Advertisment

சௌத்ரிங்கிற பேர் எதுக்கு? -டைரக்டர் மகேந்திரன் சில நினைவுகள்!

/idhalgal/cinikkuttu/what-are-chouders-some-memories-director-mahendran

யக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமாவின் மகாஆளுமை கொண்டவர். பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில், சில பக்கம் மட்டுமே வசனம் எழுதி, காட்சி களின்மூலமும் பின்னணி இசை மூலமும் ரசிகனை வசீகரித்தவர். மகேந்திரனின் சினிமாக் காட்சிகளுக்கு, தனது பின்னணி இசை மூலம் உயிரும் உணர்வும் ஊட்டியவர் இசைஞானி இளையராஜா. ""இளையராஜா இல்லையென்றால் எனது படங்களே இல்லை'' என்று தயக்க மில்லாமல் சொன்னவர் மகேந்திரன். மகேந்திரன் நடித்து பொங்கலுக்கு ரிலீ சான படம், அவர் பெரிதும் மதிக்கும் ரஜினியின் "பேட்ட.'

Advertisment

ma

அதன்பின் சுந்தர பாண்டியனின் "கொம்பு வச்சசிங் கம்டா', விஷாலிலின் "அயோக்கியா' என வரிசையாக ஏழெட்டுப் படங

யக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமாவின் மகாஆளுமை கொண்டவர். பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில், சில பக்கம் மட்டுமே வசனம் எழுதி, காட்சி களின்மூலமும் பின்னணி இசை மூலமும் ரசிகனை வசீகரித்தவர். மகேந்திரனின் சினிமாக் காட்சிகளுக்கு, தனது பின்னணி இசை மூலம் உயிரும் உணர்வும் ஊட்டியவர் இசைஞானி இளையராஜா. ""இளையராஜா இல்லையென்றால் எனது படங்களே இல்லை'' என்று தயக்க மில்லாமல் சொன்னவர் மகேந்திரன். மகேந்திரன் நடித்து பொங்கலுக்கு ரிலீ சான படம், அவர் பெரிதும் மதிக்கும் ரஜினியின் "பேட்ட.'

Advertisment

ma

அதன்பின் சுந்தர பாண்டியனின் "கொம்பு வச்சசிங் கம்டா', விஷாலிலின் "அயோக்கியா' என வரிசையாக ஏழெட்டுப் படங்களில் கமிட்டாகி, ஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் பொள்ளாச்சிக்கும் பறந்து பிஸியான நடிகரானார். இதில் "கொம்புவச்ச சிங்கம்டா' மட்டும், அவர் சம்பந்தப்பட்ட போர்ஷன்கள் முழுதாக முடிந்திருக்கிறது. நடிப்பதில் பிஸியானதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த மகேந்தி ரன், கடந்த 2-ஆம் தேதி காலமானார்.

Advertisment

ரஜினி, கமல், இளையராஜா, மணிரத்னம், பாரதிராஜா, ரேவதி, ராதிகா, சுகாசினி, டைரக்டர்கள் வீ. சேகர், சிம்புதேவன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் என ஏராளமான சினிமா பிரபலங்கள் மகேந்திர னுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

dad

""என்னை நடிகனாக அடையாளம் காட்டியவர் மகேந்திரன். எனக்கும் அவருக்கும் இடையிலான நட்பு, டைரக்டர்- நடிகர் என்பதையும் தாண்டியது'' என்று உருக்கமாகச் சொன்னார் ரஜினி. இருபது ஆண்டு களுக்குமுன்பு "நக்கீரன்' குழுமத்திலிருந்து "ரஜினி ரசிகன்' என்ற மாத பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்த பத்திரிகை யில் "அன்புள்ள ரஜினிக்கு...' என்ற தொடர் எழுதினார் மகேந்திரன். அத்தொடரில் ரஜினியின் நடிப்பு குறித்தும், அவர் பார்க்கவேண்டிய படங்கள் குறித்தும் எழுதினார்.

அந்த தொடரை வாங்குவதற்காக மாதம் இரண்டுமுறை, ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்குச் செல்வேன். "வாங்க பரமேஸ்வரன்' என்று அன்போடு வரவேற்று, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருப்பார்.

ma

ma

அந்தமாதிரி நேரங்களில் ஒருமுறை, "தங்கப் பதக்கம்' படத்துல சிவாஜி சார் கேரக்டருக்கு சௌத்ரின்னு "மேற்குவங்காள பேரை ஏன் சார் வச்சீங்க?'ன்னு கேட்டேன். ""மேற்கு வங்காள பேர்கள் ஒண்ணும் நமக்கு புதுசு இல்லையே பரமேஸ்வரன்! நேதாஜி, சுபாஷ், போஸ், சந்திரபோஸ்னு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பிரிச்சுப் பிரிச்சு நம்ம ஊர்ல வச்சிருக்காங்களே! ரெண்டாவது, எஸ்.பி.சௌத்ரின்னு சிவாஜி சார் சொல்லும்போது, ஒரு கம்பீரம் இருக்கும் பாருங்க, அடேங்கப்பா!'' என்று மகேந்திரன் சொன்னதும் அசந்துவிட்டேன்.

ரஜினியின் நடிப்பை ரொம்பவே சிலாகித்துப் பேசுவார் மகேந்திரன்.

"ஜானி' படத்தில் க்ளைமாக்ஸ் சீன் எடுத்தபோது ஏற்பட்ட அனுபவங்களை ஒருமுறை சொன்னார். ""ரஜினி கண்டிப்பா வருவார் என்ற நம்பிக்கையில் "காற்றே எந்தன் ஜீவன்' பாட்டை கடுமையான புயல் மழையிலும் பாடுவார் ஸ்ரீதேவி. சென்னை ஒய்.எம்.சி. கிரவுண்ட்ல ஷூட் டிங். பயங்கரமான மழை சீன் என்பதால், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம் 25 லாரி தண்ணீர் கேட்டேன்.

"அவ்வளவு லாரி யெல்லாம் கொடுக்க முடியாது. வேணும்னா 10 லாரி ஏற்பாடு பண்றேன்'ன்னு கறாரா சொல்லிட்டாரு. வேறு வழியில்லாம ஷூட்டிங்கை முடிச்சோம். அந்தப் பாட்டு சீனைப் பார்த்தீங்கன்னா ரஜினி மட்டும்தான் முழுசா நனைஞ்சிருப்பார். அவரைப் புடிக்கவரும் போலீஸ் காரங்களோட காக்கி யூனிஃபார்ம் பாதி நனைஞ்சும் பாதி நனையாமலும் இருக்கும்'' என்றார்.

தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரன் பெயர் இருக்கும்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine160419
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe