திருமணம் என்பது மனித வாழ்வின் சுபநிகழ்வுகளுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆண்- பெண் உறவு முறையை கணவன்- மனைவி என்னும் பந்தபாசப் பிணைப்புமூலம் உறுதிப்படுத்தும் புனிதச் சடங்கு எனலாம். இந்தத் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடித்து நிலைத்துநிற்க, பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். இதில் முக்கிய பங்கு வகிக்கும் தசவிதப் பொருத்தங்களின் சிறப்பம்சங்களை இங்கு கவனிப்போம்.

m

1. தினப் பொருத்தம்: தேக ஆரோக்கியம் மற்றும் சுகம் பெறுதல்.

2. கணப் பொருத்தம்: சயன, சுகபோக பாக்கியங்களைப் பெறுதல்.

Advertisment

3. மாகேந்திரப் பொருத்தம்: குடும்ப விருத்தி (புத்திர பாக்கியம்) பெறுதல்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்: தன, தான்ய அபிவிருத்தி அடைதல். (லட்சுமி கடாட்சம்).

5. யோனிப் பொருத்தம்: அன்பு, பாசம், அன்யோன்யமான குடும்ப வாழ்க்கை.

Advertisment

6. ராசிப் பொருத்தம்: உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ்தல்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: கணவன்- மனைவி கருத்து வேறுபாடின்றி சுமுகமாக வாழ்தல்.

8. வசியப் பொருத்தம்: பிறரை மனதாலும் நினைக்காத பரஸ்பர அன்பு வாழ்க்கை.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: கணவன்- மனைவி தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.

10. வேதைப் பொருத்தம்: கஷ்டநஷ்டங் களிலும் ஒற்றுமையாக வாழ்தல்.v மேலும், ஆண்- பெண் இருவரின் ஜாதக அமைப்புகளையும் பரிசீலனை செய்து, ஜாதகப் பொருத்தங்களையும் கவனத் தில் கொள்கிறோம். எனவே, தசவிதப் பொருத்தங்கள் மற்றும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியமாகிறது.

திருமணத்துக்குப் பின்னர் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அடையும் பாக்கியம், யோகம் பெற்ற பல நபர்களைக் காணமுடிகிறது. திருமணத்தால் யோகம் பெறும் ஜாதக அமைப்புகளை ஜோதிட சாஸ்திரம் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகிறது.

பொதுவாக, ஜென்ம லக்னம் அல்லது ஜென்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், அந்த அமைப்பு பெற்ற நபர் செவ்வாய் தோˆம் பெற்றவராகிவிடுவார். எனினும், இதே ஏழாம் வீட்டில் அமையும் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் என்ற சிறப்புநிலை பெற்றுவிட்டால் தோˆம் விலகி, செவ்வாய் கிரகம் கேந்திரத்தில் ஆட்சி, உச்சம்பெற்ற "ருசக மகாபுருˆ யோகம்' பெறுவார். அதாவது, மேற்கூறிய சிறப்பு அமைப்பு பெற்ற நபர் திருமணத்தால் சொத்து, சுகங்கள் பெற்று முன்னேற்றமடைவார் என்றே நாடிநூல்கள் கூறுகின்றன.

செவ்வாய் இரண்டாம் வீட்டிலிருந்து சுபகிரகமான குருவுடன் தொடர்பு பெற்றுவிட்டால், திருமணத்தால் ஏற்றம் பெறும் வாழ்க்கை அமையப்பெறும்.

ஏழாம் வீட்டு அதிபதி ஜென்ம லக்னத் தில் இருந்தால், திருமணத்தால் யோகம் பெறுபவராவார்.

மேலே கூறப்பட்டுள்ள ஜோதிட விதிகளு டன், அவரவர் கைரேகை அமைப்புகளும் திருமணத்தால் யோகம் அடைவதை உறுதிப் படுத்தும் என்றே மேலைநாட்டு ஜோதிட மாமேதை "ஷீரோ' வலியுறுத்துகிறார்.

இங்கு கூறப்பட்டுள்ள திருமணத்தால் யோகம் பெறும் இந்த அமைப்புகளை கீழ்க் காணும் உதாரணங்களுடன் பொருத்திக் காணலாம்.

அண்மையில், காவல்துறையில் பணி புரியும் இரண்டு அன்பர்கள் தங்கள் துணைவியாருடன் ஜாதகப் பரிசீலனைக்காக வந்திருந்தனர். அவரவர் ஜாதகங்களைப் பரிசீலித்த பின்னர், கைரேகை அமைப்பு களும் ஆராயப்பட்டன.

அப்பொழுது முதலாவது நபரிடம், ""நீங்கள் திருமணத்தால் மனைவிமூலம் சொத்து சுகம் பெற்றவரா?'' என்று கேட்கப் பட்டது. அவர், "ஆமாம்' என்று ஒப்புக் கொண்டார். காரணம், அவரது ஜாதக அமைப்புகளுடன், அவரது கைரேகை அமைப்புகளில் சந்திர மேட்டிலிருந்து ரேகை புறப்பட்டு, அதிர்ஷ்ட ரேகை எனப் படும் விதிரேகையாக மேல்நோக்கித் தொடர்ச்சியாகச் சென்றது. திருமணத்தால் மனைவிமூலம் சொந்த வீடு, வசதியான வாழ்க்கை பெறப்பட்டதை உறுதிசெய்தார்.

இரண்டாவது நபரிடம், ""நீங்கள் பரம்பரை சொத்துகள் பெற்றவராகி, மேலும் திருமணத்தால் மனைவிமூலம் சொத்து சுகங்களைப் பெற்றது உண்மையா?'' என்று வினவப்பட்டது. அவரும் ஆச்சரியத்துடன் "சரியே' என்று ஒப்புக்கொண்டார். காரணம், அவரது கைரேகைகளில் அதிர்ஷ்ட ரேகை என்னும் விதிரேகை மணிக்கட்டிலிருந்து தெளிவாகப் புறப்பட்டு, நீண்டு நேராக மேலே சென்றது. அத்துடன் சுக்கிர மேட்டிலிருந்து ஒரு கிளை ரேகையும் அதே அதிர்ஷ்ட, விதிரேகையுடன் சேர்ந்து இணைந்தது. பெற்றோர்மூலம் வீடுவாசல், நிலபுலன் பெற்ற அந்த நபர், திருமணத்தால் மனைவிமூலம் மேலும் உயர்ந்து ஐந்து ஏக்கர் நிலபுலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாஸ்திரங்கள் உரைத்ததை, இவ்வாறு அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்து உறுதிப் படுத்தலாம் என்பதும் உண்மையே.

செல்: 74485 89113