Advertisment

கொள்ளைக்காரனை காவியம் பாடும் கவிஞனாக மாற்றிய ஈஸ்வரன்!

ishwaran1

இராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி மகரிஷி என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அந்த வால்மீகி மகரிஷி எப்படிப்பட்டவராக இருந்தார். அவர் காவியம் படைக்கும் கவிஞனாக எப்படி மாறினார். அதற்கு காரணமாக, இருந்த ஈஸ்வரன் தோன்றிய இடம் பற்றிய இதிகாச வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

Advertisment

இருண்ட காடு. யாரும் தனி அந்த காட்டுவழியே போவதற்கு பயம் கொள்வார்கள். இரண்டு பெரிய நகரம் மற்றும் கிராமங்களுக்கு இடையே அந்த அடர்ந்த காட்டுப்பகுதி அமைந்திருந்தது. அதனால் பல்வேறு பகுதி கிராம மக்கள் நகர மக்கள் போகும்போது அந்த காட்டை கடந்துதான் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. 

Advertisment

இந்த காட்டுப் பகுதியில் ஒரு கொள்ளையன் தன் கூட்டத்தாரோடு சேர்ந்து மக்களை வழிமறித்து. அவர்களது உடைமைகளை கொள்ளை அடித்துக்கொண்டிருந்தான். இதன்காரணமாக மக்கள் வணிகர்கள், தனித்தனியாக செல்லாமல் கூட்டம் கூட்டமாக காட்டை கடந்து செல்வார்கள். 

அப்படி எவ்வளவு பாதுகாப்பாக சென்றாலும்கூட அந்த வழிப்பறிக் கொள்ளையர்கள், அவர்களை மறித்து மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருந்தது. மக்கள், வணிகர்கள், தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இந்த காட்டை கடந்து சென்றுவந்தனர்.

இந்த காட்டின் கொள்ளை கூட்டத்தின் தலைவன் தலைமையில் கொள்ளையர்கள் கூடாரம் அமைத்து தங்கிகொண்டு, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். 

எத்தனை பாதுகாப்புடன் காட்டைக் கடந்தாலும், இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தங்கள் உடைமை களை இழந்து வந்தார்கள். 

ishwaran

அந்த கொள்ளை கூட்டதலைவன் கொள்ளையடிப்பதில் மிகவும் சாமர்த்தியசாலி. இதனால் பலர் அவனை அண்டி கொள்ளையர்களாக மாறி கொள்ளை யடிக்கும் பொருட்களில் பங்குபெற்று வாழ்ந்தனர். சில நேரம் இந்த கூட்டத்தின் தலைவன் தனியாகவும் வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவார். அந்த கொள்ளையன் தான் கொள்ளையடிப்பதற்கு மற்றவர்களிடம் கூறிய காரணம் இதுதான். தனக்கு பெரிய குடும்பம் உள்ளது. மனைவி, குழந்தைகளையும், தன்னை அண்டியிருக்கும் உற்றார்- உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை காப்பாற்றவேண்டியதும் தன் கடமை அதற்காகவே கொள்ளைத் தொழிலை எடுத்ததாகக் கூறிவந்தான்.

அந்த கொள்ளையர் கூட்டத் தலைவன், ஒரு நாள் தனியாக கொள்ளை அடிப்பதற்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது ஒரு முனிவர் கையில் ஒரு தம்புராவோடு நாராயணா.... நாராயணா..... என்றபடி வந்துகொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல நாரத மகா முனிவர்தான் கொள்ளையன் அவர் எதிரில் போய் நின்றான். கொள்ளையனின் ஆஜானுபகுவான உருவத்தை பார்த்து நாரதர் நடுநடுங்கிப் போனார். இருந்தும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு யாரப்பா நீ, உனக்கு என்னவேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் நான் யாராக இர

இராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி மகரிஷி என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அந்த வால்மீகி மகரிஷி எப்படிப்பட்டவராக இருந்தார். அவர் காவியம் படைக்கும் கவிஞனாக எப்படி மாறினார். அதற்கு காரணமாக, இருந்த ஈஸ்வரன் தோன்றிய இடம் பற்றிய இதிகாச வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

Advertisment

இருண்ட காடு. யாரும் தனி அந்த காட்டுவழியே போவதற்கு பயம் கொள்வார்கள். இரண்டு பெரிய நகரம் மற்றும் கிராமங்களுக்கு இடையே அந்த அடர்ந்த காட்டுப்பகுதி அமைந்திருந்தது. அதனால் பல்வேறு பகுதி கிராம மக்கள் நகர மக்கள் போகும்போது அந்த காட்டை கடந்துதான் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. 

Advertisment

இந்த காட்டுப் பகுதியில் ஒரு கொள்ளையன் தன் கூட்டத்தாரோடு சேர்ந்து மக்களை வழிமறித்து. அவர்களது உடைமைகளை கொள்ளை அடித்துக்கொண்டிருந்தான். இதன்காரணமாக மக்கள் வணிகர்கள், தனித்தனியாக செல்லாமல் கூட்டம் கூட்டமாக காட்டை கடந்து செல்வார்கள். 

அப்படி எவ்வளவு பாதுகாப்பாக சென்றாலும்கூட அந்த வழிப்பறிக் கொள்ளையர்கள், அவர்களை மறித்து மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருந்தது. மக்கள், வணிகர்கள், தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இந்த காட்டை கடந்து சென்றுவந்தனர்.

இந்த காட்டின் கொள்ளை கூட்டத்தின் தலைவன் தலைமையில் கொள்ளையர்கள் கூடாரம் அமைத்து தங்கிகொண்டு, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். 

எத்தனை பாதுகாப்புடன் காட்டைக் கடந்தாலும், இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தங்கள் உடைமை களை இழந்து வந்தார்கள். 

ishwaran

அந்த கொள்ளை கூட்டதலைவன் கொள்ளையடிப்பதில் மிகவும் சாமர்த்தியசாலி. இதனால் பலர் அவனை அண்டி கொள்ளையர்களாக மாறி கொள்ளை யடிக்கும் பொருட்களில் பங்குபெற்று வாழ்ந்தனர். சில நேரம் இந்த கூட்டத்தின் தலைவன் தனியாகவும் வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவார். அந்த கொள்ளையன் தான் கொள்ளையடிப்பதற்கு மற்றவர்களிடம் கூறிய காரணம் இதுதான். தனக்கு பெரிய குடும்பம் உள்ளது. மனைவி, குழந்தைகளையும், தன்னை அண்டியிருக்கும் உற்றார்- உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை காப்பாற்றவேண்டியதும் தன் கடமை அதற்காகவே கொள்ளைத் தொழிலை எடுத்ததாகக் கூறிவந்தான்.

அந்த கொள்ளையர் கூட்டத் தலைவன், ஒரு நாள் தனியாக கொள்ளை அடிப்பதற்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது ஒரு முனிவர் கையில் ஒரு தம்புராவோடு நாராயணா.... நாராயணா..... என்றபடி வந்துகொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல நாரத மகா முனிவர்தான் கொள்ளையன் அவர் எதிரில் போய் நின்றான். கொள்ளையனின் ஆஜானுபகுவான உருவத்தை பார்த்து நாரதர் நடுநடுங்கிப் போனார். இருந்தும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு யாரப்பா நீ, உனக்கு என்னவேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் நான் யாராக இருந்தால், உமக்கு என்ன உம்மிடம் இருக்கும் உடைமைகளை எல்லாம் என்னிடம் எடுத்துக்கொடு என்று மிரட்டினான். அப்போதுதான் முனிவருக்கு அவன் ஒரு கொள்ளைக்காரன் என்பது தெரிந்தது.

முனிவர் அவனிடம், அப்பா நீ இப்படிசெய்வது மகாபெரிய பாவம் அல்லவா? காட்டைக் கடந்து செல்பவர்களையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால், எமன் ஒருநாள் உன் உயிரை கொள்ளை அடித்துச்சென்று நரகத்தில் தள்ளுவாரே, இது மகா பாவம் அல்லவா என்று கொள்ளையனுக்கு அறிவுரை சொன்னார். 

கொள்ளையன் முனிவரின் பேச்சைக் கேட்பானா? என்ன? முனிவரே தேவையில் லாமல் பேசி, என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி, மக்கள், உறவு, எல்லோரும் ஒவ்வொரு நாளும், நான் என்ன கொண்டு வரப்போகிறேன் என்று ஆவலோடு வழி மேல் விழி வைத்து காத்திருப்பார்கள். அவர்களை திருப்திபடுத்தவும் அவர்களை காப்பாற்றவும்தான் நான் இந்த கொள்ளைத் தொழிலையே செய்கிறேன். 

உம்மிடம் இருக்கும் உடைமைகளை உடனே கொடுத்தால் உயிர் பிழைத்து செல்லலாம். இல்லாவிட்டால் இங்கேயே நீர் செத்துப் போக உம்மை தயார் செய்துகொள்ளும் என்று, கடுமையான வார்த்தைகளால் நாரதரை மிரட்டினான். கொள்ளையனின் வார்த்தைகள் கடுமையாக இருந்தும்கூட, நாரத முனிவர் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த கொள்ளையனிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி... பேசி... அவன் மனதை நல்வழிக்கு திருப்புவதற்கு முயற்சி செய்தார்.  

ishwaran2

அப்பா நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். அதற்கு நீ பதில் சொன்னபிறகு என்னிடம் இருக்கும் எல்லா உடைமைகளையும், நீயே எடுத்துக் கொள்ளலாம் என்றார். சீக்கிரம் கேளுங்கள் என்றான் கொள்ளையன். "இந்த கொடுமையான கொள்ளை, கொலை தொழிலை உன் மனைவி, மக்களுக்காகத்தான் செய்கிறேன் என்கிறாயே அது உண்மையா?' என்று கேட்க, கொள்ளையன் "ஆம்...  அவர்கள்தானே, என் எல்லா சுக துக்கங்களிலும் என்னோடு இரண்டற கலந்திருக்கிறார்கள். எனக்காக அவர்கள் தங்கள் உயிர்களைக் கூட தியாகம் செய்வார்கள் என்று கூறினான். 

அப்போது நாரதர், "உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்வார்கள் என்கிறாய். 

அவர்கள் தங்கள் உயிரை உமக்காக கொடுக்கப் போவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? என்ன? அவர்கள் நீ செய்யும் இந்த பாவத்தில் ஒருபோதும் பங்கேற்க மாட்டார்கள். சம்மதிக்க மாட்டார்கள் என்று நாரதர் சொல்ல, "என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள், அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரை கொடுப்பதாய் சொன்னதில்லை, ஆனால் என்மீது வைத்துள்ள அன்பு பாசம் கொஞ்ச நஞ்சமல்ல முற்றும் திறந்தவரான உமக்கு அது. பத்தி எல்லாம் ஒன்றும் தெரியாது' என்று கொள்ளையன் எகத் தாளமாக கூற அப்போது நாரதர் "அப்பா உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா அப்படி என்றால் அவர்களிடம் சென்று நீ கேட்டுப்பார்' என்று சொல்ல, அதில் என்ன சந்தேகம் நான் கொள்ளையடித்துக்கொண்டு வருவதை பங்கு போட்டுக்கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள் என்றான் கொள்ளையன். 

அது உண்மையா என்பதை நீ அவர்களிடம் சென்றுகேட்டு தெரிந்துகொண்டுவா! என்று நாரதர் சொல்ல, "தேவையில்லை அது அவசியமும் இல்லை' என்றான் கொள்ளையன். அப்போது நாரதர், "நீ உன் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் குறித்து அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ளமாட்டார்கள் என்று நான் கூறுகிறேன். இது உண்மையா? பொய்யா? என்பது நிரூபணமாக வேண்டுமென்றால் நீ அவர்களிடம் சென்று, இதே கேள்வியை கேட்டு பதில் தெரிந்துகொண்டு வா' என்று கூறினார்.

ishwaran3

இங்குள்ள மரத்தில் என்னை கட்டிப் போட்டுவிட்டு உன் வீட்டிற்குப் போ அங்கு மனைவி, பிள்ளைகளிடம் நீ செய்யும் பாவங்களில் பங்கெடுத்துக் கொண்டு இறந்தபிறகு நரகத்திற்கு செல்ல அவர்களும் தயார் என்று ஒப்புக்கொண்டால், நீ என்னிடம் உடனே வா என் உடமைகளை எடுத்துச்செல் என்று கூறினார் நாரதர். கொள்ளையர் தலைவன் கொஞ்சம் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் அவன் மனதிற்கு சரியாகப்பட்டது. சரி நாம் நம் குடும்பத்தினரிடம் சென்று கேட்டுவிட்டுத் தான் வருவோமே என்று, முடிவெடுத்த அந்த கொள்ளையன் நாரத முனிவரை, அங்கிருந்த ஒரு மாதத்தில் கட்டிப் போட்டுவிட்டு தன் குடும்பத்தினரை சந்திக்க சென்றான் கொள்ளையன். சில மணித்துளிகள் கழித்து மீண்டும் திரும்பிவந்த கொள்ளயன் முற்றிலும் மாறி இருந்தான். முனிவரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னதுதான் சரி என்று கண் கலங்கியபடியே கட்டப்பட்டிருந்த முனிவரின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டான். அப்போது நாரத முனிவர் "வீட்டில் என்னப்பா நடந்தது' என்று கேட்டார். 

சாமி, நீங்கள் சொன்னபடி, நான் போய் என் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நான் கொள்ளையடித்துக் கொண்டுவரும் பாவத்தில், நீங்களும் பங்கு கொள்வீர்கள் தானே என்று கேட்டேன். எல்லாரும் ஒரே விதமாக, இல்லை எங்களை காப்பாற்ற வேண்டியது உனது கடமை. நீ எப்படி பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்கு கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீ மட்டும் தான் அனுபவிக்கவேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்குமில்லை' என்று கூறிவிட்டார்கள் என்று கூறினான் கொள்ளையன்.

"அவர்கள் கூறியதில் தவறில்லையே அப்பா, மனைவி, மக்கள், உறவினர்களை காப்பாற்றுவது. உன் கடமை அதை நீ நல்லவழியில் செய்கிறாயா! தீமையான வழியில் செய்கிறாயா! என்பதைப்பற்றி அவர்களுக்கு கவலைஇல்லை. ஆனால் நீ எந்த வழியில் பொருள் சம்பாதித்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை நீதான் தீர்மானிக்கவேண்டும்' என்று கூறினார். 

ishwaran4


அப்போது கொள்ளையன், முனிவரே! நீங்கள் தான் நான் செய்த பாவங்களில் இருந்து விடுபட ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்று கேட்டான். அப்போது நாரதர், "நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச் சித்தம் உண்டு. நீ ராம நாமத்தை சொல்லிக்கொண்டு இருப்பதே அதற்கு பிராய சித்தம்' என்றார். "அது என்ன சாமி ராம நாமம், அது என் வாயிலேயே நுழையவில்லையே' என்று கொள்ளையன் கேட்க, "பரவாயில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன' என்று கேட்க, இது மரா மரம் என்று கூறினான். நீ இந்த மரத்தின் பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே இரு அது போதும் நீ பாவத்திலிருந்து விடுபடுவாய் என்ற கூறினார். ஆகட்டும் சாமி என்னை பாவச்செயல்களில் இருந்து விடுபடுவதற்கு வழிகாட்டிய தாங்கள் யார்? என்று கேட்டான். 

அப்போது நாரதர் என் பெயர் நாரதர் அனைத்து லோகங்கüலும் சுற்றிக் கொண்டிருப்பவன்' என்று கூறிவிட்டு புறப்பட, "முனிவரே! தாங்கள் கூறியபடி, நான் இந்த மரா மரத்தின் பெயரை கூறிக்கொண்டே இருப்பேன் என்று கூறி, வணங்கி நாரத முனிவரை அனுப்பி வைத்தான் அந்தக் கொள்ளையன். நாரதரும் தன் வழியே புறப்பட்டு சென்றார். அவர் போனபிறகு அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா.... மரா..... என்று ஜெபிக்க ஆரம்பித்தார். அது ராம.... ராம.... ராம.... என்று ஒலிக்க ஆரம்பித்தது. நாளடைவில் ராம நாமம் உச்சரித்துக்கொண்டிருந்த, அந்த கொள்ளையரை சுற்றிலும் புற்று வளர்ந்தது அந்த ராம... நாம... ஜெபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றார். 

தவம் முடிந்து புற்றிலிருந்து வெளியே வந்தார். அவர்தான் வான்மீகி என்று அழைக்கப்படும் வால்மீகி முனிவர். இவர்தான் பின்னர் இராமாயண காவியத்தை எழுதி அழியா புகழ்பெற்றவர். 

இங்குள்ள இறைவனை வழிபட்டு ஞானம் பெற்ற பிறகு தான் வால்மீகி மகரிஷி ராமாயண காவியத்தை இயற்றியுள்ளதாக இதிகாசங்கள் கூறுகின்றன. 

இவ்வாறு கொள்ளையனாக இருந்து மகாகவியாக மாறினார் என்பதை கேள்விப் பட்ட சூரிய குல மன்னனான திருபுவனம் என்பவர் வால்மீகி மகரிஷியை சந்திக்க இங்கு வந்தார். 

அவர் தங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் எமக்குக் கிடைத்தது சந்தோஷம் என்று கூறி, அந்த மன்னன் பொன்னையும் பொருளையும் வால்மீகி முனிவரிடம் சமர்ப்பித்தார். அதைக் கண்ட முனிவர் மன்னா இந்த ஆசைகளை எல்லாம் கடந்து வந்து விட்டேன், இவற்றால் எனக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. எனவே, இந்த பொருளைக் கொண்டு, இங்குள்ள இறைவனுக்கு ஆலயம் எழுப்பு என்று கூறினார். அவ்வாறே திருபுவன மன்னன் முதன்முதலாக இவ்வாலயத்தை அமைத்தார். அதன் பிறகு கரிகால் சோழன் உட்படசேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்வாலய இறைவனை வந்து வழிபட்டனர். அதற்கு சான்றாக இவ்வாலயத்தில் சோழலிங்கம், சேரலிங்கம், பாண்டிய லிங்கம் என்று தனித்தனி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் ளன. 

சனிபகவான் சாப விமோச னம் பெற்ற தலம் இது. 

இவ்வாலயத்தின் தல விருட்சமாக ஆலமரம் உள்ளது. புகழ்பெற்ற இவ்வாலயம் 20 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பக்தர்கள் பங்களிப்போடு அறநிலையத்துறை ஒற்றுழைப்போடும். கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் கும்பாபிஷேகம் நடை
பெறவுள்ளது. இவ் வாலய திருப்பணியில் தங்களின் பங்களிப்பை செலுத்த விரும்புவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருமாலுக்கு வரம் அளித்த இந்த தீர்த்தபுரீஸ்வரரை வணங்கி வாழ்க்கையில் சந்தோஷத்தையும் வளத்தையும் பெற்ற பக்தர்கள் ஏராளம். 

இவ்வாலய அர்ச்சகர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் மற்றும் பணியாளர்கள், சுப்ரமணியன், செல்லம்மாள், முருகன் ஆகியோர்.

வேண்டியது கிடைக்க வழிபடவேண்டிய தலம் ஆயில்ய நட்சத் திரத்தில் சகஸ்ர நாம, அர்ச்சனை செய்தால் தீராத பிரச்சினையில் இருந்து தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். பஞ்சமி வராகி நட்சத்திர மாக ஆயில்ய நட்சத்திரம். இங்கு மாதம்தோறும் தேய்பிறை வளர்பிறை பஞ்சமியில் வாராகியம்மன் வழிபாடு மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. இங்கு உள்ள வாராகி அம்மன் சன்னதி முன்பு உரல் உலக்கை உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் தம்பதியாக, கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், குண்டு மஞ்சள் ஆகியவற்றை உரலில் போட்டு இருவரும் சேர்ந்து இடிக்க ஒரு வருடத்தில் அவர்களுக்கு புத்திர பாக்கியமானது கிடைக்கும். 

இங்குள்ள பைரவர் வாழ் விற்கு ஒளியை தரக்கூடியவர். இவரை வழிபாடு செய்தால் குழந்தை களுக்கு ஞாபக சக்தி அதிகரிக் கும். ஞானம் கிட்டும். இவர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். யோகத்தை தரும் இந்த பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது.  

மேலும் திருமணம் ஆகாதவர்கள், கடன் பிரச்சினை அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்க பக்தர்கள் தங்களது கையாலே மஞ்சளை இடித்து தருகிறார்கள். 

அதை அர்ச்சகர் சுவாமிக்கு சாட்சி செய்து அந்த மஞ்சளை பிரசாதமாக தருகிறார்கள். மக நட்சத்திரத்தில் மகா அபிஷேகம் செய்தால், அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். 

இவ்வாலயத்தில் கலைமகள் சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை அன்றுசிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மூலவர் - தீர்த்தபுரீஸ்வரர் (எ) ஆனந்தீஸ்வரர் (எ) அரத்துறைநாதர் (எ) வான்மீகி நாதர் அம்பாள் - திரிபுரசுந்தரி (எ) ஆனந்தநாயகி (எ) அரத்துறைநாயகி  (எ) வண்டார் குழ−.

ஆலய அமைவிடம்

தரிசன நேரம்: காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 வரையும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.

தொழுதூர் - விருத்தாசலம் சாலையில் தொழுதூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள கொடிகளம் என்னும் இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால், இத்தலத்தை அடையலாம். 

ஆலய தொடர்புக்கு 

94879 13593, 96558 68424. 84386 36485

om010126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe