ஜூன் 22-ஆம் தேதி "சிந்துபாத்' ரிலீஸ் என ஒருவாரத்திற்கு முன்பே விளம்பரம் வந்தது.
ஆனால் தயாரிப்பாளரின் கொடுங்கல்- வாங்கல் பிரச்சினையால் கடைசி நேரத்தில் சிக்கல்வந்து ரிலீஸ் நின்றுபோனதும் நொந்துவிட்டார் படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதி. பஞ்சாய்தெல்லாம் முடிந்து ஒரு வழியாக ஜூன் 27-ஆம் தேதி "சிந்துபாத்' ரிலீசானது. ஆனால் படத்தின் ரிசல்ட்டும் வசூலும் படுபாதாளத்திற்குப் போய்விட்டது.
வியாழன், வெள்ளி (ஜூன் 27, 28)ஆகிய இரு நாட்கள் மட்டும்தான் ஓரளவு ஹவுஸ்ஃபுல்லாக "சிந்துபாத்' ஓடியது. சனிக்கிழமை தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் இரவுக் காட்சியை ரத்தும் பண்ணும் அளவுக்கு தியேட்டர்கள் வெறிச்சோடியது. "சிந்துபாத்'-திற்கு ஏற்பட்ட இந்த நிலையைக் கேள்விப்பட்டு, தயாரிப்பாளரைவிட அதிகம் கண்ணீர் சிந்தியவர் விஜய் சேதுபதிதானாம்.
பட

படத்தின் தயாரிப்பாளர் தனது நண்பர் என்பதால், சம்பளத்தை பாதியாகக் குறைத்துக்கொண்டார் விஜய் சேதுபதி. ஆனாலும் தாய்லாந்து, மலேசியா என வெளிநாட்டு லொகேஷன்கள் இருந்ததால் பட்ஜெட் டும் எகிறியது. எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், 18 கோடி ரூபாயில் படம் முடிந்திருக்கும். அந்த 18-ல் பாதிதான் கலெக்ஷன் ஆகியிருக்காம். பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் என்றால் தயாரிப்பாளருக்கு தியேட்டர்கார்களின் பங்குத் தொகையாக 10-லிருந்து 20 லட்சம் வரும். ஆனால் "சிந்துபாத்'தால் தயாரிப்பாளருக்கு வந்தது வெறும் 2 லட்சம்தானாம். அதிலும் விஜய் சேதுபதி படம், சனிக்கிழமை இரவுக் காட்சியை ரத்து பண்ணுமளவுக்கு போயிருப்பது, அதிர்ச்சிக்குரியதுதான். தனது மகன் சூர்யாவை அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தப் படம் சரியாக போகாததால் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த "சிந்துபாத்' மட்டுமல்ல; கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு படங்கள் மட்டுமே விஜய் சேதுபதிக்கு கை கொடுத்துள்ளன. 2017-ல் மாதவனும் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடித்து ரிலீசான "விக்ரம்- வேதா' சூப்பர் ஹிட்டாக ஓடியது. அதற்குக் காரணம் டைரக்டர் புஷ்கர்- காயத்ரியின் வலுவான கதையும் செம த்ரில்லிங்கான திரைக்கதையும்தான்.
அதே 2017-ல் ரிலீசான "கருப்பன்', "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' ஆகிய இரண்டும் ஃபெயில் லிஸ்டில் சேர்ந்துவிட்டன. சரி, அடுத்து ஒரு மெகா ஹிட் படத்தை நாமே தயாரிப்போம் என களத்தில் இறங்கினார் விஜய் சேதுபதி. கார்த்திக்கு "காஷ்மோரா' என்ற ஹிட் படம் கொடுத்த கோகுல் டைரக்ஷன், சாயிஷா சைகல் ஜோடி, பிரான்ஸ் லொக்கேஷன், காமெடிக்கு யோகிபாபு என "ஜூங்கா'-வை ரிலீஸ் பண்ணினார். ஆனால் படமோ படுத்துவிட்டது. அந்தப் படத்தால் விஜய் சேதுபதிக்கு 7 கோடி ரூபாய் நஷ்டம்.
அதற்கடுத்து மணிரத்னம் டைரக்ஷனில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோருடன் கூட்டணி போட்டு நடித்த "செக்கச் சிவந்த வானம்' ஹிட் கணக்கில் வந்தாலும் விஜய் சேதுபதியின் தனிக்கணக்கில் சேரவில்லை.
உண்மையான சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது "96' படம்தான். வி.சே.வுக்கும் த்ரிஷாவுக்குமிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்- அவுட் ஆகியிருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளரான நந்தகோபாலுக்கு இருந்த கடன் பிரச்சினையால் கடைசி நேரத்தில் தத்தளித்து ரிலீசானாலும் செம ஹிட் அடித்தது "96'. படம் செம ஹிட் என்றாலும் இந்தப் படத்தால் தியேட்டர்களுக்கு கொழுத்த லாபமே தவிர, போட்ட பணத்தைவிட கூடுதலாக கொஞ்சம் மட்டுமே நந்தகோபாலின் கைக்கு வந்தது.
அதற்கடுத்து "சீதக்காதி', "சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்கள் விமர்சனரீதியாக நல்ல பெயர் வாங்கினாலும் வசூல் என்னமோ செம டல்லுதான்.
இப்போது "காக்கா முட்டை' மணிகண்டன் டைரக்ஷனில் "கடைசி விவசாயி' படத்தின் பின்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து முடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் ராஷி கண்ணாதான் இவருக்கு ஜோடி. சீனுராமசாமி டைரக்ஷனில் காயத்ரியுடன் ஜோடி போட்டு, "மாமனிதன்' படம், ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரு ஹீரோயின்களுடன் "சங்கத் தமிழன்', எஸ்.பி. ஜனநாதன் டைரக்ஷனில் ஸ்ருதியுடன் ஜோடி போடும் "லாபம்', "விருமாண்டி' டைரக்ஷனில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜோடிபோடும்"க/பெ ரணசிங்கம்' என வரிசையாக கமிட்டாகி செம பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்தப் படங்களாவது "ஹிட்'டித்து விஜய் சேதுபதியின் சினிமாப் படிக்கட்டு வெற்றிப் படிக்கட்டுகளாக அமையட்டும்.
-ஈ.பா.பரமேஷ்வரன்