சினிமா பிளாட்பார்ம் என்ற படநிறுவனம் சார்பாக வி.டி. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் "நான் அவளை சந்தித்தபோது.' இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய "கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். "ஜி.எம். குமார்', பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி. கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
"மாசாணி' மற்றும் பரத் நடித்த "ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி. ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/meet_5.jpg)
ஒளிப்பதிவு- ஆர்.எஸ். செல்வா, இசை- ஹித்தேஷ் முருகவேல், பாடல்கள்- அறிவுமதி, நா. முத்துக் குமார், எல்.ஜி. ரவிச்சந்தர், நல்.செ. ஆனந்த், கலை- ஜெய்காந்த், எடிட்டிங்- ராஜாமுகம்மது, நடனம்- சிவசங்கர், பாலகுமாரன், ரேவதி, தினேஷ்.
ஸ்டன்ட்- ஹரி தினேஷ்,
தயாரிப்பு மேற்பார்வை- ஜி. சம்பத்.
சினிமாவில் உதவி இயக்குநரா கப் பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்புதேடிப் போகும் போது வழியில் இளம்பெண் (நாயகியை) ஒருவரை சந்திக்கிறான். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஹீரோ அவரைக் காப்பாற்றி அவளின் ஊர்வரைக் கொண்டுபோய்விடப் போகிறான். போன இடத்தில் ஊர்க் காரர்கள் ஒன்றுகூடி இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கி றார்கள். பின்னர் என்ன நடக்கி றது. நாயகன், நாயகி என்ன ஆனார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.
இம்மாதம் 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. "நான் அவளை சந்தித்த போது'.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/meet-t.jpg)