Advertisment
/idhalgal/cinikkuttu/whats-wrong

whatல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ் நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' என்ற திரைப்படம் தயாராகிவருகிறது. இப்படத் தின் கதை, திரைக்

whatல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ் நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' என்ற திரைப்படம் தயாராகிவருகிறது. இப்படத் தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல். செந்தில்குமார் இயக்கிவருகிறார்.

Advertisment

அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஒரு கிராமத்தில், இதுவரை எந்த தலைமுறையும் சந்திக்காத- பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சினைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றன. ஒரு கட்டத்தில் பிரச்சினைகள் தீவிரமடைந்து, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டுபிடித்து, தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்து, விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்.

ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி. சேட்டு தயாரிக்கும் இப்படத்தின் நாயகனாக மகேந்திரன், அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ, இவர்களுடன் ஆர். சுந்தர்ராஜன், மனோஜ் குமார், "பசங்க' சிவக் குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், "லொள்ளு சபா' உதயா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

ஒளிப்பதிவு ஜெ.ஆர்.கே., படத்தொகுப்பு கம்பம் மூர்த்தி, தினா மற்றும் ரமேஷ் நடன இயக்குநராகவும், மிரட்டல் செல்வா ஸ்டண்ட் இயக்கு நராகவும் பணிபுரிந்துள் ளனர்.

cine120319
இதையும் படியுங்கள்
Subscribe