அமெரிக்காவின் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குவோரைக் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி தொடர்கள், அதில் இடம்பெற்ற கலைஞர்கள் ஆகியோருக்கு எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், இண்டர்நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்த விருதுகளை அளித்து வருகின்றன 77-வது எம்மி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில், சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகைக்கான விருதுகளை ஹேக்ஸ் காமெடி தொடர் வென்றது.
இதில், சேத் ரோஜென் சிறந்த நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றனர்.
ஹேக்ஸ் நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காக ஹன்னா ஐன்பிண்டர் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
இங்கிலாந்தின் ‘அடோல்சென்ஸ்’ தொடருக்கு சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட ஆறு பிரிவுகளில் எம்மி விருது வழங்கப் பட்டுள்ளது.
இந்த தொடரில் நடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
இதன் மூலம், எம்மி விருதை மிக இளைய வயதில் பெற்றவர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் பெற்றுள்ளார்.
கிரியேட்டிவ் விருதுகளை சேர்த்தால் முதல் இடத்தில் 13 விருதுகளை ‘தி ஸ்டுடியோ’ தொடர் வென்றுள்ளது.
இதன் மூலம் ‘தி ஸ்டுடியோ’ ஒரே சீசனில் அதிக எம்மி விருதுகளை வென்ற நகைச்சுவைத் தொடர் எனும் சாதனையை படைத்துள்ளது.