மக்கள் தங்களது நோய்கள் தீரவும், தமது பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவும், குழந்தை வரம் கிட்டவும், புகழ்மிகுந்தத் திருத்தலங்களுள் விளங்கும் இறைவனின் அருளைத்தான் நாடுகின்றனர். அப்படிப்பட்டத் திருத்தலமாக விளங்குகின்றது ஏமப்பூர். சிறந்த பரிகார நாயகனாகத் திகழ்கின்றார் ஸ்ரீ வேதபுரீஸ்வரர். இத்திருத்தலத்தின் மகிமையினைப் பார்ப்போம்.
தென்பெண்ணையாற்றின் தென்கரைக்கும், அதன் கிளையாறான மலட்டாற்றின் வடகரைக்கும் நடுவில் அமைந்துள்ளது ஏமப்பூர்.
ஜெயங்கொண்ட சோழமண்டலத்து, இராஜேந்திர சிம்மவளநாட்டு, திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டின் ஓர் பிரிவாக ஏமப்பேரூர் நாடு இருந்துள்ளது. திருநாவுக்கரசரால் ஆறாம் திருமுறையின் க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் "ஏமப்பேறூர்' என்று வைப்புத்தலமாக பாடிய ஊர் இன்று ஏமப்பூர் என்று அழைக்கப் படுகின்றது.
இப்பகுதியை பல்லவர்கள், இராஷ்டிர கூடர்கள் மற்றும் சோழர்கள் ஆகியோர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுமுதல் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்துள்ளனர்.
ஏமப்பூர் ஒரு கிராமமாக இல்லாமல் திருமுனைப்பாடி நாட்டில் "ஏமப்பேரூர் நாடு' என்கிற பெயரில் பெரிய நாட்டுப்பிரிவாக இருந்துள்ளது.
திருமுனைப்பாடி நாடு என்பது கீழ்ஆன்மூர் நாடு, ஏமப்பேரூர் நாடு, திருவெண்ணெய்நல்லூர் நாடு, கயற்பாக்கை நாடு என நான்கு சிறு நாடுகளை உள்ளடக்கி யதாகும்.
எமபயம் போக்கும் திருத்தலமாகத் திகழும் இப்பதி பல்லவர் காலத்தில் செங்கற்தளியாக எழுப்பப்பட்டு, பின்னர் கி.பி. 942-ஆம் ஆண்டு முதலாம் ஆதித்த சோழனது மகனான முதலாம் பராந்தகச் சோழனால் கருங்கற்கோவிலாக புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஏமப்பேரூர்
மக்கள் தங்களது நோய்கள் தீரவும், தமது பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவும், குழந்தை வரம் கிட்டவும், புகழ்மிகுந்தத் திருத்தலங்களுள் விளங்கும் இறைவனின் அருளைத்தான் நாடுகின்றனர். அப்படிப்பட்டத் திருத்தலமாக விளங்குகின்றது ஏமப்பூர். சிறந்த பரிகார நாயகனாகத் திகழ்கின்றார் ஸ்ரீ வேதபுரீஸ்வரர். இத்திருத்தலத்தின் மகிமையினைப் பார்ப்போம்.
தென்பெண்ணையாற்றின் தென்கரைக்கும், அதன் கிளையாறான மலட்டாற்றின் வடகரைக்கும் நடுவில் அமைந்துள்ளது ஏமப்பூர்.
ஜெயங்கொண்ட சோழமண்டலத்து, இராஜேந்திர சிம்மவளநாட்டு, திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டின் ஓர் பிரிவாக ஏமப்பேரூர் நாடு இருந்துள்ளது. திருநாவுக்கரசரால் ஆறாம் திருமுறையின் க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் "ஏமப்பேறூர்' என்று வைப்புத்தலமாக பாடிய ஊர் இன்று ஏமப்பூர் என்று அழைக்கப் படுகின்றது.
இப்பகுதியை பல்லவர்கள், இராஷ்டிர கூடர்கள் மற்றும் சோழர்கள் ஆகியோர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுமுதல் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்துள்ளனர்.
ஏமப்பூர் ஒரு கிராமமாக இல்லாமல் திருமுனைப்பாடி நாட்டில் "ஏமப்பேரூர் நாடு' என்கிற பெயரில் பெரிய நாட்டுப்பிரிவாக இருந்துள்ளது.
திருமுனைப்பாடி நாடு என்பது கீழ்ஆன்மூர் நாடு, ஏமப்பேரூர் நாடு, திருவெண்ணெய்நல்லூர் நாடு, கயற்பாக்கை நாடு என நான்கு சிறு நாடுகளை உள்ளடக்கி யதாகும்.
எமபயம் போக்கும் திருத்தலமாகத் திகழும் இப்பதி பல்லவர் காலத்தில் செங்கற்தளியாக எழுப்பப்பட்டு, பின்னர் கி.பி. 942-ஆம் ஆண்டு முதலாம் ஆதித்த சோழனது மகனான முதலாம் பராந்தகச் சோழனால் கருங்கற்கோவிலாக புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஏமப்பேரூர் பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை இவ்வூரில் காணப்படும் இரண்டு பல்லவர்கால துர்கை சிற்பங்கள்மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயத்தில் முதலாம் பராந்தகச் சோழனது ஐந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதில் இக்கோவிலுக்கு பசுக்கள் அளித்த செய்தியும், நந்தா விளக்கெரிக்க ஒன்பது கழஞ்சு பொன்னும், 96 சாவா - மூவா பேராடுகள் தந்த செய்தியும் அடங்கியுள்ளன. அதோடு, ஈசனுக்கும், அம்பிகைக்கும் பூமாலை தொடுத்து சாற்றிட பூந்தோட்டம் அமைக்க நிலமும் (தினமும் ஆறு ஜான் நீளம் மாலை தொடுக்கவேண்டும் என்பது உத்தரவு) சிவபிராமணர்களுக்கு. (அதாவது கோவில் பூஜை செய்யும் சிவாச்சார்யார்களுக்கு) நெல் அளித்த விவரமும் உள்ளன.
இத்தல ஈசர் திருவாலந்துறை ஆழ்வார் என்றும், திருவாலந்துறை உடைய பரமஸ்வாமிகள் என்றும், திருவாலந்துறை மகாதேவர் மற்றும் நாயனார் என்றும் போற்றப்பட்டுள்ளார்.
கி.பி. 949-ல் தக்கோலப் போரில் சோழர்களை வென்ற இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் என்னும் கன்னரத்தேவன் திருமுனைப்பாடி நாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது இரண்டு கல்வெட்டுகள் இங்கு உள்ளது. அதில் நந்தா விளக்கெரிக்க ஆடுகள் தானமாக பெற்றச் செய்தியை அறிய முடிகின்றது.
பராந்தக சோழனது பேரனான சுந்தர சோழனது கல்வெட்டு ஒன்றும் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.
சுந்தர சோழனுக்கு பின் அவனது மகனான இராஜராஜ சோழனும் இங்கு நிலங்கள் இறையிலியாக வழங்கியுள்ளான். அந்த நிலத்தின் விளைச்சளைக் கொண்டு சித்திரை மற்றும் மார்கழி திருவிழாக்கள் செய்யவும், அடியார்களுக்கு திருவமுது செய்யவும், தீப எண்ணெய் மற்றும் மாலை சாற்றுப்படி செய்யவும் ஆணை பிறப் பித்துள்ளான். அதோடு, கரியமது, அடைக்காய், வெற்றிலை, திருவமுது படைத்திட என நிலமும், விளக்கெரிக்க 96 ஆடுகளும், கார்த்திகை விளக்கெரிக்க நாழி நெய்யும் கொடையாக வழங்கியுள்ளான்.
பின்னர் ஆட்சிக்கு வந்த இராஜராஜனது மகன் இராஜேந்திர சோழனும் தீபமேற்றவும், கோவில் குருக்களுக்கு சம்பளம் கொடுக்கவும் நிலங்களை தானமாக வழங்கியுள்ளான். இராஜேந் திர சோழனின் பேரனான குலோதுங்கச் சோழன் சோழசதுர்வேதிமங்கலத்தில் இருந்து 12 வேலி நிலத்தைப் பிரித்து, "அநபாயநல்லூர்' என்று பெயரிட்டு, அவ்வூரை ஏமப்பூர் இறைவனுக்கு தானமாக கொடுத்துள்ளான்.
குலோத்துங்க சோழனுக்கு பிறகு ஆட்சிக்குவந்த மூன்றாம் இராஜராஜனது கல்வெட்டு ஒன்றும் இவ்வாலயத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 21 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்கால வழக்கத்தில் உள்ளதுபோல் தான தர்மங்களுக்கு வருமானவரி நீக்கம், பெண்களுக்கு சமஉரிமை போன்ற நடைமுறைகள் சோழர் காலத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு- மேற்குமாக அமைந்த ஆலயத்திற்கு தென்முக வாயில் மட்டும் உள்ளது. இந்த வாயில் தோரணவாயிலாக இராஜகோபுரமின்றி மொட்டையாகக் காணப்படுகின்றது.
உள்ளே செல்கிறோம். சற்றே வலதுபுறமாகத் திரும்பி, சுவாமி சன்னதியை அடைகின்றோம். மகாமண்டபம், அர்த்தமண்டபம், மூலஸ்தானம் என்கிற அமைப்பினில் இறைவனது திருச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்துள்ளே... நந்தியம் பெருமான் கிழக்கு நோக்கியவண்ணம் காட்சியளிக்கின்றார். திருக்கயிலாயத்தில் அசுரர்களை உள்ளே புகாமல் தடுப்பதற்கு வாயிலை நோக்கி இருப்பதுபோல இங்கும் வீற்றுருள்கின்றார்.
மேலே மூடுதளம். இங்கு வலதுகரத்தில் தந்தமும், இடது கரத்தில் மோதகமும் கொண்டு நின்ற நிலையில் வித்தியாசமான தோற்றத் தில் பாலகணபதி அருள் செய்கின்றார்.
சூரிய தேவரும், சிவனின் அம்சமான ஸ்ரீ காலபைரவரும், தனி சனீஸ்வரரும் இங்கே அருள் புரிகின்றனர்.
அர்த்தமண்டபத்தில் நின்றபடி ஆண்டவனை தரிசிக்கின்றோம். கருவறையில் சுயம்புலிங்கமாய் சதுரகாவுடையாரின் நடுவே சங்கரனது அதியற்புத தரிசனம் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் என்கிற திருநாமம் கொண்டு திருவருள் புரிகின்றார் பெருமான். எல்லாவிதமான பயங்களையும் நீக்கி, வாழ்வில் வளங்கள் பல அருளிச்செய்திட வேண்டும் என பிரார்த்தனை செய்தவாறு பிராகார வலம் வருகின்றோம்.
பராந்தகச் சோழனது கலை வடிவங்கள் ஒவ்வொரு தெய்வத் திருமேனிகளிலும் ஜொலிக் கின்றன. முதலில் தென்புற கோஷ்டமாடத்தில் நர்த்தன கணபதிக்கு பதிலாக ஸ்ரீ பிட்சாடனர் நிறுவப்பட்டுள்ளார். அதிக அற்புதமான கலைப்படைப்பு. பின்னர் குரு தட்சிணாமூர்த்தி குடிகொண்டுள்ளார். மேற்கு மாடத்தில் பொதுவாக லிங்கோத் பவர் அல்லது ஸ்ரீ மகாவிஷ்ணு காணப்படுவார். ஆனால் இங்கு வித்தியாசமாக ரிஷபத்துடன்கூடிய உமாசகித சந்திரசேகரர் காட்சி தருகின்றார். உமையை மகேசர் கொஞ்சும் பாவம் அலாதி அழகு.
வடகோஷ்டத்தில் பிரம்மாவும், பின் துர்க்கையும் காணப்படுகின்ற னர். சுவாமி சன்னதிக்கு வாம பாகத்தில் அம்பிகையின் தனிச் சன்னதி அழகுற அமைந்துள்ளது. சிறிய அந்த்ராளமும், அதையொட்டிய கருவறையும் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் மேலிரு கரங்களில் ருத்ராட்ச மாலையும், நீலோற்பல புஷ்பமும் ஏந்தி, கீழிரு கைகளை அபய- வரதம் காட்டி, புன்னகை பூக்கின்றாள் அன்னை ஸ்ரீ பாலகுஜாம்பிகை. சகல சௌபாக்கியங்களையும் அருளவல்ல நாயகியாகத் திகழ்கின்றாள்.
இந்த அமைப்பு தொண்டை நாட்டு தேவாரத் தலமான திருவத்திபுரம் என்னும் செய்யார் திருத்தலத்தினை ஞாபகப்படுத்துகின்றது. சன்னதிக்கு பின்னால் கணபதி மற்றும் சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளில் கோவில்கொண்டு அருள்பாலிக் கின்றனர். தென்கிழக்குப் பகுதியில் நவகிரகங்களும், சிறிய கிணறு ஒன்றும் காணப்படுகின்றன.
அமைதியானதொரு ஆலயம். இவ்வாண்டு (2025) இவ்வாலய கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்துள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கீழுள்ள இவ்வாலயத்தில் தினமும் இரண்டுகால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7.00 மணிமுதல் 12.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் 9.00 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.
பொதுவான எல்லா சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புடன் அனுசரிக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக, சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பூரத்தன்று மூலவர் அம்பாளுக்கு சந்திரகாப்பும், உற்சவர் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி மற்றும் பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு சிறப்பு பூஜையும் இங்கு சிறப்புடன் நடத்தப்படுகின்றன.
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து மிருத்யுஞ்ஜெய ஹோமம் நடத்தி, ஸ்வாமி- அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை பெற்று, தினமும் உட்கொண்டு வந்தால், எமபயம் நீங்கி, விரைவில் உடல்நலம் சரியாகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இத்தலம் ஓர் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்கின்றது.
வழி: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஏமப்பூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us