Advertisment

ஆஹா... ஆண்ட்ரியா !

/idhalgal/cinikkuttu/wow-andrea

ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது "பொட்டு' படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.

"பொட்டு' படம் மே மாதம் வெளியாக உள்ளது.

Advertisment

அத

ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது "பொட்டு' படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.

"பொட்டு' படம் மே மாதம் வெளியாக உள்ளது.

Advertisment

அதைத் தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "கா' என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.

andrea

உலக மக்களுக்கான படம் இது.

இந்தப் படத்தில் ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

"கா' என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கைமுறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆன்ட்ரியா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- நாஞ்சில்.

படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe