சீராளர்களால் கைது செய்யப் பட்டவர்களின் கால்களில் ஊற்றப்பட்ட எரிநீரால் அவர்களது பாதங்கள் வெந்த நிலையில், நெடுமிடலின் உடல் எரிந்த மேடைக்கு அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதே நேரத்தில் காவல் கோட்டத்தின் கிழக்குப்புறத்தின் வெளிப்பக்கம் பார்த்தவண்ணம் யானைகளில் அமர்ந்திருந்தவர்களில் இரு வீரர்கள் "சீராளர்கள் இரண்டு நபர்களை விலங்கிட்டு இழுத்து வருகிறார்கள். காவற்கோட்டத்திற்குள் அவர்கள் நுழைவதற்கு வழி கொடுங்கள்' என உரத்த குரலில் கத்தினார்கள்.
இதனைக்கேட்ட இரண்டு யானைப் பாகர்கள், தங்களது யானைகளைக் காவற்கோட்டத்திலிருந்து பின்னோக்கி நகரச் செய்து அவர்கள் உள்ளே நுழைய வழி செய்து கொடுத்தனர். ஏற்கெனவே துறைமுகப்பட்டினத்தில் காவல் பணியிலிருந்த யவன வீரர்கள் புடைசூழ, சீராளர்கள் அவர்கள் இருவரையும் இழுத்துவந்து தலைமைச் சீராளரின் காலடியில் தள்ளினார்கள்.
இவர்களை இழுத்துக் கொண்டு வந்த சீராளர்கள் யாரெனில், பாண்டிய மாளிகை யின்முன் கட்டியிருந்த நெடுமிடலின் குதிரையின் பரிதவிப்பைக் குறைப்பதற்கு அதன் இருமருங்கிலும் தங்க ளுடைய குதிரைகளைக் கட்டி வைத்துவிட்டுச் சென்றவர்கள்.
இவர்கள் ஒற்றர்கள் அனுப்பி யிருந்த செய்திகளின்படி துறைமுகத்தில் காவற்பணி புரிந்து கொண்டிருந்த யவன வீரர்களின் துணைகொண்டு, பரத வர்களின் குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த இந்த இருவரையும் தப்பிக்கவிடாமல் சூழ்ந்து பிடித்து இழுத்து வந்துள் ளனர்.
வந்த இரு சீராளர்களில் ஒருவர், தலைமைச் சீராளரைப் பார்த்து "மெய்மொழி அரையனாரே! இவர்கள் ஒரு கொடிய செயலைச் செய்து முடிக்க இங்குவந்து பதுங்கியிருந் துள்ளனர். இவர் கள்போல் இன்னும் பலர் ஐந்து மரக்கலன்களில் கீழ்த்திசையில் குணக்கடலில் முகாமிட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் காவிரி ஆற்றின் முதலைத் தோல்களைத் தங்களது உடற்கவசங்களாக அணிந்து வந்துள்ளனர். ஆகவே, இவர்கள் சோழநாட்டுக் கப்பற்படையினராக இருக்கலாம்' எனக் கூறினார். இதுகேட்ட மெய்மொழி அரையனார் "இவர்கள் கடற்கொள்ளையர்களாகவும் இருக்கலாம்' எனக் கூறிக்கொண்டே அவர்கள் இருவரையும் உற்று நோக்கலானார்.
இங்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், முற்காலச் சோழர்களது காலத்தில் சோழர் கப

இங்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், முற்காலச் சோழர்களது காலத்தில் சோழர் கப்பற்படை போர் வீரர்கள் அனைவரும் போருக்குச் செல்லும்போது காவிரி ஆற்றில் இருக்கும் மிகப்பெரிய முதலைகளின் தோல்களைத் தங்களுடைய போர்க்கவசங்களாக அணிந்துகொண்டு போருக்குச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் தற்போதுள்ள பரமத்தி வேலூர் என்னுமிடத்தில் மிக அதிக அளவில் பெரிய பெரிய முதலைகள் இருக்கும். இவற்றைப் பிடிப்பதென்பது மிகத்திறமையான செயலாக இருந்தது. இவற்றைப் பிடித்து அவற்றின் வயிற்றுப்புறம் மிகக் கடினம் வாய்ந்த கூரிய கத்தியால் கிழித்து, அதன் தோலை உரித்து, போர்க் கவசங்கள் தயாரித்துக் கொடுக்கும் தொழில் செய்தவர்கள், அங்கு அதிக அளவில் வாழ்ந்துவந்தனர். அதனால், இத்தொழில் செய்தவர்கள் அதிகப் பொருளீட்டுபவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட கவச உடைகளை வாங்குபவர்கள் பெரும்பாலும் கடற்கொள்ளையர்களாகவேதான் இருந்திருக்கிறார்கள். ஆதலால், பின்னாளில் பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் இக்கவசங்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதித்துவிட்டனர். இக்கவச உடைகளை அணிந்துகொண்டால், கூரிய வேலால் குத்தவோ, நீண்ட வாளால் உடலை வெட்டவோ இயலாது. அந்த அளவிற்கு முதலையின் முதுகுப்புறத்தோல் கடினத் தன்மையுடையதாக இருக்கும்.
மேலும் இதை அணிந்துகொண்டு கடலில் நீண்ட தூரத்திற்கு நீந்திச்செல்லலாம். கடலில் நம் உடல் மூழ்காமல் மிதக்கவிடும் தன்மையுடையதாகவும் இது இருந்தது.
மெய்மொழி அரையனாரின் பார்வை ஏற்கெனவே பிடிபட்டிருந்த யாழ்ப்பாணனிடம் திரும்பியது.
அவரது பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட பாண ஒற்றன் "ஐயா இவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதோ இவனுக்குத்தான் தெரியும்' என சிவந்த கண்களால் அவனை ஏற்கெனவே கோபமுற்று முறைத்து வந்தவனைச் சுட்டிக் காட்டினான். அவன் காட்டிய நபரிடம் சென்று மெய்மொழி அரையனார் "இவர்கள் யார்? இவர்கள் இங்குவந்த நோக்கம் என்ன? இதை நீ சொல்லவில்லையானால் உன்னுடைய முகம் உருக்குலையும்படி எரிநீர் ஊற்றப்படும்' எனச் சினத்துடன் எச்சரித்தார்.
கால்கள் இரண்டும் வெந்து காந்தலுற்ற நிலையில், வேதனை தாங்காமல் அவன் சினத்தோடு சீறினான். "இதோ பாரும்! எங்களை நீவீர் என்ன செய்தாலும் நாங்கள் வந்த நோக்கத்தை உம்மால் தடுக்க இயலாது. இன்றுபொழுது புலர்வதற்குள் நீவீர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்கள் மன்னனின் உயிர்த்தோழன் "கடலன் வழுதி' கரை சேர்வதற்குள் உன்னுடைய மன்னனைப்போலவே கொல்லப்பட இருக்கிறான். கீழ்த்திசையிலே குணக்கடலிலே அவனது கப்பற்கலன்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அக்கலன்களோடு அவனும் சேர்த்து எரியூட்டப்பட இருக்கிறான். எம்மிடம் உம் வீரத்தைக் காட்டாது,
முடிந்தால் எம்மாட்களோடு கடற்போரிட்டு, அதனைத் தடுத்துப்பார். இல்லையேல், உம்முடைய சாம்பலும் உன் நண்பன் கடலன் வழுதியின் சாம்பலும் நெடுமிடலின் சாம்பலோடு சேர்த்துவைத்து உம் மக்களால் நாளை "நீர்க் கொடை' கொடுக்கப்படுவது உறுதி. நாளை இதுவேளை இந்த முத்தூற்றுக் கூற்றம் முழுமையும் எங்களது சோழரது ஆட்சியின் கீழ்வரும்' எனச் சினத்தால் உடல் நடுங்க உறுமினான்.
இதனைக்கேட்ட சீராள குருமார்கள் அத்தனை பேர்களும் உடல் முழுவதும் எரிநீர் ஊற்றப் பட்டதுபோல துடிதுடித்து முகம் சிவந்தார்கள். மெய்மொழி அரையனாரின் உதடுகள் துடி துடிக்க "ஏ மூடனே! உன்னைப் போன்ற இழிபிறவி யாம் இல்லை. பதுங்கித் தாக்குவதற்கு உன்போல் ஆண்மையற்ற கோழையும் யாங்கள் இல்லை. எங்கள் பாண்டியப் பேரரசின் சீராளர்கள் ஒவ்வொருவரும் உம்மைப் போன்ற பத்துப் பேர்களது வீரத்தையும் மதிநுட்பத்தையும் ஒருங்கே கொண்டவர்கள். உம்முடைய திட்டங்களைத் தவிடுபொடியாக்கி யாம் வெற்றியடைவதை உன்னுடைய கண்ணால் பார்க்கவேண்டும். அதுவரை நீ உயிரோடு இருக்கவேண்டும்' எனக் கூறி, தம் வீரர்களைப் பார்த்து "இங்குள்ள அனைவரையும் பாண்டியர் மாளிகைச் சிறையிலடையுங்கள். மாளிகையைச் சுற்றிலும் மூவடுக்குப் பாதுகாப்பிடுங்கள். இவனை மட்டும் உயரக் கம்பங்கள் நட்டு அவற்றின் உச்சியில் கீழ்த்திசை நோக்கி இறுகக் கட்டுங்கள். நமது வெற்றியை ஒவ்வொரு கணமும் இவன் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்' என அவர் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கையிலேயே அவன் மேலும் எக்காளமிட்டான். "ஏ சீராளனே! அதோ பார், உம்முடைய துறைமுகத்துக் கலங்கரை விளக்கங்கள் இரண்டும் சரிந்து வீழ்வதைப் பார். இத்தருணம் முதல் இத்துறைமுகம் சீரழிவதை யான் பார்க்கும்வண்ணம் உயரமான இடத்தில் என்னை வையுங்கள்' எனக் கைதட்டிச் சிரித்தான்.
அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் உயரமாக இருந்த கலங்கரை விளக்கங்களைப் பார்த்தனர். அதன் உச்சியில் நெருப்பூட்டப்படும் கோபுரங்களை இடித்துச் சரித்துக்கொண்டிருக்கும் பகைவர்களின் தீவெட்டி வெளிச்சங்கள் தெரிந்தன. மெய்மொழி அரையனார் "இவனது கைவிரல்கள் அனைத்தையும் வெட்டுங்கள். இவனது உடலிலிருந்து இரத்தம் வெளியேறி இவன் உயிர் பிரிவதற்குள் நம் வெற்றியை இவன் பார்த்தாகவேண்டும்' எனச் சூளுரைத்து, தனது உயரமான குதிரையின்மீது தாவி அமர்ந்தார். "சேந்தன் நல்லனே! இங்கு இப்பணியை கடுங்காவலொடு நீங்கள் செய்திருங்கள். யாங்கள் குணக்கடலுக்குள் சென்று கடலன் வழுதியைக் காத்துக் கரை சேர்க்க ஆயத்தமாகிறோம்' எனக் கூறி, தன் கடமைக்குள் நுழைந்தார்.
இத்தருணத்தில் நாம் அறிந்துகொள்ளவேண்டியது கடலன் வழுதியைப் பற்றியும், நீர்க்கொடையைப் பற்றியும், முத்தூற்றுக் கூற்றத்தைப் பற்றியதுமாகும்.
கடலன் வழுதி என்பவன் ஆழிப் பேரலைகளின் சீற்றங்களையும், காற்றின் அளவையும் திசையையும் அளவிட்டு அதற் கேற்ப பாய்மரங்களைப் பயன்படுத்தியும், மேலும் கடற்பயணத்தில் பல உத்திகளைப் பயன்படுத்தி, பாதுகாப்பான கடற்பயணத்தை உருவாக்க சில விதிகளை வகுத்துத்தந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவன். பாண்டிய மன்னரின் நம்பிக்கை மிகுந்த ஆருயிர் நண்பன்.
இவனது வாணிப உத்திகளைக் கண்டுவியந்த பிற நாட்டு வணிகர்களால் இவன் "வாணிபச் சக்கரவர்த்தி' எனப் புகழப்பட்டவன். பாண்டிய மன்னன் மீதிருந்த அளவற்ற பாசத்தின் காரணமாக மருங்கூர் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கருமிளகுச் சரக்குகளை கிரேக்க நாடு, ரோமாபுரி, எகிப்து, செங்கடல் பகுதி, மணிபல்லவத்தீவுகள், ஈழம், சாவகத்தீவு, கடாரம், சீன தேசம் மற்றும் மாவளத்தீவு போன்ற அயலகத் தேசங்களுக்குக் கொண்டு சேர்ப்பித்து அதனைச் சிறப்புற்ற வணிகப் பொருளாக்கியவன்.
அதன்மூலம் கிடைத்த செல்வங்கள் மற்றும் ரோமாபுரிப் பொற்காசு களை பாண்டியரின் அரச கருவூலத்திற்குத் தானமாக ஈந்து, மக்களின்மீது வரிச் சுமைகளை ஏற்றாமல், மக்கள் நலனுக்கான பேரரசு, இப்பாண்டியப் பேரரசு என்ற உயர்ந்த நன்மதிப்பைப் பாண்டியப் பேரரசனுக்குப் பெற்றுத் தந்தவன். பிற நாட்டுத் துறைமுகப்பட்டினங்களைக் காட்டிலும் அழகு நிறைந்தவைகளாகப் பாண்டிய நாட்டு துறைமுகங்களை அழகுபடுத்தியவன். முற்காலப் பாண்டியர்கள் அக்கால சேர, சோழர்களைக் காட்டிலும் கடல் வாணிபத்தில் உச்சம் தொட்டவர்கள். அப்போது, ஊனூர் என்னும் செழிமைமிகுந்த வேளாண் நகரையும் துறைமுகப்பட்டினத்தையும் சேர்த்த மருங்கூர் எனும் இரட்டை நகரத்தை வடிவமைத்து அழகுபடுத்திய பெருமை கடலன் வழுதியையே சாரும். இவன் அன்பிற்கு அடிமை யாகும் குணநலத்தான். பாண்டியப் பேரரசியாரைத் தன் தமக்கையாகவே பாவித்தவன். பாண்டிய மன்னருக்கும் அரசியாருக்குமான திருமணப் பரிசாக மருங்கூரில் பொன்னால் இழைக்கப்பட்ட அழகிய பாண்டிய மாளிகையை உருவாக்கித் தந்தவன். இம்மாளிகையைச் சுற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த பொய்கைகளை அமைத்து, பேரரசியாருக்கும் மன்னவருக்கும் பிடித்த மான இடமாக ஆக்கித்தந்தவன்.
இதன்காரணமாக வும் அவன்மீது மன்னவரும் அரசியாரும் கொண்ட பேரன்பின் காரணமாகவுமே முந்நீர்ப் பெருவிழாவினைப் பாண்டியரின் இரண்டாம் தலைநகரமான கொற்கையில் கொண்டா டாமல் மருங்கூரிலே கொண்டாடத் தொடங்கினர். இந்நிலையில், சோழர்களது பூம்புகார் துறைமுகத்தைவிட மருங்கூர் துறைமுகம் வெளிநாடுகளில் பெரும்புகழ் அடையத் தொடங்கியது. அங்கு வெளிநாட்டு வணிகர்கள், புரவலர்கள், யாத்திரியர்கள் தங்குவதற்கான விருந்தினர் மாளிகைகளும், தம் பொருட்களை விற்பனை செய்வதற்கான அங்காடிகளும் அழகுற வடிவமைத்துத் தரப்பட் டிருந்தன.
கடலன் வழுதி செய்யும் வாணிபங்களில் கருமிளகைத் தவிர மற்ற பொருள்களில் கிடைக்கும் செல்வங்களை மட்டுமே தான் எடுத்துக்கொள்வான். அச்செல்வத்தின்மூலம் குணக்கடல், தென்கடல், குடக்கடல் போன்ற பகுதிகளில் இருக்கும் வாணிப நாடுகள் அனைத்திற்கும் தானே பாண்டியப் பேரரசின் பிரதிநிதித்துவ தூதுவனாகச் சென்று, அத்தனை நாடுகளின் நட்பையும் பாண்டியப் பேரரசுக்கு உரித்தாக்கியவன். இதன் காரணமாகவே தாலமி, இபின்பட்டுடா, அல்பருனி, மார்கோபோலோ போன்ற அயல் நாட்டுத் தூதுவர்கள், முற்காலத்திலிருந்தே தொடர்ச்சியாக பாண்டியப் பேரரசைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் ஈர்ப்பையும் தூண்டும் அளவிற்கு செல்வாக்கையும் புகழையும் பாண்டியப் பேரரசுக்கு ஈட்டித் தந்தவன்.
இவ்வாறு பாண்டிய பேரரசுக்கு வாணிபச் செழிப்பினால் புகழ் ஓங்குவதைக் கண்டு, ஆற்றாமை காரணமாகவே, சேர, சோழ மற்றும் வேளிர் மன்னர்கள் ஒன்றுசேர்ந்து இந்நிலையைத் தகர்த்தழிக்க சதித் திட்டம் தீட்டலாயினர்.
தொடர்ந்து பயணிப்போம்...
தொடர்புக்கு 9944564856
தொகுப்பு: சி.என்.இராமகிருஷ்ணன்