ரண்டு கைகளும் இல்லாத ஒருவரின் வாழ்க்கையை மையக் கருவாகக் கொண்டு எடுக் கப்பட்ட படம் "தோழர் வெங்கடேசன்.' அரிசங்கர், மோனிகா சின்னகோட்லா நாயகன்- நாயகியாக அறிமுகமான இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் மகா சிவன் இயக்க, இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டார்.

Advertisment

aaa

தமிழ் சினிமா, எளிய மனிதர்களின் வாழ்விய லைப் பேசும் நல்ல படங்களை எப்போதுமே கொண் டாடி இருக்கிறது. குறிப்பாக ,உண்மைச் சம்பவங் களின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட படம் என்பதால், "தோழர் வெங்கடேசன்' அனைவரின் மனதிலும் நிறைந்தது. எளிமையான கதைக்களமும் அதற்கொரு காரணம் விமர்சனரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், "தோழர் வெங்கடேசனை' நல்ல தொரு வெற்றியாளனாக்க வெள்ளித்திரை தவறி விட்டது.

அதைக் களையும்விதமாக- அமேசான் ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷனான பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது "தோழர் வெங்கடே சன்.' படத்தில் ஒரு பாடலை பேஸ்புக்வழியாக ஒன்றரை கோடிபேர் பார்த்திருக்கிறார்கள் என்கிறார் படத்தின் நாயகன் அரிசங்கர்.