"எஸ் 3 பிக்சர்ஸ்' சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் "ஜாம்பி' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yashika_6.jpg)
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம். கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், "லொள்ளு சபா' மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போலதான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆதலால், படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் வி.ஜி.பி போன்ற பிரபல ரிசார்ட்களில் வேகமாக நடைபெற்று முடிந்தது.
சென்னைமுதல் புதுச்சேரி வரையுள்ள ஈ.சி.ஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பதுபோல் உருவாகி யுள்ளது.
புவன் நல்லன் இயக்கும் இப் படத்துக்கு இசை பிரேம்ஜி.
"ஜாம்பி'-யின் டப்பிங் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/yashika-t.jpg)