Advertisment

உங்களை டிஸ்டர்ப் பண்ணும் -சூர்யா நம்பிக்கை!

/idhalgal/cinikkuttu/will-disturb-you-surya-believes

2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் "உறியடி-2' படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் விஜயகுமார், ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூ

2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் "உறியடி-2' படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் விஜயகுமார், ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

uriadi

இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் தனது வரவேற்புரையில், ""ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது. "உறியடி' படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்குத் தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி 35 நாட்களுக் குள் நிறைவு செய்தனர் இயக்குநர் மற்றும் அவரது குழுவினர். இதற்காக படத்தின் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ""சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களுக்கு இளைஞர்களின் பார்வையில் எப்படி தீர்வு காணமுடியும், எப்படி அதனை முன்னெடுக்கமுடியும் என்ற வகையில் உருவான படம்தான் இந்த "உறியடி-2' '' என்றார். நடிகர் சூர்யா பேசுகை யில், ""2டி நிறுவனம் பத்து படங்களுக்குமேல் தயாரித்தி ருக்கிறது என்றால், அதற் குக் காரணம் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு தான். இயக்குநர் விஜயகுமார் என்னைப்போலவே ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை டக்கென்று வெளிப்படுத்தமாட்டார். விவாதிக்கமாட்டார். அனைத் தையும் புரிந்துகொள்வார். நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கி ருக்கிறது.. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் "உறியடி' என்ற படத்தை எடுத்துவிஜயகுமார் அனைவரையும் ஆச்சரியப் படுத்தினார். இந்த "உறியடி-2' உங்களை என்டர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். ஏப்ரல் 5-ஆம் தேதி எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

cine090419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe