கேது தசையில் சூரிய புக்தி இதன் அளவானது 4 மாதம் 6 நாட்கள் துல்லியமாக 120 நாட்கள். 

Advertisment

இந்த காலகட்டம் ஜாதகரின் தந்தையின் வாழ்வில் சில சங்கடமான சூழலை நிகழ்த்த முற்படும்.

தந்தை, தந்தைவழி உறவுகளுடன் பிரச்சினை தலை, வலது கண், போன்ற உறுப்புகளில் சிறு தொந்தரவுகள் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

மேலும் அதிகாரம், ஆளுமை போன்றவை குறைந்து தன்னிலையை மறக்கும் தன்மை உருவாக்கும். 

Advertisment

கேது தசையில் சந்திர புக்தி 

இதன் கால அளவு 7 மாதங்கள் ஆகும். துல்லியமாக 210 நாட்களாகும்.

இந்த காலகட்டம் மனரீதியான பெரும்பாதிப்பை அளிக்க வல்லது. கேது எட்டாம் இடம் தொட்டு சந்திர புக்தி நடக்கும் தருவாயானது தண்ணீரில் கண்டத்தை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கும். உணவு உணவினால் ஏற்படும் அழற்சி போன்றவை உருவாகும். திருமணத்தை தாண்டிய உறவை நெருங்கச் செய்யும். 

எந்த வயதை சேர்ந்திருந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பையும், தொடர்பையும், தரவல்ல தசா புக்தியாக இந்த புக்தி திகழ்கின்றது. 

இந்த தசாபுக்தியில் பயணிக்கும் சிறு குழந்தைகளாகிய 20 வயதை கொண்டிருக்கும் குழந்தைகள் யார் சொல்வதையும் கேட்பதே கிடையாது. 

Advertisment

கேது தசையில் செவ்வாய் புக்தி 

இதன் கால அளவு 4  மாதம் 27 நாட்கள் ஆகும். துல்லியமாக 147 நாட்களாகும். 

இந்த காலகட்டமானது பங்காளிகள், சகோதரர்கள், மண், சொத்து போன்றவற்றில் போட்டி. பொறாமை போன்றவற்றை வழங்கி பிரச்சினைகளை அளிக்கும் தன்மையை பெற்றிருக்கும் .

இந்த சமயம் ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக எஸ்எல்வி (நகய) போன்ற நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும். 

கேது தசையில் ராகு புக்தி 

இதன் காலகட்டம் 1 வருடம் 18 மாதங்கள் ஆகும். துல்லியமாக 378 நாட்களாகும். 

இந்த காலகட்டம் மிகவும் கவனமாக இருக்கக்கூடிய காலங்களாகும்.

கண்டிப்பாக வம்பு, வழக்கு, சிறைதண்டனை போன்ற சில தேவையற்ற விஷயங்களில் ஈடுபடும் தன்மையை இந்த காலகட்டம் அமைத்துக் கொடுத்துவிடும்.

பெரும் முடிவுகளை இந்நேரங்களில் எடுக்க நிச்சயமாக தேவையில்லை.

திருடு போதல், மன சஞ்சலம், மன குழப்பம் முதலியவை உண்டாகும்.

தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும் காலம் இந்த காலங்கள் தான். 

கேது தசையில் குரு புக்தி

இதன் கால அளவு 11 மாதங்கள் 6 நாட்களாகும் துல்லியமாக 336 நாட்களாகும். 

குரு- கேது இணையும் பொழுது ஆன்மிகம் ஆன்மிகம் சார்ந்த சுற்றுலா, யாத்திரைகள் போன்றவற்றில் ஈடுபடும் தன்மையை அளிக்கும் .

அதேபோன்று மனிதர்கள் என்றால் யார் என்று நமக்கு இனம் காணும் தன்மையை அளித்து இறையின் வசம் நம்மளை இழுத்துச் செல்லும். 

கடவுளே கிடையாது என்பவர்கள்கூட இந்த காலகட்டத்தில் ஆன்மிக சிந்தனை மேலோங்கி இதன்வழியில் பயணிப்பதை பார்க்கின்றோம். 

கேது தசையில் சனி புக்தி 

இதன் கால அளவு 13 மாதம் 9 நாட்களாகும். துல்லியமாக 399 நாட்கள். 

இந்த காலகட்டம் மறைபொருளை தேடுகின்ற தன்மையை வழங்கும். கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் தனிமையை சிந்தித்துக் கொண்டே இருக்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்கும். நல்ல இணக்கமான குடும்பம் அமைந்திருந்தும் வெளிநாடு சென்று தனிமையை உணரும் தன்மையை வழங்கும். ஆக தனிமை மட்டுமே இவர்களுக்கு சொர்க்கமாக தெரியும் காலகட்டம் இந்த காலகட்டம்.

எல்லா புக்திகளிலுமே மனம் சார்ந்த சந்தேகங்கள் மேலோங்கிக் கொண்டே செல்லும். 

கேது தசையில் புதன் புக்தி 

இதன் கால அளவு 11 மாதம் 27 நாட்கள். துள்ளியமாக 357 நாட்களாகும். 

கேது என்றால் வலை என்றும், புதன் என்றால் காதல் என்றும் ஜோதிடத்தில் கூறுவார்கள். இந்த காலகட்டமானது மனது எதிர்பாலின ஈர்ப்பின் வசம் சென்றுவிடும். அது சரியோ- தவறோ இதைப்பற்றிய  நினைவு இவர்களுக்கு இந்த தசை முடிந்த பின்புதான் உணர்த்தும். 

உடலில் ஏற்படும் நோய்களின் தன்மை என்ன என்பதை கண்டுபிடிக்கவே இயல முடியாத தசா புக்தி இந்த கேதுவின் தசை மற்றும் இதர புக்திகள் ஆகும். 

ஞானத்தை மட்டுமே அளிக்கவல்ல கேது சில வலிகளை நிச்சயமாக வழங்குவார். 

இதுவரை பார்த்துவந்த அனைத்துமே எதிர்மறையாகவே அமைந்திருக்கின்றது என்கின்ற எண்ணம் நமக்கு இருக்கும். 

ஆம்; எதிர்மறையின்மூலமே நம் வாழ்வை பதப்படுத்தவும் பலப்படுத்தவும் ஞானகாரகனால் முடியும். 

மேலே கூறியதுபோல் இந்த கேது தசாபுக்தி கடக லக்னத்திற்கு சிறப்பை அளிக்கும். 

சரி; இவ்வளவு எதிர்மறையையும் எவ்வாறு எதிர் கொள்வது என்கின்ற எண்ணம் இருக்கும் அல்லவா. 

இதற்குத்தான் மூலாதாரத் திற்கு கடவுளான விநாயகப் பெருமானின் வழிபாடு இவை அனைத்தையுமே சரி செய்யும் ஆற்றல் பெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்டம் நாகநாதர் திருக்கோவிலில் மூலவராக நாகநாதர் என்கின்ற பெயரிலும் உற்சவராக சோமாஸ்கந்தர் என்கின்ற பெயரிலும் தாயார் சௌந் தர்ய நாயகியாகவும் தலவிருட்சம் மூங்கில் ஆகவும் அமர்ந்து கேது தசா புக்தி சார்ந்த இடர்களுக்கு பரிகாரமாக திகழ்கின் றது இந்த திருக்கோவில். 

அங்குசென்று உங்களின் வேண்டுதலை வைக்கும்பொழுது நிறைவேறும் தன்மை மட்டுமல்லாமல் மனம் சார்ந்த பிரச்சினைகளும் கட்டுப்படும். 

மேலும் இந்த பாதிப்பில் இருந்து முற்றிலும் நீங்குவதற்கு அருகம்புல் சாறு அருந்துவதும், தானியத்தில் கொள்ளு உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதும், உடல் சார்ந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட ஒரு பெரும் வழியை அளிக்கும்.

இறுதியாக இவையனைத்தும் உங்களை சங்கடப் படுத்தவோ, பயமுறுத்தவோ கூறவில்லை. இந்த தசை இந்த சூழலைதான் அளிக்கும். இதற்கு தயாராகி நாம் எடுக்கும் முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதன் முழு கண்ணோட்டமாகும்.

செல்: 80563 79988