எகிடுதகிடான ஸ்டில்கள், எக்குத்தப்பான ஸ்டேட்மென்ட்கள் போன்றவற்றால் அடிக்கடி அதிரடி கிளப்பிவரும் ஆந்திர தேசத்து அட்ராசிட்டி ஸ்ரீரெட்டி சமீபத்தில் தனது மார்பு எடுப்பாகத் தெரியும்படி ஃபோட்டோவைப் போட்டு, ஆந்திர சினிமாவின் டாப் ஹீரோயினான சமந்தாவுக்கு இப்படி இருக்குமா...?' என கிளுகிளு புயலைக் கிளப்பினார்.
இதுக்கெல்லாம் பதில் சொன்னா நம்ம பொழப்பு சந்தி சிரிச்சுப் போயிரும் என நினைத்த சமந்தா கம்மென இருந்துவிட்டார். அதுக்கப்புறம், ""சமீபத்தில் தெலுங்கு "பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து இன்டர்வியூ (பார்டா ஸ்ரீரெட்டிக் கெல்லாம் இன்டர்வியூவாம்!) வைத்தார்கள். அப்போது "பிக்பாஸ்' வீட்டிலிலிருக்கும் ஆண் ஒருவரிடம் இரவு நேரத்தில் கட்டிலிலில் போர்வையைப் போர்த்தியபடி செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கண்டிஷன் போட்டார்கள். இதைக் கேட்டதும் எனக்கு பகீர் என்றாகி விட்டது! போங்கடா... நீங்களும் உங்க "பிக்பாஸு'ம்னு வெளியே வந்துட்டேன்'' (என்ன "பிக்பாஸ்' நீங்க, போர்வையைப் போர்த்தனும்னா கடுப்பு வருமா, வராதா? விவரம் இல்லாத ஆளுய்யா நீங்க.) என்றார்.
இப்போது லேட்டஸ்டாக கையில் மெகா சைஸ் சுருட்டு, (அட சுருட்டுதாங்க) "கிண்'ணுன்னு தெரியும்படி டீ சர்ட், முக்கால் வாசி தொடை தெரியும்படி ட்ரவுசர் (அதை ஜட்டின்னுகூட சொல்லலாம்.) போட்டு அத களமாக போஸ் கொடுத்து, அதை தன்னோட ஃபேஸ்புக்கில் போட்டிருக்கார் ஸ்ரீரெட்டி. ""ஏங்க இப்படி? ஸ்ரீரெட்டிக்கு என்னதாங்க வேணும்? ஏன் இப்படி அடிக்கடி அதிரடி கிளப்புகிறார்'' என சினிமா நடிகை ஒருவரின் மேனேஜரிடம் கேட்டோம். ""வேற என்ன? எல்லாம் "அது'க்குத்தான்! இதுக்குமேல என்னால ஓப்பனா சொல்லமுடியாது'' என்றார்.
"அது'ன்னா எதுன்னு நமக்கும் புரியல!
-பரமு