"நெஞ்சிருக்கும்வரை' படம்மூலம் தமிழில் அறிமுகமான பூனம்கவுர் பின்னர் "என் வழி தனி வழி', "பயணம்', "வெடி', "6 மெழுகுவர்த்திகள்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சீரியல்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் நடிகை ஸ்ரீரெட்டியின் விவகாரம் குறித்துப் பேசியபோது...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poonmkapoor.jpg)
""சினிமாவில் இதுபோன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருக்கின்றன. முன்னணி தெலுங்குப் பட தயாரிப்பாளர் ஒருவர் என்னுடைய படங்களைப் பார்த்து புகழ்ந்து எனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அவர் அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்கக் கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை.
இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாகக்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமாங்களை சந்திக்க நேருகிறது'' என்றார்.
ஸ்ரீரெட்டி மாதிரி பூனம்கவுர் எப்போ சரவெடிய கொளுத்தப் போறாரோ...?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/poonamkapoor-t.jpg)