Advertisment

யாருக்கு லாபம்? -ஜனநாதன் பளிச்!

/idhalgal/cinikkuttu/whom-profit-jananathan-pallich

""உழைத்தால்

உயரலாம் சரி!

யார் உழைத்தால்

யார் உயரலாம்?''

பொருளாதார நிலைமை பற்றி இப்படியொரு கவிதை உண்டு.

இந்த வரிகளிலுள்ள அரசிய லைப் பற்றி கலைவடிவில் பேச வேண்டுமானால் அதற்கு தேர்ந்த ஒரு கலைக்கூட்டணி வேண்டும். "மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நாயகனாகவும், ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க, இயக்குநர் ஜனநாதன் "லாபம்' படத்தை அட்டகாசமான அரசியலும் கமர்சியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத

""உழைத்தால்

உயரலாம் சரி!

யார் உழைத்தால்

யார் உயரலாம்?''

பொருளாதார நிலைமை பற்றி இப்படியொரு கவிதை உண்டு.

இந்த வரிகளிலுள்ள அரசிய லைப் பற்றி கலைவடிவில் பேச வேண்டுமானால் அதற்கு தேர்ந்த ஒரு கலைக்கூட்டணி வேண்டும். "மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நாயகனாகவும், ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க, இயக்குநர் ஜனநாதன் "லாபம்' படத்தை அட்டகாசமான அரசியலும் கமர்சியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்கக் கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய் சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லிவிட்டாராம். படப்பிடிப்பு முடிந்ததும், அந்தக் கட்டடத்தை அந்த ஊர்மக்களுக்கே கொடுக்கச் சொல்லி விட்டாராம் விஜய்சேதுபதி.

Advertisment

jN

மேலும் படம் பற்றி இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், ""என் படத்தின் டைட்டில் "லாபம்' என்றதும் பலரும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்கு லாபம் என்பதையும், எது லாபம் என்பதையும் பேசும். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். நம்மிடமிருந்த விவசாய நிலங்களும், அதில் விளைந்த விளைச் சலும்தான் பிரிட்டிஷ்காரன் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களை யும், அதன்மூலமாக வந்த வளங்களை யும் கொள்ளையடிக்கத்தான் பிரிட்டிஷ் காரன் இங்கே 200 வருடம் டேரா போட்டான்.

விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம் நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? இதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன். இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினை.

அதைப் படம் விரிவாகப் பேசும்,

இப்படத்தில் நாயகன் விஜய் சேதுபதி, நாயகி ஸ்ருதிஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார்.

கலையரசன், பிரித்வி, டேனி என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்'' என்றார்.

டி. இமான் இசையமைத்துவரும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இறுதிக்கட்டப் படப் பிடிப்பு மிக வேகமாகவும், மிகப் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றுவருகிறது. விஜய்சேதுபதி புரொடக்ஷனும், 7சி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து "லாபம்' படத்தைத் தயாரித்துவருகின்றன.

ப்

cini051119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe