ஜோதிடரீதியாக பல்வேறுவிதமான யோகங்களும் தோஷங்களும் உள்ளது. ஒரு ஜாதகத்தின் யோகத்தையும் தோஷத்தையும் நிர்ணயம் பண்ணுவதில் கிரகச் சேர்க்கைக்கு அதிக பங்கு உள்ளது.

Advertisment

என்னிடம் ஜாதகம் பார்க்கவரும் பலர் குரு, சனி சேர்க்கை பிரம்மஹத்தி தோஷமா? தர்ம கர்மாதிபதி யோகமா?  என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். குரு, சனி சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகம் என்று கூறப்பட்டா லும் சிலர் அதை பிரம்மஹத்தி தோஷம் என்றும் கூறுகிறார்கள். குரு, சனி சேர்க்கை பிரம்ம ஹத்தி தோஷமா அல்லது தர்மகர்மாதிபதி யோகமா என்பதை இந்த கட்டுரையில் நாம் காணலாம்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் காலபுருஷ 9-ஆம் அதிபதியான குரு பகவானுக்கும் காலபுருஷ 10-ஆம் அதிபதியான சனிக்கும் எந்தவிதத்தில் சம்பந் தம் இருந்தாலும் அது தர்ம கர்மாதிபதி யோகமாகும். சிலர் லக்னரீதியான 9, 10-ஆம் அதிபதி சேர்க்கையை தர்மகர்மாதிபதி யோகம் என்று வலியுறுத்துகிறார்கள். எந்த ஒரு தோஷத்தையும் யோகத்தையும் கால புருஷ தத்துவப்படி நிர்ணயம் செய்வது முறையாகும். இந்த கிரக சம்பந்தத்தில் சனி வலுத்தவர்கள் தொழில் ரீதியாக, அரசியல்ரீதியான முன்னேற்றத்தையும் குரு வலுத்தவர்கள் ஆன்மிகம், ஜோதிடம் அறத் தொண்டுமூலம் முன்னேற்றத்தையும் அடைகிறார்கள்.

இந்த கிரகங்களின் சம்பந்தத்தில் சனியின் 3, 10-ஆம் பார்வையில் குரு இருப்பது, சனியும் குருவும் ஒரே ராசி கட்டத்தில் சேர்ந்து இருப்பது, சனியும் குருவும் சம சம்பந்த மாக பார்ப்பது. சனி குருவை நோக்கிச் செல்வது அல்லது குரு மட்டும் சனியை பார்ப்பது அல்லது சனி வீட்டில் குரு நிற்பது அல்லது குரு வீட்டில் சனி நிற்பது போன்ற அமைப்பில் இருந்தால் அது தர்மகர்மாதிபதி யோகமாகப் பலன் தரும். ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குருவும் சனியும் ஒரே ராசி கட்டத்தில் சேருவார்கள். ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் குருவும் சனியும் சமசப்தமாக பார்ப்பார்கள். இந்த கிரகச் சேர்க்கையில் குருவும் சனியும் சம சப்தமாக பார்ப்பதும் ஒரே ராசி கட்டத்தில் சேர்வதும் மிகுந்த சுபத்துவமான அமைப்பாகும். இது 100 சதவிகிதம் தர்மகர்மாதிபதி யோகமாக வேலை செய்யும். மற்ற கிரக சம்பந்தங்கள் ஐம்பது சதவிகதம் பலன் தரும். ஒருவர் தனது தொழில் தர்மத்தால் தான- தர்மத்தினால் தனது வாரிசுகளுக்கு தனது தலைமுறையினருக்கு சேர்த்துவைத்த புண்ணிய பலனாகும்.

Advertisment

சனி என்றால் கர்மா, தொழில்.

குரு என்றால் குழந்தை, பணம்.

சனி என்பவர் லட்சக்கணக்கான பணத்திற்கு அதிபதி. குரு என்பவர் கோடிக்கணக்கான பணத்திற்கு அதிபதி. அதனால் தான் தனித்த குரு, சனி சம்பந்தம் ஜாதகருக்கு தொழில், உத்தியோகம்மூலம் அபரிமிதமான பொருளாதாரத்தை ஜாதகருக்கு வழங்கு கிறது. கூரை வீட்டில் பிறந்தவரையும் கோடீஸ்வரனாக்கக்கூடிய யோகமாகும்.

தர்மகர்மாதிபத்திய யோகம்

ஒரு ஜாதகத்தில் குரு மற்றும் சனியின் சேர்க்கைக்கு  வேறு கிரக தொடர்பு இல்லா மல் இருந்தால் அது தர்மகர்மாதிபதி யோகமாக செயல்படும். அதன்மூலம் அந்த ஜாதகர் கீழ்க்கண்ட சுபப் பலன்களை அனுபவிக்கி றார்.

1. சாதாரண மனிதனாக பிறந்தால்கூட சாதனை மனிதனாக மாறுகிறார்.

2. இந்த கிரக சம்பந்தம் இருக்கும் மனிதன் சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பமே கஷ்டப் பட்டால்கூட ஜாதகர் மட்டும் ஏதாவது துறையில் வெற்றி அடைகிறார்.

3. ஜாதகரின் சாதனையும் அவரின் வெற்றியும் அவரின் காலத்திற்குப் பிறகும்  பெயர் புகழை நிலைத்திருக்க செய்கிறது.

4. எந்தத் திறமையும் இல்லாத சிலர்கூட இந்த கிரக சம்பந்தம் இருந்தால் தகுதிக்கு மீறிய தொழில், உத்தியோக ரீதியான முன்னேற்றத்தை அடைகிறார்கள்.

5. இந்த கிரக சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு நிச்சயமாக பொருளாதார முன்னேற்றம் உண்டு.

6. குரு மற்றும் சனியின் வலுவிற்கு ஏற்ப அவர்களின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல் நிர்ணயிக் கப்படுகிறது.

7. ஏதாவது ஒரு நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகம் உண்டு.

8. குரு, சனி இரண்டும் பலம்பெற்றால் பலவித மான தொழில் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் உண்டு

9. அரசியல் பதவி பலருக்கு நிலைத்து நிற்கக்கூடிய நல்ல பெயர் புகழை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.

10. அரசாங்க உத்தியோகத்தில் குறிப்பாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற துறைகளில் இருப்பவர் களுக்கு பெரும்பான்மையாக உள்ளது இந்த கிரக சம்பந்தம் உள்ளது.

11. அரசாங்கத்தின் ஏதோ ஒரு பிரிவில் உயர் அதிகாரியாக பணிபுரிவார்கள்.

12. தனியார் துறையில் பணிபுரிந்தால் அந்த நிறுவனத்தின்  முதன்மை அதிகாரியாக பணிபுரிவார்கள்.

13. உத்தியோகம், தொழில் போன்றவற்றில் அவர்களுடைய சுய ஜாதகரீதியான சனி குருவின் நிலைக்கு ஏற்ப அவர்களுடைய வருமானம் இருக்கும்.

14. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட நியாயமான தொழில் மூலமாக வருமானம் இருக்கும்.

14. இந்த கிரகச் சேர்க்கை இருப்பவர்கள் எவ்வளவு தாழ்வான நிலைக்கு சென்றாலும் மீண்டும் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவார்கள்.

15. இந்த கிரக சம்பந்தம் உள்ளவர்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் சமாளித்து விடுவார்கள்.

16. கோவில் கட்டுவது கும்பா பிஷேகம் செய்வது போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்

17. கோவில்கள் சமூகத் தொண்டு நிறுவனங்களில் உயர் அதிகாரியாக இருப்பார்கள்.

18. சொந்த பந்தங்கள் இவர்களின் ஆலோசனைக்கு கட்டுப்படுவார்கள்.

20. தொழில், உத்தியோகம் மூலமாக இவர்களின் குல கவரவம் உயரும்.

பிரம்மஹத்தி தோஷம்

ஒரு ஜாதகத்தில் குரு, சனிக்கு செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் இருந்தாலும் அவரவரின் சுய ஜாதகரீதியான அஷ்டமாதிபதி பாதகாதிபதிக்கு குரு, சனி சம்பந்தம் இருந்தால் அது பிரம்மஹத்தி தோஷமாக செயல்படும். அதேபோல் குருவோ சனியோ பகை பெற்றாலும் ஜாதகரால் நல்ல  பலனையும் அனுபவிக்க முடியாது. இதற்கு மேல் வேறு சில சூட்சம சம்பந்தமும் சனி, குருவிற்கு நின்றால் அது பிரம்மஹத்தி தோஷமாக ஜாதகருக்கு பலன் தரும். ஜாதகருக்கு சமுதாயத்தில் பெரிதாக நற்பெயர் கிடைக்காது. 

1. எவ்வளவு வசதி இருந்தாலும்  அது ஜாதகருக்கு பயன்படுவதில்லை. ஜாதகரும் அவரின் குடும்பமும் வாழ்ந்து கெட்டவர்களாக இருக்கிறார்கள்.

2. பல கோடிக்கு சொத்து இருந்தாலும் வறுமை, கடன், நோய் எதிரி சார்ந்த பாதிப்பு இருக்கும்.

3. முன்னோர்களின் சொத்து ஜாதகருக்கு அவர்களின் வாரிசுகளுக்கும் பயன்படுத்த முடியாத வகையில் இருக்கும்.

4. வெகுசிலருக்கு 35 அல்லது 42 வயதிற்குமேல் முன்னேற்றம் உண்டாகும்.

5. நிலையான- நிரந்தரமான தொழில், உத்தியோகம் அமையாது.

6. திருமணம் தடைப்படும்.

7. குழந்தை பிறக்காது அல்லது பெற்ற குழந்தைகளால் மிகுதியான மன உளைச்சல் இருக்கும்.

8. ஜாதகரின் குழந்தைகள் எப்பொழுதும் பெற்றோரை பதட்டத்துடன் வைத்திருப்பார்கள்.

9. குழந்தை பிறந்தாலும் சில பெற்றவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அவர்களை சுதந்திரமாக செயல்படவிட மாட்டார்கள்.

10. சிலரின்  பிள்ளைகள் பிறந்ததுமுதல் தாத்தா பாட்டி வீட்டில் இருப்பார்கள்.

11. சிலரின் பிள்ளைகள் விடுதியில் படிப்பார்கள்.

12. சில பிள்ளைகளின் பெற்றோர் களுடன் ஒட்ட மாட்டார்கள். வெளியூர், வெளிநாட்டில் வசிப்பார்கள்.

13. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள்.

கர்ம கிரகமான சனிபகவான் குழந்தையை பற்றி கூறும் கிரகமான குருவை பார்ப்பதால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு உணர்வுபூர்வமான பரிமாற்றம் இருக்காது.

பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட பலவிதமான காரணங்கள் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையாக காசு, காமம், சொத்து இந்த மூன்று விஷயங்களால் மட்டுமே ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனி குருவும் வேறு கிரக தொடர்பு இல்லாமல் சுப பலன்களை வாரி வழங்கும்போது கோட்சாரத்தில் சனி குருவிற்கு ராகு- கேது அல்லது செவ்வாய் சம்பந்தம் வரும்போது தசாபுத்தி சாதகமற்று இருந்தால் தொழில், உத்தியோகரீதியான சில அசௌகரியங்கள் உண்டாகும். இது ஒரு குறுகியகால பிரச்சினை என்பதை உணராத பலர் தவறான துர்போதனைகளை நம்பி தமக்குப் பிரம்மஹத்தி தோஷம்  உள்ளது  என்று சம்பந்தமில்லாத பிரார்த் தனைகள், வழிபாடுகளில் ஈடுபட்டு பிரச்சினைகளை அதிகரித்துக் கொள்கிறார்கள். 

உதாரணமாக இராமர் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம். அவர் கடக லக்னத்தில் பிறந்தவர். லக்னத்திலுள்ள  உச்ச குருவிற்கு உச்ச சனியின் பத்தாம் பார்வை உள்ளது. உச்சனை உச்சன் பார்த்தால்  பிச்சைகூட மிஞ்சாது என்பது ஜோதிட பழமொழி.

உச்ச குருவிற்கு உச்ச  செவ்வாயின் பார்வை இருந்ததால் அவருக்கு தர்மகர்மாதிபதி யோகம் பிரம்மஹத்தி தோஷமாக செயல்பட்டது. அவர் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்திற்கு இளவரசனாக இருந்தபோதிலும் அவரால் எதுவும் அனுபவிக்க முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்தார். இதுபோன்று எந்தவிதமான தோஷமாக, யோகமாக இருந்தாலும் அதை தீர ஆய்வு செய்து அதற்கான பலனை அறியவேண்டும்.

செல்: 98652 20406