ஆர்யா, ஆதி இன்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் "கொச்சின் ஷாதி அட் சென்னை 03.' மலையாளம், தமிழில் ஒரேசமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishal1_7.jpg)
இந்த விழாவில் படத்தின் கதாநாயகன் ஆர்.கே. சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா, சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படம் பற்றி பேசியபின் பத்திரிகை யாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ஆர்.கே. சுரேஷ் பேசியபோது...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishal_40.jpg)
""நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத் தவிர்த்து, வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு.
அதே சமயத்தில் நடிகர் உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் கள். அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.
விஷால்மீது நான் ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்.
அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர் அவரைவிட்டுப் பிரிந்து விட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை.
அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை. வரலட்சுமிக்கும் இதே நிலைதான். அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/vishal-t_0.jpg)