காத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் - ஜி ராம்  ஜி சட்டம் -2025 என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த இச்சட்டத்தை மக்களவையில் டிசம்பர் 18-ஆம் தேதி அன்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தாக்கல் செய்தார்.

Advertisment

இச்சட்டத்தில், 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப் பட்டுள்ளது. நாடு முழுதும் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005-இல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து. ‘வளர்ச்சியடைந்த பாரதம் - ஜி ராம்  ஜி சட்டம் -2025’ என்ற பெயரில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கடந்த 20  ஆண்டுகளாக கிராமப்புறங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் பரவலாக மக்களை சென்றடைகின்றன. இதனால், அரசின் திட்டங்களும் முழுதாக அமலாகின்றன.

Advertisment

அதே சமயம், கிராமப்புறங்களில் தற்போதைய சமூக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப இந்த திட்டத்தை தகவமைப்பது அவசியம். வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போது உள்ள சட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால், புதிய சட்டம், அதிகாரமளித்தல், வளர்ச்சி, கிராமப்புறங்களை வளமாக்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டது.

ஊரக வேலை திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என புகார் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விவசாயப் பணி உச்சத்தில் இருக்கும் காலங்களில் இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை மாநில அரசுகள் நிறுத்தி வைக்க புதிய சட்டம் வகை செய்கிறது.  

நீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் தீவிர வானிலை மற்றும் இயற்கை பேரிடர்களைச் சமாளிப்பதற்கான சிறப்புப் பணிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், விவசாயப் பணிகளின் முக்கிய காலங்களில் போதுமான விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசோதாவில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், மாநிலங்களின் மீது நிதிச்சுமை ஏற்றப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில்அமளியில் ஈடுபட்டனர். 

இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

புதிய சட்டத்தின்படி, 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயரும்.

வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும்,

வாரந்தோறும் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படும்.

15 நாட்களுக்குள் வேலை வழங்கா விட்டால், அதற்கான படி தொகையை மாநில அரசுகளே வழங்க வேண்டும்.

விதைப்பு, நடவு மற்றும் அறுவடை காலங்களில் விவசாய பணியாட்களை, வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்ற அழைக்கக் கூடாது.

வேளாண் பருவ காலங்களில், விவசாய பணியாட்கள் போதிய அளவுக்கு கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை

பயோமெட்ரிக் அங்கீகாரம் உள்பட விரிவான டிஜிட்டல் முறையில் வேலை திட்டம்.

ஜி.பி.எஸ்., அல்லது மொபைல் போன்வழியாக பணியிடத்தை மேற்பார்வை யிடுதல்.

நிகழ்நேர மேலாண்மை தகவல் முறை வழங்கப்படும்.

மோசடிகளை தடுக்க ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படும். இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் வேலைவாய்ப்புகளை வழங்க திட்டங்களை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு முன், 90 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியது. இனி, 60 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.  

அதேநேரம், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலையை ஒட்டிய மாநிலங்கள் (உத்தராகண்ட், இமாச்சல், ஜம்மு-காஷ்மீர்) 10 சதவீத நிதி வழங்கினால் போதும்.

புதிய சட்டம் அமலான ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை மாநில அரசுகள் முடிக்க வேண்டும்.

அதன்பின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.

ஒப்புதலான தொகையை விட கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டால், அதற்கான செலவுகளை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.