Advertisment
/idhalgal/cinikkuttu/yami

"கௌரவம்' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் நடித்து, ஒருவழியாக இப்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

Advertisment

அவ்வளவு பிஸி. "பாலா' என்ற பாலிவுட் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு, "கி

"கௌரவம்' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் நடித்து, ஒருவழியாக இப்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

Advertisment

அவ்வளவு பிஸி. "பாலா' என்ற பாலிவுட் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு, "கின்னி வெட்ஸ் சன்னி என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ஹீரோவாக விக்ராந்த் மாஸ்ஸி நடிக்கிறார்.

tami

அறிமுக இயக்குநர் புனீத் கண்ணா இயக்குகிறார். படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. "ஓரிரு காட்சிகளும், பாடல்களும் முடிந்தால் ஓவர்' எனும் புனீத், தனது படத்தின் ஹீரோ, ஹிரோயினைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

""இதுவொரு ரொமேன்டிக் காமெடி காதல் சப்ஜெக்ட். சன்னி கேரக்டர் அப்பாவியான, அன்பைப் பொழியும் ஒருத்தராக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்; விக்ராந்த் கிடைத்தார். அதேபோல் கொழுமொழு, கியூட் அதேநேரம் போல்டான கின்னி கேரக்டருக்கு அச்செடுத்தாற்போல் யாமி வந்தார். இருவரையும்விட சிறந்த ஜோடி கிடைத்திருக்குமா -தெரியவில்லை.

இந்த இருவருக்கும் இடையே இருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி, ஷூட்டிங்கின்போது நல்லாவே யூஸ் ஆனது.

கலகலப்பாகக் கொண்டுபோகவும், அதை அப்படியே ஸ்கிரீனில் கொண்டுவரவும் முடிந்தது. இது புதுவிதமான படமாக இருக்கும். ஆடியன்ஸ் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கமுடியும். யாமியும், விக்ராந்தும் அத்தனை அழகு'' என்று புன்னகைக்கிறார் புனீத்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச்சில் ரிலீஸாகிறது.

cini191119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe