Advertisment

உறுதியுடன் இளம் நடிகர்!

/idhalgal/cinikkuttu/young-actor

மீபத்தில் வெளிவந்த "துப்பாக்கி முனை' படத்தில் வில்லனுக்கு மகனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் நடிகர் மித்ரன் பேசுகிறார்.

Advertisment

youngactor.""சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டுமென்று மு

மீபத்தில் வெளிவந்த "துப்பாக்கி முனை' படத்தில் வில்லனுக்கு மகனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் நடிகர் மித்ரன் பேசுகிறார்.

Advertisment

youngactor.""சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டுமென்று முயற்சியில் இறங்கினேன். கோடம்பாக்கத்திற்குள் நுழைந்த பிறகுதான் சினிமா சுலபம் இல்லை என்று புரிந்துகொண்டேன். பிறகு ஒரு விமான நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்தேன். ஆனா லும் சினிமா ஆசை என்னைவிட்டு விலகவில்லை. அந்த வேலையை விட்டுவிட்டு "நீயா நானா' நிகழ்ச்சித் தயாரிப்பில் பணியாற்றினேன்.

அப்போதுதான் "இந்திரஜித்' படத்தின் கோ டைரக்டர் கென்னடியின் அறிமுகம் கிடைத்தது.அவர்தான் "துப்பாக்கி முனை' இயக்குநர் தினேஷிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அவர் வைத்த ஆடிசனில் நான் செலக்டாகிவிட்டேன். படத்தில் வில்லனின் மகனாக நடிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் தாணு சார் வெகுவாக பாராட்டினார்- சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஆடியன்ஸோடு உட்கார்ந்து படம் பார்த்தேன். இடைவேளையில் என்னை அடையாளம் கண்டுகொண்டவர்கள் பாராட்டியபோது நான் பெரிய விருது வாங்கியதுபோல் மிதந்தேன். சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்'' என்கிறார் இளம் நடிகர் மித்ரன்.

cine150119
இதையும் படியுங்கள்
Subscribe