Advertisment

சினிமாவில் பெண்களுக்கு...? -ஸ்ருதிஹாசன்

/idhalgal/cinikkuttu/women-cinema-sruthi-hassan

"சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு sruthihassanதேர்வுசெய்து நடித்ததுதான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டுகால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப்போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், க

"சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு sruthihassanதேர்வுசெய்து நடித்ததுதான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டுகால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப்போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.

Advertisment

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் ஸ்ப்ரிச்சுவல் சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதிலில் இல்லை. ஆனால் அனைத் தையும் நம்புகிறேன்.

Advertisment

அதேபோல் சினிமாவில் மட்டுமல்ல; இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான்.

தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்துவரும் "சபாஷ் நாயுடு'-வின் பணிகள் விரைவில் தொடங்கும்.

நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதையும், அதில் தேசப்பற்றுப் பாடலைப் பாடியதையும் எண்ணி பெருமையடைகிறேன்'' என்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதனிடையே பாலிலிவுட்டின் முன்னணி நடிகைகளான ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என இரண்டு நடிகைகளை அடுத்து "போர்ப்ஸ்' எனப்படும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இதழுக்கு பேட்டியளித்த மூன்றாவது இந்திய நடிகை என்ற பெருமையை நடிகை ஸ்ருதிஹாசன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

cine040918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe