மிழில் தேசிய விருது பெற்ற "வாகை சூடவா' படம் மூலம் கதாநாயகியாக அறிமுக மானவர் இனியா.

Advertisment

தற்போது தமிழில் "காபி', மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான "மாமாங்கம்', பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் "தாக்கோல்' மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் "துரோணா' ஆகிய படங்களில் கதா நாயகியாக நடித்து வருகிறார் இனியா.

Advertisment

கடந்த வருடம் மலையாளத் தில் ‘பரோல்' மற்றும் 'பெண் களில்ல, ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகையாக 2018-ஆம் வருடத்திற்கான 'கேரளா ஃபிலிம் கிரிட்டிக்' விருதைப் பெற்றுள்ளார் இனியா.

iniya

நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும், இசை மற்றும் நடனம் மீதும் தீராத காதல் கொண்டவர் இனியா. இதனா லேயே நடிகை களில் எவரும் இதுவரை செய்திராத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கும் இனியா, 'மியா' என்கிற வீடியோ இசை ஆல்பத்தை 'அமையா என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனத் தின் மூலம் தானே சொந்தமாக தயாரித்துள் ளார்.

Advertisment

"கங்ற்ள் க்ஹய்ஸ்ரீங்' என்கிற சர்வதேச நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண் ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத் தைக் கற்றுக் கொடுத்து அவளை வெற்றிபெற செய்கிறான்.. இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான "டிவோ' மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் "யு-1' ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா..

விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் சொல்கிறார் இனியா.

டைட்டிலைப் படிச்சுட்டு ஓ... அப்படியான சமாச்சாரம்னு நீங்க நினைச்சிருப்பீகளேப்பு...!

-ஈ.பா.ப.