யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் "தர்மபிரபு' படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்திருக்கிறார். எமன் மற்றும் எமலோக
யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் "தர்மபிரபு' படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்திருக்கிறார். எமன் மற்றும் எமலோகப் பின்னணி கொண்ட கதை இது. ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், "கும்கி' அஸ்வின், மாஸ்டர் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அழகம் பெருமாள் வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்திருக்கிறார்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பவர் முத்துகுமரன்.