ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் "ஜிப்ஸி' படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் தொடங்கியது.

Advertisment

ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனத்தின் சார்பில் ந. அம்பேத்குமார் தயாரிக்க நாயகனாக நடிக்கிறார். இமாச்சலப் பிரதேச அழகி நடாசா சிங் நாயகியாக நடிக்கிறார்.

Advertisment

zippsy

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, "அருவி' படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். "நாச்சியார்' பட கலை இயக்குநர் பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்துள்ளார்.