தீபாவளியன்று, ஒருவருக்கொருவர் கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்டுக் கொள்வர். இதற்கு ஒரு புராண கதை உள்ளது.

Advertisment

முன்பு, ஹிரண்யாசன் எனும் அரக்கன், பூலோகத்தை, நீருக்குள் மறைத்து வைத்துவிட்டான். அப்போது பகவான் கிருஷ்ணர், வராஹ அவதாரம் எடுத்து, நீரினுள் மறைந்திருந்த பூமாதேவியை, பூலோகத்தை மீட்டுக்கொண்டு வந்தார். அப்போது வராஹ மூர்த்தியின் ஸ்பரிசம், பூமாதேவிக்கு ஏற்பட்டதால், ஒரு மகன் பிறந்தான். 

Advertisment

ஆனால் அவனோ ஒரு அசுரனாக இருந்தான். 

அந்தப் பிள்ளையின் பெயர் நரகாசுரன் என்பதாகும்.

இந்த நரகாசுரன் கன்னங் கரேலென்று இருந்ததால், தான் போகும் இடத்தை எல்லாம் இருட்டாக்கி விடுவான். தேவ லோகத்துக்கு போய், இந்திரனுடைய குடையையும், இந்திரனுடைய தாயார் அதிதியின் குண்டலங்களையும் பறித்துக் கொண்டு வந்துவிட்டான். 

இந்த நரகாசுரன் ப்ராக்ஜ் யோதிசபுரம் எனும் ஊரை, தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்தான். இவனுடைய அட்டூழியம்  நாளாக, நாளாக அதிகரித்துக்கொண்டே வந்தது.

Advertisment

தேவர்கள், கிருஷ்ணரிடம் முறையிட அவரும், சத்ய பாமாவை அழைத்துக்கொண்டு, கருடன் மேலேறி, அசுரனை அழிக்கக் கிளம்பினார். அசுரனின் அரண்மனை, மலைக் கோட்டை, ஆயுதக் கோட்டை, நீரால் நிரம்பிய கோட்டை, அக்னிக் கோட்டை, வாயுக்கோட்டை என அமைத்து அதன் உள்ளே இருந்தான் நரகாசுரன்.

பகவான் கிருஷ்ணர், இத்தனை கோட்டை களையும், அவனுடைய சேனாதிபதியான முரன் என்பவனையும் அழித்தார். இதனால்தான் கிருஷ்ணருக்கு முராரி எனும் பெயர் உண்டானது.

இரவு நேரத்தில் அசுரர்களுக்கு பலம் பன் மடங்காகும். இந்த இரவு நேரத்தில் நரகாசுர னோடு, கிருஷ்ணர் யுத்தம் செய்து, அருணோ தய காலத்தில் அவனை வதம் செய்தார்.

அன்று விடிந்தபோது, உலகத்துக்கே பெரிய விடிவு கிடைத்தது. இது நடந்தது ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் ஆகும்.

பூமாதேவி, தன் பிள்ளையான நரகாசுரன் இறந்த நாளை, கொண்டாட வேண்டுமென்று, அன்று கங்கா ஸ்நானம் பண்ண வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.

அன்று நாம் தேய்த்துக்குளிக்கும் எண்ணெயில் லட்சுமிதேவி இருப்பதாகவும், வெந்நீரில் கங்காதேவி வசிப்பதாகவும் ஒரு ஐதீகம் உண்டு. அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணெய் குளியல் பண்ணிவிட வேண்டும். பூஜை செய்து புத்தாடை, பலகாரங்கள் செய்து, பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும்.

இவ்விதம் கங்கா ஸ்நானம் செய்து, கொண்டாடுபவர்களுக்கு அகால மரணம், கோர மரணம், நோய் ஏற்படா மல் இருக்கும். இதுவும் பூமாதேவி வாங்கிய வரம் தரும் பலன்தான். இந்தப் பலனையே பூமாதேவி வரமாக கேட்டுக்கொண்டாள்.

துலா ஸ்நானம்

பகவான் கிருஷ்ணர், அசுரனான நரகாசுரனை கொன்றதால், அவருக்கு வீரஹத்தி எனும் தோஷம் பிடித்துக்கொண்டது. அதனால் அவருடைய நீலமணி மாதிரியான மேனி, மங்கிக் கருத்துப் போய்விட்டது.

இதுபோல் ராமருக்கு, இராவணனைக் கொன்றதால், வீரஹத்தி தோஷம் பிடித்தது. இராவணன் பிராமணன் ஆதலால் அவனுக்கு  ப்ரம்ம ஹத்தி தோஷமும் பிடித்தது. மேலும் இராவணன் சாயா எனும் பிரகாசம் பொருந்தியவன் இராவணனுக்கு ருப கம்பீரயம், வேத சாஸ்திர படிப்பு, ஸங்கீத சாயாக்கள் இருந்தது. இவனைக் கொன்றதால் ராமருக்கு சாயா ஹத்தி தோஷமும் சேர்ந்து கொண்டது''.

இதில் ராமர் பிரம்மஹத்தி தோஷம் போக, ராமேஸ்வரத்திலும், வீர ஹத்தி தோஷம் போக வேதாராண்யத்திலும், சாயா ஹத்தி தோஷம் போக, கும்பகோணத்தின் அருகில் உள்ள பட்டீஸ்வரத்திலும் சிவ-ங்க பிரதிஷ்டை செய்தார். 

இப்போது கிருஷ்ணர் தனது வீரஹத்தி தோஷம் போக, பிராயச்சித்தம் என்ன என்பதை அறிய சிவனிடம் சென்று வழிமுறை கேட்டார்.

சிவனும் அதற்கு ஒரு வழி கூறினார். ஐப்பசி மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும், அருணோதயத்தி-ருந்து சூரிய உதயம் வரை, அதாவது அருணோதயத்தி-ருந்து, 2 மணி 24 நிமிடம் வரை அறுபத்தாறு கோடி புண்ணிய தீர்த்தங்களும், காவேரியில் வாசம் செய்கின்றன. அதிலே ஸ்நானம் பண்ணினால் வீரஹத்தி தோஷம் போய்விடும் என பரிகாரம் கூறினார்.

காவிரியிலும், மாயவரத்தில் உள்ள துலா கட்டம் எனும் இடத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் மக்கள் ஸ்நானம் செய்து புண்ணியம் பெறுவர். 

இந்த இடத்தில்தான். துலா மாசம் என்ற ஐப்பசி மாதத்தில், கிருஷ்ணரும், கூடவே சிவனும் வந்து ஸ்நானம் செய்தனர். இந்த ஸ்நானம், இந்த இடத்தில் பண்ணியவுடன், கிருஷ்ணரின் வீர ஹத்தி தோஷம் போய், அவருடைய மங்கியிருந்த உடம்பு, மீண்டும் பிரகாசமாகிவிட்டது.

இதனை பார்த்த சகல தேவதைகளும் தாங்களும் ஸ்நானம் செய்தனர்.

ஆகையால் தீபாவளிக்கு, கங்கையோடு, காவிரி சம்பந்தமும் உள்ளது. தீபாவளி அன்று, விடியும் முன் உள்ள அருணோதய காலத்தில், எல்லா வெந்நீரிலும் கங்கை இருக்கிறாள் என்றால், ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியின் நினைவும் உள்ளது.

இவ்விதம் தீபாவளி பண்டிகை என்பது, உடம்புக்கு மட்டுமான ஸ்நானம் மட்டுமல்ல. அது உள்ளத்திற்கும் மிகுந்த தெய்வ பலத்தைத் தருவதும் ஆகும்.

2025 ஐப்பசி மாதம் 3-ஆம் தேதி, 20-10-2025 

அன்று தீபாவளி பண்டிகையை வெகு சிறப் பாக கொண்டாடி மகிழ்வோம்.