"ஐங்கரன்', "அடங்காதே', "குப்பத்து ராஜா', "ஜெயில்', "வாட்ச்மேன்', "100% காதல்', "காதலைத் தேடி நித்யா-நந்தா', "ரெட்டைக் கொம்பு', "சர்வம் தாளமயம்', "4-ஜி' என ஜி.வி. பிரகாஷுக்கு பத்து படங்கள் கைவசம் இருக்கின்றன. வாய்ப்பும் கரன்சியும் கொட்டுதேன்னு கிடைத்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டார்.
ஆனா எந்தப்படம் எப்ப ரிலீசாகும்னு அவருக்கும் தெரியாது. அவரை வச்சு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தெரியாது.
"ஐங்கர

"ஐங்கரனி' -ல் மஹிமா நம்பியார், "100% காதல்' படத்தில் ஷாலினி பாண்டே, வசந்த பாலனின் "ஜெயிலில்' புதுமுகம் அபர்ணதி, "குப்பத்து ராஜா'வில் பாலக் லால்வாணி என்ற புதுமுகம் மற்றும் பூனம் பாஜ்வா, ராஜீவ்மேனனின் "சர்வம் தாளமய'த்தில் அபர்ணா பாலமுரளி என பிரபலங்களும் புதுமுகங்களும் கலந்து கட்டி இருக்கிறார்கள். பிரபல டைரக்டர்கள் இருவர் இருக்கிறார்கள்.
ஆனாலும் எல்லாப் படங்களுமே ரொம்பவும் ஸ்லோவாக போய்க் கொண்டிருக்கின்றன.
""எல்லாம் பிஸ்னஸ் ஏரியா பண்ணும் வேலைதான்'' என்கிறார்கள் நமது கோலிவுட் நியூஸ் சோர்ஸுகள். ""ஹீரோ ஆசையில சந்தானத்தை இப்படித்தான் ஏகப்பட்ட படங்களில் கமிட் பண்ணினார்கள். ஒரு படம் ஊத்துனதும் மற்ற படங்களின் கதி என்னாச்சுன்னே தெரியல. "சர்வர் சுந்தரம்' படத்தை எடுத்த தயாரிப்பாளர், அதை ரிலீஸ் பண்ண முடியாம நொம்பலப்பட்டுப் போயிருக் காரு. அவரு இன்னேரம் ஏதாவது ஒரு ஓட்டலில் சர்வராத்தான் வேலை பார்ப் பாருன்னு நினைக்கிறேன்.
அதே கதைதான் ஜி.வி. பிரகாஷ் கதையும். அவர வச்சு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் கதையும். ‘"த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா'’ அப்படிங்கிற கேவலமான படம் ஓடுனதால, வந்த வினைதான் ஜி.வி.பிரகாஷைப் பிடிச்சு ஆட்டுது. மாணவி அனிதா மரணத்தின்போது ஓடோடிப் போய்ப் பார்த்தாரு. அதே மாதிரி ஜல்லிலிக் கட்டுப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டாரு. இப்ப கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வச்சாரு.
இப்படி உதவும் குணமும், இந்த சமூகத்தோடு ஒன்றிணைந்திருக்கும் குணமும் ஜி.வி. பிரகாஷுக்கு இருப்பதையும் மறுக்க முடியாது. ஆனா சினிமாங்குறது, கோடிகள் புரளும் இடமாச்சே. மியூசிக்ல கான்சன்ட்ரேட் பண்ணுனா மிகப்பெரிய ஆளா வந்துருக்க வேண்டியவரு. எந்தப் புண்ணியவான் கொடுத்த ஐடியாவோ, ஹீரோ ஆசையில் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு'' என ரொம்பவே விளக்கமாகச் சொன்னார்கள் அந்த சினிமா சோர்ஸுகள்.
யோசிங்க பிரதர் பிரகாஷ்.
-ஈ.பா. பரமேஷ்வரன்