Advertisment

ரஜினிக்கு என்னாச்சு?

/idhalgal/cinikkuttu/what-rajini

"நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவது உறுதி' என 2017 டிசம்பர் 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினி. 35 வருஷங்களாக ரஜினியின் படத்தைப் பார்த்து விசிலடித்த அவரது ரசிகர்கள், சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார்கள். ரசிகர் மன்றமாக இருந்ததை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினி. ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Advertisment

rajini

இளைஞரணி, மகளிரணி, விவசாய அணி, தகவல் தொழில்நுட்ப அணி என சூப்பர் சுறுசுறுப்பு காட்டினார் ரஜினி.

Advertisment

ஜூன் 7-ஆம் தேதி "காலா' ரிலீசுக்குப்பின், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில்

"நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவது உறுதி' என 2017 டிசம்பர் 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினி. 35 வருஷங்களாக ரஜினியின் படத்தைப் பார்த்து விசிலடித்த அவரது ரசிகர்கள், சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார்கள். ரசிகர் மன்றமாக இருந்ததை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினி. ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Advertisment

rajini

இளைஞரணி, மகளிரணி, விவசாய அணி, தகவல் தொழில்நுட்ப அணி என சூப்பர் சுறுசுறுப்பு காட்டினார் ரஜினி.

Advertisment

ஜூன் 7-ஆம் தேதி "காலா' ரிலீசுக்குப்பின், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் தான் நடிக்கவிருக்கும் படத்தின் பூஜையின்போது, கட்சிப் பேரை அறிவிக்கும் திட்டத்தோடு காய் நகர்த்திவந்தார். எப்படியும் ஆகஸ்ட்டுக் குள் கட்சிப் பேரை தலைவர் அறிவிச்சுருவார் என ஆசையோடு காத்திருந்தார்கள் தொண்டர்களாகிவிட்ட ரஜினி ரசிகர்கள்.

rajiniஇப்படியாப்பட்ட நேரத்துலதான் தூத்துக்குடியில் காட்டுமிராண்டித்தனமாக போலீஸ் சுட்டதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியானார்கள். போலீசின் மூர்க்கத்தனத்தையும் எடப்பாடி கவர்மென்டையும் கடுமையாகச் சாடினார் ரஜினி. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டென்ஷன் நீடித்ததால், "காலா' ரிலீசை ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போடும்படி வெளிநாட்டிலிலிருந்த மருமகன் தனுஷிடம் ரஜினி கூற, அவரும் ஓ.கே. சொல்லிலிவிட்டார்.

இப்படியாப்பட்ட நேரத்துல தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு கவர்மென்டு சீல் வச்சுச்சு. தூத்துக்குடியிலும் இயல்பு வாழ்க்கை திரும்புச்சு. சரி எல்லாம் கைகூடி வந்துருச்சு, "காலா'-வை ரிலீஸ் பண்ணிடலாம், அதுக்கு முன்னால தூத்துக்குடிக்கு விசிட் அடித்து பலிலியானவர்கள் குடும்பத்திற்கும் காயமடைந்த வர்கள் குடும்பத்திற்கும் நிதி உதவி வழங்கி கூல் பண்ணுனா எல்லாம் சரியா வந்துரும் என கணக்குப் போட்ட ரஜினி மே 30-ஆம் தேதி தூத்துக்குடி போனாரு. ஆஸ்பத்திரிக்கு போனாரு, பெட்ல இருந்தவர் களை விசாரிச்சாரு. அதுல சந்தோஷ்ராஜ் என்ற இளைஞர், ""நீங்க யாரு? எதுக்கு வந்திருக் கீங்க?''ன்னு ரஜினியப் பார்த்து கேட்டு அதிரவச்சாரு.

இப்படியாப்பட்ட நேரத்துலதான், தூத்துக்குடியில மீடியா மக்களைச் சந்திச்ச ரஜினி ஏகத்துக்கும் டென்ஷனாகி, ""கலவரத்தை உண்டாக்குனது விஷக்கிருமிகள், சமூக விரோதிகள்'' அப்படி இப்படின்னு ஒரு டைப்பா பேசிட்டு, சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திறங்கினாரு. இப்படியாப்பட்ட நேரத்துலதான், சென்னை ஏர்போர்ட் டிலும் மீடியா நண்பர்களை ஒருமையில் ஆவேசமாக திட்டி, எப்போதும் இல்லாத அளவுக்கு எரிச்சலாகப் பேசி விட்டு போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய்ட்டாரு.

rajini

இப்படியாப்பட்ட நேரத்துலதான் ரஜினி பேச்சுக்கு தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு அலை கொந்தளிக்க ஆரம்பிக்க, தமிழ்நாடு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கமும் ரஜினியை வன்மையாக கண்டித்தது.

rajini

இப்படியெல்லாம் கூட்டம் கூட்டமா சேர்ந்து கும்மியடிப்பார்கள்னு கனவிலும் நினைத்துப் பார்க்காத ரஜினி, ""பத்திரிகை அன்பர்கள் மனம் புண்படும்படி நடந்திருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்''னு சரண்டர் அறிக்கையை மே 31-ஆம் தேதி சாயங்காலம் விட்டாரு.

"காலா' ரிலீசையும் வசூல் கணக்கையும் மனதில் வைத்து ரஜினி கணக்கு போட, அது ஃபுல்லா ராங்காகிப் போயிருச்சு.

-ஈ.பா. பரமேஷ்வரன்

படங்கள்: ப. ராம்குமார்

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe