முன்னணி இளம் நடிகை களுக்குரிய முகவெட்டு இல்லா விட்டாலும் வாட்டசாட்டமான உடல்வாகுடன் சினிமாவிற்குள் என்ட்ரியானவர் வரலட்சுமி சரத்குமார். சிம்புவுடன் ஜோடி போட்ட "போடா போடி'-தான் வரலட்சுமியின் முதல் படம். இளம் நடிகையான வரலட்சுமிக்கு இப்போது வயது 35-தான். "35 வயசு உங்களுக்கு இளம் நடிகையா?'ன்னு உங்களோட மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கத்தான் செய்யுது. வயசு என்னங்க வயசு, நல்ல ஹெல்த்தியுடன் ஆடிப்பாடி நடிச்சா இளம் நடிகைதான்... அதிலும் திருமணமாகாத வரைதான்.
அட வயசப் பத்தி இப்ப என்னங்க ஆராய்ச்சி? மேட்டருக்கு வருவோம் வாங்க, படிங்க.
தனது தாய் சாரா, தங்கை பூஜா ஆகியோருடன் சென்னையில் வசிக்கும் வரலட்சுமி இதுவரை 18 படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்போது தமிழில் "ராஜபார்வை', "டேனி', "சேஸிங்', "கன்னிராசி', "காட்டேரி', "வெல்வெட் நகரம்', "கலர்ஸ்',
"பிறந்தாள் பராசக்தி', தெலுங்கில் "கிராக்', கன்னடத்தில் "ரணம்' என மொத்தம் ஒன்பது படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் வரலட்சுமி.
"நடிச்ச படங்களோ 18... நடிச்சிக்கிட்டிருக்கிற படங்களோ ஒன்பது. எப்படி இப்படியெல்லாம்...' என இளம் நடிகைகள் இரண்டுபேர் சேர்ந்தாலே இதைத்தான் பேசுகிறார் கள். வரிசையாக படங்களை கேட்ச் பண்ணுவதில்தான் வரலட்சுமியின் டெக்னிக்கும் இருக்கிறது... வரலட் சுமியின் மேனேஜர் ஆதியின் அக்கப்போரும் இருக்கிறது.
முதலிலில் வரலட்சு மியிடம் கதை சொல்லப் போனவர்கள், போகிற வர்களின் கதையைப் பார்ப்போம்.

வரலட்சுமி வரச் சொன்ன நேரத்திற்கு அவரது வீட்டிற்கு தயாரிப்பாளரும் டைரக்டரும் போவார்கள். போன வர்களை வரவேற்று ஹாலில் அமரச் சொல்லும் வரலட்சுமியின் அம்மா சாரா, ""மேடம் இன்னும் எந்திரிக்கல. மேடம் இன்னும் குளிக்கல. மேடம் வெளியில போய்ட்டு இன்னும் வரல'' இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிலி காக்கவைப்பார்.
"பரவாயில்லங்க வெயிட் பண்றோம்' என வந்தவர்கள் சொன்னதும், வந்த வர்களுக்கு தண்ணீர்கூட கொடுக்காமல் உள்ளே சென்றுவிடுவார் சாரா. குளித்து முடித்து சாவகாசமாக ரூமிலிலிருந்து வெளியேவருவார் வரலட்சுமி. டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, ""கதையெல்லாம் ஓ.கே.! 15 நாள் கால்ஷீட்டுக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம். அதுக்குமேல கால்ஷீட் வேணும்னா அதுக்குத் தனி சம்பளம்'' என தடாலடியாகப் பேசுவார் வரலட்சுமி.
இந்த இடத்துலதான் என்ட்ரியாவார் வருவின் மேனேஜர் ஆதி. ""மேடத்துக்கு தெலுங்குல நல்ல மார்க்கெட் இருக்கு! அங்கே 80 லட்ச ரூபாய் சம்பளம். கதை நல்லாருக்குக் கிறதாலதான் 15 நாளைக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம். அப்புறம் என்னோட கமிஷன் 5% கரெக்டா வந்துரணும்'' என குண்டைத் தூக்கிப் போடுவார் ஆதி. ""ஆமா... அவரு சொல்றது கரெக்ட்தான்! அவரு சொல்றமாதிரி நடந்துக்கங்க'' என வருவும் வாசிப்பார்.
சம்பளத்துக்கான ஜி.எஸ்.டி. வரியையும் தயாரிப்பாளர்தான் கட்ட வேண்டும். அதிலும் ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார் வரு. 40 லட்ச ரூபாய்க்குமேல் சம்பளம் என்றால், தனது தங்கை பூஜா பெயரிலும், தாய் சாரா பெயரிலும் பிரித்துப் பிரித்து வாங்குவார், கருப்பில் பாதி வெள்ளையில் பாதியாக!
"கலர்ஸ்' படத்தை சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பார்ட்டியும், "சேஸிங்' படத்தை மலேசியாவைச் சேர்ந்த ஒரு பார்ட்டியும் தயாரிக்கிறார்கள். "டேனி', "சேஸிங்', "ராஜபார்வை' படங்களின் தயாரிப்பாளருக்கு தனித்தனியாக ஃபோன் பண்ணும் வருவின் மேனேஜர் ஆதி, ""மேடத்துக்கு சன் டி.வி.யில இருக்கும் செல்வாக் கால் மூணு படத்தையும் சன் டி.வி.யே வாங்கிருச்சு. இதுக்கு தனியா எனக்கு கமிஷன் கொடுத்தா ஓ.கே.'' என்பார்.
"அதெப்படிய்யா "ராஜபார்வை'-யைத்தவிர, நம்ம படமெல்லாம் பாதிதான் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள சன் டி.வி. எப்படி வாங்கும்?' என மண்டையப் பிய்த்துக்கொள்வார்கள். ஒரு நாள் மூன்று தயாரிப்பாளரும் ஒரே இடத்தில் சந்திக்கும்போதுதான் ஆதியின் அக்கப்போர் தெரியவரும். ஆதியின் டார்ச்சர் தாங்கமுடியாமல், வரலட்சுமியின் மேக்கப்மேனும் ஹேர்டிரஸ்ஸரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள். வருவின் கார் டிரைவரும் எஸ்கேப்பாகிவிட்டார்.
இப்ப, "ராஜபார்வை' பட மேட்டருக்கு வருவோம்.
இந்தப் படம் முடிந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. படத்தின் புரமோவிற்கு வரலட்சுமியைத் தயாரிப்பாளர் அழைத்தபோது, ""விஜய் சேதுபதிக்கு "மக்கள் செல்வன்' என்ற பட்டம் போடுறமாதிரி,
எனக்கு "மக்கள் செல்வி' என்ற பட்டத்தை டைட்டிலில் போட்டு காட்டுங்க... அதுக்கப்புறம் வர்றேன். சமூக சேவையில் அதிக நாட்டமுள்ள எனக்கு "மக்கள் செல்வி'-ங்கிற பட்டம் போடுறதுல என்ன தப்பு இருக்கு?'' என அதிரடி கிளப்பினாராம் வரலட்சுமி.
என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியாம கிறுகிறுத்துப் போய்விட்டாராம் "ராஜபார்வை'-யின் தயாரிப்பாளர்.
சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான எஃபெக்ட்தான் வரலட்சுமியை மேனேஜர் ஆதிமூலம் ஆடவைக்குது.
வரலட்சுமியை வைத்து செமத்தியாக கல்லா கட்டும் ஆதி, சென்னை நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோ மேனேஜருடன் கைகோர்த்துக்கொண்டு கலக்ஷனை வாரிக்குவிக்கிறாராம். அந்த ஸ்டுடியோவில் செட் போடுவதற்கு எல்லா வகையிலும் நான் உதவுகி றேன் எனச் சொல்லிலி முதலிலில் ஆர்ட் டைரக்டரிடம் பிட்டைப் போட்டு, அதன்பின் தயாரிப்பாளரை கரெக்ட் பண்ணிவிடுவாராம்.
அப்படித்தான் ரஜினியின் "காலா' படத்தின் செட்டை வாடகைக்குவிட்ட வகையில் இரண்டு கோடி ரூபாய் கல்லா கட்டிவிட்டாராம் ஆதி. சமீபத்தில் ஆதியிடம் சிக்கி, தலை தப்புனது தம்புரான் புண்ணியம் என நினைத்துக்கொண்டு, பெங்களூரைச் சேர்ந்த தயாரிப்பாளரும் டைரக்டரும் ஓட்டம் எடுத்திருக்கிறார்கள்.
"பார்டர்' என்ற தமிழ்ப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் டோனியும் டைரக்டர் ஓசூர் வெங்கடேசும் வரலட் சுமியிடம் கதை சொல்ல, அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்ததுமே மேனேஜர் ஆதி எதிரே வந்திருக்கிறார். ""மேடம் இன்னும் ரெடியாகல. அதனால நீங்க வெளியில போய் டீ, காபி சாப்பிட்டு வாங்க'' என்றிருக்கிறார்.
"இதென்னடா புது ரூட்டா இருக்கு' என யோசித் தபடியே, வெளியே சென்று டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குள் என்ட்ரியாகியிருக்கிறார்கள்.
டைரக்டர் வெங்கடேஷ் ஒரு கதை சொல்லிலியிருக்கிறார். ""அடடா! இது சின்னக்கதை! மேடத்துக்கு இருக்கும் மார்க் கெட்டுக்கு வெயிட்டா ஒரு கதை சொல்லுங்க.
மேடத்துக்கு 95 லட்சம் சம்பளம் கொடுத்துருங்க. அதுல 5% எனக்கு கமிஷன். படத்தை மூன்று கோடி ரூபாய்ல முடிங்க. நான் வித்து தர்றேன், அதுக்கு எனக்கு 5% கமிஷன் கொடுத்துருங்க'' என ஆதி போட்டுத் தாக்கியதும், "ஆத்தாடியாத்தோவ்! இது நமக்கு தாங்காதுடா சாமி' என அலறியடித்து ஓட்டம் பிடித்துவிட்டார்களாம்.
மேனேஜரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் அளவுக்கு வரலட்சுமியின் நிலைமை போனதற்குக் காரணம் என்ன? பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் நாம் கேட்டபோது, வரலட்சுமியின் வருமானம்வரும் வழிகளெல்லாம் ஆதிக்குத் தெரியும்.
அதுபோக, பல லட்சங்களை ஆதிமூலம் சினிமாவில் வட்டிக்கு விட்டுள்ளார் வரலட்சுமி. தெலுங்கு புரொடியூசர்கள் சிலர் ஆதியின் அட்டகாசத்தைப் பற்றி வரலட்சுமியிடம் சொல்லிலிவிட்டதால், இப்போது பிரவீன் என்பவரை தெலுங்கு சினிமாவிற்கு மேனேஜராக நியமித்துள்ளார். வரலட்சுமிக்கு வரவேண்டிய தொகை மொத்தமும் கைக்கு வந்ததும் ஆதியைத் தூக்கிக் கடாசிவிடுவார். அதன்பின்தான் வரலட்சு மிக்கு தனலட்சுமி கைகொடுப் பாள்'' என்கிறார்.
ஆதி போன்ற மேனேஜர் களின் பிடியில் மாட்டிக் கொண்டு இன்னும் எத்தனை நடிகைகள் தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்களோ?
-ஈ.பா. பரமேஷ்வரன்