அதியமான் ஊரில் அறிவுமதிக்கு விருது! -ஊத்தங்கரை முத்தமிழ்ப்பேரவை வழங்கியது

/idhalgal/eniya-utayam/adhiyaman-award-knowledge-town

டை எழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் ஈர மண்ணாம் ஊத்தங்கரையில், முத்தமிழ்ப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழா ஆகஸ்ட் 18 ஆம் தேதி, முழு நாள் விழாவாக அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரங்கேறியது.

இதையொட்டி அங்கே எல்லோரின் கண்களிலும் உற்சாக மின்னல் தெறிப்பதைப் பார்க்கமுடிந்தது.

கருணை மிகும் கல்வியாளர் சந்திரசேகரின் தலைமையில் இயங்கும் இந்த முத்தமிழ் இலக்கியப் பேரவை, தொடர்ந்து இலக்கியப் போட்டிகளை நடத்தி மாணவ- மாணவியரை ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். வழக்கம்போல் இலக்கியத் திருவிழாவையும் அது சீரும் சிறப்பாக நடத்தியிருக்கிறது.

அன்று விடிந்ததில் இருந்தே அரசு மேல்நிலைப் பள்ளியை நோக்கி மாணவ மாணவியரும் இளைஞர்களும் இலக்கிய அன்பர்களும் பொதுமக்களும் படையெடுக்கத் தொடங்கினர். விழா கோலாகலமாக அறிஞர் பெருமக்கள் புடைசூழ கவித்துவமாய்க் களைகட்டியது.

அழகான மேடை. அலங்கரிக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தல். அரங்கு நிறைந்த தமிழன்பர்கள். எல்லோரின் முகத்திலும் மலர்ச்சி.

ddadf

தமிழ்மண் சார்ந்த பாடல்களால் மக்கள் மனதை வெல்லும் மக்களிசைப் பாடகர் வேல்முருகன் குழுவினரின் நாட்டுப்புற பாடல்களோடு இலக்கிய நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இலக்கியப் பேரவை நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன், வாழ்வியல் வழிகாட்டியாகக் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாகக் கூடவே வருகிறது வள்ளுவனின் திருக்குறள். அது ஒழுக்கத்தின் வீதிகளில் தமிழ்ச் சமுகத்தை நடைபோட வைக்கும் ஆற்றல் கொண்டது' என்றார் விரிவாகவும

டை எழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் ஈர மண்ணாம் ஊத்தங்கரையில், முத்தமிழ்ப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழா ஆகஸ்ட் 18 ஆம் தேதி, முழு நாள் விழாவாக அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரங்கேறியது.

இதையொட்டி அங்கே எல்லோரின் கண்களிலும் உற்சாக மின்னல் தெறிப்பதைப் பார்க்கமுடிந்தது.

கருணை மிகும் கல்வியாளர் சந்திரசேகரின் தலைமையில் இயங்கும் இந்த முத்தமிழ் இலக்கியப் பேரவை, தொடர்ந்து இலக்கியப் போட்டிகளை நடத்தி மாணவ- மாணவியரை ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். வழக்கம்போல் இலக்கியத் திருவிழாவையும் அது சீரும் சிறப்பாக நடத்தியிருக்கிறது.

அன்று விடிந்ததில் இருந்தே அரசு மேல்நிலைப் பள்ளியை நோக்கி மாணவ மாணவியரும் இளைஞர்களும் இலக்கிய அன்பர்களும் பொதுமக்களும் படையெடுக்கத் தொடங்கினர். விழா கோலாகலமாக அறிஞர் பெருமக்கள் புடைசூழ கவித்துவமாய்க் களைகட்டியது.

அழகான மேடை. அலங்கரிக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தல். அரங்கு நிறைந்த தமிழன்பர்கள். எல்லோரின் முகத்திலும் மலர்ச்சி.

ddadf

தமிழ்மண் சார்ந்த பாடல்களால் மக்கள் மனதை வெல்லும் மக்களிசைப் பாடகர் வேல்முருகன் குழுவினரின் நாட்டுப்புற பாடல்களோடு இலக்கிய நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இலக்கியப் பேரவை நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன், வாழ்வியல் வழிகாட்டியாகக் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாகக் கூடவே வருகிறது வள்ளுவனின் திருக்குறள். அது ஒழுக்கத்தின் வீதிகளில் தமிழ்ச் சமுகத்தை நடைபோட வைக்கும் ஆற்றல் கொண்டது' என்றார் விரிவாகவும் செறிவாகவும்.

"விடியலின் விலாசம்' என்கிற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸும் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, "கல்வி தான் ஒரு மனிதனை மேம்படுத்தும். அதுதான் எந்த சமுதாயத்தையும் மேம்படுத்தும். இன்று கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவருகிறது. கல்விக்கொள்கைகள் மாணவர்களின் கனவை சிதைத்து வருகிறது. கல்வியும், மருத்துவமும் இந்த நாட்டில் எப்போது மக்களுக்கு இலவசமாக கிடைக் கிறதோ, அப்போதுதான் இந்த நாடு வல்லரசாகும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்' என்றார் அழுத்தமாக.

இன உணர்வுக் கவிதைகளாலும் திரைப்படப் பாடல்களாலும் உலக மக்களின் இதயத்தைக் கவர்ந்த பாவலர் அறிவுமதிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வுக்குத் தலைமை ஏற்ற, முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவரான கல்வியாளர் வே.சந்திரசேகர் தன் உரையில்...

"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போல் சிறந்த ஆசிரியர்கள் எங்குமில்லை. அரசு பள்ளியில் மட்டும்தான் தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மருத்துவக் கல்வி உட்பட அனைத்து வகைக் கல்வியும் அரசுடமையாக்கப்பட வேண்டும், இலவசமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடு வல்லரசாகும். இதைத்தான் கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ நடைமுறைப்படுத்தினார். அதனால்தான் அந்த நாடு வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது. அதுபோல் நம் நாட்டிலும் இலவசக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டதோடு பாவலர் அறிவுமதியை வாழ்த்தினார்.

இந்த இலக்கிய நிகழ்வில் பாவலர் அறிவுமதிக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான முத்தமிழ் இலக்கியப் பேரவையின் விருதும், 1 லட்ச ரூபாய்க்கான பண முடிப்பும் வழங்கப்பட்டது. இதை மகிழ்வோடு தன் கரத்தால் வழங்கிய இதழியல் போராளியான நக்கீரன் ஆசிரியர், "ஒரு தேசத்தில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக எப்போது கிடைக் கிறதோ, அந்த தேசமே வளர்ந்த தேசம் என இந்த மேடையில் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதை, நமது கல்வி வள்ளல் வழிமொழிந்தார். இது மிகுந்த மகிழ்வுக்குரியது.

அண்ணன் அறிவுமதி ஒரு கவிதை எழுதினார். அதில், இரண்டு அடி கொடுத்தால் தான் திருந்துவாய், வாங்கிக்கொள் திருவள்ளுவரிடம் என எழுதினார். இதுபற்றி நான் அறிவுமதியிடம் விளக்கம் கேட்டபோது, ஒரு பேப்பர், பேனாவை எடுத்துக்கொள் என்றார்.

நான் சொல்றவன் எல்லாம் செத்தவன் லிஸ்ட் எனச் சொல்லிவிட்டு, ஒரு பெயரை எழுதச்சொன்னார்.

அந்த பெயரை கேட்டதும், அய்யா இவர் ஊர்ல பெரிய ஆள், கிழங்கு மாதிரி இருக்கார். அவரைப் போய் செத்தவர்ன்னு சொல்றீங்களேன்னு கேட்டதும், அவன் இருக்கற தெருவுல பலர் அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாம இருக்காங்க. அவுங்க பசியில் இருக்கும்போது, இவன் மட்டும் வயிறு நிறைய சாப்பிட்டுக்கொண்டு இருந்தால், அவன் செத்தவனுக்குச் சமம் என்றார். அடுத்த ஒரு பெயரைச் சொல்லி, அய்யா இவருக்கு இரண்டு பொண்டாட்டி, எத்தனையோ பஸ் ஓடுது. காலையில ஒரு வீடு, மாலையில ஒரு வீடுன்னு போறார், கிழங்கு மாதிரி இருக்கார் அவரைப்போய் செத்துப்போனவர் பட்டியல்ல வைக்கிறீங்களேன்னு கேட்டன். இவன் இருக்கற ஏரியாவுல நோய்வாய்ப்பட்டு பலர் கிடக்கறாங்க, அவுங்களுக்கு உதவாம கோடிக்கணக்குல பணத்தை வச்சிக்கிட்டு எதுவுமே செய்யாம இருக்கறவன் செத்ததுக்கு சமம் என்றார். இப்படிப் பட்ட அடிகளைத்தான் தன் இரண்டு அடிக் குறள் மூலம் வள்ளுவன் கொடுத்திருக்கிறான் என்றார்.

ஆனால் அதற்கு மாறாக இந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகர் தன்னிடம் இருப்பதை வாரி வழங்கி மற்றவர்களுக்கு உதவிகரமாக வாழ்ந்து வருகிறார்.

அண்ணன் அறிவுமதி, தன்னை இலக்கியவாதி என்று எங்கும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், தனக்கு பின்னால் வரும் இளையோர்களுக்கு வழிகாட்டி வருகிறார். அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பவர்கள் இலக்கிய உலகில், சினிமா உலகில் பலர் உள்ளனர், எனக்கு வாய்ப்பைத் தா என சண்டை போடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அறிவுமதி, தன்னால் வளர்த்துவிடப்பட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் எனச் சொல்கிறார். தமிழே தன் மூச்சு என வாழ்பவர் அவர். அவருக்கு இந்த இலக்கிய விருது தருவது பொருத்தமானது. அதற்காக எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார் உற்சாகமாக.

விருது பெற்ற பாவலர் அறிவுமதி பேசும்போது, "தமிழனுடைய குணம் என்பது, தனக்கு அமுதமே கிடைத்தாலும் அதைத் தனித்து உண்ணாமல், பகுத்துண்டு உண்பதுதான். நான் பல கவிஞர்களை வளர்த்தேன், ஊக்குவித்தேன் என அண்ணன் நக்கீரன் கோபால் சொன்னார். அது என் தனிப்பட்ட குணமல்ல; அது என் தமிழ் இனத்தின் குணம். அதைத்தான் நானும் செய்கிறேன். இதை நான் வள்ளுவனிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை. என் கிராமத்தில் என் படிக்காத தாய்மார்களிடம் இருந்துதான் இந்த குணத்தையும் பழக்கத்தையும் கற்றுக்கொண்டேன். நான் புகழ், விளம்பரம் போன்ற சொற்களை விரும்பாதவன், என் எழுத்துக்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறதோ அது தன்னை அந்த அளவிற்குத் தன்னை வெளிச்சப்படுத்திக் கொள்ளட்டும் என நினைப்பவன். இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது வரமறுத்தேன். நண்பர்கள் கவிஞர் யாழன் ஆதி, வாணியம்பாடி பிரகாசம், வெங்கடேசன் உள்ளிட்டோர் வற்புறுத்தியதால் வந்தேன். எனக்கான உயரம் போதும், மற்றவர்கள் இன்னும் உயரத்துக்கும் போகவேண்டும் என என்னால் முடிந்ததை செய்கிறேன். எனக்கு தரப்பட்ட இந்த விருதுத் தொகையை, நான் அமைத்துவரும் நூலகச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்வேன்.

என் இனம், என் மொழி குறித்தே தான் என் பணிகள் இருக்கும். எனக்குத் தமிழ்ப் பாசம் புகட்டியது என் தந்தையார் தான். நான் சிறுவனாக இருந்தபோது கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று, இவர்தான் பெரியார், இவர்தான் அண்ணா, இவர்தான் கலைஞர், இவர்தான் கண்ணதாசன், இவர்தான் நாவலர் என அடையாளம் காட்டினார். திராவிட இயக்கத்தின் தொடக்க கால வரலாற்றை எவனும் கைநீட்டி குற்றம்சாட்ட முடியாது. பிற்கால திராவிட இயக்கத்தை நானே விமர்சனம் செய்துள்ளேன். அதிகம் படிக்காத பெரியாரை நம்பினோம், பல்கலைக்கழகங்களைப் பெற்றோம். அதிகம் படித்த இவர்களை நம்பினோம், நமது அரிச்சுவடிகள் தொலைந்துவிட்டது. பெரியார் மூத்திரச் சட்டியை சுமந்ததால்தான் நாம் இன்று பாக்கெட்டில் பேனா வைத்துக்கொண்டு சுற்றுகிறோம்.

நான் ஒருமுறை சிறந்த பாடலாசிரியர் என்கிற விருது பெற்றேன். அந்த விருதை கலைஞர் கையால் பெற்றேன். அப்போது நான் அவரிடம் சொன்னேன், இது நீங்கள் அறிவுமதிக்கு தரும் விருதல்ல, உங்கள் திராவிட இயக்கத்தவருக்கு தரும் விருது எனச் சொல்லி கறுப்புச் சட்டையோடு வாங்கி வந்தேன். எதையும் தைரியமாகச் சொல்லும் உள்ளத்தைப் பெரியாரிடம்தான் நான் பெற்றேன்' என்றார் எழுச்சியாக.

அவரது உரை அனைவரையும் உணர்ச்சிபெறச் செய்தது.

அதன்பின், "கண்ணீர் விட்டு வளர்த்தோம்' என்கிற தலைப்பில் இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார் சிறப்பானதொரு உரையை வழங்கினார். நிறைவாக "அறியாமை இருளகற்றும் அதிகாலை வெளிச்சம்' என்ற தலைப்பில், ஆடுதுறை அழகு. பன்னீர்ச் செல்வம் தலைமையிலான குழுவினர் இசைப் பட்டிமன்றம் நடத்தினர். ஒருநாள் விழாவாக இருந்தாலும் ஒட்டுமொத்த ஊத்தங்கரையையும் தமிழ்மழையில் நனைக்கும் விழாவாகக் கொண்டாடி விட்டார்கள்.

uday010919
இதையும் படியுங்கள்
Subscribe