நக்கீரன் ஆசிரியருக்கு அமைதிக்கான தூதர் விருது! - யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் அமைப்பு லண்டனில் வழங்கியது!

/idhalgal/eniya-utayam/ambassador-peace-award-nakkeeran-teacher-presented-by-universal-peace

மைதிக்கான சர்வதேச நிறுவனமான ’யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்’ (Universal Peace Federation) என்கிற சர்வதேச அமைப்பு, நம் நக்கீரன் ஆசிரியருக்கு ‘அமைதிக்கான தூதர்’ விருதை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. இந்த அமைப்பு, இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ee

சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை மீட்டதன் மூலம், கர்நாடகாவில் நடக்க இருந்த இனக்கலவரத்தைத் தடுத்து நிறுத்தியதோடு, அங்கே வாழும் லட்சக் கணக்கான தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர் நம் நக்கீரன் ஆசிரியர்.

அதை அப்போதே இருமாநில அரசுகளோடு, ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டியது. சர்வதேச அமைப்புகளும் அப்போது நக்கீரன் ஆசிரியருக்கு சபாஷ் போட்டன. அதுபோன்ற ஆசிரியரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தற்போது அமைதிக்கான தூதுவர் விருது வழங்கப் பட்டிருக்கிறது.

யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங் காவலரான டாக்டர். அப்துல் பாசித் சையத், நக்கீரன் ஆசிரியரின் சிறப்புகளையும், ஊடக சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிவரும் பணிகளையும், அந்த அமைப்பின் செயலாளரான ரோபின் மார்ஷிடம் எடுத்துச் சொல்-, அமைதிக்கான தூதர் விருதுக்கு நம் ஆசிரியரின் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார்.

இதன் அடிப்படையில், நடப்பாண்டிற்கான "அமைதிக்கான தூதர்' விருதை (Ambassador for Peace) நமது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வழங்கும் முடிவை யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் எடுத்தது.

rrgopal

இதைத் தொடர்ந்து லண்டனில் உள்ள யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 23-ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணியளவில் விருது வழங்கும் விழா சிறப்புற நடைபெற்றது.

இதில் நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு 'அமைதிக் கான தூதர்' விருதை, பி.பி.சி. - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திருமதி ரீதா பெய்ன் வழங்கினார்.

விருது பெற்றபின் ஆசிரியர் அவர்கள் தமது ஏற்புரையைத் தமிழில் வழங்க, அவரது மகள் சாருமதி அதை ஆங்கிலத்தில் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்தார்.

வலிகளுக்குக் கிடைத்த ஒத்தடம்

ஆசிரியர் தன் உரையில் “இந்த அமைதிக்கான தூதர் விருதைப் பெறுவதை பெரிய கௌரவம் என எண்ணுகிறேன். இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வந்துபோவதே பெரிய விஷயம். அதிலும் இங்கே விருது பெறுவது என்பது மேலும் பெரிய சாதனை! இந்த விருதைப் பெற செய்த தியாகங்கள் அதிகம். ஒரு சிக்கலான கடத்தல் விவகாரத்தில், இந்தியாவில், இரண்டு மாநிலங்களுக்கான தூதுவராக ஒரு பத்திரிகையாளர் அமர்த்தப்பட்டது, அதுதான் முதல்முறை. இனியும் அப்படி ஒன்று நடைபெறுமா எனத் தெரியாது. கர்நாடகாவில் தமிழர்கள் 65 லட்சம் பேருக்கும் மேல் வாழ்கிறார் கள். ராஜ்குமார் கடத்தலால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது. இரு மாநில முதல்வர்களும் நீங்கதான் வீரப்பனிடம் தூதுவராகச்

மைதிக்கான சர்வதேச நிறுவனமான ’யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்’ (Universal Peace Federation) என்கிற சர்வதேச அமைப்பு, நம் நக்கீரன் ஆசிரியருக்கு ‘அமைதிக்கான தூதர்’ விருதை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. இந்த அமைப்பு, இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ee

சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை மீட்டதன் மூலம், கர்நாடகாவில் நடக்க இருந்த இனக்கலவரத்தைத் தடுத்து நிறுத்தியதோடு, அங்கே வாழும் லட்சக் கணக்கான தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர் நம் நக்கீரன் ஆசிரியர்.

அதை அப்போதே இருமாநில அரசுகளோடு, ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டியது. சர்வதேச அமைப்புகளும் அப்போது நக்கீரன் ஆசிரியருக்கு சபாஷ் போட்டன. அதுபோன்ற ஆசிரியரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தற்போது அமைதிக்கான தூதுவர் விருது வழங்கப் பட்டிருக்கிறது.

யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங் காவலரான டாக்டர். அப்துல் பாசித் சையத், நக்கீரன் ஆசிரியரின் சிறப்புகளையும், ஊடக சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிவரும் பணிகளையும், அந்த அமைப்பின் செயலாளரான ரோபின் மார்ஷிடம் எடுத்துச் சொல்-, அமைதிக்கான தூதர் விருதுக்கு நம் ஆசிரியரின் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார்.

இதன் அடிப்படையில், நடப்பாண்டிற்கான "அமைதிக்கான தூதர்' விருதை (Ambassador for Peace) நமது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வழங்கும் முடிவை யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் எடுத்தது.

rrgopal

இதைத் தொடர்ந்து லண்டனில் உள்ள யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 23-ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணியளவில் விருது வழங்கும் விழா சிறப்புற நடைபெற்றது.

இதில் நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு 'அமைதிக் கான தூதர்' விருதை, பி.பி.சி. - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திருமதி ரீதா பெய்ன் வழங்கினார்.

விருது பெற்றபின் ஆசிரியர் அவர்கள் தமது ஏற்புரையைத் தமிழில் வழங்க, அவரது மகள் சாருமதி அதை ஆங்கிலத்தில் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்தார்.

வலிகளுக்குக் கிடைத்த ஒத்தடம்

ஆசிரியர் தன் உரையில் “இந்த அமைதிக்கான தூதர் விருதைப் பெறுவதை பெரிய கௌரவம் என எண்ணுகிறேன். இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வந்துபோவதே பெரிய விஷயம். அதிலும் இங்கே விருது பெறுவது என்பது மேலும் பெரிய சாதனை! இந்த விருதைப் பெற செய்த தியாகங்கள் அதிகம். ஒரு சிக்கலான கடத்தல் விவகாரத்தில், இந்தியாவில், இரண்டு மாநிலங்களுக்கான தூதுவராக ஒரு பத்திரிகையாளர் அமர்த்தப்பட்டது, அதுதான் முதல்முறை. இனியும் அப்படி ஒன்று நடைபெறுமா எனத் தெரியாது. கர்நாடகாவில் தமிழர்கள் 65 லட்சம் பேருக்கும் மேல் வாழ்கிறார் கள். ராஜ்குமார் கடத்தலால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது. இரு மாநில முதல்வர்களும் நீங்கதான் வீரப்பனிடம் தூதுவராகச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் பயப்பட்டேன். காரணம், வீரப்பன் 132-க்கும் அதிகமான நபர்களைக் கொன்றவர். அவர் என்ன மனநிலையில் இருக்கிறார்? என்ன கோரிக்கை வைப்பார் எனத் தெரியாமல் எப்படிப் போவது? என்று திகைத்தேன். தமிழகத்திலும் கர்நாடகத்திலுமாக அமைந்த 16,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காடு அவரது ராஜ்ஜியம்.

ராஜ்குமாரைக் காப்பாற்றப் போய் ஏதாவதொரு தவறு நடந்தால், கர்நாடகத் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கும்? அப்படி ஏதும் நடந்தால் இரண்டு அரசும் என்னைத்தான் பொறுப்பாக்கும். அதனால் தூதுபோகவேண்டும் என்ற செய்தியைக் கேட்டதும் நான் தலைமறைவாகிவிட்டேன். அன்று மாலை நான் தூதுபோகாவிட்டால், தமிழ்மக்கள் 1 லட்சம் பேர் கொல்லப் படலாம் என ஒரு செய்தி வந்தது.

தமிழன் ஒருவன் ராஜ்குமாரைக் கடத்தியிருக்கிறார். இன்னொரு தமிழனோ தூதுபோக மறுக்கிறார்... என்பதுபோன்ற பதிவு ஏற்பட்டுவிடக் கூடாது, ஒரு லட்சம் தமிழர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நான் இந்தத் தூதுப் பணியை ஒப்புக்கொண்டேன். பின் 108 நாட்கள் காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் பேசிப் பேசி ராஜ்குமாரை மீட்டுவந்தேன்.

இத்தனை சிரமத்துக்கும், போராட்ட வ-களுக்கும் கிடைத்த ஒத்தடம்தான் இந்த விருது. நான் பெரியவர்களாகக் கருதும் அப்துல் பசித் செய்யத், ரீதா பெய்ன் முன்னிலையில் மைக்கேல் கைகளால் இந்த விருதை நான் வாங்குவது எனக்குப் பெருமையாகும்.

வேதம் போன்ற தீர்ப்பு

நக்கீரன், வீரப்பனை மட்டு மல்ல பல விஷயங்களையும் வெளிப் படுத்தியிருக்கிறது. ஆட்டோ சங்கரின் சுயசரிதையை எழுதத் தடைவந்தபோது, உச்சநீதிமன்றத்தை அணுகி ஒரு தீர்ப்பைப் பெற்றோம்.

அந்தத் தீர்ப்பு இன்றுவரை பத்திரிகையாளனுக்கு ஒரு வேதப் புத்தகம் போல் இருக்கிறது. அதிகார அமைப்பில், அரசின் தடையை எதிர்கொள்பவர்களுக்கு இந்த தீர்ப்பு இன்றும் உதவியாக இருக்கிறது. சித்ரவதை என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் சிறப்பு தேடுதல் படை, அங்கிருந்த மலைவாழ் மக்களைத் துன்புறுத் தினார்கள். பெண்களை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கினார்கள். சொல்லொணாக் கொடுமை களுக்கு ஆளாக்கினார்கள். அந்தக் கொடுமைகளை ஆதாரத்துடன் மனித உரிமை ஆணையத்துக்குக் கொண்டுபோனோம். அந்த ஆதாரங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் சதாசிவா கமிஷனை அமைத்தார்கள். அந்த கமிஷனின் உத்தரவின் அடிப்படையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார்கள்.

மலைவாழ் மக்கள் சித்ரவதைக்கு ஆளான விஷயத்தில் நக்கீரன் தலையிட்டபிறகே, பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன. அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அதுதான் எங்களுக்குக் கிடைத்த பெருமை. இந்த சித்ரவதை நூ-ல், அன்று நடந்தவற்றை ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறோம்.

மீட்புக்குக் கிடைத்த பரிசுகள்

வீரப்பன் கடத்தலில் இரு மாநில தூதுவனாக சென்றதற்குப் பரிசாக, ஆட்சி மாறியபிறகு பொடா வழக்கு, 3 கொலை வழக்குகள், 4 கடத்தல் வழக்குகள், ஆயுதப் பதுக்கல் வழக்குகள் என்று நிறைய கிடைத்தன. நான் ஒன்பது மாதத்துக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டேன்.

எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மனிதாபிமானச் செயலில் ஈடுபட்டால், அதற்கான பலன் கிடைக்கும் என்பதற்கு 22 வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த விருதே சாட்சி!” என்று சொல்ல, அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. விரைவில் ஆங்கிலத்தில் வரவிருக்கும் சித்ரவதை புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை, ரோபின் மார்ஷ், அப்துல் பாசித் ஆகியோரிடம் அளித்தார் ஆசிரியர்.

மதிப்புமிக்க மனிதர்

இந்த கோலாகல நிகழ்வில் இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களும் வேறுபல முக்கிய ஆளுமைகளும் நினைவில் நிற்கும் உரைகளை நிகழ்த்தினர்.

பி.பி.சி.யின் ஆசிய முன்னாள் ஆசிரியரும் காமன் வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ரீதா பெய்ன் தனது உரையில், “நக்கீரன் கோபாலுக்கு விருது வழங்க அழைக்கப்பட்டதன் மூலம், பெரிதும் கௌரவம் பெற்றதாக உணர்கிறேன். இதுபோன்ற கதைகளுடன் எனக்கு அறிமுகம் உண்டு. உண்மையைப் பேச முயன்றதற்காக, சிறைகள், சிரமங்களைப் பலர் எதிர்கொண்டதை நான் வாசித்திருக்கிறேன். சமூகத்தின் மிகவும் மதிப்புமிக்க மனிதர், உலகெங்கும் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் இளம் பத்திரிகையாளர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழக்கூடியவர் நீங்கள். உங்களை சந்தித்ததிலும் விருது வழங்கியதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் புன்னகையோடு.

ஊழலுக்கு எதிரான போராட்டம்

யுனிவர்சல் பீஸ் பெடரேஷனின் பொதுச் செயலாளரான ராபின் மார்ஷ் தனது உரையில், “நாங்கள் ஒரு தலைமையின் கீழ் எட்டு அமைப்பு களாகச் செயல்பட்டு வருகிறோம். அமைதிக்கான சர்வதேச ஊடக கூட்டமைப்பு, ஊடக சுதந்திரம், நேர்மை, பொறுப்புடைமை, செய்தியில் துல்லியம் இவற்றை ஊக்குவிக்கிறோம். நீங்கள் உண்மை, நேர்மை, நீதியை முன்னிறுத்திச் செயல்படுவதோடு, ஊடகச் செயல்பாடுகள் மூலமாக ஊழலை எதிர்த்துப் போராடுகிறீர்கள். உங்களுக்கு விருது வழங்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார் மலர்ச்சியோடு.

மகத்தான ஒன்றை நோக்கி

இவ்வமைப்பின் தலைவரான மைக்கேல் பால்காம்ப், அமைப்பின் நிறுவனர் பற்றியும், அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பின்னணி பற்றியும் விவரித்துப் பேசினார். “வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவனரான சன் ம்யூங் மூன், வாழ்க்கையின் பல சிரமங்களை எதிர்கொண்டு முன்னுக்கு வந்தவர். அவர் லண்டன் வந்து தனது சிந்தனையில் துளிர்த்த யுனிவர்சல் பீஸ் பெடரேஷனைத் தோற்றுவித்தார். இப்போது நாம், அமைதி வெகுதொலைவில் இருப்பதாக உணரலாம். ஆனால் உண்மையில் நாம் இணைந்து செயல்படும்போது, வெவ்வெறு மதம், மரபுகளை, மொழிகளை மதித்துச் செயல்படும்போது மகத்தான ஒன்றை நோக்கிச் செயல்படுகிறோம். இன்று நான் உண்மையை நோக்கி ஓரடி எடுத்துவைத்ததாக உணர்கிறேன்” என்றார்.

பிரமிக்க வைப்பவர்

யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங் காவலரான டாக்டர் அப்துல் பாசித் சையத், “இது ஒரு முக்கியமான நாள். ஒரு முக்கியமான சாதனையாளரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு அமைந்ததில் பெருமைப்படுகிறேன். ஊடக சுதந்திரத்தில் இந்தியா 140-வது இடத்தில் இருக்கிறது. சமூக நீதியை உருவாக்குவதில் ஊடகம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்திய அரசியலமைப்பு, நான்கு தூண்களின் மீது அமைந்திருக்கிறது. அதில் நான்காம் தூணான ஊடகத் துறையில் கவலைப்படவேண்டிய விஷயங்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல… குறிப்பாக தென்னாசிய நாடுகளில் நிகழ்கின்றன. துருக்கியில் நடந்த ஜமால் கஷோகி விவகாரம் முக்கியமானது. நான் விரிவாகப் பேசப்போவதில்லை. இந்தியாவில் கல்புர்கி, கௌரி லங்கேஷ் படுகொலை போன்ற பல சம்பவங்கள் நடக்கின்றன. ஊடகத்துறையைக் காப்பதும் அதற்கு சேவை செய்வதும் நமது கடமையாகும்.

மானுட சமூகத்துக்குச் செய்துவரும் சேவைக்காக திரு நக்கீரன் கோபாலுக்கு என் மரியாதையைத் தெரிவித்துக்கொள்கிறேன். புலனாய்வு பத்திரிகைப் பணியில் அவர் அடைந்த வெற்றி மிகவும் அதிகம். போதைப் பொருட்கள் விவகாரத்தை அம்பலப்படுத்தியவர் இவர். தமிழக முதலமைச்சராக இருந்தவருடன் கடுமையான மோதல் போக்கைக் கையாண்டவர், பிரபல சந்தனக் கடத்தல் வீரப்பனுடனான சந்திப்புகளால் புகழ்பெற்றவர். யார் பக்கமும் சாராமல் நடுநிலை வகிப்பவர். இவற்றின் மூலம் முக்கியமான இடத்தைப் பிடித்து குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவரது வெற்றி பிரமிக்கவைப்பது. எனது நண்பர், மைக் சொன்னதுபோல, இது வெறும் தொடக்கமல்ல, அநீதியின் முடிவுக்கான தொடக்கம். ஒரு அமைப்பாக நாங்கள் அமைதியைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம். நாம் அதைப், புரிந்துகொண்டால்தான் சாதிக்கமுடியும்” என்றார் அழுத்தமாய்..

உண்மையின் பக்கம் நிற்பவர்

இறுதியாக நன்றியுரை ஆற்றிய சுசித்ரா, “எங்களுக்கு வீரப்பன் எப்படி இருப்பார் என்றே தெரியாது. நாங்கள் அவருக்குப் பதில் உங்களைப் பார்க்கிறோம்.

நீங்கள் செய்த மகத்தான சாதனைகளுக்கு நான் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரக் கூடியவர்கள். அதன் மூலம் இளையவர்களை ஈர்த்து, உண்மையின் பக்கம் நிற்கச் செய்வபவர்கள். நான் கொழும்பு குண்டுவெடிப்பில் என் தந்தையை இழந்தவள். உங்கள் சொந்த வாழ்வில் அமைதியாக வாழ்ந்தால்தான், உலகம் அமைதியாக இருப்பதற்கு என் பங்களிப்பைச் செய்யமுடியும். தென்கொரியாவின் இன்டர்நேஷனல் பீஸ் யூத் குரூப்பின் உறுப்பினர் நான். இளையவர்கள் வன்முறையின் பக்கம் போகாமல், அவர்களைத் தவறானவர்கள் பயன்படுத்த விடாமல், மனதில் அமைதியைக் கொண்டுவருவது எவ்வளவு முக்கியம் என நான் கருத்தரங்குகள் நடத்துகிறேன். அதைச் சாதித்தால்தான் உலகில் அமைதியைக் கொண்டுவர முடியும்” என தனது கருத்துகளைப் பதிவுசெய்தார்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களுடன், நம் ஆசிரியரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

இந்த அமைதிக்கான விருதைப் பெற்றதன் மூலம் நக்கீரனுக்கு சர்வதேச மதிப்பை பன்மடங்கு உருவாக்கி இருக்கிறார் நம் ஆசிரியர்.

-தமிழ்நாடன், க.சுப்பிரமணியன்

சர்வதேச விருது பெற்றிருக்கும் நம் ஆசிரியருக்கு பல திசைகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அவற்றில் சில...

கவிப்பேரரசு வைரமுத்து:

அன்புள்ள ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர் களுக்கு! வணக்கம். லண்டனில் உள்ள 'மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் டங்ஹஸ்ரீங் எங்க்ங்ழ்ஹற்ண்ர்ய்' உங்களுக்கு சமாதானத் தூதுவர் என்ற சிறப்பினை வழங்கியிருப்பது கண்டு பெருமையும் பெருமிதமும் அடைகிறேன்.

வெற்றிகரமான தமிழ் ஊடக விய லாளரின் உழைப்புக்கும் போராட்டத்துக்கும் கிடைத்த கிரீடம் இதுவென்று கொண்டாடு கிறேன். உங்கள் மீசை மேலும் நிமிர்கிறது. வாழ்த்துக்கள்.”

ஒரு போராளித் தூதரை அடையாளம் கண்டு, அவருக்கு அமைதிக்கான தூதுவர் விருதை வழங்கி சிறப்பித்திருக்கும் லண்ட னைத் தலைமையகமாகக் கொண்ட ’யுனிவர்சல் பீஸ் ஃபெடரேசன் ’ அமைப்புக்கு அன்பான பாராட்டு! கை குலுக்கல்!.

விருதைப் பெற்றிருக்கும் சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களே, இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள். தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் உங்களுக்கென்று தனித்த இடம் உண்டு. சர்வதேச அமைதித் தூதர் விருதையும் அது தொடர்பான சிறப்பையும் நீங்கள் பெறும் இந்த நேரத்தில், தமிழகத்தின் சார்பிலான எங்கள் கவிஞர்களின் வாழ்த்துக்களையும் பேரன்பையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

மெய்வேல்

வெள்ளை வேந்தர்களின்

அழுக்கு பக்கங்களை

அப்பட்டமாய்

காட்டினாய்...

கொடூரர்களை

குத்திக்கிழிக்க

பேனா முள்

போதுமென்றாய்...

ஆள்வோர் கைவேல்

தொடுக்க;

நீயோ

மெய்வேல் ஏந்தி

நின்றாய்...

தண்ணீரில் நீந்தும்

நீர்ப்பறவையை மட்டுமே

இஞ்ஞாலம் ரசிக்கும்

நீருக்கடியில்

கால்களால் துடுப்பு போடும்

அதன் உழைப்பை

உலகறியுமோ?

தம்பிகள் மட்டுமே

அறிவோம்...

உன் மீசையின்

அடர்த்திக்குள்

பேராழியின் சீற்றம்

அமிழ்ந்து கிடப்பதை;

உலக

அமைத்திக்கான தூதர் விருது

உன் மகுடத்தில்

மற்றுமொரு வைரக்கல்!

இனி

ஒரு கையில் பேனாவும்

ஒரு கையில்

வெள்ளை புறாவும் ஏந்துவாய்.

முன்பு பெரியார் விருது;

இப்போது

அமைதி தூதர் விருது...

என்ன சொல்வது...

'விருது'நகர் மண் அப்படி.

வாழ்த்துகள்

அண்ணா.

-அன்புத்தம்பி

இளையராஜா சுப்ரமணியம்

வாழ்த்துகள்

மீசைக்காரத் தோழனே!

இருமாநில

அமைதிக்காக

காடு தாண்டிய போது

கா-ல் குத்திய முள்

நாடுதாண்டி நம்மை

அடிமைப்படுத்தியவர்

நயனங்களில் அல்லவா

தைத்திருக்கிறது!

இப்போதன்றோ

புரிகிறது

இந்த

விருதுக்குள்

கருதுவிட்டிருக்கும்

மனிதநேயம்!

நெல்மணிகளுக்கு

நீர்ப்பால் வார்த்து

அமுதசுரபி ஈந்த

"பென்னி குக்கின்"

அன்னை பூமியல்லவா இலண்டன்!

"யுனிவர்சல் பீஸ்

ஃபெடரேசனின்"

'அமைதிக்கான

தூதர்' விருது

நெற்றிக் கண்ணோடு

உன்னைப் பெற்றெடுத்த

நெருப்பு வயிறினைக்

குளிர்விக்கட்டும்!

இந்த

விருது விழா...

நாளை

நீ பெறப்போகும்

அமைதிக்கான

"நோபல் பரிசுக்கு"

கட்டியங் கூறட்டும்!

-பாரதி கண்ணம்மா

uday010422
இதையும் படியுங்கள்
Subscribe