Advertisment

பெண்கள் ஒன்றும் புனிதப் பசு அல்ல

/idhalgal/cinikkuttu/women-are-not-sacrilegious

ந்தி நடிகை பூஜா பேடி """மீ டூ' இயக்கம் பழிவாங்கப் பயன்படுகிறது. அனாமதேயமாகக் குற்றம்சாட்ட உதவுகிறது'' என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Advertisment

""சினிமாத் துறையில் மீ டூ என்று பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கு. இதைப்பற்றி நீ ஏன், ஒற்றை மனிதனாய் வாழ்கிறவரின் பார்வையில் ஒரு கட்டுரை எழுதக்கூடாது என்று எனக்கு நண்பரான இயக்குநர் கேட்டார். தனியாய் வாழும் ஒரு

ந்தி நடிகை பூஜா பேடி """மீ டூ' இயக்கம் பழிவாங்கப் பயன்படுகிறது. அனாமதேயமாகக் குற்றம்சாட்ட உதவுகிறது'' என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Advertisment

""சினிமாத் துறையில் மீ டூ என்று பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கு. இதைப்பற்றி நீ ஏன், ஒற்றை மனிதனாய் வாழ்கிறவரின் பார்வையில் ஒரு கட்டுரை எழுதக்கூடாது என்று எனக்கு நண்பரான இயக்குநர் கேட்டார். தனியாய் வாழும் ஒரு மனிதன் இன்றைய சூழ்நிலையில் எப்படி வாழமுடியுமென்று அறிந்து கொள்ள அவர் ஆர்வமாய் இருந்தார். இதற்காக பல விஷயங்களை அவர் என்னிடம் பேசினார்.

Advertisment

poojabedi

"நான் ஒரு பார்ட்டிக்கு போகிறேன். ஒரு பெண்ணுடன் உல்லாசமாய் இருக்கிறேன். தனி மனிதனாய் இருக்கிற ஒருவனுக்கு இதைவிட வேறுவழியில்லை. ஆனால், எனது பெயரை அடுத்தநாள் காலையில் சமூக வலைத்தளங்கள் முழுக்க மீ டூ-வில் கொண்டுவந்தால் என்ன செய்வேன்?' என்று அவர் கேட்டார். அதிலும் சம்பந்தப்பட்ட பெண் ஒரு சினிமா நடிகையாக இருந்துவிட்டால் செய்தி தீயாய் பரவும் என்று சொல்லிவிட்டு இதேபோன்ற பல நிகழ்வுகளைக் கற்பனையாகக் கூறினார். அவர் கூறியவற்றைக் கேட்டதும் நான் பலமாக சிரித்தேன். மீ டூ வில் சிக்கக் கூடிய பல விஷயங்களை அவர் விவரித்தார். பிறகு அவர் சொன்ன விஷயங்களை யோசித்துப் பார்த்தேன். பெண்கள் பல சமயங்களில் தங்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களையே தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான். தங்களை ஒரு புனிதப் பசுவாக நினைத்து பல விஷயங்களைப் பேசுகிறார்கள். ஆனால், தங்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களையே மிரட்டுவதற்கும், பழிதீர்ப்பதற்கும், ஒரு ஆணுக்கு எதிரான வழக்கை தனக்குச் சாதகமாக்குவதற்காகவும் பயன்படுத்துகிறார் கள். உண்மையான பிரச்சினைகளுக்காக போராடும் பல பெண்கள் இருக்கிறார்கள்.

பெண் குழந்தையாகப் பிறந்ததில் இருந்து படிப்பதற்கும், தங்களைப் பாதுகாப்பதற்காகவும் உள்ள சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது அவர்களுக்குத் துணையாக மீ டூ இயக்கமும் உருவாகி இருக்கிறது. பெண்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள உதவுகிறது. ஆனால், யாராவது பாப்புலரான ஒருவர்மீது அனாமதேயமாக ஒரு பதிவைப் போட்டுவிடுவது இந்த இயக்கத்தின்மீது கரும்புள்ளியாகி விடுகிறது'' என்கிறார்.

cine271118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe