கேது தசை
மானுட பயணத்தில், ஜோதிடரீதியான அணுகு முறையில், தசை மற்றும் புக்தியின் துணைகொண்டு தான் அனைத்து காரியங்களும் நிகழ்கின்றது. நிகழ்கின்ற தசைக்கும், புக்திக்கும், கோட்சாரம் வழிவகுத்து நல்வினை- தீவினையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
ஒரு தசை எனக்கு சுபப் பலனை நிகழ்த்துமா அல்லது அசுபப் பலனை நிகழ்த்துமா? இல்லை சமமான சூழலில் நான் பயணிப்பேனா என்பதை லக்னத்தின் துணைகொண்டும், தன்னுணர் வில் நிலைத்திருக்கும் ஜோதிடர்களின் துணைகொண்டும், மிகத் துல்லியமாக கணக்கிட முடியும்.
அப்படி கணக்கிட்ட பலன்களை நிறைவாக ஆட்கொள்ள சில வாழ்வியல் மாற்றங்களையும், ஆலய வழிபாடுகளையும், ஏன்? உணவு, மலர், இசை, நிறம், என்ற பல காரணிகளின்மூலம் சரிசெய்து ஒருவருக்கு வழங்கவும் முடியும்.
ராசி, நட்சத்திரம், யோகம், திதி, கரணம், இவை நிகழ்த்தாத ஒன்றையா இந்த தசா புக்திகள் நிகழ்த்திவிடும் என்கின்ற ஆழ்ந்த ஐயம் நம் அனைவருக்கும் தோன்றும்.
ஆம்; நிச்சயமாக பிறக்கின்ற குழந்தைக்கு, ஒரு வயதுமுதல் ஒன்பது அல்லது பத்து வயதுவரை பொம்மை மட்டுமே போதுமானதாக அமைகின்றது.
அடுத்த பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது அதைத் தாண்டி மனிதர்களுடன் இணக்க மாக பழகுகின்ற தன்மையும், இவர்கள் கையாளும் பொருளின் தன்மையும் மாறிவிடுகின்றது.
அடுத்தடுத்து ஏற்படும் பருவ மாற்றங்கள்
அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களின் தன்மை முற்றிலும் மாறி உணர்வுகளின் தன்மையும், மாற்றமடைவதை நம்மால் கண்கூடாகக் காண முடிகின்றது.
இதேபோன்றுதான் தசா புக்தியும், இருக்கும் யோகங்

இதேபோன்றுதான் தசா புக்தியும், இருக்கும் யோகங்களையும், தோஷங்களையும், அந்த அந்த கிரகங்கள் தசை மற்றும் புக்தி அந்தரங்கள் நிகழ்த்தும்போதுதான் நமக்கு அளிக்க முடியும்.
நவகிரகங்களுக்கும் 120 ஆண்டுகள் தசாபுக்திகளை பகிர்ந்து அளித்து உள்ளது ஜோதிடவியல்.
அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களின் கிரகமாகிய கேது தசை நிகழும்போது ஏற்படும் வாழ்வியல் சூழலையும், அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.
மேற்கூறிய நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்கு முதல் தசை கேது தசையாக அமையும்.
தசாபுக்தி கணக்கீட்டில் கேதுவிற்கு ஏழு வருடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தமாக 2,520 நாட்கள் கேதுவின் கட்டுப்பாட்டிற்குள் பயணிக்கும்.
யார் இந்த கேது என்னதான் செய்துவிடுவார் இவர் புராணரீதியாக சிம்ஷிஹா என்னும் அரக்கியின் மகனாகவும், சுவர்பானு என்பவனின் உடலாகவும், ராகுவும் கேதுவும் உருவானார்கள் என்பார்கள்.
ஒரு விருட்சம் வளர்வதற்கு அடிப்படையானது மண்வளம். அதேபோன்று ஒரு மானுட ஜீவிதத்தின் ஆணிவேரும், அதன் வளர்ச்சியும், வளர்ச்சியின் பிரம்மாண்டமும் கேதுதான்.அதனால்தான் நமது ஆதார சக்கரங்கள் ஏழில் முதல் சக்கரமான மூலாதாரத்திற்கு கேதுவை உரித்தாக்கி உள்ளோம்.
இந்த மூலாதார சக்கரத்தை மூலஆதார மாகக் கொண்டுதான் அடுத்தடுத்து அமைந்திருக்கும் சக்கரங்கள் நிலைநின்று கொண்டிருக்கின்றன.
ஒரு கரு முதன்முதலில் தனது தாயின் கருவறை சுவரான எண்டோமைட்ரியத்தில் (ஊய்க்ர்ம்ங்ற்ழ்ண்ன்ம்) ஒட்டி வளர துவங்கும்.
அப்படி ஒட்டி வளர்கின்ற இடம் மனித உடம்பில் கருவாய்க்கும் மல வாய்க்கும் இடையில் அமைந்துள்ள ஒரு கோடு போன்ற தசை சுருக்கமாகும். இந்த இடத்தில்தான் நமது மூலாதார சக்கரம் அமைந்துள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர். ஆகவே கேது தான் கருவின் துவக்கமாகும்.
துவங்குகின்ற இடத்திலேதான் முடிவும் அமைந்திருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விதிகளும், விதிவிலக்குகளும், நிறைந்த ஜோதிடத்தில் கேது ஒரு சூட்சம சக்தியாக பிரதிபலிக்கின்றது.
தனக்கென்று வீடோ அல்லது ஓரை யையோ அமைத்துக் கொள்ளாத செந்நிழல் கிரகமான கேது தான் அமையப்பெற்ற இடத்தை மாபெரும் அழுத்தத்துடன் சுருங்கச் செய்வது உறுதி. மிகக் குறைந்த ஆண்டுகளையே தசாபுக்தியாக கொண்டிருந்தாலும் பெரிய பாடத்தையும், மனிதர்களிடமிருந்து பெறக்கூடிய ஞானத்தையும், வலியுடன் சேர்த்து நமக்கு அளித்துவிடுவதில் கருணை காட்டுவதே இல்லை இந்த கேது.
பல கிரந்தங்களில் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் கேது பெரிதாக தீமை செய்துவிடாது என்ற கூற்றும் உண்டு.
அதேபோல் புதனின் வீடுகளான மிதுனம் மற்றும் கன்னியில் இந்த நிழல் கிரகம் அமையும்பொழுது பெரும் பாதிப்பை அளிக்க முடியாது என்கின்ற கருத்தும் நிலவுகின்றது.
மேலும் தான் உச்சம் பெறக்கூடிய விருச்சிகத்தில் அமரும்பொழுதும் பாதிப்புகளை அவ்வளவாக அளிப்பதில்லை என்று கூறுகின்றனர்.
இவையனைத்தும் ஒரு 30 -ருந்து 35 சதவிகிதம் மட்டுமே நிகழ்கின்றது என்பது அனுபவத்தில் நான் கண்ட பதிவாகும்.
நம் கூறப்போகும் பலன்கள் கடக லக்னத்தைத் தவிர மற்ற லக்னங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஏனென்றால் கடக லக்னத்திற்கு கேது தசைக்கு அடுத்ததாக வரக்கூடிய சுக்கிரன் பாதக அதிபதியாக அமர்ந்து 20 வருடங்களை ஆட்சி செய்ய காத்திருப்பதனால், இந்த ஏழு வருடங்கள் இவர்களுக்கு நன்மையை மட்டுமே வழங்குவதை அனுபவத்தில் பல ஜாதகங்களில் காணமுடிகின்றது.
இந்த கேதுபகவான் இகலோக அதாவது, மனித வாழ்விற்கான ஆசைகள், தேவைகள் மற்றும் நினைப்புகளுக்கு அப்பாற்பட்டு புகழ் உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தரவல்லவர். அதனால்தான் இவரை கெடுப்பவர் என்று கணக்கிடப்படுகின்றார்.
ஆன்மிகத்தின் உச்சநிலையை தொடவைத்து, கர்மங்களை கழிப்பதும் இவர்தான். இந்த கேதுபகவான் அமரும் பாவகங்கள் சார்ந்த ஞானங்களை வலியுடன் நமக்கு வழங்கி வாழவைப்பார்.
உதாரணமாக ஏழாம் இடத்திலோ அல்லது இரண்டாம் இடத்திலோ கேது அமையப்பெற்றவர்கள், குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களான வாழ்க்கைத் துணையின்மூலம் பெறும் பாடத்தை கற்று உணர்ந்து விடுவார்கள்.
நான்காம் இடத்து கேது சுகங்களை காண்பித்து அதை அனுபவிக்க முடியாத தன்மையை அளித்துவிடும்.
பொதுவாக பத்தில் ஒரு பாம்பாவது இருக்க வேண்டும் என்கின்ற பழமொழி கேதுவையும் இணைத்தே கூறப்பட்டதுதான். இதனால் பத்தாம் பாவகத்தோடு தொடர்புகொள்ளும் கேது தொழில் முறையில் ஒரு உச்சத்தை அடையவைக்கும். ஆனால் அதனால் ஏற்படும் விளைவான நன்மைகளை பெரும்பாலும் இவர்கள் அனுபவிப்பது இல்லை.
கேது தசையில் கேது புக்தி
இதன் காலகட்டம் 4 மாதங்களும் 27 நாட்களும் அதாவது 147 நாட்கள்.
இந்த நேரத்தில் அனைத்தின்மீதும் வெறுப்பும், சந்தேகமும், மனரீதியான தாக்கங்களையும் அனுபவிக்கும் சூழல் உருவாகும்.
மேலும் எந்த பாவகம் தொடர்புபெறுகின் றதோ, அந்த பாவகத்தின் உறவுரீதியான கசப்பை உணர ஆட்படுவோம்.
கேது தசை கேது புக்தியில் காது, மூக்கு, தொண்டை, இதைச் சார்ந்த பிரச்சினைகள் வருவதைக் காணமுடிகின்றது.
மேலும் கழிவுகளை அகற்றும் உறுப்புகளில் சில பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படும். மூச்சு, மூச்சுக் குழல் சார்ந்த இனக்கமில்லாத சூழலில் பயணிக்கும் தன்மையை இந்த கேது தசா புக்தி உருவாக்கும்.
அனைத்தின்மீதும் ஏற்படும் விருப்பம் நிறைவேறாத சூழல் ஏற்பட்டு விரக்தியை கொடுக்கும் தன்மையை இந்நிலை அளித்து விடும்.
இந்த காலகட்டங்களில் வாழ்வில் நெடுந்தூரம் நம்முடன் பயணிக்கும் வாழ்க்கைத்துணை தேர்வு, தொழில் சார்ந்த முக்கிய முடிவு போன்றவற்றை எடுக்காமல் இருப்பது மிகச் சிறப்பு.
அனுபவத்தில் இந்த தசா புக்திகளில் அமைக்கப்படும் வீடுகள் இவர்களின் கையை விட்டு செல்வதைக் காணமுடிகின்றது.
கேது தசையில் சுக்கிர புக்தி
இதன் அளவு 1 வருடம் இரண்டு மாதங்கள் ஆகும். துல்லியமாக 420 நாட்கள்.
இந்த காலகட்டத்தில் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளும், கணவன் மனைவி யிடையிலான சுமூகமற்ற சூழலும், உடலில் சர்க்கரையின் அளவு கூடுதல் மற்றும் அதைச் சார்ந்த தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்புகள் அமையும்.
குறிப்பாக சரியில்லாத இடத்திலிருந்து நடத்தப்படும் கேதுவின் சுக்கிர புக்தி கணவன்- மனைவியிடையே ஒரு பெரும் பிரிவினையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்த வல்லது.
சிறப்பான இடத்தில் அமையப்பெற்ற கேதுவோ- சுக்கிரனோ தசை நடத்தும் பொழுது அழகியல் சார்ந்த பயணத்திலும், மகாலட்சுமியின் கடாட்சமும் நிறைந்து வாழ்க்கை வளப்படுத்தப்படும்.
-கேது தசை வரும் இதழிலும்...
செல்: 80563 79988