சுமார் அறுபது வயதுடைய ஒருவர் ஐம்பத்தி நாலு வயதுடைய தன் மனைவியுடன் நாடியில் பலனறிய வந்திருந்தார். அவர்களை அமரவைத்து "என்ன காரியமாகப் பலனறிய வேண்டும்' என்றேன்.
"ஐயா, எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. வம்சம் வளர ஒரு குழந்தை வேண்டும் என்று நாங்கள் ஜோதிடர்கள் கூறிய பூஜைகள், ஹோமம், யாகங்கள், தான தர்மம் என அனைத்தையும் செய்தோம். இந்த செயல்களால், எங்கள் சொத்துகள் அனைத்தும் அழிந்துபோனதே தவிர, குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கவில்லை. இப்போது சொந்த ஊரில் வாழ முடியாமல், ஊரைவிட்டு வெளியேறி, வேறு ஊரில் ஒருவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்து வாழ்ந்துவருகின்றோம்.
எங்கள் சொத்துகள் அழிந்ததற்கும், குழந்தைப் பேறு இல்லாமல் போனதற்கும் காரணம் விதியா? பாவ- சாப- வினையா என்பதை அறிந்துகொள்ள அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் பாரம்பரியமான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன். இவன் மனைவி இவனுக்கு உறவுப் பெண்தான். இவன் தந்தையும், வம்ச முன்னோர்களும், தொழில், வியாபாரம் என ப
சுமார் அறுபது வயதுடைய ஒருவர் ஐம்பத்தி நாலு வயதுடைய தன் மனைவியுடன் நாடியில் பலனறிய வந்திருந்தார். அவர்களை அமரவைத்து "என்ன காரியமாகப் பலனறிய வேண்டும்' என்றேன்.
"ஐயா, எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. வம்சம் வளர ஒரு குழந்தை வேண்டும் என்று நாங்கள் ஜோதிடர்கள் கூறிய பூஜைகள், ஹோமம், யாகங்கள், தான தர்மம் என அனைத்தையும் செய்தோம். இந்த செயல்களால், எங்கள் சொத்துகள் அனைத்தும் அழிந்துபோனதே தவிர, குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கவில்லை. இப்போது சொந்த ஊரில் வாழ முடியாமல், ஊரைவிட்டு வெளியேறி, வேறு ஊரில் ஒருவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்து வாழ்ந்துவருகின்றோம்.
எங்கள் சொத்துகள் அழிந்ததற்கும், குழந்தைப் பேறு இல்லாமல் போனதற்கும் காரணம் விதியா? பாவ- சாப- வினையா என்பதை அறிந்துகொள்ள அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் பாரம்பரியமான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன். இவன் மனைவி இவனுக்கு உறவுப் பெண்தான். இவன் தந்தையும், வம்ச முன்னோர்களும், தொழில், வியாபாரம் என பல வழிகளில் தொழில்செய்து, பணம் சம்பாதித்து வீடுகள், நிலங்கள், கடை, நகைகள், ரொக்கப் பணம் என எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத, அழியாத நிலையான சொத்துகளை சேர்த்து, அந்த ஊரில் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மதிப்பு, மரியாதையுடன் வாழ்ந்தார்கள்.
பூர்வீக சொத்துகளை காப்பாற்றிக்கொண்டு இவனும் வியாபாரம் செய்து, பணம் சம்பாதித்தான். ஏராளமான செல்வம் இருந்தும் வம்சம் வளர ஒரு வாரிசு இல்லையே என்ற ஒரு குறை மட்டும் மனதில் இருந்தது. ஆனாலும் தனக்கு ஒரு குழந்தை இல்லை என்பதை இவன் பெரிதாக நினைத்து வருத்தப்படவும் இல்லை.
இவன் மனைவிக்கு மட்டும், தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற குறை மனதை வாட்டிக்கொண்டே இருந்தது. எதைச் செய்தாவது ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று மனம் வெறியாக மாறிவிட்டது. சித்த மருத்துவம், நவீன மருத்துவ மூலம் சிகிச்சையும், நிறைய பணம் செலவு செய்தார்கள். ஆனால் கரு உருவாகி கர்ப்பம் தரிக்க வில்லை.
ஜோதிடர்களிடம் சென்று இருவரின் ஜாதகப் பலன்களைக் கேட்டபோது சிலர் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும், இன்னும் சில ஜோதிடர்கள் காலம் கடந்து குழந்தை பிறக்கும் என்று கூறி, பலவிதமான பரிகாரங்களைக் கூறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் செய்தார்கள். மேலும் பணவசதி இருந்ததால் காசி, கயா, இராமேஸ்வரம் என ஜோதிடர்கள் கூறிய ஏராளமான கோவில்களுக்குச் சென்று திதி தர்ப்பணம் என மற்ற வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் செய்தார்கள். ஆனால் இவர்கள் குறை தீரவில்லை, குழந்தை பிறக்கவில்லை.
இவளின் தோழி ஒருத்தி, ஒரு மடாதிபதியை பற்றி, பெருமையாக கூறி மிகவும் சக்திவாய்ந்தவர், உன் புத்திர குறை நீங்க அருள் புரிவார் என்று சொல்லி, அந்த மடாதிபதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் ஒரு போலி குரு ஆவான். அந்த போலி மடாதிபதி ஒரு அம்மன் சிலையை வைத்துக்கொண்டு, சில தந்திர செயல்களைச் செய்துகொண்டு தன்னை தெய்வ சக்தி பெற்றவன், சக்தியின் புதல்வன் என்று கூறிக்கொண்டு மடத்தை நடத்தி வந்தான். அவனையும் நம்பி, பலர் அவன் மடத்திற்கு பக்தியுடன், வேண்டுதலுடன் வந்தனர். அவர்களிடம் பொருள் பறிப்பதே இவன் நோக்கம்.
இவன் மனைவி, அவனை முழுமையாக நம்பி விட்டாள். அவன் கூறியபடி பூஜைகள், யாகங்களைச் செய்தால், அம்மன் சிலைக்கு வளையல், ஆரம், ஒட்டியாணம், கிரீடம் இவற்றை தங்கத்தில் செய்து சாற்றினால், குழந்தை பிறக்கும் என்று கூறினான். அனைத்தையும் ஏராளமான பணம் கொடுத்து செய்துவைத்தாள். ஆஸ்தியை விரயம் செய்து, அவனுடனேயே மடத்தில் வசித்தாள். ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. தனது குறையும் தீராமல் குடும்ப சொத்துகளும் அழிந்த நிலையில், இப்போது அகத்தியனை தேடி, வழிகேட்டு வந்திருக்கி றாள்.
இவர்களின் சொத்து அழிந்து ஏழ்மை நிலையை அடைந்ததற்கு விதியோ, முன் பிறவி பாவ - சாபங்களோ, கிரகங்களோ காரணம் இல்லை. இவளுக்கு சுய அறிவு இல்லாததும், கடவுள் நம்பிக்கையும் போலி ஆன்மிகவாதிகளின் பேச்சை நம்பி செயல்பட்டதும் தான் காரணம். கடவுளை நம்பு என்று சொல்பவன் செல்வந்தன் ஆகிவிட்டான். கடவுளை நம்பியவர்கள் பொருளை இழந்து, ஏழைகளாகி தெருவில் நிற்கின்றார்கள். கலியுகத்தில் ஆன்மிக வாதிகள், அரசியல்வாதிகள் பேச்சைக்கேட்டு மக்கள் ஏமாந்துதான் போவார்கள்.
இந்த தம்பதிகளுக்கு இதுவே கடைசி பிறவி. இவர்களின் இரத்தம், விந்து ஒரு குழந்தைமூலம் இந்த பூமியில் இருக்கக் கூடாது. இவர்கள் மறுபடியும் பிறக்கக்கூடாது என்று கருவிலேயே தீர்மானிக்கப்பட்டு பிறந்தவர்கள். இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் விந்துமூலம் இவர்கள் அடுத்து ஒரு பிறவி பிறக்க நேரிடும் என்பதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அடுத்த பிறவிக்கு வழி அடைக்கப்பட்டது. இருவருக்கும் இதுவே கடைசி பிறவி, இந்த பிறவியிலேயே, மோட்சம் அடைவார்கள் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
இந்த பூமியில் கடைசி பிறவியாகப் பிறந்து, மோட்சம் அடையும் மோட்சப் பிறவிகள் யார் என்று அவர்களுக்கு விளக்கமாகக் கூறி இனியாவது கடவுள் நம்பிக்கையில், ஆன்மிகவாதிகளின் பேச்சை நம்பி செயல்பட்டு, பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு வாழுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.
இன்றைய நாளிலும், பலர் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று சாமியார்கள், ஆன்மிகவாதிகள், ஜோதிடர்கள் கூறுவதை நம்பி, பரிகாரம், பூஜை, கோவில், குளம் என்று அலைந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த பிறவியில் தங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா? இல்லையா? பிறக்குமா? பிறக்காதா என்று தங்களின் இப்பிறவி விதி ரகசியம் தெரிந்து, எதையும் செய்தல் வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லையென்று தெரிந்தால், தங்களின் வயதான முதுமைகால வாழ்க்கை சிரமம் இல்லாமல் அமைய கையிலுள்ள பொருள், சொத்துகளை காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். சொத்து, பணம் இவை மட்டுமே இறுதி காலத்தில் காப்பாற்றும். பக்தி மட்டும் காப்பாற்றாது என்பதை நானும் புரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us