"இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா'.
என தத்துவங்கள் எடுத்துரைத்தாலும், "காணி நிலம் வேண்டும். பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற பாரதியின் குறிக்கோள்போல் நாமும், முயற்சிக்க வேண்டும். வறுமை சார்ந்த சூழ்நிலையில் பிறப்பது நம் குற்றமல்ல. வறுமையாக இருப்பதும் இறப்பதும் நம் குற்றமென்றா லும் யோகமென்பது பொதுவானது.
பூமி பாக்கியம், அசைய சொத்து, வீடு, வியாபாரம் இடம், தோட்டம், நஞ்சை, புஞ்சை, தோப்பு, எஸ்டேட் இவ்வாறாக பூமி சார்ந்த சுலப நன்மைகள் யாருக்கு கிடைக்கப்பெறும் என சாஸ்திரரீதியாக அறிவோம். இதற்கு உற்ற துணைபுரிவது சில கிரக நாதர்களும் அவர்களின் கூட்டு முயற்சியும், நம்முடைய உள்ளங்கை, அமைப்பும் முக்கிய பங்குவகிக்கும் எனலாம்.
அது மட்டுமல்ல; சந்திரனின் அருள் அலாதியானது.
சந்திரனும் உள்ளங்கையில் சந்திர மேடும் உச்சநிலை பெற்றால் கிடைக்கப்பெறுபவைதாய்ப்பாசம், குடும்ப சுகம், நல் உணர்வுகள், வாகன யோகம், மங்கள காரியங்கள் நிறைவேறல், நல்ல நண்பர்கள், நில புலன், புண்ணிய தேச யாத்திரைகள் போன்ற எல்லாமே கிடைக்கப்பெறும். சந்திரன், சந்திர மேடு நீசம் பெற்றால், அடிக்கடி, ஜலதோஷம், குளிர் சுரம், சக்கரை நோய், பால்வினை ந
"இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா'.
என தத்துவங்கள் எடுத்துரைத்தாலும், "காணி நிலம் வேண்டும். பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற பாரதியின் குறிக்கோள்போல் நாமும், முயற்சிக்க வேண்டும். வறுமை சார்ந்த சூழ்நிலையில் பிறப்பது நம் குற்றமல்ல. வறுமையாக இருப்பதும் இறப்பதும் நம் குற்றமென்றா லும் யோகமென்பது பொதுவானது.
பூமி பாக்கியம், அசைய சொத்து, வீடு, வியாபாரம் இடம், தோட்டம், நஞ்சை, புஞ்சை, தோப்பு, எஸ்டேட் இவ்வாறாக பூமி சார்ந்த சுலப நன்மைகள் யாருக்கு கிடைக்கப்பெறும் என சாஸ்திரரீதியாக அறிவோம். இதற்கு உற்ற துணைபுரிவது சில கிரக நாதர்களும் அவர்களின் கூட்டு முயற்சியும், நம்முடைய உள்ளங்கை, அமைப்பும் முக்கிய பங்குவகிக்கும் எனலாம்.
அது மட்டுமல்ல; சந்திரனின் அருள் அலாதியானது.
சந்திரனும் உள்ளங்கையில் சந்திர மேடும் உச்சநிலை பெற்றால் கிடைக்கப்பெறுபவைதாய்ப்பாசம், குடும்ப சுகம், நல் உணர்வுகள், வாகன யோகம், மங்கள காரியங்கள் நிறைவேறல், நல்ல நண்பர்கள், நில புலன், புண்ணிய தேச யாத்திரைகள் போன்ற எல்லாமே கிடைக்கப்பெறும். சந்திரன், சந்திர மேடு நீசம் பெற்றால், அடிக்கடி, ஜலதோஷம், குளிர் சுரம், சக்கரை நோய், பால்வினை நோய், குறை பிரசவம், மாதவிடாய் போன்ற பின்னடைவுகள் பாடாய்ப்படுத்தும். மனைவி, மக்களோடு வீண் சண்டை, சச்சரவும் தொடர்கதையாகும். நல்ல சந்தர்ப்பங்கள் பறிபோதல் போன்றவையும் பின்தொடரும்.
சொந்த வீடு யாருக்கு ஏற்படும்
உங்கள் ஜாதகத்தில் ல என்று கோடிட்ட 4-ஆமிடம் ஒருவருடைய, கல்வி, வீடு, வாகனம், தாயார், வியாபாரம், சர்வதேசரீதியான தொடர்பு போன்றவற்றை குறிப்பிடு வது. அந்த 4-ஆமிடத்தில், சந்திரன், குரு, சுக்கிரன் இப்படிப்பட்ட கிரகங்கள் இருப்பினும், இந்த 4-ஆமிடத்திற்கு அதிபதியாகிய கிரகங்கள் எதுவாய் இருப்பினும், அந்த ஜாதகருக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு போன்ற அசையா சொத்து வந்துவிடும். லக்னாதிபதிக்கும் 4-ஆமிடத்து அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டு இருப்பின் இவர்களுக்கும் சொந்த வீடு நிச்சயம் வரும். பிறந்த ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் இருவரும் ஒருவருக்கொருவர் சேந்திரங்களில் அமர்ந்திருந்தால், சொந்த வீடு சொந்த முயற்சியால் கிடைக்கப்பெறும். சூரியனும் புதனும் ஒன்றுசேர்ந்து 4-ஆமிடத்தில் இருந் தாலும் ஜாதகருக்கு மத்திம வயதில் வீடு அமையப்பெறும்.
ரேகை மற்றும் உள்ளங்கை அமைப்பும்உள்ளங்கையை பாருங்கள். கட்டைவிரலை அடுத்து அமைவது சுக்கிரமேடு. அதற்கு எதிரே அமைவது சந்திரமேடு. அது உச்சமாகவும் தீயகுறிகள் இல்லாது காணப்பட்டால் சொத்து சுகம் உள்ள செழிப்பான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள்.
நடுவிரலை தொட்டு அமைவது சனி மேடு. அதில் செங்குத்தான சிறுகோடுகள் உதயமான நிச்சயமாக, அசையா சொத்து வந்துவிடும் பல ரேகை காணப்பட்டால் பலவித நன்மைகள்.
கிரகங்கள் தரும் சிக்கல்கள்
ராகு, சனி, கேது இவர்களுடைய தொடர்பு 4-ஆமிடத்திற்கோ 4-ஆமிடத்து அதிபதிக்கோ ஏற்பட்டால், பாட்டன், முப்பாட்டன், சேர்த்துவைத்த பூர்வீக சொத்து இருந்தாலும் அனுபவ பாக்கியம் இல்லாமல், ஏங்கி தவிக்கும் சூழ்நிலை வரும். கீழ் செவ்வாய் மேட்டில் ரேகை உதயமாகி சனி மேட்டை அடைந்தால், கோர்ட், கேசு என அலைந்து பெற்றுகொள்ளும் சந்தர்ப்பம் வரும். மேலும் 6, 8, 12-ஆமிடத்து அதிபதியானவர்கள், 4-ஆமிடத்தின் தொடர்புகொண்டி ருந்தால் அந்த சொத்தின்மேல், அதிக கடன் இருக்கும். உள்ளங்கையில் சந்திர மேட்டில் கரும்புள்ளி தோன்றினால் தாயாரின் சொத்தை அடகுவைத்து கடன் வாங்கினால் அது தரும் பின்னடைவால் திரும்பிவர, சொத்து காலதாமதமாகும்.
திருமணத்திற்குபின் சொத்து, சுகமில்லா மனைவியின் வருகையால் பலன் பெறுவர் யார்?
மணமகளே, மருமகளே வா, வா, வலது காலை எடுத்துவைத்து வா வா என கும்மாளம் செய்தாலும், சில மருமகளின், ஜாதக அமைப்பு, அவள் புகுந்த வீட்டில் பல பின்னடைவை தருவதை உணரலாம். மணமகளின் ஜாதகத்தில் சந்திரன், இருக்கும் ராசியில் சனி, ராகு- கேது இருந்தாலே, மணமான பின் கிரக நாதர்கள் போதிய இல்லற சுகத்தை தர தயங்குவார்கள். அப்படிப்பட்ட மாதர்கள், செய்யவேண்டிய பரிகாரம், அமாவாசைக்குபின் வரும் 3, 6, 9, 12-ஆம் வளர்பிறையில் மாலை நேரம் மேற்கு நோக்கி பார்வதியிடம் மனக்குறையை கொட்டி தீர்த்தால் உரிய நிவாரணம் கைமேல் கிடைக்கப்பெறும்.
மனைவியின் சொத்தை அனுபவிப்பவர்கள் யார்?
ஆண் ஜாதகத்தில் 7-ஆமிடம் குறிப்பிடுவது மனைவியின் தன்மையும் யோகமும். எனவே அங்கு நல்ல கிரக நாதர்கள் இருந்தால், திருமணத்திற்குப்பின் மனைவிக்கு சொத்து இருந்தால் வந்துவிடும். உள்ளங்கையில் சுக்கிர மேட்டில் ரேகை உதயமாகி, நேராக திருமண ரேகையை அடைந்தால், சுமார் 40 வயதுக்கு மேல் மணமகனுக்கு இல்லானின் பூர்வீக சொத்து வந்துவிடும். மனைவியின் ஜாதகத்தில் 12-ஆமிடமான அயன, சயன விரய, ஸ்தானத்தில் சனி காணப்பட்டால், வயோதிகத்தில் நல்ல நிலபுலன், வீடு, தோப்பு, புஞ்சை நஞ்சையென பூர்வீக சொத்திருந்தால் சுலபமாக நாடிவரும். பெண்ணின் கணவனின் உள்ளங்கையில் நீண்ட விதிரேகை இதய ரேகையில் சங்கமமானால், கணவனின் மறைவுக்குபின் ஓய்வூதியம் அவர் செய்த பணிக்காக வரும்.
திருமணத்திற்குபின் சொத்து சுகம் இல்லாமல் மனைவியின் வருகையால் பலன் பெறுவோர் யார்?
தனாதிபதியான இரண்டாம் இடத்து அதிபதியும் சுகஸ்தானமான 4-ஆமிடத்து அதிபதியும் 7-ஆமிடத்தில் இருந்தால் யோகமான மனைவியின்மூலம் உத்தியோக உயர்வு, வியாபாரம் மற்றும் பிறவகையில் பொருள் சேர்க்கை கிடைக்கப்பெறும். உள்ளங்கையில் சுக்கிர மேட்டின் மையப் பகுதியில் ரேகை உதயமாகி சனி மேட்டை நோக்கி சென்றிருக்கும். மோதிர விரல் நடுவிரல் புதவிரல் (அதாவது சுண்டுவிரல், இவற்றில் இரண்டாவது அங்குலாஸ்தி பெரிதாகி காணப்படும், மோதிர விரல் மற்றும் பெருவிரல் முதல் அங்குலாஸ்தி பெரிதாக காணப்படும்.
வெளிநாடு சென்று அபரிமிதமான வருமானத்தை பெற்று ஜென்ம பூமியில் வீடு, மனை அசைய சொத்து சம்பாதிக்க இயலும். ஜாதகத்தை பாருங்கள். லக்னம் என்று கோடிட்ட இடத்தில் இருந்து நாலில் சந்திரனும் 9-ல் குருவும், விரயஸ்தானத்தில் சனியும் இருந்தால் வெளிநாட்டில் கால்பதித்து வருமானத்தை பெருக்கலாம். உள்ளங்கையில் சந்திர மேடு உச்சமாகி அதில் மைய்யப் பகுதியில் ரேகை உதயமாகி சனிமேட்டை அடைந்திருக்கும் சந்திர மேட்டில் நீண்ட திடமான படுக்கை ரேகை காணப்படும். இப்படிபட்ட அமைப்பு இருந்தால், நிலபுலன், வீடு அமையப்பெறும். நீண்ட பயணம் அதிக பலன் தரும்.
செல்: 93801 73464
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us