Advertisment

மகளிர் தினமும் ஹீரோயின்களும்!

/idhalgal/cinikkuttu/womens-day-heroines

ww

ஸ்ம்ருதி வெங்கட்

பெண்கள் நினைத்தால் எல்லா இடத்திலும், எல்லாப் பொழுதிலும் அதிசயத்தை நிகழ்த்தமுடியும். என்னை என் பாட்டி, தாய், தோழி என எல்லாரும் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து, இந்த அழகிய நாளில் உங்களை வாழ்த்துகிறேன்.

Advertisment

ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன்

இன்று ஒருநாள் மட்டுமல்ல.. எல்லா நாளுமே வலி

ww

ஸ்ம்ருதி வெங்கட்

பெண்கள் நினைத்தால் எல்லா இடத்திலும், எல்லாப் பொழுதிலும் அதிசயத்தை நிகழ்த்தமுடியும். என்னை என் பாட்டி, தாய், தோழி என எல்லாரும் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து, இந்த அழகிய நாளில் உங்களை வாழ்த்துகிறேன்.

Advertisment

ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன்

இன்று ஒருநாள் மட்டுமல்ல.. எல்லா நாளுமே வலிமையாக, சுதந்திரமாக, திடமாக, ஆர்வம் கொண்டவராக மிக முக்கியமாக மகிழ்ச்சியும், உற்சாகமும் மிக்கவராக இருக்க அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

Advertisment

அதுல்யா ரவி

பாசம் சுமந்தவள் தங்கை ஆகிறாள்...

உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்...

உயிர் சுமந்தவள் தாய் ஆகிறாள்...

அப்படிப்பட்ட என் சிங்க மங்கைகளுக்கு அன்பான சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!

ரகுல் ப்ரீத்

பெண்களே இது உங்களுக்கான நாள்தான்.

அதேபோல இது உங்களுடைய மாதம் மற்றும் ஒட்டுமொத்த ஆண்டும் உங்களுக்கானது மட்டுமே. அதில் கொண்டாட்டத் திற்கான நிமிடங்களை தினந்தோறும் தேடித்தேடி அனுபவியுங்கள்.

வரலட்சுமி சரத்குமார்

எல்லா நாளுமே என்னைப் பொருத்தவரை மகளிர் தினம்தான். இன்று கொண்டாடிவிட்டு, மீதி நாட்களில் எல்லாம் பாலியல் தொல்லை, துன்புறுத்தல் என நாளிதழ் செய்திகளைப் பார்த்தால் மனம் நோகிறது. ஆகவே, தினந்தோறும் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும். ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்கிறோம். எந்த அரசுத்துறைகளையும் சார்ந்திருக்காமல், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

வெளியே செல்லும்போது தைரியமாக இருங்கள் பெண்களே. வீட்டில் மிளகாய்ப் பொடி, பெப்பர் ஸ்ப்ரே என தயாராக இருக்கவேண்டும். பிரச்சினை வரும் சூழலில் தைரியமாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பக்கெட் தண்ணீருக்கே எவ்வளவு சண்டை போடுகிறோம். அப்படியானால், நம்மிடம் சக்தியில்லை என்று சொல்வது முட்டாள்தனம்தானே.' பெண்ணாக இருக்கப் பெருமிதம் கொள்ளுங்கள். பெண்கள் தினத் துக்கு வாழ்த்துகள் சொல்லமாட்டேன். உங்களை நீங்களே தினமும் கொண்டாடுங்கள்.

-மூன்கிங்

cini240320
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe