மெகா பட்ஜெட் படங்களுக்கு இணையாக தினசரிகளில் விளம்பரம் கொடுக்கப்பட்ட ஒரே டி.வி.சீரியல் ராதிகாவின் "சித்தி-2' தான். கடந்த ஜனவரி 27-ஆம் தேதியிலிருந்து சன் டி.வி.யில் தினமும் இரவு 9.30-க்கு ஒளிபரப்பாகி வருகிறது "சித்தி-2'. இந்த ஒளிபரப் புக்குப் பின்னால் நடந்த ஃபைட் சீன்கள்தான் சீரியல் உலகின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.
சன் டி.வி.யைப் பொருத்தவரை இரவு 9.30 என்பது "சூப்பர் பிரைம்' டைம். இந்த ஸ்டாட்டை வாங்கு வதற்கு கடும் போட்டி இருக்கும். ராதிகாவின் "சித்தி' முதல் பாகம் ஒளிபரப்பாகியது இந்த சூப்பர் பிரைம் டைமில்தான். அதே ராதிகா வின் "வாணி- ராணி' சீரியலும் இதே ஸ்லாட்டில்தான்.
சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் ஒரு ஸ்ட்ர

சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் ஒரு ஸ்ட்ரிக்ட் பாலிஸி வைத்திருக் கிறார். அது என்னன்னா... இந்த பிரைம் டைமில் டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறவில்லை என்றால், எவ்வளவு பெரிய நடிகர்- நடிகைகள் நடித்த சீரியலாக இருந்தாலும் தயவுதாட் சண்யம் பார்க்காமல், சீரியலையே நிப்பாட்டிவிடுவார். அப்படி அவர் நிப்பாட்டியதுதான் ராதிகாவின் "சந்திரகுமாரி' சீரியலும், குஷ்புவின் "மாயா' சீரியலும்.
சரி, இப்ப லேட்டஸ்ட் சங்கதிக்கு வருவோம். "சித்தி-2' சீரியல் எடுக்க முடிவுசெய்ததுமே, கலாநிதி மாறனிடம் சூப்பர் பிரைம் டைம் கேட்டிருக் கிறார் ராதிகா. "25 எபிசோட் எடுத்துட்டு வாங்க அப்புறம் பேசுவோம்' எனச் சொல்லியிருக்கிறார் கலாநிதி. ராதிகா குறிவைத்த அந்த சூப்பர் பிரைம் டைமிங்கிற்கு காரணமும் இருக்கிறது.
அந்த ஸ்லாட்டில்தான் குஷ்புவின் சீரியலான "லட்சுமி ஸ்டோர்ஸ்' ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. டி.ஆர்.பி. ரேட்டிங்கும் நன்றாகத்தான் இருந்தது.
அதனால் அந்த சீரியலை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் என நினைத்த கலாநிதிமாறன், 25 எபிசோட் எடுத்துட்டு வாங்க, பேசுவோம் என ராதிகாவை சமாளித்திருக்கிறார்.
எப்படியும் அந்த ஸ்லாட்டைக் கைப்பற்றியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய ராதிகா, மளமளவென 30 எபிசோடு களுக்குமேல் எடுத்து முடித்துவிட்டு, கலாநிதியைப் போய்ப் பார்த்திருக் கிறார். "" "லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு நல்ல டி.ஆர்.பி.ரேட்டிங் இருக்கு. சீரியலும் இண்ட்ரஸ்டிங்கா போய்க் கிட்டிருக்கு. அதனால குஷ்பு மேடத்தை வரச்சொல்லிப் பேசிப் பார்ப்போம்'' என ராதிகாவை சமாளித் திருக்கிறார் கலாநிதி.
ஒரு குறிப்பிட்ட நாளில் கலாநிதி மாறன்முன்பு குஷ்புவும் ராதிகாவும் கூடியிருக்கிறார்கள். கலைஞர் குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக் கும்மேலாக ராதிகாவுக்கு உறவு உண்டு என்பதாலும், சிறுவயதிலிருந்தே கலாநிதியைப் பார்த்திருப்பதாலும், ""வா போ'' என உரிமையுடன் கலாநிதியிடம் பேசும் பழக்க முள்ளவராம் ராதிகா.
அதே உரிமையில்தான் அன்றைக்கு நடந்த பஞ்சாயத்தில், ""அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா! பதினைஞ்சு வருஷமா அந்த சூப்பர் பிரைம் டைம் எனக்குச் சொந்தமானது. இத யாருக்காவும் விட்டுக்கொடுக்க மாட்டேன், முடியாது'' என கறார் காட்டியிருக்கிறார் ராதிகா.
பதிலுக்கு குஷ்புவும், ""என்னோட சீரியல் சூப்பரா போய்க்கிட்டிருக்கு! அத டிஸ்டர்ப் பண்ண நினைச்சா நான் சும்மா இருக்கமாட்டேன்'' என கொந்தளித்திருக்கிறார். ஒருகட்டத்தில் ராதிகாவும் குஷ்புவும் டைரக்ட் ஃபைட்டில் இறக்கும் அளவுக்கு நிலைமை மோசமாவதை அறிந்து பதறிய கலாநிதி, இருவரையும் ஆசுவாசப்படுத்திவிட்டு, "ஜட்ஜ் மென்ட் ரிசர்வ்' எனச் சொல்லி கிளம்பிவிட்டாராம்.
ஆனாலும், ராதிகா, கலாநிதி மாறனை விடாது துரத்த, குஷ்புவின் "லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு 2020 ஜனவரி 25-ஆம் தேதியுடன் மங்களம் மங்களம் சுபமங்களம் போட்டுவிட்டு, ராதிகாவின் "சித்தி-2'-விற்கு ஓ.கே. சொல்லிவிட்டார் கலாநிதி. இதனால் ராதிகாமீது செம கடுப்பில் இருக்கார் குஷ்பு.
--பரமேஷ்