Advertisment

டிசம்பர் மாத ராசி பலன்கள்  2025

decemberrasi


மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத முதல் வாரம்வரை 8-ல் ஆட்சியாக இருக்கிறார். சனி, செவ்வாய் பார்வை இருப்பதால் தேகநலத்தில் ஆரோக்கியக் குறைவு, மருத்துவச் செலவு போன்ற தொல்லைகள் ஏற்படலாம். 2-க்குடைய சுக்கிரன் 13-ஆம் தேதிமுதல் அஸ்தமனமாகிறார். கணவன்- மனைவிக்குள் சில வாக்குவாதம் ஏற்படலாம். 4-ல் உள்ள குரு வக்ரம் ஆரம்பம். டிசம்பர் 21-ல் வக்ரம். 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஒருசிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரும். அல்லது உத்தியோகவகையில் இடமாற்றத்தை சந்திக்கலாம். தொழில் துறையில் உள்ளவர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பாடாகும். பொருளாதாரத்தில் அவ்வப்போது பற்றாக்குறை நிலவினாலும் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவுகளை கட்டுபடுத்துவது கடினம். அதாவது வரவுக்கு மீறிய செலவாக அமையும். 5-க்குடையவரை மிதுன குரு பார்க்கும் காலம் பிள்ளைகள்வகையில் நல்லவற்றை எதிர்பார்க்கலாம்.

Advertisment

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். மாத மத்தியில் அஸ்தமனமாகிறார். மாத முற்பாதிவரை பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும். மாத பிற்பாதியில் பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டாகும். டிசம்பர் 21-ல் குரு மிதுனத்துக்கு மாறியபின் உத்தியோகத்தில் உள்ளவர்கள் மாற்றத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ எதிர்பார்க்கலாம். 4-ல் உள்ள கேது தாயார் உடல்நலனில் சில பாதிப்புகளையும் அதனால் வைத்தியச் செலவுகளையும் ஏற்படுத்தலாம். அரசு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இடமாற்றம் உண்டாகும். உயரதிகாரிகளின் சங்கடத்திற்கும் ஆளாக நேரிடும். அதன்மூலம் மனவருத்தமும் ஏற்படும். ரிஷப குரு வக்ரகதியில் செயல்படுவதால் குடும்பத்தில் சில நேரம் பிரச்சினைகள் உண்டாகும். மாதத் தொடக்கத்தில் நிலவிய அன்யோன்யம் மாத மத்திக்குப்பிறகு சிலசில சச்சரவுகள் ஏற்படலாம். எனினும் குரு சுயசாரமான புனர்பூசத்தில் சஞ்சரிப்பதால் காலம் ஏற்பட்டாலும் அதற்கு மருந்து நிவாரணமும் தருவார். 

Advertisment

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 5-ல் திரிகோணம் பெற்றாலும் 8-ஆம் தேதிமுதல் விருச்சிகத்திற்கு மாறுகிறார். 4-ஆமிடத்துக்குடையவர் 6-ல் மறைந்தாலும் குருவின் பார்வையைப்  பெறுகிறார். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். செல்வ நிலை உயர்வு காணப்படுவதற்கு உண்டான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த சில நல்ல காரியங்கள் இம்மாதம் நிறைவேறும். 2-ஆமிடத்தில் உச்சம்பெற்று வக்ரகதியுடன் செயல்படும் குரு தனவரவை ஏற்பட


மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத முதல் வாரம்வரை 8-ல் ஆட்சியாக இருக்கிறார். சனி, செவ்வாய் பார்வை இருப்பதால் தேகநலத்தில் ஆரோக்கியக் குறைவு, மருத்துவச் செலவு போன்ற தொல்லைகள் ஏற்படலாம். 2-க்குடைய சுக்கிரன் 13-ஆம் தேதிமுதல் அஸ்தமனமாகிறார். கணவன்- மனைவிக்குள் சில வாக்குவாதம் ஏற்படலாம். 4-ல் உள்ள குரு வக்ரம் ஆரம்பம். டிசம்பர் 21-ல் வக்ரம். 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஒருசிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரும். அல்லது உத்தியோகவகையில் இடமாற்றத்தை சந்திக்கலாம். தொழில் துறையில் உள்ளவர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பாடாகும். பொருளாதாரத்தில் அவ்வப்போது பற்றாக்குறை நிலவினாலும் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவுகளை கட்டுபடுத்துவது கடினம். அதாவது வரவுக்கு மீறிய செலவாக அமையும். 5-க்குடையவரை மிதுன குரு பார்க்கும் காலம் பிள்ளைகள்வகையில் நல்லவற்றை எதிர்பார்க்கலாம்.

Advertisment

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். மாத மத்தியில் அஸ்தமனமாகிறார். மாத முற்பாதிவரை பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும். மாத பிற்பாதியில் பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டாகும். டிசம்பர் 21-ல் குரு மிதுனத்துக்கு மாறியபின் உத்தியோகத்தில் உள்ளவர்கள் மாற்றத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ எதிர்பார்க்கலாம். 4-ல் உள்ள கேது தாயார் உடல்நலனில் சில பாதிப்புகளையும் அதனால் வைத்தியச் செலவுகளையும் ஏற்படுத்தலாம். அரசு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இடமாற்றம் உண்டாகும். உயரதிகாரிகளின் சங்கடத்திற்கும் ஆளாக நேரிடும். அதன்மூலம் மனவருத்தமும் ஏற்படும். ரிஷப குரு வக்ரகதியில் செயல்படுவதால் குடும்பத்தில் சில நேரம் பிரச்சினைகள் உண்டாகும். மாதத் தொடக்கத்தில் நிலவிய அன்யோன்யம் மாத மத்திக்குப்பிறகு சிலசில சச்சரவுகள் ஏற்படலாம். எனினும் குரு சுயசாரமான புனர்பூசத்தில் சஞ்சரிப்பதால் காலம் ஏற்பட்டாலும் அதற்கு மருந்து நிவாரணமும் தருவார். 

Advertisment

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 5-ல் திரிகோணம் பெற்றாலும் 8-ஆம் தேதிமுதல் விருச்சிகத்திற்கு மாறுகிறார். 4-ஆமிடத்துக்குடையவர் 6-ல் மறைந்தாலும் குருவின் பார்வையைப்  பெறுகிறார். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். செல்வ நிலை உயர்வு காணப்படுவதற்கு உண்டான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த சில நல்ல காரியங்கள் இம்மாதம் நிறைவேறும். 2-ஆமிடத்தில் உச்சம்பெற்று வக்ரகதியுடன் செயல்படும் குரு தனவரவை ஏற்படுத்துவார். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் சில நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். என்றாலும் மேலதிகாரிகளிடையே மனக்கசப்பும் சங்கடம் தரும் நிகழ்வுகளும் உண்டாகும். ஒருசில விஷயங்களில் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் அமைதியாக இருப்பதே நல்லது. 11-க்குடைய செவ்வாய் 8-ஆம் தேதிமுதல் 7-ஆமிடத்துக்கு மாறுகிறார். உடன்பிறந்தவகையில் ஒற்றுமைக்கு இடம் ஏற்படாது. 12-க்குடைய சுக்கிரன் 6-ல் இருப்பது நன்மையையே உண்டாக்கும். கொடுக்கல்- வாங்க-ல் சற்று கவனமுடன் நடந்துகொள்வது அவசியம். 

கடகம்

கடக ராசிக்கு அட்டமத்துச் சனியின் கடைசிக்கூறு நடக்கிறது. ஜென்மத்திலுள்ள குரு வக்ரகதியில் செயல்படுகிறார். 9-ஆமிடத்தை 9-க்குடையவரே பார்ப்பதால் பூர்வீக சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். 21-ஆம் தேதிமுதல் குரு மீண்டும் மிதுன ராசிக்கு மாறுகிறார். எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். 2-க்குடைய சூரியன் மாத பிற்பாதியில் 6-ல் மறைந்தாலும் தனகாரகன் குரு அவரைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு இல்லையென்றாலும் பெரியதளவு தட்டுப்பாடு இருக்காது. அதாவது பையில் இருக்கும் பணம் கா-யாகும் சமயம் அடுத்து பணம் புரண்டு சற்று ஆறுதலை ஏற்படுத்தும் 3, 12-க்குடைய புதன் 5-ல் மாறியபிறகு பிள்ளைகள்வகையில் படிப்பிற்காகவோ அல்லது மற்ற தேவைகளுக்காகவோ செலவுகள் உண்டாகலாம். 13-ஆம் தேதிமுதல் 4, 11-க்குடைய சுக்கிரன் அஸ்தமனகதியில் செயல்பட்டாலும் மாதக் கடைசியில் தனுசு ராசிக்கு மாறும் சுக்கிரன் குருவின் பார்வையைப் பெறுவதால் காரிய அனுகூலத்தை எதிர் பார்க்கலாம். 12-ஆமிடத்து வக்ர குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால்  சிலர் குடியிருப்பு வகையில் மாற்றம் செய்யலாம். அல்லது புது வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடலாம். 

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 4-ல் சஞ்சாரம். ஜென்ம கேது அவ்வப்போது மனதில் சில குழப்பங்களையும் காரிய தாமதத்தையும் தருவார். மருத்துவச் செலவுகளும் வந்து போகும். 21-ஆம் தேதிமுதல் குரு மீண்டும் 11-ஆமிடத்துக்கு மாறுகிறார். வக்ரகதியில் செயல்பாடு. 5-க்குடையவர் வக்ரம் அடைவதால் ஒருவகையில் பிள்ளைகளுக்கு செலவுகள் வந்தாலும் அது சுபச் செலவாகவும் அமையும். உதாரணமாக பூமி, மனை வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது போன்ற சுபவிரயங்கள் உண்டாகும். ராசிநாதனை குரு பார்ப்பது ஒரு நன்மைதான். மரியாதை, மதிப்பு உயரும். 3, 10-க்குடைய சுக்கிரன் அஸ்தமனமடைந்தாலும் குரு ராசிநாதனை பார்ப்பதாலும் மாதக் கடைசியில் சுக்கிரனையும் பார்ப்பதாலும் ஒருவகையில் ஆறுதலையும் தேறுதலையும் தரும். 2-க்குடைய புதன் 4-ல் (8-ஆம் தேதிமுதல்) சஞ்சரிப்பதால் மேற்கூறிய பூமி, மனை யோகம் வலுப்படும். வாடகை வீட்டில் குடியிருப்போர் சொந்த கட்டடத்திற்கு குடியேறும் வாய்ப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்கள்வகையில் பகையும் இல்லை; உறவும் இல்லை. சமநிலையில் செயல்படும்.

கன்னி 

உங்கள் ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 2-ல் சஞ்சாரம். 2-ஆமிடம் தன ஸ்தானம். எனவே முதல் வாரம் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்கலாம். பொருளாதாரத்திலும் பற்றாக்ககுறைக்கு இடமில்லை. அடுத்து 3-ல் மாறுகிறார். 3-க்குடைய செவ்வாயும் சேர்க்கை. சுக்கிரனும் இணைந்து காணப்படுகிறார்கள். சகாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடமிருந்து உதவிகளும் கிட்டும். புதன் 10-க்குடையவரும் என்பதால் 9-க்குடைய சுக்கிரனுடன் இணைந்ததால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. தொழி-லும் கணவர் அல்லது மனைவியால் அனுகூலம் உண்டாகும். 8-ஆம் தேதிமுதல் செவ்வாய் 4-ல் சஞ்சரிக்கும் காலம் ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படும். மன உறுதியிலும் குறைவு உண்டாகும். 7-க்குடைய குரு வக்ரகதியில் செயல்படுவதால் கணவன் அல்லது மனைவிவழி உறவினர்களால் சில தொந்தரவுகள் நேரலாம். எதிலும் சற்று பொறுமையுடன் அமைதி காப்பது நல்லது. 21-ஆம் தேதிக்கு பிறகு குரு 10-ல் வக்ரம் பெற்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் தாயார் உடல்நலனில் அக்கறை காட்டவும். தொழில், உத்தியோகத்திலும் சில மாற்றம் உண்டாகும். 

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் 2-க்குடைய செவ்வாயோடு சஞ்சாரம். 11-க்குடைய சூரியனும் சேர்க்கை. எனவே ஒருசில காரியங்களில் தாமதமில்லாமல் நிறைவேற்றம் இருந்தாலும், ஒரு சில காரியங்களில் தாமதம் மனச்சங்கடம் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும். அதே நேரம் 8-க்குடைய உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருப்பதால் எதிர்பாராமல் திடீர் தன வரவுக்கும் இடமுண்டு. 8-ஆம் தேதிமுதல் 12-க்குடைய புதன் 2-ல் வருவதும் ஒருவகையில் நன்மையே. 2-க்குடையவர் 12-ல் மறைந் தால்தான் தவறு. ஆனால் 12-க்குடையவர் 2-ல் வந்தால் அந்நியர் தனம் உங்களிடம் புரளும். அதனால் சில செலவுகள் அமைந்தாலும் அது முதலீட்டுச் செலவாக ஏற்படும். தனுசு ராசிக்கு மாறும் செவ்வாய் நண்பர்கள்மூலம் உதவி, ஒத்தாசைகளைத் தருவார். உடன்பிறந்த வழியில் ஏமாற்றங்களைச் சந்தித்தாலும் பழகியவர்களின் துணையோடும் 9-ல் குரு வந்தபிறகு குருவருளோடும் காரிய வெற்றியை அனுபவிக்க முடியும். மனதைரியமும் துணிவும் அதிகரிக்கும். 5-ல் உள்ள ராகு பிள்ளைகள் வகையில் மனக்கவலைகளை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு நடக்க வேண்டிய நன்மைகள் தாமதமாகலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 4-ல் சனி ராகு சேர்க்கையால் சில நேரம் உடல் உபாதைகள் தொந்தரவு செய்யும். சனியின் வக்ர நிவர்த்திக்குப்பின் சங்கட நிவர்த்திக்கும் வழியுண்டு. ராசிநாதன் செவ்வாய் 2-ல் மாறி 2-க்குடைய குருவின் பார்வையை (21-ஆம் தேதிமுதல்) பெறுகிறார்.  21-ஆம் தேதிவரை 9-ல் உச்சம்பெற்று வக்ரகதியாகவும் செயல்படும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 8-ல் வக்ரமாக மாறும் குரு 12, 2, 4 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் வீண் விரயம் கட்டுக்குள் வரும். வரவும் செலவும் சம அளவில் செயல்படும். தனஸ்தானத்தைப் பார்ப்பதால் தனவரவும் உண்டாகும். ஒருசிலர் புதிய வீடு அல்லது புதிய தொழில் கட்டடம் ஆகியவற்றில் செலவுகளைச் சந்தித்தாலும் இதுவரை இழுப்பறியாக இருந்த நிலைமாறி காரியங்கள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். 11-க்குடைய புதன் மாதக் கடைசியில் 2-ல் மாறி குருவின் பார்வையைப் பெறுகிறார். அதனால் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். 

தனுசு

தனுசு ராசிநாதன் குரு மாதக் கடைசிவரை (21 டிசம்பர்) 8-ல் உச்சமாகவும்- வக்ரகதியிலும் செயல்படுகிறார். பொதுவாக உச்சம் ஆட்சிபெற்ற கிரகங்களுக்கு மறைவு தோஷம் பாதிக்காது என்பது ஜோதிட விதி. எனவே, இங்கு 8-ல் இருக்கும் குரு 12-ஆமிடம், 2-ஆமிடம், 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே தற்கா-க இடமாற்றத்தை குடியிருப்புவகையில் சிலர் சந்திக்க நேரும். ஒருசிலர் சொந்த வீடு வாசல் இருந்தும் வாடகை வீட்டில் குடியேறும் சூழ்நிலை ஏற்படலாம். வயதானவர்களாக இருந்தால் மகனையோ- மகளையோ அனுசரிக்காமல் முதியோர் இல்லத்தில் வசிக்கலாம். ஒவ்வொன்றும் அவரவர் எண்ணத்தின்படியே அமையும். "தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்று சொல்லுக்கிணங்க நமது செயல்களின் பிம்பம்தான்  நமக்கு கர்மவினையாக அமைகிறது. தன ஸ்தானத்தைப் பார்க்கும் குரு தனவரவை உண்டாக்குவார். 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் தேக ஆரோக்கியம் தெளிவாகும். சிலர் புதிய வீடு வாங்கும் அமைப்பை சந்திக்கலாம். உத்தியோகத்தினருக்கு உயரதிகாரிகளினால் சங்கடமும் பிரச்சினைகளும் ஏற்படலாம். 

மகரம்

மகர ராசியினருக்கு ஏழரைச்சனி படாதபாடு படுத்துகிறது என்று சொல்லலாம். எல்லாருக்கும் அப்படி இருக்காது. ஏழரைச்சனி ஆரம்பத்தில் ஓஹோவென்று தொழில் நடந்தவர்களுக்கு இக்கால கட்டம் மிகுந்த சிரமத்தையும் சிக்கல்களையும் பணத்தட்டு பாட்டையும் சந்திக்கும் நிலை! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக எல்லாத் தெய்வத்தையும் வணங்கியாச்சு, இன்னும்  விடிவு காலம் வரவில்லையே என்ற மன வேதனை சொன்ன சொல்லக் காப்பாற்றி வாக்கு நாணயத்துடன் நடந்துவிட முடியுமா என்ற போராட்டம். 7-ல் நிற்கும் குரு கடந்த மாதம் முதல் வக்ரகதியில் நின்று ராசியைப் பார்க்கிறார். என்றாலும் கடைசி நேரத்தில் தட்டுப்பாடு விலகி காரியங்கள் கைகூடும். 9-க்குடைய புதனும் 10-க்குடைய சுக்கிரனும் ஒன்றுகூடி விருச்சிகத்தில் சேர்க்கை. தர்மகர்மாதிபதி யோகம் உறுதியாக கைவிடாது. அதற்கு உங்களது விடாமுயற்சியும் நம்பிக்கையும்தான் மிக முக்கியம். எந்த இரவும் விடியாமல் இருந்துவிடுவதில்லை. தொழில்துறையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திருப்புமுனை நிகழும். பெரிய மனிதர்களின் சந்திப்பு பிரச்சினையி-ருந்து விடுவிக்கும். 

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி ஜென்மத்தில் கடந்த மாதம் வக்ரகதியி-ருந்து நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். 2-க்குடைய குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனவரவுக்கு குறைவு இருக்காது. ராசியிலுள்ள ராசிநாதன் சனியும் 3, 7, 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் உத்தியோகம் நல்லமுறையில் அமையும். பிஸியான ஆளாகவே உலாவரும் நிலை. கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரவகையில் இருந்துவந்த சங்கடம் விலகும். கணவன் அல்லது மனைவிவழி உறவினர்களிடையே மனவருத்தம் தோன்றும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதற்கிணங்க சற்று விட்டுக்கொடுத்தால் உறவுக்குள் பகை ஏற்படாது. 21-ஆம் தேதிமுதல் குரு மிதுன ராசிக்கு மாறி ராசியைப் பார்ப்பதால் (வக்ரகதியில் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த ஏழரைச்சனியில் சந்திர தசையோ- சந்திர புக்தியோ நடப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடனும் கவனமுடன் நடந்துகொள்வது அவசியம். சிலர் உத்தியோக இடமாற்றத்தை சந்திக்கலாம். 

மீனம்

மீன ராசிநாதன் குரு 5-ல் வக்ரமாக நின்று ராசியைப் பார்க்கிறார். உடல்நிலையில் திடீர் திடீரென்று தொந்தரவுகள் ஏற்படலாம். வேலையில் சற்று அலைச்சல் அதிகமாகக் காணப்படும். என்றாலும் தொழில் துறையில் உள்ளவர்களுக்கு தொழில் இயக்கம் நல்லமுறையில் இயங்கும். 12-ல் உள்ள விரயச்சனி வேலை, குடியிருப்பு இவற்றில் இடமாற்றத்தைத் தரும். 9-க்குடைய செவ்வாய் 10-ல் மாறுவது தர்மகர்மாதிபதி யோகத்தைத் தரும். அது வாழ்க்கை, தொழில் இரண்டிலும் யோசித்து செயல்படக்கூடிய தன்மையைத் தரும். 2-க்குடையவர் செவ்வாய் என்பதால் அவரை வக்ரகதியில் பார்க்கும் குரு குடும்பத்தினரிடையே சச்சரவு, சண்டை, வாக்குவாதம் இவற்றை இம்மாத இறுதியில் தருவார். பொறுமையுடன், அமைதி காப்பது அவசியம் 16-ஆம் தேதிமுதல் சூரியன் 10-ல் மாறுவார். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலம் அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சி போன்றவற்றை சந்திக்கலாம். கொடுக்கல்- வாங்க-ல் கவனம் தேவை. தொழி-ல் நேரடி கவனிப்பு அவசியம். பணியாளர்களை முழுமையாக நம்பி செயல்படவேண்டும்.

om011225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe