கும்பகோணம் திருவையாறு ஊரில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ananthi_4.jpg)
சென்னை ஐஐடி போன்ற படிப்பில் சேர்ந்து படிக்கிறார் கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம்... அதில் ஒரு அசாத்தியமான காதல் பயணிக்கிறது. இது "எங்கே அந்தவான்' படம். இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார். இவரது ஜோடியாக ரோஹித் சரப் அறிமுக மாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ஹிச்கி (HICHKI) படத்தில் நடித் துள்ளார். ராணி முகர்ஜி டீச்சராகவும், ரோஹித் சரப் மாணவனாக வும் நடித்திருந்தனர். மேலும் ஷாருக்கான் நடித்த "டியர் சிந்தகி' படத்திலும் நடித்துள்ளார். இவர் களுடன் பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
லிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல டைரக்டர்களிடம் பணிபுரிந்த ராஜ சேகர் துரைசாமி முதன்முறையாக தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தயாரிப்பு- அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட். மக்கள் தொடர்பு- ஜான்சன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/ananthi-t.jpg)