும் ஆனந்த நர்த்தகனின் நடவடிக்கைகளைப் பார்த்தவாறு சில நிமிடங்களைச் செலவழிப்பேன். என் இளைய மகன் வாழ்க்கையில் ஒரு தடவை கூட ஆண் மயிலைப் பார்க்காதவனாக இருந்தான். அதே நேரத்தில்...பார்த்ததே இல்லை என்று கூறுவது முற்றிலும் சரியல்ல. முதல் வகுப்பு பாட புத்தகத்தில் அருமையான ஒரு ஆண் மயிலின் பீலியை விரித்து ஆடும் வண்ணப்படம் இருந்தது. உயிருடன் இருக்கும் ஒரு ஆண் மயிலை நான் உனக்கு காட்டுகிறேன். இனி என்றாவது ஒருநாள் கோவிலுக்கு வழிபடுவதற்காகச் செல்லும் போது, உன் கதாநாயகனின் மாய உருவத்தைக் காட்டுகிறேன்.

அதுவரை பொறுமையாக இரு.

என் மகன் ஆனந்தநர்த்தகனை வாழ்க்கையில் முதல் முறையாக கண்கள் நிறைய பார்த்தான். வைசாக மாதத்தின் கருமேகங்கள் நிறைந்த ஆகாயம்... நீல நிற வானத்தை நோக்கி ஆனந்த நர்த்தகன் தன் நீண்ட அலகை உயர்த்தி பல தடவைகள் காண்பதைப் பார்த்தேன். தூரத்தில் கருப்பு நிறம் படர்ந்த மேகக் கூட்டங்கள் நகர்ந்து போய்க்கொண்டிருந்தன.

ஆனந்தநர்த்தகன் தன் தனித்துவத் தன்மையுடன் ஏதோவொரு சத்தத்தை எழுப்பினான். அந்த நிமிடத்தில் அவனுடைய மனதில் ஆயிரக்கணக்கான நினைவுகள் தோன்றி வலம் வந்துகொண்டிருந்தன.

சோலையாறின் நீல மலைகள்... அடர்த்தியான காடுகள்... உயரமான மரங்கள்.... புதர்கள்... வளர்ந்து நிற்கும் புற்கள்... கோடையில் இலைகளை உதிர்க்கும் இளம் மரங்கள்... மழைக் காலத்தில் பூத்து நிற்கும் கடம்ப மரங்கள்... அடம்பு கொடிகள் படர்ந்திருக்கும் சோலை... வாயில் வைத்து சாப்பிடும்போது, சுவையாக உணரக்கூடிய பல வகையான பழங்கள். சரீரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல புழுக்களையும் சாப்பிட்டு செரித்து சந்தோஷமாக பற

னந்த நர்த்தகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை சுவரொட்டிகளின் மூலம்தான் அவர் முதலில் தெரிந்துகொண்டார்.

ஆனந்த நர்த்தகனின் மரணம் முற்றிலும் இயல்பாக நடந்ததா? கொன்று விட்டார்களா? கொலை செய்துவிட்டார்களா? இயற்கை மரணமா? துர் மரணமா? எவ்வளவோ கேள்விகள் அந்த சுவரொட்டியில் மறைந்திருந்தன.

ஆனந்தநர்த்தகனின் இறந்த உடலை வெளியே எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும்.

ஆனந்தநர்த்தகனின் மரணத்துடன் சம்பந்தம் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மனிதர்களை உதாரணம் என்று கூறும் வகையில் தண்டிக்க வேண்டும்.

அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றையும் அவர் வாசிக்க ஆரம்பித்தார். ஆனந்தநர்த்தகனை அவருக்கு நேரடியாகவே தெரியும்.

கோவிலுக்குள் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்.

என்ன ஒரு அழகான பிறவி! என்ன ஒரு அருமை யான நடனம்! நான் எவ்வளவு முறைகள் ஆனந்த நர்த்தகன் என்ற பெயரில் அறியப்படும் அந்த ஆண் மயிலைப் பார்த்து சிலிர்த்து நின்றிருக்கிறேன்!

நான் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு வரும் பெரும்பாலான நாட்களிலும் ஆனந்த நர்த்தகனின் நடவடிக்கைகளைப் பார்த்தவாறு சில நிமிடங்களைச் செலவழிப்பேன். என் இளைய மகன் வாழ்க்கையில் ஒரு தடவை கூட ஆண் மயிலைப் பார்க்காதவனாக இருந்தான். அதே நேரத்தில்...பார்த்ததே இல்லை என்று கூறுவது முற்றிலும் சரியல்ல. முதல் வகுப்பு பாட புத்தகத்தில் அருமையான ஒரு ஆண் மயிலின் பீலியை விரித்து ஆடும் வண்ணப்படம் இருந்தது. உயிருடன் இருக்கும் ஒரு ஆண் மயிலை நான் உனக்கு காட்டுகிறேன். இனி என்றாவது ஒருநாள் கோவிலுக்கு வழிபடுவதற்காகச் செல்லும் போது, உன் கதாநாயகனின் மாய உருவத்தைக் காட்டுகிறேன்.

அதுவரை பொறுமையாக இரு.

என் மகன் ஆனந்தநர்த்தகனை வாழ்க்கையில் முதல் முறையாக கண்கள் நிறைய பார்த்தான். வைசாக மாதத்தின் கருமேகங்கள் நிறைந்த ஆகாயம்... நீல நிற வானத்தை நோக்கி ஆனந்த நர்த்தகன் தன் நீண்ட அலகை உயர்த்தி பல தடவைகள் காண்பதைப் பார்த்தேன். தூரத்தில் கருப்பு நிறம் படர்ந்த மேகக் கூட்டங்கள் நகர்ந்து போய்க்கொண்டிருந்தன.

ஆனந்தநர்த்தகன் தன் தனித்துவத் தன்மையுடன் ஏதோவொரு சத்தத்தை எழுப்பினான். அந்த நிமிடத்தில் அவனுடைய மனதில் ஆயிரக்கணக்கான நினைவுகள் தோன்றி வலம் வந்துகொண்டிருந்தன.

சோலையாறின் நீல மலைகள்... அடர்த்தியான காடுகள்... உயரமான மரங்கள்.... புதர்கள்... வளர்ந்து நிற்கும் புற்கள்... கோடையில் இலைகளை உதிர்க்கும் இளம் மரங்கள்... மழைக் காலத்தில் பூத்து நிற்கும் கடம்ப மரங்கள்... அடம்பு கொடிகள் படர்ந்திருக்கும் சோலை... வாயில் வைத்து சாப்பிடும்போது, சுவையாக உணரக்கூடிய பல வகையான பழங்கள். சரீரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல புழுக்களையும் சாப்பிட்டு செரித்து சந்தோஷமாக பறந்து திரிந்துகொண்டிருந்த காலம்... ஒரு புதரில் பிறந்த இரண்டு பிள்ளைகள்... ஒரு ஆணும் பெண்ணும்.

பெண்ணை ஏதோ மலைவாழ் மனிதன் பொறி வைத்து பிடித்து விட்டான்.

இளமையின் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு முன்பே மலைவாழ் மனிதனின் சட்டியில் உணவாக அவள் மாறிவிட்டாள். ஆண் மயிலுக்கு மேலும் சில மாதங்கள் காட்டில் இரை தேடித் திரிந்து வாழ்வதற்கான அதிர்ஷ்டம் கிடைத்தது. வளர்ந்து பெரிதானது. பீலிகள் உண்டாயின.

நெற்றிக்கு மேலே உச்சியில் ஐந்து தலைகளைக் கொண்ட பூ மலர்ந்தது. அவன் ஒரு அழகான மயிலாக ஆனான். பலவித சத்தங்களுடனும் ஆடுவதற்கு கற்றான்.

ii

நர்த்தகனாக ஆனான்.

மழை மேகங்களைப் பார்த்துக் கொண்டும், இருண்ட காட்டின் மறைவில் ஆனந்தமான இசையைக் கேட்டுக் கொண்டும் நடந்து கொண்டிருப்பதற்கு இடையே மூப்பில் நாயருக்குச் சொந்தமான எஸ்டேட்டின் முள் வேலிக்குள் நுழையும் ஆசை உண்டானது. மூப்பில் நாயரின் எஸ்டேட்டில் பலவிதமான பழ வகைகளும் நட்டு வளர்க்கப்பட்டன.

அங்கு மாதுளை மரங்கள் நிறைந்த தோப்பில், பச்சை முந்திரிகள் படர்ந்து கிடக்கும் குளிர்ச்சியான பந்தல்களில், நன்கு பழுத்து நின்று கொண்டிருக்கும் மாம்பழக் காட்டில் எத்தனையோ தடவைகள் நுழைந்து வெளியே வந்தான்.

மூப்பில் நாயரும் அவருடைய நண்பரான எழுத்தாளரும் சேர்ந்து ஒரு மாத காலம் தங்கியிருப்பதற்காக அட்டப்பாடியில் உள்ள எஸ்டேட்டிற்கு வந்தவுடன், ஆனந்தநர்த்தகனின் கஷ்ட காலம் ஆரம்பமாகி விட்டது.

மூப்பில் நாயரும் எழுத்தாளரும் சேர்ந்து, திறக்கப் பட்டிருந்த பால்கனியில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி குவளையில் ஃபெனியை ஊற்றி சுவைத்தவாறு சுவாரசியமாக பேசிக்கொண்டு இருப்பார்கள். உள்ளே ஃபெனி செல்லும்போது பல நேரங்களில் வேட்டைக்காரனைப் போல உற்சாகத்துடன் சந்தோஷப்படும் மூப்பில் நாயரும், மயில்களையும் முயல்களையும் வேட்டையாடுவதில் ஆர்வத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

ஃபெனியை அருந்திக் கொண்டிருப்பதற்கு மத்தியில் எழுத்தாளர் கூறினார்: "வேட்டையாடி கொண்டுவரப்படும் மயில், முயல் ஆகியவற்றின் இறைச்சியை நான் சாப்பிடுவதில்லை.. அவை இந்த இடத்தில் ஆடிப்பாடி... சந்தோஷமாக...ஓடிக் குதித்து திரியட்டும்.

இயற்கையின் அழகைப் பார்த்து ரசிக்க வந்தவர்கள், அந்த இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கும் அழகான... அதே நேரம்... யாருக்கும் தொந்தரவு தராத உயிரினங்களைக் கொல்லவே கூடாது!''

"இரண்டுமே உயிருடன் கிடைத்தால்...?''

"இரண்டுமே ஒரே நேரத்தில் கிடைக்கவேண்டும் என்றில்லை. எனக்கு ஒரு ஆண் மயில் குஞ்சு உயிருடன் கிடைத்தால்போதும். பாதுகாத்து வளர்ப்பதற்கு..."

"மயில் ஒரு தேசியப் பறவையாக இருக்கும் காரணத்தால், அதன்மீது இந்த அளவிற்கு விருப்பம்..''

"தேசிய பறவை என்ற பெருமைக்காக அல்ல,

விரும்புவது. அதன் அழகு... அதன் நடனம்...

அவைதான் என்னை ஈர்க்கின்றன.''

"சரி... ஒரு ஆண் மயில் குஞ்சியை நான் ஏற்பாடு பண்ணி தர்றேன். காட்டு நாயக்கன்மார்களிடம் கூறவேண்டும். அவர்கள்தான் மயிலைப் பிடிப்பதில் திறமைசாலிகள்.''

அந்த வகையில் யாரோ ஒருவன் ஓடிப் பிடித்துக்கொண்டு வந்த அந்த பொக்கிஷம்தான் ஆனந்தநர்த்தகன்.

நண்பரான மூப்பில் நாயரின் பரிசு...

அட்டப்பாடியிலிருந்து காரில் திரும்பி வரும் போது, மயிலும் காரில் இருந்தது. கால்கள் இரண்டும் கட்டப்பட்டு, தூக்கும் வகையில் இருக்கக்கூடிய பெரிய கூடையில் அடைக்கப்பட்டிருந்தது. அவன் வளர்ந்த மலைப் பகுதியிலிருந்து அவனைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மனிதனின் ஒரு வகையான பழைய வழக்கம்...

எழுத்தாளரான அவர் ஆலோசிக்காமல் இல்லை. ஆனால், அவரும் வீட்டு மிருகங்களையும், வளர்க்கக்கூடிய பறவைகளையும் கவனித்து பார்த்துக் கொள்வதில் ஆர்வமானவராக இருந்தார்.

வசிக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து ஒரு கூண்டை உண்டாக்கி, அவர் அதை வளர்க்க ஆரம்பித்தார். எல்லா பீலிகளும் முளைத்து வந்திருக்கவில்லை.எனினும், நிறைய பீலிகள் கண் விழிக்கக்கூடிய சாத்தியங்கள் அவனின் மீது மின்னி ஒளிர்ந்துகொண்டிருந்தன.

இதற்கிடையில் அவன் வாசலிலும் பின் பகுதியிலும் கொத்திப் பொறுக்கி தின்பதற்கும் பறப்பதற்கும் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய தலைக்கு மேலே ஒருநாள் இரண்டு கொப்புளங்கள் தோன்றி விரிந்தன. சம்பங்கி மலரின் மொட்டினை நினைவில் கொண்டுவரும் தலைப் பீலிகள். இனி வால் முழுவதும் மயிலிறகுகளால் நிறைந்து இருப்பதற்கு அதிக காலம் ஆகாது.

சில மாதங்களில்... வரிசையாக இறகுகள் இருந்த நல்ல நாளில்...

ஆனந்தநர்த்தகன் ஒரு நடனத்திற்கான தயார் நிலைகளை எடுத்துக் கொண்டிருப்பதைத் தன் சொந்த கண்களைக்கொண்டு அவர் கண்டுபிடித்தார்.ஒருநாள் அவனுடைய அருமையான நடனத்தைப் பார்ப்பதற்கு ஆசைப்பட்டார்.

ஆனால், அவன் சூழலுக்கேற்றபடி ஆடுவதற்கு தயாராக இல்லை. வரிசையாக நீல கண்களைக் கொண்ட மயில் பீலிகள் வாலின் ஓரங்களில் நன்கு வளர்ந்து விட்டிருந்தும், என்ன காரணத்தால் அவன் நடனம் ஆடவில்லை? சூழ்நிலைகள் சாதகமாக இல்லாமற் போனதாலா? அவனுடைய நடனம் எந்த அளவிற்கு அழகானதாக இருக்கும்? அவன் எந்த அளவிற்கு அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் ஈர்க்கக் கூடியவனாகவும் இருக்கிறான்! எனினும், அவன் ஏன் இனியும் வெட்கப்படுகிறான்? நண்பனே...

அருமையான ஒரு நடனத்தை ஆடக்கூடாதா? நான் அதைப் பார்ப்பதற்கு எவ்வளவு நாட்களாக காத்திருக்கிறேன்! அவர் பல முறைகள் திரும்பத் திரும்ப கூறிய அந்த விஷயம் மீண்டும் வார்த்தைகளின் வடிவத்தில் வெளிப்பட்டது.

அவன் அதற்கு பதில் கூறுவதைப் போல க்லோம்... க்லோம்...

என்றொரு சத்தத்தைத் திக்கித் திக்கி எழுப்பிக் கொண்டிருந்தான்.

சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழல் கிடைப்பது என்பது மிகவும் சிரமத்திற்குரிய ஒரு விஷயமாக இருப்பது காரணமாக இருக்கவேண்டும்- ஒருவேளை சிறகுகளை விரித்து... இவ்வளவு காலம் ஆன பிறகும்... ஆடாமல் இருப்பதற்கு. அவர் சந்தேகப்பட ஆரம்பித்தார்.

அவனுக்கு ஒரு ஜோடி அவனுடன் இருந்திருந்தால், இதற்கிடையே...

இப்போது... நிச்சயமாக பல முறைகள் ஆடியிருப்பான்.

மனதில் வெறுப்பு உண்டானவுடன், அவர் கூறினார்:

"உன்னை நான் கோவிலுக்கு நேர்ந்துவிடுகிறேன்.

மகாகோவிலின் திருமுற்றத்தை அடைந்தால்...

ஒருவேளை... ஆடமுடியலாம். அங்கும் உன்னால் ஆடமுடியவில்லை என்றால்.... உன் வாழ்க்கையே வீண் என்று அர்த்தம்.'' அதை மயில் புரிந்து கொண்டதோ... என்னவோ? எதுவும் கூற முடியவில்லை.

வாழ்க்கை என்பதே மூச்சை அடைக்கச் செய்யும் ஒரு சாபமாக தோன்றிய நிமிடத்தில் அவர் அந்த மயிலை கோவிலுக்கு நேர்த்திக் கடனாகக் கொடுத்தார்.

தன்னுடைய சுதந்திரத்தை வேறு யாராவது தட்டிப் பறிக்கக் கிளம்பும்போது, துடித்து எழக்கூடிய அவர், இவ்வளவு காலமும் அதைக் கூண்டிற்குள் அடைத்து வைத்து வளர்த்ததற்காக கவலைப்பட்டார்.

இப்போதுதான் தனக்கு புரிதல் உண்டாகி யிருப்பதை அவர் உணர்ந்தார். அதன் காரணமாக மனதில் சற்று நிம்மதி உண்டானது.

அவனை அங்கு நேர்த்திக் கடனாக கொடுத்ததற்கான ரசீதை தேவஸ்தானம் கொடுத்தது. அதில் ஒரு ஆண் மயில் என்றும், நேர்த்திக் கடனாகத் தந்திருப்பவரின் பெயரும் தேதியும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் யாரும் அவரு டைய முகவரியைக் கேட்க முயற்சிக்கவில்லை.

பலவிதமான அனுமதிச் சீட்டுகளை பக்தர்களுக்கு வழங்கக்கூடிய பணி நெருக்கடியில் அவர்கள் இருந்தார்கள்.

அதனால், கேட்காமல் விட்டிருக்கலாம். அந்த அளவிற்கு விலைமதிப்புள்ள ஒரு பொருளை அவர் காணிக்கையாக சமர்ப்பணம் செய்தும், அங்கிருக்கும் கவுண்டரிலிருந்த குமாஸ்தாவிற்கு அது ஒரு பெரிய விஷயமாக தோன்றவில்லை.

அது அவருடைய குற்றமல்ல. அங்கு வந்து சேரக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது.

ஆயிரத்தையும், பத்தாயிரத்தையும் உண்டியலுக்குள் போட்டு விட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மத்தியில், ஒரு ஆண் மயிலுக்கு பெரிய இடம் இருக்குமா? அவருக்கு அவன் என்றைக்குமே அன்பிற்குரியவன்.

ஒன்றிரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்தார். அவன் பார்ப்பதற்கு பெரிய ஒரு மயிலாக மாறினான்.

அவனைப் பார்க்கக்கூடிய யாரும் சிறிது நேரம் அப்படியே நின்று விடுவார்கள். அந்த அளவிற்கு அழகு!

எனினும்,எதற்கு அவனைத் தன்னிடமிருந்து விலக்கினார்? அவனின்... அவரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை...

எந்தவொரு உயிரினத்தையும் கூண்டிற்குள் அடைத்து வைத்து மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அர்த்தத்தைப் பார்த்துத்தான் இந்த உலகத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் நடக்கின்றனவா? இல்லை...

ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய வழியில் நடந்து விடுகின்றன.

இப்படித்தான் அவருடைய அந்த செல்லப் பிள்ளை ஆலயத்தின் பொதுச் சொத்தாக ஆனான்.

அந்தப் பொதுச் சொத்தை என்றாவதொரு நாள் இனியொரு முறை வந்து பார்க்கலாம்...

அவர் கோவிலிடமும், தன்னுடைய அன்பிற்குரிய நண்பனிடமும் விடை பெற்றுவிட்டு நடந்தார்.

மூப்பில் நாயரின் நண்பராக இருந்த அந்த எழுத்தாளர் இப்போது எனக்கு அருகில் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு வந்து அமர்ந்திருக்கிறார்.

கூற முடியாத அளவிற்கு பெரிய அளவில் கவலை எனக்கும் அதில் இருந்தது. அதற்குக் காரணம்... நான் எப்போதும் அவனுடைய அருமையான நடனத்தைப் பார்த்து ரசித்தவர்களில் ஒருவன்.

"அந்த மரணம் சம்பந்தமாக எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. அவன் கோவிலின் சமையலறையில் இறந்து கிடந்தான் என்ற செய்தி மட்டும் எனக்குத் தெரியும்.''

"சமையலறையில் எப்படி இந்த மரணம் நடந்தது? நீங்கள் இங்கு இருப்பவர்தானே? உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்க...''- அவர் இதைக் கூறியபோது, தொண்டை இடறியது.

"எனக்குத் தெரிந்தவரை, மின்சாரம் பாய்ந்துதான் ஆனந்தநர்த்தகன் இறந்து விட்டான் என்பதாக அறிகிறேன்.''

"அப்போது இந்த பகுதியில் எங்குமே மின்சாரம் இல்லை என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்?''

"மின்சாரம் வந்த பிறகு, விபத்து நடந்திருக்கலாம்.''

"யாரோ கழுத்தில் சோற்றைக் கிளறும்

அகப்பையை வைத்து குத்தியதாக கூறி, கேள்விப் பட்டேன்.

சமையலறையில் மூடி வைக்கப்படாதிருந்த சோற்றுப் பாத்திரத்திலிருந்து ஒரு கவளம் சோற்றைக் கொத்திவிட்டான் என்பதுதான் அவன்மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டு. இது உண்மையா? உண்மை தெரிந்திருக்குமே என்று நினைத்துத்தான் இறுதியாக நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.'' அந்த மனிதரின் முகம் மிகவும் வெளிறிய நிலையில் இருந்தது.தனக்கு வேண்டிய யாரோ ஒருவர் திடீரென மரணமடைந்து விட்டதைப் போன்ற துக்கம் அவரின் முகத்தில் தெரிந்தது.

"என்ன... எதுவுமே சொல்லாம இருக்கீங்க? ஏதாவது சொல்லுங்க.''

"எதையாவது சொல்லுவதால், ஏதாவது பயன் இருக்கிறதா? எதையாவது கூறுவது என்றால், ஆதாரம் வேண்டாமா?''

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் என்ன இருக்கிறது?''

"நான் அதைப் பற்றி விசாரிக்கவில்லை.''

"ஏன் விசாரிக்கல?''- கவலையைத் தாங்க முடியாத அளவிற்கு உண்டான கோபம் அந்த மனிதரின் வார்த்தைகளில் வெளிப்பட்டதோ?'' விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன.

தெரிந்து கொள்ள வேண்டியவையும் இருக்கின்றன. நேரம் கிடைக்கவில்லை. "ஆதரவற்ற நிலையில் அந்த மனிதரிடம் கவலையுடனாவது கூற வேண்டியதிருந்தது.

"நீங்கள் எல்லாரும் சேர்ந்து என் செல்ல மகனைக் கொன்னுட்டீங்க''- தலையில் இரண்டு கைகளையும் வைத்தவாறு அவர் புலம்பினார்.

என்னால் எந்த பதிலையும் கூற முடியவில்லை.

uday010325
இதையும் படியுங்கள்
Subscribe