வடதிசையி-ருந்த கலங்கரை விளக்கத்தி-ருந்து யானைகள் மீது தாவிய எதிரிகளின் முன்னங்கைகளை வெட்டி எறியுங்கள் என யானை வீரர்களுக்கு இளந்திரையர் உத்தரவு பிறப்பித்தார். ஒரு யானையில் மூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் யானைப் பாகர்களாகவும், சிறந்த போர்ப்பயிற்சி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இளந்திரையரின் உத்தரவுப்படி யானைகள் மீது குதித்தவர்களின் முன்னங்கைகளைத் துண்டிப்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்கள் தங்களது கைகளை சிங்கங்கள் தன் முன்னங்கால்களைப் பலங்கொண்டமட்டும் எதிரிகள் மீது தாக்குவது போல் விரைவாகத் தங்களின் கைகளை அசைத்துக்கொண்டு, அசுர பலத்துடன் வீரர் களின் கழுத்துகளைத் தாக்குவதற்கே முயற்சி செய்துகொண்டிருந்த னர்.
எனவே, யானை வீரர்கள் தங்களது கூர்மையான உடைவாளி னைத் தங்களின் கழுத்திற்குமுன் இறுகப் பிடித்துக்கொண்டு எதிரி களின் கைகளில் காயமுறுமாறு செய்தனர். யானைகளி-ருந்து பக்கவாட்டில் அவர்களை வ-மையுடன் கீழே தள்ளி யானைகளை வைத்து மிதிக்கச் செய்தனர். தங்களிடமிருந்த ஈட்டிகளை எறிந்த வீரர்களையும் குதிரைப்படை வீரர்களையும் யானைகளுக்குப் பின்புறம் செல்லும்படி இளந்திரையர் உத்தரவிட்டார். அதன்படி, யானைகள் அனைத் தும் முன்வரிசைக்கு விரைவாகக் கொண்டுவரப்பட்டன. யானைகளின் துதிக்கைகளை இருபுறமும் வீசி எதிரிகள் தங்களை நெருங்காதவாறு அவர்களை முட்டித்தள்ளி கலங்கரை விளக்கத்தை நோக்கி எறியுமாறு யானை வீரர்கள் தங்களது யானைகளுக்கு சமிக்ஞை செய்தனர். அதே நேரத்தில், ஈட்டி எறிந்த வீரர்கள் அனைவரும் கடற்கரையில் உலர்த்த விரிக்கப்பட்டிருந்த பெரிய மீன்பிடி வலைகள் அனைத்தையும் எடுத்துவருமாறு இளந்திரையர் உத்தர விட்டார். அதன்படி, கண் இமைக்கும் நேரத்தில் வீரர்கள் ஓடிச்சென்று அங்கிருந்த வலைகள் அனைத்தையும் எடுத்து ஓடிவந்தனர்.
வலைகளை நீளவாக்கில் விரித்து, அவற்றின் கீழ்ப்பகுதியை யானைகளை மிதிக்கச்செய்து, மேல் பகு

வலைகளை நீளவாக்கில் விரித்து, அவற்றின் கீழ்ப்பகுதியை யானைகளை மிதிக்கச்செய்து, மேல் பகுதியை யானைகளின் துதிக்கை களில் கொடுத்து கலங்கரை விளக்கத்தைச் சுற்றிலும் மீன்பிடி வலை களால் அரண் அமைக்க உத்தரவிட்டார் இளந்திரையர். அதன்படி, எதிரிகளை சமாளித்துக்கொண்டிருக்கும் யானைகளுக்கிடையே காலாட்படை வீரர்கள் சென்று யானைகளின் பாதங்களில் வலைகளின் கீழ்ப்பகுதியைப் போட்டவுடன் யானை வீரர்கள் வலைகளின் மேல் பகுதிகளை துதிக்கைகளால் விரித்து மேல்நோக்கிப் பிடிக்கும்படி யானைகளுக்கு உத்தர விட்டனர்.
அவ்வாறே கலங்கரை விளக்கத்தைச் சுற்றிலும் நெருக்கமாக நின்றிருந்த யானைகள், எதிரிகள் வெளியேறாதவாறு வலைகளால் அரண் அமைத்தன. இதன்மூலம் எதிரிகளின் தாக்குதல் அதிக அளவு குறைக்கப்பட்டது. எதிரிகள் தப்பிச்செல்ல அந்த வலையை நோக்கி ஓடிவந்தனர்.
அந்த சமயம் பார்த்து இளந்திரையனார், மோதுகின்ற எதிரிகள்மேல் வலைகளைத் துதிக்கையால் போர்த்தி, அவர்கள் மீது முன்னங்கால்களை மடக்கி அமுக்குமாறும், பிடித்திருக்கும் வலைகளை விட்டு விடாமல் இருக்குமாறும், யானைகளுக்கு சமிக்ஞை செய்ய பாகர்களுக்கு உத்தரவிட்டார்.
இளந்திரையரது உத்தரவின் பேரில் யானைகள் தங்கள் முன்னங்கால்களை மடக்கி எதிரிகளை அமுக்கி வலைகளை அவர்கள் மீது போர்த்திப் பிடித்துக்கொள்ளச் செய்தனர் பாகர்கள். வீரர்கள் அனைவரும் வலை யில் சிக்கியிருந்த பகைவர்களைத் தப்ப விடாமல் பிணைத்துக் கட்டும்படி இளந்திரையன் காலாட்படையினருக்குக் கட்டளையிட் டார். வீரர்கள் பகைவர்களை இறுகப் பிணைத்துக் கட்டும் வரை யானைகள் தங்கள் பிடியி-ருந்து வலைகள் விலகாமல் இருக்குமாறு யானைகளுக்குப் பாகர்கள் சமிக்ஞை கொடுத் துக் கொண்டேயிருந்தனர். பகைவர் களிடமிருந்த தீவெட்டிகள் முழுவதும் அணைக்கப்பட்டன. வீரர்களின் துரிதமான செயல்பாடுகளால் எதிரிகள் அனைவரும் மீன்பிடி வலை களுக்குள் சிக்குண்டனர்.
வலைகளைப் பிடித்திருந்த பிடி தளராதவாறு யானைகள் அனைத்தையும் பாகர்கள் மெல்ல எழச்செய்தனர். கலங்கரை விளக்கத்தைச் சுற்றியிருந்த யானைகள் அனைத்தையும் கிழக்கு மேற்காக ஒரே நேர்கோட்டில் நிற்கச் செய்யும்படி இளந்திரையர் ஆணை பிறப்பித்தார். அதன்படி காவல் வட்டத்தைத் தளர்த்தியபோது வலையில் சிக்காத பகைவர் களைத் தாக்கிக் கொன்றுவிடும்படி குதிரை வீரர்களுக்கு திரையனார் உத்தர விட்டார். குதிரை வீரர்கள் தங்களது குதிரைகளைக் கலங் கரை விளக்கத்தைச் சுற்றிலும், அதனையொட்டி மறைந் திருந்த வீரர்கள் பக்கம் விரைவாகச் செலுத்தி, தங்களிடமிருந்த கோடாரி ஆயுதங்களால் அவர்களது முகங்களை சிதைக்கத் தொடங்கினர்.
கிழமேல் திசையில் வரிசையாக வலைகளைப் பிடித்திருந்த யானைகளை தென்திசைக் கலங்கரை விளக் கத்தை நோக்கிக் கடற்கரையில் பின்னோக்கி நகருமாறு திரையன் உத்தரவிட்டார். மெய்மொழி அரையனார் இருக்கும் தென்திசைக் கலங்கரை விளக்கத்தை நோக்கி யானைகள் பின்னோக்கி ஒரே நேர்கோட்டு வரிசையாக நடக்கத் தொடங்கின. குதிரை வீரர்கள் கலங்கரை விளக்கத்தைச் சுற்றிலும் பகைவர்கள் யாரும் இருக்க வாய்பில்லை என்பதை அறிந்தபின், தங்களது குதிரைகளை யானைகளை நோக்கி விரைந்து செலுத்தலானார்கள். யானைகள் பின்னோக்கிச் செல்லும் பாதைக்குக் குறுக்கே தடையாக இருந்த பொருள்களை அப்புறப்படுத்திய காலாட்படையினர் அரையனார் இருக்கும் கலங்கரை விளக்கத்தை நோக்கிச் சென்றனர்.
யானைகள் இழுத்துவரும்போது வலைகளில் சிக்கிய எதிரிகளின் கண்களில் மணற்துகள்கள் படிந்து கண்களைத் திறக்க இயலாத அளவிற்கு உறுத்தலாயின.
அப்போது பகைவர்களின் வாயி-ருந்து வெளிவந்த கூக்குரலை, தன் குதிரையை யானை வரிசைக்குப் பின்னால் செலுத்திக்கொண்டே இளந்திரையனார் உற்று கவனித்தார். அவை நாகர்களின் பாசையைப்போல் இருந்தன.
அப்போது இளந்திரையனார் தனக்கு இடதுபுறத்தி-ருந்த கடல்பரப்பு முழுவதும் செம்பொன் நிறத்தில் மனதை அச்சுறுத்தும் அளவிற்கு மாறியதைப் பார்த்தார். அது சேந்தன் நல்லனாரால் வெடிக்கச் செய்த மரக்கலனி-ருந்த எரிகலன்கள் வெடித்து எரியத் தொடங்கிய நேரம்.
அங்கே இளந்திரையனார் கண்ணுற்ற காட்சியை அங்கிருந்த அனைத்து வீரர்களும் பார்த்துப் பிரம்மித்து நின்றனர். யானைகளின் மீதிருந்தவர்கள் "தென் கிழக்குத் திசையில் ஒரு கப்பற்கலன் எரிவதுபோல் தெரிகிறதே, அது யாருடைய கலனாக இருக்கும்? ஏன் எரிகின்றது?' என வினவலானார்கள்.
அப்போது இளந்திரையன் தனக்கு அடுத்த அதிகாரத்தி-ருந்த சீராளரிடம் "பரிவல்லாளரே இவர்களைப் பத்திரமாக தென் கலங்கரை விளக்கத்திற்குக் கொண்டுவாருங்கள். நான் முத-ல் மெய்மொழி அரையனார் இருக்கும் இடத்திற்குச் செல்கிறேன்' எனக் கூறித் தன் குதிரையை விரைவாகப் பாய்ந்து செல்ல முடுக்கினார்.
நாம் இங்கு பாண்டிய நாட்டின் மருங்கூர் துறைமுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். மருங்கூர் துறைமுகமானது, அதன் வடக்குப் பகுதியில் இருக்கும் கலங்கரை விளக்கத்திற்கு முன்னால் இருக்கும் கப்பற்துறைகளில் பாண்டிய நாட்டிற்குக் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடக்குத் திசைகளி-ருக்கும் தற்போதுள்ள சீனா, ஜப்பான், இந்தோனோஷியா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, நாவலந்தீவுகள் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளி-ருந்து வரும் கப்பல்களை நிறுத்துமிடமாகவும், தென்கலங்கரை விளக்கத்துக்கு அருகே இருக்கும் கப்பற் துறைகளில் ஈழம், ரோமாபுரி, எகிப்து மற்றுமுள்ள மேலை நாடுகளி-ருந்து வரும் கப்பல்களை நிறுத்துமிடமாகவும் செயல்பட்டது. இவ்விரண்டிற்கும் நடுவேதான் பாண்டியப் பேரரசுக்குரிய சுங்கச் சாவடிகளும் பாண்டிய நாட்டு வாணிபர்கள் உள்ள பகுதியும் இருந்தன.
இந்த மருங்கூர் துறைமுகமானது பூம்புகாருக்கு இணையானதாகவும், அன்றைய காலத்தின் நவீனமயமாக்கப்பட்ட அழகுமிகுந்த துறைமுகமாகவும், புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இத்துறைமுகத்தில் வடக்கு கப்பற்துறைகளுக்கு வந்துசேரும் கப்பல்களி-ருந்து இறக்குமதியாகும் பொருள்கள் யாவும், பாண்டியப் பேரரசால் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள்மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தெற்குப் பகுதியில் இருக்கும் ஈழம், எகிப்து, ரோமாபுரி மற்றும் பிற மேற்கத்திய நாடுகளி-ருந்து வந்திருக்கும் வியாபாரிகளுக்குக் கூடுதல் லாபம் வைத்து வணிகம் செய்யப்பட்டன.
இதேபோல் தெற்குப்பகுதி கப்பற்துறைகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் கூடுதல் லாபம் வைத்து பாண்டிய நாட்டு வணிகர்களால் வடக்குப் பகுதியில் இருக்கும் கீழைநாட்டு வியாபாரிகளுக்கு வாணிபம் செய்யப்பட்டன. உள்நாட்டுப் பொருள்களும் இவ்வாறே இப்பாண்டிய வணிகக் குழுவால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இரண்டு துறைகளிலும் நல்ல லாபத்துடன் வணிகம் செய்யப்பட்டன.
இவ்விரண்டு கப்பற்துறைகளி-ருக்கும் வெளிநாட்டு வணிகர்கள் ஒருபோதும் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாது. இதற்கு மேலும் இவ்விரு பகுதிகளி-ருந்து இடமாறும் வியாபாரப் பொருள்களுக்கு துறைமுகத்தின் மத்திய பகுதியில் இருந்த சுங்கச் சாவடிகளின்மூலம் சுங்க வரிகள் வசூ-க்கப்பட்டு வந்தன. இதனால் பாண்டிய நாட்டு வணிகப் பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ந்து பாண்டியத் தலைநகரான மதுரையம்பதியில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது.
இதனால் உலகமே போற்றும் அளவிற்கு பாண்டியப் பேரரசனின் தலைநகரில் பொன்னும் மணிகளும் மலைபோல் குவிந்தன. மக்களுக்கும் புரவலர்களுக்கும் புலவர்களுக்கும் பாண்டியன் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தான். தமிழ் மொழி, பண்பாடு, கலைகள் வளர்க்கும் அவையங்கள் சிறப்புற நடத்தப்பட்டன. கல்விச்சாலைகள் சிறப்புற விரிவுபடுத்தப்பட்டன. பன்னாட்டு பயணியர்களுக்கு விருந்தோம்பல்களும் அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டன.
இவ்வாறு உலகமே வியந்து போற்றும் அளவிற்கு பாண்டியப் பேரரசை உருவாக்கித் தந்த சிற்பிகள் பத்துப் பேர்கள். அவர்களது மதிநுட்பங்களாலும் உலகளாவிய வாணிபங்களைப் பற்றிய விரிந்த அனுபவங்களாலும், உலக வணிகச் சந்தைகளை பாண்டிய நாட்டின் பக்கம் ஈர்க்க அவர்களால் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பயனளித்தன.
இவ்வாறு உலகப் பொருளாதாரத்தை பாண்டிய நாடு நிர்ணயிக்கும் அளவிற்கான கட்டமைப்பை எவ்வாறு அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கினர் என்பதை வரும் இதழில் காண்போம்...
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us