Advertisment

வில்லங்க விஜய்சேதுபதி!

/idhalgal/cinikkuttu/willinga-vijay-sethupathi

"தர்மதுரை'-யில் நடித்தபிறகு விஜய்சேதுபதிக்கு "மக்கள் செல்வன்' பட்டத்தைக் கொடுத்தார் டைரக்டர் சீனு ராமசாமி. இப்போதைய கோலிவுட் ஏரியாவில் விஜய்சேதுபதிக்கு என தனி மார்க்கெட் வேல்யூவும் பிசினஸ் ஏரியாவும் இருக்கத்தான் செய்கிறது.

Advertisment

vijaysethupathiஆனால் விஜய்சேதுபதியோ, அவ்வப்போது சில வில்லங்க வேலைகளை சத்தமில்லாமல் செய்வார். அப்படி

"தர்மதுரை'-யில் நடித்தபிறகு விஜய்சேதுபதிக்கு "மக்கள் செல்வன்' பட்டத்தைக் கொடுத்தார் டைரக்டர் சீனு ராமசாமி. இப்போதைய கோலிவுட் ஏரியாவில் விஜய்சேதுபதிக்கு என தனி மார்க்கெட் வேல்யூவும் பிசினஸ் ஏரியாவும் இருக்கத்தான் செய்கிறது.

Advertisment

vijaysethupathiஆனால் விஜய்சேதுபதியோ, அவ்வப்போது சில வில்லங்க வேலைகளை சத்தமில்லாமல் செய்வார். அப்படி ஒரு சமீபத்திய வில்லங்கம்தான் இது. டைரக்டர் செல்வராகவனிடம் அசோசியேட் டைரக்டராக இருந்தவர், தனியாக படம் பண்ணும் முடிவோடு தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொன்னார்.

Advertisment

தயாரிப்பாளருக்கு கதை பிடித்துப்போக, டைரக்டரையும் அழைத்துக்கொண்டு, விஜய் சேதுபதியைப் பார்த்து, அதே கதையைச் சொன்னார். மூணு மணி நேரம் கதை கேட்டுவிட்டு, "ஆகட்டும் பார்க்கலாம்'னு இருவரையும் அனுப்பிவிட்டார் விஜய்சேதுபதி.

ஆனால் மறுநாளே அந்தத் தயாரிப்பாளருக்கு ஃபோன் போட்ட விஜய்சேதுபதி, ""அந்த டைரக்டரை கழட்டிவிடுங்க. எஸ்.பி. ஜனநாதன் ஒரு கதை வச்சிருக்காரு. அவரைப் போய்ப் பாருங்க'' என்றிருக்கிறார். "சரி'ன்னு தயாரிப்பாளரும் டைரக்டர் ஜனநாதனைப் போய்ப் பார்த்ததும், ""சூப்பரா பண்ணிடலாம். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில 21 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும்'' என்றிருக்கிறார் ஜனநாதன். அப்பவே லேசான மயக்க நிலைக்குப் போய்விட்டார் அந்தத் தயாரிப்பாளர். ஏன்னா செல்வராகவன் அசோசியேட் சொன்ன கதைக்கு போட்டிருந்த பட்ஜெட்டோ 10 கோடி ரூபாய்தானாம்.

ஒருவழியா சுதாரிச்சுக்கிட்டு விஜய்சேதுபதியைப் பார்க்கப் போயிருக்காரு அந்தத் தயாரிப்பாளர். எல்லாத்தையும் "உம் உம்'னு கேட்ட விஜய்சேதுபதி, ""என்னோட சம்பளம் 7 கோடி. அதுல அட்வான்ஸா 5 கோடிய கொடுத்திருங்க, படத்துக்கு பூஜை போட்டுரலாம்'' என சொன்னதும் கிர்ரடித்து கிளம்பிவிட்டார் அந்தத் தயாரிப்பாளர்.

""நாலு மாசமா லோலோன்னு அலைஞ்சதுதான் மிச்சம்'' என இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பு பார்ட்டி.

-பரமு

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe