Advertisment

இளம் சாதனையாளன்!

/idhalgal/cinikkuttu/young-record-holder

தென்னிந்திய திரைப்பட விருது நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று 'சைமா'. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது "மேகம் செல்லும் தூரம்' என்ற தனி இசை குறும்படப் பாடல

தென்னிந்திய திரைப்பட விருது நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று 'சைமா'. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது "மேகம் செல்லும் தூரம்' என்ற தனி இசை குறும்படப் பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது.

Advertisment

ssa

டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய விக்னேஷ் குமார் நடித்து, இயக்கிய குறும்படம் "மேகம் செல்லும் தூரம்'. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளியானது. இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் என்ற சூர்யா இசையமைத் திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந் தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார்.

ஏற்கெனவே இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத் தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. "இதன் இசையும் பாடலும் மனதைத் தொடுவதாகவும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் வகையிலும் இருந்தது' என்று பாராட்டி இருக்கிறார் கள். ""தற்போது சைமா விருது பெற்றது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது'' என்று இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் கூறியுள்ளார்.

Advertisment

இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ், மேற்கத்திய இசையில் திறமை பெற்று, 16 வயதிலேயே லண்டனில் உள்ள ரிக்கார் டிங் லேபிள் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிறுவனம் இவரது இசையில் உருவான பாடல்களை அமேசான், ஆப்பிள் ஐடியூன்ஸ, ஸ்பாட்டி பை உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட இசைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது.

"தினத்தந்தி' நாளிதழில் சினிமா நிருபராக இருக்கும் முருகன் அவர்களின் புதல்வன்தான் ஜாட்ரிக்ஸ்.

cine200819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe